February 9, 2012
எழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி ? பாகம் 2
வணக்கம் நண்பர்களே ! நேற்றைய பதிவு பிறந்த குழந்தைகளை வளர்ப்பதில் ஒவ்வொரு பெற்றோரின் குணாதியசயங்களை வாசிக்க வலைப்பக்கம் வந்து சுவாசித்து கருத்துரையிட்ட அனைத்து நல் இதயங்களுக்கும் மிக்க நன்றி.இன்று குழந்தைகளின் எழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி எனபதினை விரிவாக அலசுவோம்.இதன் முதல் பாகத்தினை தவறாமல் இந்த லின்க்கில் சென்று படித்துவிட்டு இப்பதிவினை வாசிக்க தொடங்கவும்..குழந்தைகளின் எழுத்தாற்றல் திறனை மேம்படுத்த கீழே உள்ள அம்சங்களில் சிலவற்றை தொடர்ச்சியாக பின்பற்றினாலே போதும். குழந்தையின் உள்ளார்ந்த திறன்கள் நன்கு மேம்படும். இன்றைய தகவல்தொடர்பு உலகத்தில் எழுத்துப் பயிற்சிகளுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தாலும், பெற்றோர்கள் தங்களின் கடமையை மறந்துவிட வேண்டாம்.ஏனெனில் படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது.ஆனால் எழுதுதல்தான் ஒரு மனிதனை ஒரு நுட்பமான, சரியான மனிதனாக்குகிறது
குழந்தைகளின் எழுத்தாற்றலை மேம்படுத்துதலில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் :
- ஊக்குவித்தல்
- எழுதும் இடமும் நேரமும்
- அணுகுமுறையில் மாற்றம்
- தனித்தன்மை
- பாராட்டுதல்
- ரோல் மாடல்
- தகவல்தொடர்பு
- செவிவழி திறன்
- பட்டியலிடுதல்
- வாசிக்கும் பழக்கம்
தனித்தன்மை
உங்கள் குழந்தை ஒன்றை எழுதியிருந்தால் அதை திருத்தி எழுத வேண்டாம். அப்படி செய்தால் உங்கள் குழந்தையின் தனித்தன்மை சிந்தனை பாதிக்கப்படலாம். உங்கள் குழந்தை எழுதிய விஷயங்களுக்கு அவர்கள் மட்டுமே உரிமையாளராக இருக்க வேண்டும். குழந்தையின் தனித்தன்மையை சிதைக்கும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது.
பாராட்டுதல்
ரோல் மாடல்
உங்கள் குழந்தையின் எழுத்தில், வேறு எவரின் தாக்கமாவது இருந்தால் அதைப்பற்றி நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. ஏனெனில், அது ஒரு ஆரம்ப படிநிலை. உலகில் பல பெரிய எழுத்தாளர்கள், இளமையில் வேறு யாரேனும் ஒரு இலக்கியவாதியால் கவரப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். எனவே இப்போதைக்கு பிறரின் பாதிப்பு உங்கள் குழந்தைக்கு இருந்தாலும், பின்னாளில் அது தனது தனித்தன்மையைப் பெறும்.
தகவல்தொடர்பு
உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு உங்களின் பிள்ளையை கடிதம் எழுதச் செய்யும் செயல்பாடு ஒரு முக்கிய அம்சமாகும். இதன்மூலம் சமூக தகவல்தொடர்புத் திறன் உங்கள் குழந்தைக்கு மேம்படும். மேலும், பண்டிகை மற்றும் விழா காலங்களில் வாழ்த்து அட்டைகளில் குழந்தையின் சொந்த வாசகங்களை எழுத வைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பலாம்.மேலும், பேனா நண்பர்கள் கலாச்சாரத்தையும் உங்களின் குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். இதன்மூலம் உங்களின் குழந்தைக்கு ஒரு புதிய உலகம் திறக்கப்படும்.
செவிவழி திறன்
உங்கள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட பாடல் மிகவும் பிடித்தால்(ஆபாசமில்லாத பாடல்கள்) அந்த பாடலை டேப்-ரெக்கார்டர் போன்றவற்றில் கேட்க வைத்து, அந்த வரிகளை அப்படியே பேப்பரில் எழுத வைக்கலாம். இதுமட்டுமின்றி, கவிதைகள் மற்றும் செய்யுள்கள் போன்றவைகளை, புத்தகத்தில் படித்தாலும், அவற்றை தனியாக பேப்பரில் எழுத வைக்கலாம். சிறந்த எழுத்துப் பயிற்சியானது, உங்கள் குழந்தையின் கைத்திறனை மட்டுமின்றி, மூளைத்திறனையும் அதிகரிக்கின்றது.
பட்டியலிடுதல்
அதிகமான பாடங்கள் படிக்க வேண்டியிருந்தாலும் சரி, வீட்டில் ஏதேனும் வேலை செய்ய வேண்டியிருந்தாலும் சரி, புத்தகங்களை அடுக்க வேண்டியிருந்தாலும் சரி, அதிகமானப் பொருட்களை வாங்க கடைக்கு சென்றாலும் சரி, இதுபோன்ற பல விஷயங்களுக்கு பட்டியலிட்டு வேலை செய்ய உங்கள் குழந்தையைப் பழக்கவும். ஏனெனில் இந்தப் பட்டியலிடும் பழக்கமானது, ஒரு அமைப்பு ரீதியான திறனை வளர்ப்பதோடு, எதையும் மறக்காமல் இருக்கவும் உதவுகிறது. மேலும் ஒரு வேலையை எங்கு தொடங்கி, எங்கு முடிப்பது என்ற ஒரு வரைவு திட்டத்தையும் வழங்குகிறது.
வாசிக்கும் பழக்கம்
செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கம் எழுத்தாற்றலை வளர்ப்பதற்கு ஒரு சிறந்த முறையாகும். சிறு பிள்ளைகளைப் பொறுத்தவரை, முக்கியமாக இரண்டு வகை சஞ்சிகைகள் இதற்கு பொருத்தமானவை. செய்தி சஞ்சிகைகள் மற்றும் சுற்றுலா சஞ்சிகைகள். செய்தி சஞ்சிகைகள் விரிவான சமூக அறிவை வளர்ப்பவை. சுற்றுலா சஞ்சிகைகள் உலகத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்து, அதன்மூலம் விஷயங்களை எளிதில் கற்று, எழுதத் தூண்டுபவை. எனவே, சஞ்சிகைகளை உங்களின் குழந்தைக்கு அறிமுகப்படுத்தி, அதன்மூலம் அவர்களின் உலகை பரந்துபடச் செய்யுங்கள்.
நாம் பெரியளவில் திட்டமிட்டு செயல்பட்டு, பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி நம் குழந்தைக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. எல்லா பெற்றோர்களாலும் அது முடியாது. எல்லா குழந்தைகளுக்கு அதை வழங்க வேண்டிய அவசியமுமில்லை.மேற்கண்ட அம்சங்களில் சிலவற்றையாவது அவர்கள் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து தந்தாலே நம்து குழந்தைகளின் எழுத்தாற்றல் திறன் நிச்சயம் மேம்படும் என்பதிம் மாற்றம் ஏதும் இல்லை.
உறவுகளே ! பதிவினை பற்றிய தங்களது எண்ணங்களை மறக்காமல் கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்
CuteParents ல் இன்றைய பதிவினை வாசிக்க அன்புடன் அழைக்கின்றேன்
Motivation Is the Key To Success
உறவுகளே ! பதிவினை பற்றிய தங்களது எண்ணங்களை மறக்காமல் கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்
CuteParents ல் இன்றைய பதிவினை வாசிக்க அன்புடன் அழைக்கின்றேன்
Motivation Is the Key To Success
|
|
Tweet |
Related Posts: ,
,
,
,
Subscribe to:
Post Comments (Atom)








16 Responses to “எழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி ? பாகம் 2”
Feb 10, 2012, 2:06:00 AM
அன்பான சகோதரரே
//ஒவ்வொரு மேதையுமே பாராட்டுதல்களிலிருந்து உருவாகிறார்கள் என்று ஒரு பொன்மொழி உண்டு.//
சரியாகச் சொன்னீர்கள் அதே சமயத்தில் போலித்தனமான பாராட்டுக்கள் தேவையற்றது என கருதுகிறேன் சகோதரரே
//எனவே உங்கள் குழந்தையின் எழுத்திலுள்ள நேர்மறை விஷயங்களை எடுத்துக்கொண்டு அவர்களைப் பாராட்ட தவற வேண்டாம்.//
என்னை ஒப்பீட்டு பார்த்தால் நான் அதிர்ஷ்டவசமாக நீங்கள் சொல்வது போல் என் குழந்தைகளை பாராட்டிக் கொண்டு தான் இருக்கிறேன்
பகிர்வுக்கு நன்றி சகோதரரே
Feb 10, 2012, 5:42:00 AM
தேவையான வாழ்க்கைப் பாடம் நண்பரே...
Feb 10, 2012, 6:18:00 AM
அருமையான விளக்கங்கள் ! நன்றி சார் !
Feb 10, 2012, 7:52:00 AM
தினமும் செய்திதாள் படிப்பது குழந்தைகளின் பொதுஅறிவை மேம்படுத்தும் என்பது உண்மை...நல்ல அருமையான கருத்துகள்
Feb 10, 2012, 8:55:00 AM
ஒவ்வொரு மேதையுமே பாராட்டுதல்களிலிருந்து உருவாகிறார்கள் என்று ஒரு பொன்மொழி உண்டு.
அருமையான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
Feb 10, 2012, 10:32:00 AM
அழகிய படைப்பு...
படிக்கும் அனைவருக்கும் பயன்படும்
Feb 10, 2012, 12:25:00 PM
பெற்றோர்கள் படிக்க வேண்டிய பதிவு...பாராட்டுக்களை விட பெரிய விருது என்ன இருக்கு மாப்ள!
Feb 10, 2012, 5:24:00 PM
குட்.
Feb 10, 2012, 5:27:00 PM
ஒவ்வொரு கருத்தும் பயனுள்ளவை. ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தேவையான பதிவு.. நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும்(பெற்றோர்) இத்தளத்தினை அறிமுகப்படுத்துங்கள்.!!
Feb 10, 2012, 6:43:00 PM
வாசிக்கும் பழக்கம் எழுத்தாற்றலை மேம்படுத்தும்,என்பதும் கற்பனைத்திறன் வளர்க்க உதவும் எண்டதும் நிச்சயமான உண்மை.அது மட்டுமல்லாமல் உலக அறிவு என்று சொல்வார்களே அது குறித்த பல விஷயங்கள் வாசிக்கும் பழக்கம் மூலம் கிடைக்கும் .
நல்லதோர் பதிவு நண்பரே.
Feb 10, 2012, 7:21:00 PM
உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு உங்களின் பிள்ளையை கடிதம் எழுதச் செய்யும் செயல்பாடு ஒரு முக்கிய அம்சமாகும். இதன்மூலம் சமூக தகவல்தொடர்புத் திறன் உங்கள் குழந்தைக்கு மேம்படும். மேலும், பண்டிகை மற்றும் விழா காலங்களில் வாழ்த்து அட்டைகளில் குழந்தையின் சொந்த வாசகங்களை எழுத வைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பலாம்.மேலும், பேனா நண்பர்கள் கலாச்சாரத்தையும் உங்களின் குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். இதன்மூலம் உங்களின் குழந்தைக்கு ஒரு புதிய உலகம் திறக்கப்படும்.
இளங்குழந்களை வைத்துள்ள
பெற்றேர் அனைவரும் இப் பகுதியை
முக்கியமாக அறிய வேண்டும்
பயன் தரும் பதிவுகளையே
தரும் தங்களை பெரிதும் பாராட்டு
கிறேன்
புலவர் சா இராமாநுசம்
Feb 11, 2012, 12:46:00 AM
மீண்டும் பெற்றொருக்கு தேவையான ஒரு நல்லவிடயத்தை சின்னச்சின்ன விடயங்களையெல்லாம் கவனித்து பட்டியலிட்டு பதிவிட்டிருக்கிறியள்.
Feb 11, 2012, 2:27:00 AM
நல்ல பதிவு, இதில் மிகவும் முக்கியமானது வாசிக்கும் பழக்கம்!
Feb 11, 2012, 1:43:00 PM
மிக அருமையாக உஙக்ள் குழந்தை வளர்பு பதிவுகள் போய் கொண்டு இருக்கு
அனைத்து பெற்றோர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக் இருக்கும்
Feb 16, 2012, 11:33:00 PM
விருது காத்திருக்கிறது அன்பரே!
விரையுங்கள்
www.kanakkayan.blogspot.in
நன்றி!
கவிஞர் கணக்காயன்
இ.சே.இராமன்
Feb 24, 2012, 4:30:00 PM
குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி என்பது நிச்சயமாகப் பெற்றோர்களால் கற்றுத்தரப்பட வேண்டிய ஒன்று. கூடவே வாசிக்கும் பழக்கமும் :))
நல்ல பதிவுங்க :))
Post a Comment