January 2, 2012
பூமித்தாய்
கேட்டதெல்லாம் கொடுக்கும் தாய்
கேட்காததையும் கொடுக்கும் சக்தி..!
அணுஅணுவாய் துகள்துகளாய் சேர்ந்து
அண்டப் பிண்டமாய் ஒரு உருண்டை...!
மனிதப் புழுக்கள் துருவத் துருவ முளைக்கும்
மகிமைகள் புதிது புதிதாய்...!
ஆழம் செல்லச் செல்ல ஆயிரமாயிரம் அதிசயங்கள்
அடுக்கடுக்காய் அற்புதங்கள் காணலாம்
எடுக்க எடுக்க அத்தனையும் தேவைகளே..!
![]() |
| கோலார் தங்க சுரங்கம் |
அள்ள அள்ள குறையாத அமுதசுரபி
எள்ளி நகைத்தாலும் எதிர்க்காத அன்புக்குழவி..!
எத்தினாலும் நமக்குத்தான் வலிக்கும்
ஏசினாலும் நம்வாய்தான் வலிக்கும்...!
கோப மேலீட்டால் கோரம் காட்டினால்
மனிதப் பயிர்கள் மகிமையற்றழியும்...!
ஆளத் துடிக்கும் ஆண்டைகளும்
அடிவருடி வாழும் அடிமைகளும்
உயிமுடி துறந்து போகுமிடம்...!
நமது நிலை இதன் மீது
இதன் நிலை எதன் மீது..?
மனிதத் தேவை அத்தனையும்
மனம் அறிந்து கொடுப்பது
இதன் தேவையை
யார் அறிந்து கொடுப்பது...?
கொடுக்க வேண்டாம்.மேலும் மேலும்
மின்சாதன கழிவுகளைக் கொட்டி
மின்சாதன கழிவுகளைக் கொட்டி
கெடுக்காமல் இருந்தால் போதுமே....!
வணக்கம் நண்பர்களே ! நேற்றைய மன்னன் பதிவிற்க்கு அலைபேசி வழியாகவும் இணையத்தின் வழியாகவும் அன்பும் ஆதரவும் அளித்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி ! நன்றி !! நன்றி !!!
உறவுகளே ! கவிதையை சுவாசித்துவிட்டு தங்கள் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்
|
|
Tweet |
Related Posts: ,
,
,
Subscribe to:
Post Comments (Atom)








8 Responses to “பூமித்தாய்”
Jan 3, 2012, 10:43:00 AM
''....எத்தினாலும் நமக்குத்தான் வலிக்கும்
ஏசினாலும் நம்வாய்தான் வலிக்கும்...!..''
''..கெடுக்காமல் இருந்தால் போதுமே....!''
ஒவ்வொருவரும் இதை உணர்ந்தால் எத்தனை அழிவிலிருந்து எம்மையும் காக்கலாம். சிறந்த பதிவு. வாழ்த்துகள் சகோதரா. புத்தாண்டு வாழ்த்துகளும் கூட.
வேதா. இலங்காதிலகம்.
Jan 3, 2012, 10:50:00 AM
"ஆளத் துடிக்கும் ஆண்டைகளும்
அடிவருடி வாழும் அடிமைகளும்
உயிமுடி துறந்து போகுமிடம்...!"
>>>>>
மாப்ள டச்சிங் லைன்ஸ்...விழிப்புணர்வு கவிதைக்கு நன்றி!
Jan 3, 2012, 11:19:00 AM
கொடுக்க வேண்டாம்.மேலும் மேலும்
மின்சாதன கழிவுகளைக் கொட்டி
கெடுக்காமல் இருந்தால் போதுமே....!
ஆமா, ரொம்ப சரியா சொன்னீங்க.
Jan 3, 2012, 11:25:00 AM
கொடுக்க வேண்டாம்.மேலும் மேலும்
மின்சாதன கழிவுகளைக் கொட்டி
கெடுக்காமல் இருந்தால் போதுமே....!
உண்மைதான் திருந்துவார்களா?
Jan 3, 2012, 11:26:00 AM
பூமிதாயினை கூறு போட்டு விற்க்கும் அவலம்!
விவசாயம் செய்த நிலத்தில் ரசாயன கழிவுகள்!
ஆழ்துளை குழாய் போட்டு அவள் மார்பில் ரத்தம் வரும் வரை உறிஞ்சும் கொடுமை மனிதா உனக்கு நீயே வெட்டிக்கொள்ளும் சவக்குழி!
Jan 3, 2012, 12:26:00 PM
////ஆளத் துடிக்கும் ஆண்டைகளும்
அடிவருடி வாழும் அடிமைகளும்
உயிமுடி துறந்து போகுமிடம்...!
நமது நிலை இதன் மீது
இதன் நிலை எதன் மீது..?////
வணக்கம் பாஸ் என்னை மிகவும் கவர்ந்த வரிகள்
அருமையான கவிதை
Jan 3, 2012, 9:55:00 PM
நல்ல கவிதை.
வாழ்த்துகள்.
Jan 4, 2012, 5:06:00 PM
//கொடுக்க வேண்டாம்.மேலும் மேலும்
மின்சாதன கழிவுகளைக் கொட்டி
கெடுக்காமல் இருந்தால் போதுமே....!//
உண்மைதான்.
அருமையான கவிதை.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
Post a Comment