January 5, 2012
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு
வண்ணம் தீட்டி, பச்சரிசி,
புது வெல்லம், செங்கரும்பு,
மஞ்சள், மாக்கோலம்,
புத்தாடையுடன் பாரம்பரியம்,
பண்பாட்டை பறைசாற்றும் ஒருநாள்
பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன்,
உலகின் பசி போக்கும் உழவர்கள்,
படைப்புக் கருவிகளாக விளங்கும்
கால்நடைகளுக்கு நன்றி
தெரிவிக்கும் தைத்திருநாள்...!
பிழைப்புக்காக திசைகள் எட்டும்
சென்ற பந்தங்கள் ஓர்நாளில்
ஒன்றுகூடி மகிழும் திருநாள்..!
இந்த நன்னாளில்
பொங்கும் பொங்கல் உங்கள்
வாழ்வில் பல வெற்றிகளை பெற்று
மகிழ்ச்சியுடன் வாழ எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்பிற்கினிய உறவுகளே ! தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் முத்தமிழ் கடவுள் முருகனை தரிசிக்க பாத யாத்திரை (சுருளி மலையிலிருந்து -பழனிமலைக்கு) செல்ல இருப்பதால் நமது வலையில் 16.01.2012 வரை பதிவுகள் வெளிவராது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.
தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து நல் இதயங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்
மேலும் வாசிக்க
1/05/2012 by சம்பத்குமார் · 20
January 2, 2012
பூமித்தாய்
கேட்டதெல்லாம் கொடுக்கும் தாய்
கேட்காததையும் கொடுக்கும் சக்தி..!
அணுஅணுவாய் துகள்துகளாய் சேர்ந்து
அண்டப் பிண்டமாய் ஒரு உருண்டை...!
மனிதப் புழுக்கள் துருவத் துருவ முளைக்கும்
மகிமைகள் புதிது புதிதாய்...!
ஆழம் செல்லச் செல்ல ஆயிரமாயிரம் அதிசயங்கள்
அடுக்கடுக்காய் அற்புதங்கள் காணலாம்
எடுக்க எடுக்க அத்தனையும் தேவைகளே..!
![]() |
| கோலார் தங்க சுரங்கம் |
அள்ள அள்ள குறையாத அமுதசுரபி
எள்ளி நகைத்தாலும் எதிர்க்காத அன்புக்குழவி..!
எத்தினாலும் நமக்குத்தான் வலிக்கும்
ஏசினாலும் நம்வாய்தான் வலிக்கும்...!
கோப மேலீட்டால் கோரம் காட்டினால்
மனிதப் பயிர்கள் மகிமையற்றழியும்...!
ஆளத் துடிக்கும் ஆண்டைகளும்
அடிவருடி வாழும் அடிமைகளும்
உயிமுடி துறந்து போகுமிடம்...!
நமது நிலை இதன் மீது
இதன் நிலை எதன் மீது..?
மனிதத் தேவை அத்தனையும்
மனம் அறிந்து கொடுப்பது
இதன் தேவையை
யார் அறிந்து கொடுப்பது...?
கொடுக்க வேண்டாம்.மேலும் மேலும்
மின்சாதன கழிவுகளைக் கொட்டி
மின்சாதன கழிவுகளைக் கொட்டி
கெடுக்காமல் இருந்தால் போதுமே....!
வணக்கம் நண்பர்களே ! நேற்றைய மன்னன் பதிவிற்க்கு அலைபேசி வழியாகவும் இணையத்தின் வழியாகவும் அன்பும் ஆதரவும் அளித்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி ! நன்றி !! நன்றி !!!
உறவுகளே ! கவிதையை சுவாசித்துவிட்டு தங்கள் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்
மேலும் வாசிக்க
1/02/2012 by சம்பத்குமார் · 8
January 1, 2012
காப்பி பேஸ்ட் மன்னன் கருப்பு ரோஜாக்கள் ராஜேஸ்
வணக்கம் நண்பர்களே ! புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவாக இருந்ததா..?இன்றைய பதிவில் நாம் வலையுலக காப்பி பேஸ்ட் மன்னனை பார்க்கப் போகிறோம்.இதோ எனது பதிவினை சுட்டு தனது பதிவாக வெளியிட்ட அந்த நல் உள்ளத்திற்க்காக ஓர் கவிதையுடன் ஆரம்பிக்கிறேன்.
சொந்தமாக
யோசிக்கத் தெரியாமல்
பதிவினை சுட்ட
தோழனே...!
நீ தேட வந்ததைத்
தேடலாம்.என் வலைக்குள்
புகுந்து, எல்லாவற்றையும்
புரட்டிப்போட்டு
இரவுத் திருடனைப் போல்...!
உரைநடை தொனிக்க
வெளிப்படையாய் எழுதி வைத்த
எனது கவிதைகளடங்கிய வலையை
பறிமுதல் செய்ய முடியுமா
உன்னால்..?
திறந்து,உலர்ந்து கிடக்கிற
என் பேனா முனையை
மேஜையில் குத்தி
உடைத்துவிட முடியுமா
உன்னால்...?
அனுமதி இன்றி கிடைக்கப்
பெற்றமகிழ்ச்சியில்
நினைவிருக்கும்படி கோட்டை
கட்டி வாழ்ந்தா விட்டாய்...?
போகிற போக்கில்
இது தொடர்ந்தால், மௌனமாக
இன்றைவிட அதிகமாக
உன் முகத்தினை
கிழித்தெறிவேன் –
மறுபடியொரு கவிதையில்….!
வணக்கம் நண்பர்களே ! இன்றைய பதிவில் காப்பி பேஸ்ட் மன்னன் கருப்புரோஜாக்கள் ராஜேஸ் ஐ உங்களிடம் அறிமுகப் படுத்துகிறேன்
![]() |
| இவர்தான் அந்த நல்ல உள்ளம் |
இவர்தான் கருப்பு ரோஜாக்கள் ராஜேஸ். நான் பெற்ற குழந்தையையே எனக்கு அறிமுகப்படுத்திய புண்ணியவான்.
இவரோட மெயில் முகவரி : kadalmannan1984@gmail.com
முகப்புத்தக முகவரி : http://www.facebook.com/rajesh.singam2
இவரின் GOOGLE + முகவரி : http://plus.google.com/u/0/114577667983101718377/photos
இதில் அவர் வாத்தியார் வேற..( செம காமெடியா இருக்குங்க).
இவருக்கு இன்னொரு வலைத்தளமும் உள்ளது.இதில் ஆண் பெண் புனித உறவை அற்புதமாய் எழுதுறாராம்.அதென்ன எல்லா இடத்திலயும் Intrest பத்தி கேட்டா பெண்கள் அப்படின்னு எழுதியிருக்கீங்க(அது சரி அது நமக்கு எதுக்கு..?தேவையில்லை)
புத்தாண்டின் முதல் நாளில் எனது குழந்தையை எனக்கு அடையாளம் காட்டிய விதம்.
![]() |
| பெரியதாய் பார்க்க படத்தின் மீது க்ளிக்கவும் |
அன்று இரவு 7.30 மணி அளவில் அவருக்கு நான் அனுப்பிய மெயில்..
=============================================================================================
வணக்கம் கருப்பு ரோஜாக்கள் தள நிர்வாகி அவர்களே
நலமா..நல்லா இருக்கீங்களா....
இன்று எனது வலையில் வெளியிட்ட எனது பதிவினை தாங்கள் அப்படியே வரிகூட மாறாமல் உங்கள் தளத்தில் பதிவாக வெளியிட்டுள்ளீர்கள்
31.12.2011 காலை 8.15 ர்க்கு எனது பதிவு http://www.tamilparents.com/2011/12/blog-post_30.html
31.12.2011 அன்று மாலை உங்கள் வலையில் வந்த பதிவு http://karuppurojakal.blogspot.com/2011/12/blog-post_471.html
இதில்...
1.நீங்கள் எனக்கு இதுவரை தெரியப்படுத்தவில்லை கேட்கவும் இல்லை.இதற்கு என் வன்மையான கண்டணங்கள்.
2..இதில் என்ன கொடுமை என்னவெனில் நான் பெற்ற பிள்ளையை எனக்கே நீங்கள் அடையாளம் காட்டியவிதம் தான்.
(நான் ஏற்கனவே உங்கள் வலையில் follower ஆக இருப்பது கூடவா உங்களுக்குத் தெரியவில்லை)
3.உங்கள் வலையில் கருத்துரைப்பெட்டியையாவது திறந்து வையுங்கள்.நானும் வாசித்துவிட்டு கருத்துரை இடுகின்றேன்
4..அனுமதியின்றி வெளியிட்டமையால் கண்டிப்பாக அந்த பதிவினை நீக்கிவிடவும்
பதிவினை நீக்க தவறும் பட்சத்தில் இதனால் வரும் பின்விளைவுகளை நீங்கள் சந்திக்கப் போவதில் ஆச்சரியம் ஒன்றும் இருக்கப்போவதில்லை
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனம்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா..
நீக்கிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில்...
உங்கள் பதிலை ஜனவரி 2 காலை 6 மணிக்குள் தெரியப்படுத்தவும்
அன்புடன்
சம்பத்குமார்
=================================================================================
இந்த மெயிலுக்கே இன்னும் பதில் இல்லை.இடைப்பட்ட நேரத்தில் எனது கவிதைகளை, புத்தாண்டின் முதல் நாளில் தனது கவிதையாய் வெளியிட்டுள்ளார். (என்ன கொடுமை சார் இது...?)
1.என்ன பதில் சொல்ல ? - டிசம்பர் 17 2011 அன்று.
2. வாடகை வீடு - - November 20 அன்று
அவரது வலையில்
பார்க்க இங்கே சொடுக்கவும். - புத்தாண்டு தினத்தில் ஒரே நாளில் இரண்டு பதிவுகளும் (நல்ல கவிஞன் ஐயா நீர்)
இனி அவரிடம் நேரடியாய் சில கேள்விகள்..
நண்பா முதலில் இது ஒரு பொழப்பா..?
நான் பதிவிட்டதையே நீங்களும் பதிவிட ஆரம்பித்திருப்பது நல்ல விஷயமா ?.(ஹா ஹா ஹா உங்களுக்கெல்லாம் சொந்தமா யோசிக்க கூட தெரியல என்ன பண்ண கூகுள் ஆண்டவர் குடுத்த வரம் அப்படி)
நான் தினமும் செய்யும் செயல்களை உங்களுக்கு மெயில் அனுப்புகின்றேன்.காலையில் எழுந்து பல்துலக்குவதில் இருந்து இரவு உறங்கப்போகும் அந்த கணம் வரை அப்படியே பதிவாய் வெளியிடுவீர்களா ?
நண்பா போனமாதம் எனது நண்பர் ஒருவரிடம் ரூபாய் 10000 கடன் வாங்கியிருக்கேன்.நானும் அவருக்கு கொடுத்து எனது பதிவினை சுட்ட நீங்களும் கொடுத்தால் நல்லாவா இருக்கும்.ஆதலால் நீங்களே தந்துவிடவும்.தந்துவிடுவீர்களா..? (இப்படி சொன்னாவாவது நீங்க திருந்துவீங்களா..?)
உங்களுக்கும் எனக்கும் ஓர் வித்தியாசம் மட்டுமே நண்பா..நான் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறேன்.நீங்கள்…..??????
நீங்க போட்ட பதிவைப் பார்த்து என் நண்பர்கள் என்னை கிண்டலடிக்கின்றனர்.உமது பதிவைத்தான் நான் திருடி கவிதையாய் எழுதியதாய்….! உச்ச கட்ட காமெடி பாஸ்
ஏன் நண்பா நான் உங்கள் வலையில் நீர் வலை ஆரம்பித்தது முதல் FOLLWER ஆக இணைஞ்சது கூடவா உங்களுக்கு தெரியல..?பிறகு எப்படி பாஸ் நீங்கல்லாம் வாத்தியாரா இருந்துகிட்டு வலையெழுத வந்தீங்க..?
நீங்க உங்க ப்ளாக்ல கருத்துரை பெட்டியையாவது திறந்து வையுங்க.நானும் நான் எழுதிய கவிதையையே படிச்சுட்டு கமெண்ட் போட வசதியா இருக்கும்.
ஏம்பா கடைசில என்னையும் பிரபல பதிவர் லிஸ்ட்ல சேர்த்து விட்டுட்டியே..(வலையுலக அரசியலில் ஒருவர் எழுதிய பதிவு அடுத்த நபரால் ஒருவரி கூட மாறாமல் வெளிவந்தால் பதிவின் உரிமையாளார் பிரபல பதிவர்தானாம்.இதுதான் தற்போது பேச்சு)
இதுவே உங்களுக்கு இறுதி எச்சரிக்கை.எனது பதிவுகளை நீக்குவதற்க்கு..
நீக்காத பட்சத்தில், மீண்டும் இது போல் தொடர்ந்தால் கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்
எச்சரிக்கையுடன்..
சம்பத்குமார்
தமிழ்பேரன்ட்ஸ்
வலையுலக நண்பர்களே ! ஏற்கனவே தமிழகத்தில் நிழவும் 4 மணிநேர பவர்கட்டில் இருந்து தப்பித்து,ஆபீஸ் வேலை நேரம் போக கிடைக்கின்ற நேரத்தினை பயன்படுத்தி பதிவெழுத ஆசைப்பட்டால்..., இது போன்ற பதிவுலக கருப்பு ஆடுகளை என்னதான் செய்வது..? உங்கள் விவாதங்களை எண்ணங்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால திருட்டுப் பதிவர்களுக்கு ஓர் பாடமாய் இருக்கட்டும்.
மேலும் வாசிக்க
1/01/2012 by சம்பத்குமார் · 38
Subscribe to:
Posts (Atom)












