February 8, 2012

குழந்தைகளின் பெற்றோர்கள் கவனிக்க...


வணக்கம் நண்பர்களே நீண்ட நாட்கள் கழித்து மீண்டுமொரு குழந்தைவளர்ப்பு பதிவின் வழியே உங்களை சந்திக்கவிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்று உலகில் இருக்கும் அனைத்து பெற்றோர்களும் அறிந்துகொள்ள வேண்டிய பெற்றோர்களின் வகைகளைப்பற்றி விரிவாக பார்ப்போம்.இன்றைய அவசர யுகத்தில் நாம் ஒவ்வொருவரும் எந்த வகையில் இருக்கின்றோம் எனபதினை கண்டறிந்து மென்மெலும் குழந்தைகளை வாழ்வில் சிறந்தவர்களாக மாற்ற நம்மை நாமே மாற்றிக்கொள்வோம்.

பெற்றோர்களும் அவர்தம் வகைகளும் :

இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்களின் குணாதிசயங்களைக் கொண்டு
  • அவசர பெற்றோர்கள்
  • அன்பு பெற்றோர்கள்
  • அடிதடி பெற்றோர்கள்
  • இராமன் இராவணன் பெற்றோர்கள்
  • குழந்தை மையப்பெற்றோர்கள்
என ஐந்து வகைப்படுத்தலாம்.இதில் நீங்கள் எந்த வகையினை சார்ந்தவர் என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்

அவசர பெற்றோர்கள் :

பிறந்தவுடனேயே தங்கள் குழந்தைகள் அஹிம்சையில் காந்தியைப்போலவும் அன்பு காட்டுவதில் அன்னை தெரசா போலவும் செஸ் விளையாடுவதில் விஸ்வநாத் ஆனந்த் போலவும் இருக்க வேண்டும் எதிர்பார்ப்பார்கள்.தங்கள் குழந்தை நாளையே சாதிக்க வேண்டும் என்பதற்காக இன்றைய நாள் முழுவதையும் குழந்தைக்காக அர்ப்பணிக்கும் பெற்றோர்கள் இவர்கள். இவர்களின் குழந்தைகளை வைத்தே இவர்களைக் கண்டுபிடித்து விடலாம். இவர்களின் குழந்தைகள் ஆறு மணிக்கு கராத்தே கிளாஸ் போகும். ஏழு மணிக்கு நீச்சல் கிளாஸ் போகும். எட்டு மணிக்கு கம்ப்யூட்டர் கிளாஸ். பிறகு ஸ்கூல் , டியூசன், மாலை டான்ஸ் கிளாஸ் யோகா கிளாஸ் என்று ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டே இருக்கும். இன்னும் என்னவெல்லாம் கற்றுக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளவே ஒரு கிளாஸ் போகும்.காரணம், இவ்வகை பெற்றோர்களைப் பொறுத்தவரை குழந்தைகள் என்பது அவர்களின் பாக்கெட்டில் குத்திக்கொள்கிற பதக்கம். இன்ஸ்டன்ட் காபி போல இன்ஸ்டன்ட் வெற்றியை எதிர்பார்ப்பதால் இந்த வகை பெற்றோர்களை அவசர பெற்றோர்கள் என்கிறோம்.

இவ்வகை பெற்றோருடைய குழந்தைகள் தங்களைப் பற்றிய அதிக பெருமையுடனே வளர்வார்கள்.

அன்பு பெற்றோர்கள் :

நாம்தான் வாழ்க்கையில் கஷ்டப் பட்டோம். நம் குழந்தைகள் எந்தக் கஷ்டமும் படக்கூடாது என்று நினைப்பவர்கள் இவ்வகை பெற்றோர்கள். குழந்தைகளின் மனம் வாடக் கூடாது என்று எது கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் கேட்பதற்கு முன்னாலே வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் பெரும்பாலும் அவர்கள் அன்பு பெற்றோர்களாக இருந்து விடுவது உண்டு. தாங்கள் சம்பாதிப்பது எல்லாமே குழந்தைகளுக்குத்தானே என்ற கருத்தில் அவர்கள் கேட்பது எதையும் தட்டாமல் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். மேலும் குழந்தைகளோடு நேரம் செலவிட முடியாத இயலாமையை மறைப்பதற்காகவும் இப்படி எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்கும் உத்தி இவர்களுக்கு உதவும்.இளம் மனங்கள் எதற்காகவும் வாடக் கூடாது என்பது இவர்களின் கொள்கையாக இருக்கும். அன்பை வெளிப்படுத்துவதற்கான வழி எதையாவது வாங்கித்தருவது என்பது இவர்களின் பிரதான செய்கையாக இருக்கும்.

இவ்வகை பெற்றோருடைய குழந்தைகள் பெரும்பாலும் பிடிவாதம் பிடிப்பவர்களாகவே வளர்கிறார்கள்.

அடிதடி பெற்றோர்கள் :

என்ன ஆச்சு? குழந்தை அழுதது. இரண்டு சாத்து சாத்து . நீ குழந்தையா இருக்கிறச்ச. அதான் செஞ்சேன். என்ன ஆச்சு ? குழந்தை அழுதது. இரண்டு உதை உதை. நீ குழந்தையா இருக்கிறச்ச. அதான் செஞ்சேன்.இது ஏதோ விளம்பர வரிகள் அல்ல.அடி உதவற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவமாட்டான். அடியாத மாடு படியாது. அடிமேல அடி அடிச்சா அம்மியும் நகரும். இப்படி அடிப்பதற்கு மட்டும் இவர்கள் ஆயிரம் தத்துவ முத்துக்களை தன் வசம் வைத்திருப்பார்கள். வழிகாட்ட வேண்டிய வயதில் குழந்தைகளை கண்டிப்பதன் மூலமாக மட்டுமே அதைச் செய்ய முடியும் என்பதை உறுதியாக நம்புகிறவர்கள் இவர்கள்.அடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகளை எங்கள் நிகழ்ச்சிகளில் நாங்கள் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் எங்களை எங்க அப்பா அம்மா அடிச்சுதானே வளர்த்தாங்க. நாங்க இன்னிக்கு நல்லா இல்லையா? என்று எதிர் கேள்வி கேட்பார்கள்.அடித்து வளர்த்தே நீங்கள் இவ்வளவு வளர்ந்திருக்கிறீர்களே? அடிக்காமல் வளர்த்திருந்தால் இன்னும் எவ்வளவு வளர்ந்திருப்பீர்கள் என்றுதான் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வகை பெற்றோருடைய குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையுடனேயே வளர்வார்கள்.

இராமன் இராவணன் பெற்றோர்கள் :

இராமன் ஆண்டால் என்ன ? இராவணன் ஆண்டால் என்ன ? என்பதைப்போல குழந்தை படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன சாப்பிட்டால் என்ன, சாப்பிடாவிட்டால் என்ன என்று இருப்பவர்கள் இவ்வகை பெற்றோர்கள்.இந்த வகை பெற்றோரை ஓர் எளிய கேள்வியின் மூலம் கண்டறிந்துவிடலாம். உங்கள் குழந்தை என்ன வகுப்பு படிக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். ஆறாவதோ ஏழாவதோ படிக்கிறான் என்பார்கள் தடுமாறியபடியே. நான் கிண்டலாக சொல்வதுண்டு. உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டுப்பாருங்கள். இரண்டோ மூன்றோ என்பார்கள்.சில அதிஷ்டசாலி குழந்தைகளுக்கு மட்டும் பெற்றோரில் குறிப்பாக தந்தை இராமன் இராவணன் பெற்றோர் வகையை சேர்ந்தவராக இருந்தாலும் தாய் அன்பு பெற்றோர் இனத்தை சேர்ந்தவராக அமைந்து விடுவதுண்டு. 

இவ்வகை பெற்றோருடைய குழந்தைகள் தன்னம்பிக்கை யையும் சுயமதிப்பையும் வளர்த்துக் கொள்ள முடியாமல் தடுமாறுவார்கள்.

குழந்தை மையப்பெற்றோர்கள் :

யார் குழந்தையுடைய கண்களிலிருந்து இந்த உலகத்தை பார்க்கிறார்களோ, யார் குழந்தை யுடைய காதுகளிலிருந்து இந்த உலகத்தை கேட்கிறார்களோ, யார் குழந்தைகளுடைய இதயத்திலிருந்து இந்த உலகத்தை புரிந்து கொள்கிறார்களோ, அவர்களே குழந்தை மைய பெற்றோர்கள்.

ஓர் உதாரணம் சொன்னால், எல்லா வகை பெற்றோர்களையும் நீங்கள் சுலபமாக புரிந்து கொள்ளலாம்.வீட்டிற்கு வந்த விருந்தினர் தண்ணீர் கேட்கிறார். ஒன்றாவது படிக்கும் உங்கள் குழந்தை ஓடிப்போய் தண்ணீர் எடுத்து வருகிறது. ஈரக்கையில் கிளாஸ் டம்ளர் வழுக்கி கீழே விழுந்து உடைந்துவிடுகிறது.
  • ஒன்றுக்கும் லாயக்கில்லை என்று ஓங்கி ஓர் அறை வைத்தால் நீங்கள் அடிதடி பெற்றோர். 
  • ஐயோ டம்ளர் விழுந்துடுச்சு. கால்ல அடிபட்டிடுச்சு. பிராக்சர் ஆகியிருக்கும். டாக்டருக்கு போன் பண்ணுங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்தால் நீங்கள் அன்பு பெற்றோர். 
  • டம்ளர் விழுந்த சத்தம்கூட கேட்காத மாதிரி உட்கார்ந்திருந்தால் நீங்கள் இராமன் இராவணன் பெற்றோர்.
  • பயப்படாத. கலங்காத. நீ என்ன வேணும்னா போட்டு உடைச்ச. எதிர்பாராமதான இப்படி நடந்தது. நான் கூட ஒன்றிரண்டு முறை கவனக்குறைவா இப்படி உடைச்சிருக்கேன்.எப்போதுமே தப்பு நடந்த அழத. அதை எப்படி சரி செய்யறதுன்னு பதட்டப்படாம யோசி. சரி. இப்ப பெரிய கிளாஸ் பீஸ் எல்லாத்தையும் நீ எடு. சின்ன கிளாஸ் பீஸ் எல்லாத்தையும் நான் எடுக்கிறேன். நான் எப்படி எடுக்கிறேன்னு பாரு. நாளைக்கு நான் இல்லாத போது இப்படி நடந்தால் நீயே சுத்தம் செய்து கொள்ளலாம். சரியா? என்பார்கள் குழந்தை மையப்பெற்றோர்கள்
இப்படி பேசுவதால் வாழ்க்கையில் உங்கள் குழந்தைகள் எதற்குமே துவண்டு போகாது. தோல்விகள் வந்தால் துவளாது. அதிலிருந்து மீள்வது எப்படி என்று யோசிக்கும். அதாவது குழந்தை மையப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையை எதிர் கொள்ளக் கற்றுக்கொள்கிறார்கள். இப்படி வளரும் குழந்தைகள் சாதனை யாளர்களாக, துணிச்சல்மிக்கவர்களாக தன்னம்பிக்கை மிக்கவர்களாக வளர்வார்கள்.

என்ன நண்பர்களே நீங்கள் எந்த வகை பெற்றோர்களாக இருக்கிறீர்கள் அல்லது இருக்க விரும்புகிறீர்கள் ? கருத்துரைப் பெட்டியில் பகிர்ந்துவிட்டுச் செல்லலாமே.வருங்கால சந்ததிகளுக்காக….

Cute Parents ல்இதனையும் வாசிக்கலாமே

How To Prepare For Final Exams


Ten Ways To Slash Your Medical Bills



28 Responses to “குழந்தைகளின் பெற்றோர்கள் கவனிக்க...”

ஹைதர் அலி said...
Feb 8, 2012, 9:55:00 PM

வாங்க ராசா வாங்க இத்தனை நாள் எங்கு போனீர்கள் போகும் போது சொல்வதில்லையா?

கொல்லப் போறேன் பாருங்க.

சரி பதிவு நல்லாயிருக்கு அப்புறம் பேசிக்கிறேன்


சம்பத்குமார் said...
Feb 8, 2012, 10:03:00 PM

வணக்கம் ஹைதர் அண்ணா

நலமா ?

ஒரு சிறிய நீண்ட இடைவெளி இனிமேல் வழக்கம் போல் தொடரும்

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி

நட்புடன்
சம்பத்குமார்


NAAI-NAKKS said...
Feb 9, 2012, 12:05:00 AM

நீங்க ரோம்ப நாள் கழித்து
வந்தா...விட்டுவிடுவோமா...????
இருக்கு சார்..மேட்டர.இனி....இது சப்ப பூமி.....இனி உங்க சாமார்த்தியம்.....


guna thamizh said...
Feb 9, 2012, 4:54:00 AM

அருமையான படைப்பு நண்பரே.


சம்பத்குமார் said...
Feb 9, 2012, 5:31:00 AM

@ NAAI-NAKKS said...

//நீங்க ரோம்ப நாள் கழித்து
வந்தா...விட்டுவிடுவோமா...????
இருக்கு சார்..மேட்டர.இனி....இது சப்ப பூமி.....இனி உங்க சாமார்த்தியம்.....//

வாங்க நக்கீரரே..நலமா...?


சம்பத்குமார் said...
Feb 9, 2012, 5:32:00 AM

@ guna thamizh said...

//அருமையான படைப்பு நண்பரே.//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி முனைவர் அவர்களே


Rathnavel Natarajan said...
Feb 9, 2012, 6:14:00 AM

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.


வீடு K.S.சுரேஸ்குமார் said...
Feb 9, 2012, 8:44:00 AM

ஆரம்பமே அதகளமா? அடிச்சு ஆடுங்க சம்பத்...மைய பெற்றோராகத்தான் முயற்சி செய்யனும்....குழந்தைகளிடம் மட்டும் அல்ல எல்லாரிடமும்....


இராஜராஜேஸ்வரி said...
Feb 9, 2012, 8:45:00 AM

யார் குழந்தையுடைய கண்களிலிருந்து இந்த உலகத்தை பார்க்கிறார்களோ, யார் குழந்தை யுடைய காதுகளிலிருந்து இந்த உலகத்தை கேட்கிறார்களோ, யார் குழந்தைகளுடைய இதயத்திலிருந்து இந்த உலகத்தை புரிந்து கொள்கிறார்களோ, அவர்களே குழந்தை மைய பெற்றோர்கள்.//

பயனுள்ள, பெற்றோர்களுக்கான அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..


RAMVI said...
Feb 9, 2012, 9:26:00 AM

பெற்றோர்களுக்கான நல்ல பதிவு. நன்றி பகிர்வுக்கு.


விக்கியுலகம் said...
Feb 9, 2012, 10:07:00 AM

மாப்ள எல்லோரும் குழந்தை மையப்பெற்றோர்கள் ஆக இருக்க தான் ஆசைப்படுவாங்க...சூழ்நிலயே பலரை மாற்றுகிறது...இதனை கட்டு படுத்துபவர்களே எதிர்கால இந்தியாவை வலுப்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்!


தங்கம் பழனி said...
Feb 9, 2012, 10:23:00 AM

பெற்றோர்களையே வகைப்படுத்தி, ஒவ்வொரு பெற்றோர்களும் நடந்துகொள்ளும் விதத்தில்தான் தங்களுடைய குழந்தைகளின் குணாதிசயங்களும் இருக்கும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.. ஒவ்வொரு பெற்றோரும் நீங்கள் வகைப்படுத்திய வரிசையில் ஒன்றாக இருக்கும் குழந்தைமைய பெற்றோர்களாகத்தான் இருக்க விருப்பப்படுவார்கள். விக்கி சொன்னதுபோல சந்தர்ப்பம், சூழ்நிலையால்தான் சிலர் அவ்வாறு இருக்கின்றனர். இனி இக்கட்டுரையைப் படித்த பிறகு அவ்வாறான பெற்றோர்களும் ்பெருமளவு தங்களை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். நான் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? நானும் குழந்தை மைய பெற்றோராக இருக்கவே விரும்புகிறேன்.

இக்கட்டுரை பெற்றோர்கள் ஒவ்வொருவருக்கும் பயன்படும். மற்ற வகைப்பெற்றோர்களாக இருப்பவர்கள் கூட இனி குழந்தைமைய பெற்றோர்களாகவே மாற முயற்சி செய்வார்கள். நண்பர்களே..!நீங்களும் அப்படியே இருக்க முயற்சி செய்யுங்கள்.

நீண்ட இடைவெளிவிட்டு வந்திருந்தாலும் , அனைத்து பெற்றோர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வகையில் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள்.. தொடர்ந்து பயனுள்ள கட்டுரைகளை வழங்கும் உங்களுக்கு வாழ்த்துகள்.!


பகிர்வுக்கு நன்றி!


sasikala said...
Feb 9, 2012, 10:32:00 AM

யார் குழந்தையுடைய கண்களிலிருந்து இந்த உலகத்தை பார்க்கிறார்களோ, யார் குழந்தை யுடைய காதுகளிலிருந்து இந்த உலகத்தை கேட்கிறார்களோ, யார் குழந்தைகளுடைய இதயத்திலிருந்து இந்த உலகத்தை புரிந்து கொள்கிறார்களோ, அவர்களே குழந்தை மைய பெற்றோர்கள்.
பயனுள்ள பகிர்வு நன்றி .


K.s.s.Rajh said...
Feb 9, 2012, 11:08:00 AM

வணக்கம் பாஸ் நீண்டநாட்களுக்கு பிறகு எப்படி சுகம்?

உங்கள் பதிவுகள் எல்லாம் பயனுள்ளவைதான் அந்த வகையில் இதுவும் பயனுள்ள பதிவுதான்


சம்பத்குமார் said...
Feb 9, 2012, 11:28:00 AM

@ Rathnavel Natarajan said...

//நல்ல பதிவு.
வாழ்த்துகள்.//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி ஐயா


சம்பத்குமார் said...
Feb 9, 2012, 11:30:00 AM

@ வீடு K.S.சுரேஸ்குமார் said...
//ஆரம்பமே அதகளமா? அடிச்சு ஆடுங்க சம்பத்...மைய பெற்றோராகத்தான் முயற்சி செய்யனும்....குழந்தைகளிடம் மட்டும் அல்ல எல்லாரிடமும்....//

வாங்க சுரேஸ் அண்ணா வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி


சம்பத்குமார் said...
Feb 9, 2012, 11:31:00 AM

@ இராஜராஜேஸ்வரி said...
//யார் குழந்தையுடைய கண்களிலிருந்து இந்த உலகத்தை பார்க்கிறார்களோ, யார் குழந்தை யுடைய காதுகளிலிருந்து இந்த உலகத்தை கேட்கிறார்களோ, யார் குழந்தைகளுடைய இதயத்திலிருந்து இந்த உலகத்தை புரிந்து கொள்கிறார்களோ, அவர்களே குழந்தை மைய பெற்றோர்கள்.//

பயனுள்ள, பெற்றோர்களுக்கான அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..///

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரம்


சம்பத்குமார் said...
Feb 9, 2012, 11:32:00 AM

@ RAMVI said...

//பெற்றோர்களுக்கான நல்ல பதிவு. நன்றி பகிர்வுக்கு.//

வாங்க சகோ.. வருகைக்கும் கருத்திர்க்கும் மிக்க நன்றி


சம்பத்குமார் said...
Feb 9, 2012, 11:45:00 AM

@ விக்கியுலகம் said...
//மாப்ள எல்லோரும் குழந்தை மையப்பெற்றோர்கள் ஆக இருக்க தான் ஆசைப்படுவாங்க...சூழ்நிலயே பலரை மாற்றுகிறது...இதனை கட்டு படுத்துபவர்களே எதிர்கால இந்தியாவை வலுப்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்!//

வணக்கம் மாம்ஸ்.புரிந்துணர்வுடன் கூடிய ஆழமான கருத்திற்க்கு மிக்க நன்றி


சம்பத்குமார் said...
Feb 9, 2012, 11:46:00 AM

@ தங்கம் பழனி

// நீண்ட இடைவெளிவிட்டு வந்திருந்தாலும் , அனைத்து பெற்றோர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வகையில் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள்.. தொடர்ந்து பயனுள்ள கட்டுரைகளை வழங்கும் உங்களுக்கு வாழ்த்துகள்.! //

அருமையான ஆழமான கருத்திற்க்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா


சம்பத்குமார் said...
Feb 9, 2012, 11:47:00 AM

@ K.s.s.Rajh said...
//வணக்கம் பாஸ் நீண்டநாட்களுக்கு பிறகு எப்படி சுகம்?

உங்கள் பதிவுகள் எல்லாம் பயனுள்ளவைதான் அந்த வகையில் இதுவும் பயனுள்ள பதிவுதான்//

வாங்க நண்பா நான் நலமே.தங்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்


ரெவெரி said...
Feb 9, 2012, 9:21:00 PM

Welcome back...
பெற்றோர்களுக்கான அருமையான பகிர்வு...வாழ்த்துகள்...


திண்டுக்கல் தனபாலன் said...
Feb 9, 2012, 10:58:00 PM

நல்ல பதிவு சார் ! வாழ்த்துக்கள் ! நன்றி !


கோவை மு.சரளா said...
Feb 10, 2012, 2:52:00 PM

இன்றைய பெற்றோர்களுக்கு தேவையான ஓன்று குழந்தைகளை வளர்க்கும் முறை சரியில்லாத காரணத்தால் தான் இன்று குற்றங்களும் தீவிரவாதமும் அதிகரித்து கிடக்கிறது ஆகவே முதலில் இளைய சமுதாயம் கண்டிப்பாக படிக்க வேண்டும் அவர்கள்தான் நாளைய பேற்றோர்கள சிறந்த பதிவை கொடுத்த உங்களுக்கு நன்றிகள்


Lakshmi said...
Feb 11, 2012, 11:34:00 AM

மைய பெற்றோராகத்தான் முயற்சி செய்யனும்....குழந்தைகளிடம் மட்டும் அல்ல எல்லாரிடமும்.... நல்ல பகிர்வு வாழ்த்துகள்.


Jaleela Kamal said...
Sep 22, 2012, 10:10:00 PM

உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.

http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_8668.html


Sundaramoorthi said...
Dec 4, 2012, 11:58:00 PM

தமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்... தமிழில் முன்னணி பதிப்பகங்களின், 10000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்...click me


ரூபன் said...
Sep 16, 2014, 6:45:00 AM

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்... பார்வையிட முகவரி இதோ.
http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_16.html?showComment=1410829864457#c3775928799328011888

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-


;