January 1, 2012
காப்பி பேஸ்ட் மன்னன் கருப்பு ரோஜாக்கள் ராஜேஸ்
வணக்கம் நண்பர்களே ! புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவாக இருந்ததா..?இன்றைய பதிவில் நாம் வலையுலக காப்பி பேஸ்ட் மன்னனை பார்க்கப் போகிறோம்.இதோ எனது பதிவினை சுட்டு தனது பதிவாக வெளியிட்ட அந்த நல் உள்ளத்திற்க்காக ஓர் கவிதையுடன் ஆரம்பிக்கிறேன்.
சொந்தமாக
யோசிக்கத் தெரியாமல்
பதிவினை சுட்ட
தோழனே...!
நீ தேட வந்ததைத்
தேடலாம்.என் வலைக்குள்
புகுந்து, எல்லாவற்றையும்
புரட்டிப்போட்டு
இரவுத் திருடனைப் போல்...!
உரைநடை தொனிக்க
வெளிப்படையாய் எழுதி வைத்த
எனது கவிதைகளடங்கிய வலையை
பறிமுதல் செய்ய முடியுமா
உன்னால்..?
திறந்து,உலர்ந்து கிடக்கிற
என் பேனா முனையை
மேஜையில் குத்தி
உடைத்துவிட முடியுமா
உன்னால்...?
அனுமதி இன்றி கிடைக்கப்
பெற்றமகிழ்ச்சியில்
நினைவிருக்கும்படி கோட்டை
கட்டி வாழ்ந்தா விட்டாய்...?
போகிற போக்கில்
இது தொடர்ந்தால், மௌனமாக
இன்றைவிட அதிகமாக
உன் முகத்தினை
கிழித்தெறிவேன் –
மறுபடியொரு கவிதையில்….!
வணக்கம் நண்பர்களே ! இன்றைய பதிவில் காப்பி பேஸ்ட் மன்னன் கருப்புரோஜாக்கள் ராஜேஸ் ஐ உங்களிடம் அறிமுகப் படுத்துகிறேன்
![]() |
| இவர்தான் அந்த நல்ல உள்ளம் |
இவர்தான் கருப்பு ரோஜாக்கள் ராஜேஸ். நான் பெற்ற குழந்தையையே எனக்கு அறிமுகப்படுத்திய புண்ணியவான்.
இவரோட மெயில் முகவரி : kadalmannan1984@gmail.com
முகப்புத்தக முகவரி : http://www.facebook.com/rajesh.singam2
இவரின் GOOGLE + முகவரி : http://plus.google.com/u/0/114577667983101718377/photos
இதில் அவர் வாத்தியார் வேற..( செம காமெடியா இருக்குங்க).
இவருக்கு இன்னொரு வலைத்தளமும் உள்ளது.இதில் ஆண் பெண் புனித உறவை அற்புதமாய் எழுதுறாராம்.அதென்ன எல்லா இடத்திலயும் Intrest பத்தி கேட்டா பெண்கள் அப்படின்னு எழுதியிருக்கீங்க(அது சரி அது நமக்கு எதுக்கு..?தேவையில்லை)
புத்தாண்டின் முதல் நாளில் எனது குழந்தையை எனக்கு அடையாளம் காட்டிய விதம்.
![]() |
| பெரியதாய் பார்க்க படத்தின் மீது க்ளிக்கவும் |
அன்று இரவு 7.30 மணி அளவில் அவருக்கு நான் அனுப்பிய மெயில்..
=============================================================================================
வணக்கம் கருப்பு ரோஜாக்கள் தள நிர்வாகி அவர்களே
நலமா..நல்லா இருக்கீங்களா....
இன்று எனது வலையில் வெளியிட்ட எனது பதிவினை தாங்கள் அப்படியே வரிகூட மாறாமல் உங்கள் தளத்தில் பதிவாக வெளியிட்டுள்ளீர்கள்
31.12.2011 காலை 8.15 ர்க்கு எனது பதிவு http://www.tamilparents.com/2011/12/blog-post_30.html
31.12.2011 அன்று மாலை உங்கள் வலையில் வந்த பதிவு http://karuppurojakal.blogspot.com/2011/12/blog-post_471.html
இதில்...
1.நீங்கள் எனக்கு இதுவரை தெரியப்படுத்தவில்லை கேட்கவும் இல்லை.இதற்கு என் வன்மையான கண்டணங்கள்.
2..இதில் என்ன கொடுமை என்னவெனில் நான் பெற்ற பிள்ளையை எனக்கே நீங்கள் அடையாளம் காட்டியவிதம் தான்.
(நான் ஏற்கனவே உங்கள் வலையில் follower ஆக இருப்பது கூடவா உங்களுக்குத் தெரியவில்லை)
3.உங்கள் வலையில் கருத்துரைப்பெட்டியையாவது திறந்து வையுங்கள்.நானும் வாசித்துவிட்டு கருத்துரை இடுகின்றேன்
4..அனுமதியின்றி வெளியிட்டமையால் கண்டிப்பாக அந்த பதிவினை நீக்கிவிடவும்
பதிவினை நீக்க தவறும் பட்சத்தில் இதனால் வரும் பின்விளைவுகளை நீங்கள் சந்திக்கப் போவதில் ஆச்சரியம் ஒன்றும் இருக்கப்போவதில்லை
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனம்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா..
நீக்கிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில்...
உங்கள் பதிலை ஜனவரி 2 காலை 6 மணிக்குள் தெரியப்படுத்தவும்
அன்புடன்
சம்பத்குமார்
=================================================================================
இந்த மெயிலுக்கே இன்னும் பதில் இல்லை.இடைப்பட்ட நேரத்தில் எனது கவிதைகளை, புத்தாண்டின் முதல் நாளில் தனது கவிதையாய் வெளியிட்டுள்ளார். (என்ன கொடுமை சார் இது...?)
1.என்ன பதில் சொல்ல ? - டிசம்பர் 17 2011 அன்று.
2. வாடகை வீடு - - November 20 அன்று
அவரது வலையில்
பார்க்க இங்கே சொடுக்கவும். - புத்தாண்டு தினத்தில் ஒரே நாளில் இரண்டு பதிவுகளும் (நல்ல கவிஞன் ஐயா நீர்)
இனி அவரிடம் நேரடியாய் சில கேள்விகள்..
நண்பா முதலில் இது ஒரு பொழப்பா..?
நான் பதிவிட்டதையே நீங்களும் பதிவிட ஆரம்பித்திருப்பது நல்ல விஷயமா ?.(ஹா ஹா ஹா உங்களுக்கெல்லாம் சொந்தமா யோசிக்க கூட தெரியல என்ன பண்ண கூகுள் ஆண்டவர் குடுத்த வரம் அப்படி)
நான் தினமும் செய்யும் செயல்களை உங்களுக்கு மெயில் அனுப்புகின்றேன்.காலையில் எழுந்து பல்துலக்குவதில் இருந்து இரவு உறங்கப்போகும் அந்த கணம் வரை அப்படியே பதிவாய் வெளியிடுவீர்களா ?
நண்பா போனமாதம் எனது நண்பர் ஒருவரிடம் ரூபாய் 10000 கடன் வாங்கியிருக்கேன்.நானும் அவருக்கு கொடுத்து எனது பதிவினை சுட்ட நீங்களும் கொடுத்தால் நல்லாவா இருக்கும்.ஆதலால் நீங்களே தந்துவிடவும்.தந்துவிடுவீர்களா..? (இப்படி சொன்னாவாவது நீங்க திருந்துவீங்களா..?)
உங்களுக்கும் எனக்கும் ஓர் வித்தியாசம் மட்டுமே நண்பா..நான் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறேன்.நீங்கள்…..??????
நீங்க போட்ட பதிவைப் பார்த்து என் நண்பர்கள் என்னை கிண்டலடிக்கின்றனர்.உமது பதிவைத்தான் நான் திருடி கவிதையாய் எழுதியதாய்….! உச்ச கட்ட காமெடி பாஸ்
ஏன் நண்பா நான் உங்கள் வலையில் நீர் வலை ஆரம்பித்தது முதல் FOLLWER ஆக இணைஞ்சது கூடவா உங்களுக்கு தெரியல..?பிறகு எப்படி பாஸ் நீங்கல்லாம் வாத்தியாரா இருந்துகிட்டு வலையெழுத வந்தீங்க..?
நீங்க உங்க ப்ளாக்ல கருத்துரை பெட்டியையாவது திறந்து வையுங்க.நானும் நான் எழுதிய கவிதையையே படிச்சுட்டு கமெண்ட் போட வசதியா இருக்கும்.
ஏம்பா கடைசில என்னையும் பிரபல பதிவர் லிஸ்ட்ல சேர்த்து விட்டுட்டியே..(வலையுலக அரசியலில் ஒருவர் எழுதிய பதிவு அடுத்த நபரால் ஒருவரி கூட மாறாமல் வெளிவந்தால் பதிவின் உரிமையாளார் பிரபல பதிவர்தானாம்.இதுதான் தற்போது பேச்சு)
இதுவே உங்களுக்கு இறுதி எச்சரிக்கை.எனது பதிவுகளை நீக்குவதற்க்கு..
நீக்காத பட்சத்தில், மீண்டும் இது போல் தொடர்ந்தால் கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்
எச்சரிக்கையுடன்..
சம்பத்குமார்
தமிழ்பேரன்ட்ஸ்
வலையுலக நண்பர்களே ! ஏற்கனவே தமிழகத்தில் நிழவும் 4 மணிநேர பவர்கட்டில் இருந்து தப்பித்து,ஆபீஸ் வேலை நேரம் போக கிடைக்கின்ற நேரத்தினை பயன்படுத்தி பதிவெழுத ஆசைப்பட்டால்..., இது போன்ற பதிவுலக கருப்பு ஆடுகளை என்னதான் செய்வது..? உங்கள் விவாதங்களை எண்ணங்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால திருட்டுப் பதிவர்களுக்கு ஓர் பாடமாய் இருக்கட்டும்.
|
|
Tweet |
Related Posts: ,
,
Subscribe to:
Post Comments (Atom)








38 Responses to “காப்பி பேஸ்ட் மன்னன் கருப்பு ரோஜாக்கள் ராஜேஸ்”
Jan 2, 2012, 8:33:00 AM
இப்படிப்பட்டவர்களுக்கு போய் தங்களின் நேரத்தையும், உழைப்பையும் வீணாக்கியிருக்கிறீர்களே சம்பத்..!!
இப்படிப்பட்டவர்கள் தானாகவே திருந்தினால் தான் உண்டு.. இந்தப் பதிவை அவருக்கும் அனுப்பிவிடுங்கள்.. அப்போதாவது பதிவை நீக்குவாரா என்று பார்ப்போம்.
Jan 2, 2012, 9:00:00 AM
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று சொல்வார்கள் இவர்களாக திருந்த வேண்டும்
Jan 2, 2012, 9:53:00 AM
Jan 2, 2012, 9:54:00 AM
தங்கம் பழனி அவர்களுக்கு! பல மெயில் அனுப்பியும் பதில் இல்லை!அவர் ஆசிரியர் வேறு!இவரிடம் படிக்கிற மாணவர்கள் உருப்புடுவாங்களா? இது என்ன காசா பணமா? கேட்டா...நாம கொடுக்கப் போகின்றோம்....நல்லா பாருங்க உங்க பதிவும் இருக்கலாம்!அவருடைய பதிவில் சொந்தமா எதுவும் இல்லையின்னு நினைக்கிறேன்!
Jan 2, 2012, 9:56:00 AM
இன்னு மாலை இதையும் காப்பி பேஸ்ட் செய்யப்போகிறார் சம்பத்....அப்ப என்ன செய்யப்போகப்போறிங்க ஹஹஹ
Jan 2, 2012, 10:55:00 AM
>>veedu said...
இன்னு மாலை இதையும் காப்பி பேஸ்ட் செய்யப்போகிறார் சம்பத்....அப்ப என்ன செய்யப்போகப்போறிங்க ஹஹஹ
யோவ், அவர் புத்திசாலிய்யா, படிச்சுப்பார்ஹ்த்துட்டுதான் காப்பி பேஸ்ட் பண்ணூவார் ஹி ஹி
@ ஓனர்
கண்டனப்பதிவு கூட காமெடி குட் ஒன்
Jan 2, 2012, 11:58:00 AM
நம்மளுக்கு newjaffna.com. வேடிக்கை என்னவென்றால், அவர்கள் copy/paste இனை அவர்களது website இல் disable செய்துள்ளார்கள்.
Jan 2, 2012, 12:29:00 PM
அருமையான பொழுதுபோக்கு சம்பத்! :-)
Jan 2, 2012, 12:36:00 PM
@ தங்கம் பழனி said...
///இப்படிப்பட்டவர்களுக்கு போய் தங்களின் நேரத்தையும், உழைப்பையும் வீணாக்கியிருக்கிறீர்களே சம்பத்..!!
இப்படிப்பட்டவர்கள் தானாகவே திருந்தினால் தான் உண்டு.. இந்தப் பதிவை அவருக்கும் அனுப்பிவிடுங்கள்.. அப்போதாவது பதிவை நீக்குவாரா என்று பார்ப்போம்.///
முதல் கருத்திற்க்கு நன்றி நண்பா
பார்ப்போம் மெயில் அன்ப்பியுள்ளேன் இந்தப் பதிவையும்
Jan 2, 2012, 12:42:00 PM
@ K.s.s.Rajh said...
//திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று சொல்வார்கள் இவர்களாக திருந்த வேண்டும்//
வணக்கம் நண்பா..
முதலில் சுட்டுப்போட்ட பதிவை தற்சமயம் நீக்கிவிட்டார் நண்பரே.ஆனால் மீதம் இரண்டு உள்ளது நண்பா
ஹா ஹா ஹா புத்தாண்டுல நல்ல காமெடியா இருக்கு பாஸ்
Jan 2, 2012, 12:43:00 PM
@ veedu said...
//இன்னு மாலை இதையும் காப்பி பேஸ்ட் செய்யப்போகிறார் சம்பத்....அப்ப என்ன செய்யப்போகப்போறிங்க ஹஹஹ //
வெயிட் பண்ணலாம் சுரேஸ் அந்த நண்பருக்கு இந்த பதிவையும் மெயில் பண்ணிருக்கேன்.
Jan 2, 2012, 12:45:00 PM
@ சி.பி.செந்தில்குமார் said...
///@ ஓனர்
கண்டனப்பதிவு கூட காமெடி குட் ஒன் ///
வணக்கம் சிபி அண்ணா..
புரிந்துணர்வோடு கருத்துரை இட்டமைக்கு மிக்க நன்றி..
Jan 2, 2012, 12:45:00 PM
@ எஸ் சக்திவேல் said...
//நம்மளுக்கு newjaffna.com. வேடிக்கை என்னவென்றால், அவர்கள் copy/paste இனை அவர்களது website இல் disable செய்துள்ளார்கள்.//
தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே
Jan 2, 2012, 12:45:00 PM
வாத்தியாரா... ரைட்டு :)
Jan 2, 2012, 12:46:00 PM
@ ! சிவகுமார் ! said...
//அருமையான பொழுதுபோக்கு சம்பத்! :- )//
புத்தாண்டு ஆரம்பமே நல்லா களை கட்டுது சிவா..
என்னதான் பண்ணுறது.ஸ் அப்பா முடியல
Jan 2, 2012, 12:48:00 PM
@ Philosophy Prabhakaran said...
//வாத்தியாரா... ரைட்டு :)//
ஆமாம் பிரபா..
இதுல அவருக்கு இன்னொரு பிளாக் வேற இருக்கு..
ஹி ஹி ஹி
Jan 2, 2012, 1:06:00 PM
இனிய மதிய வணக்கம் அண்ணா,
மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இவர் பதிவினைப் படித்துப் பார்த்து காப்பி செய்வதில்லை,. காரணம் காப்பி பேஸ்ட் செய்யாதவாறு நான் ஓர் பதிவில் எழுதி வைத்திருந்த வாக்கியங்களைக் கூட இணைத்து காப்பி பேஸ்ட் செய்து தன் வலையில் போட்டவர்.
மெயில் அனுப்பி ஆள் எனக்கும் பதில் கொடுக்கவில்லை! என்ன செய்யலாம்?
Jan 2, 2012, 1:07:00 PM
அண்ணே, இவருக்கு பலவாட்டி நான் கூட சொல்லியிருக்கேன். ஒரே வழி சட்டரீதியில் நடவடிக்கை எடுப்பது தான்.
Jan 2, 2012, 1:11:00 PM
அண்ணா, இப்படியான ஜென்மங்களை என்ன செய்யலாம்?
இவருடைய வலையில் உள்ள அத்தனை பதிவுகளுமே காப்பி டூ பேஸ்ட் தான்.
Jan 2, 2012, 1:22:00 PM
இந்த பதிவை படித்த பிறகாவது அவர் தூக்கி விடுவார் என்று அவர் தளத்தில் போய் பார்த்தேன் ம்ஹும் தூக்கவேயில்லை
அதிலும் நீங்கள் எழுதிய புத்தாண்டு தீர்மனங்கள் சம்பந்தமான பதிவை காப்பி பண்ணி போட்டது உச்சகட்ட கமெடி
காப்பி பேஸ்ட் செய்பவர்கள் கிழே எங்கிருந்து எடுத்தேன் என்று ஒரு சின்ன லிங்க் கொடுத்தால் குறைந்த போய் விட போகிறார்கள்.
இதில் பதிவின் இறுதியில் அவருடைய கையேழுத்து வேறே
சிக்நேஞ்சர் போடுறாகலாம் சிக்நேஞ்சர்
Jan 2, 2012, 1:22:00 PM
எனது கடும் கண்டனங்கள்....
Jan 2, 2012, 1:23:00 PM
நானும் மெயில் அனுப்பிட்டேன் ம்ம்ம்ம் பதில் இல்லை, விடுய்யா போகட்டும் ஹி ஹி...
Jan 2, 2012, 1:29:00 PM
@ நிரூபன்
//இனிய மதிய வணக்கம் அண்ணா,
மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இவர் பதிவினைப் படித்துப் பார்த்து காப்பி செய்வதில்லை,. காரணம் காப்பி பேஸ்ட் செய்யாதவாறு நான் ஓர் பதிவில் எழுதி வைத்திருந்த வாக்கியங்களைக் கூட இணைத்து காப்பி பேஸ்ட் செய்து தன் வலையில் போட்டவர்.
மெயில் அனுப்பி ஆள் எனக்கும் பதில் கொடுக்கவில்லை! என்ன செய்யலாம்? //
வணக்கம் நீரு..
சட்டரீதியான நடவடிக்கையே இவருக்கு தீர்வாகப்படும் எனத் தெரிகிறது
Jan 2, 2012, 1:31:00 PM
@ நிரூபன் said...
//அண்ணா, இப்படியான ஜென்மங்களை என்ன செய்யலாம்?
இவருடைய வலையில் உள்ள அத்தனை பதிவுகளுமே காப்பி டூ பேஸ்ட் தான்.//
உண்மை சகோ..
கடந்த ஆகஸ்ட்டில் பதிவெழுத வந்து இது வரை 432 பதிவுகள் எழுதிவிட்ட மகா எழுத்தாளர்
Jan 2, 2012, 1:33:00 PM
@ ஹைதர் அலி said...
//இந்த பதிவை படித்த பிறகாவது அவர் தூக்கி விடுவார் என்று அவர் தளத்தில் போய் பார்த்தேன் ம்ஹும் தூக்கவேயில்லை
அதிலும் நீங்கள் எழுதிய புத்தாண்டு தீர்மனங்கள் சம்பந்தமான பதிவை காப்பி பண்ணி போட்டது உச்சகட்ட கமெடி
காப்பி பேஸ்ட் செய்பவர்கள் கிழே எங்கிருந்து எடுத்தேன் என்று ஒரு சின்ன லிங்க் கொடுத்தால் குறைந்த போய் விட போகிறார்கள். //
ஆம் அண்ணா பதிவினை சுட தெரிந்த நண்பருக்கு லின்க் கொடுக்க கூட மனம் இல்லை போல.
இதில் பதிவின் இறுதியில் அவருடைய கையேழுத்து வேறே
சிக்நேஞ்சர் போடுறாகலாம் சிக்நேஞ்சர்
Jan 2, 2012, 1:47:00 PM
@ MANO நாஞ்சில் மனோ said... 22
//நானும் மெயில் அனுப்பிட்டேன் ம்ம்ம்ம் பதில் இல்லை, விடுய்யா போகட்டும் ஹி ஹி...//
வணக்கம் அண்ணாச்சி
நீங்க சொன்னா சரியாய்தான் இருக்கும்
இருந்தாலும் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கட்டுமே..ஹி ஹி ஹி
Jan 2, 2012, 5:12:00 PM
அட முன்று வருடமா நான் கத்தி கத்தி ஓய்ந்து விட்டேன்
இப்பதான் நீங்கஆரம்பிச்சி இரூக்கீங்க
சுலமாக ஆட்டைய போட்ுங்க சில்துகள்
Jan 2, 2012, 5:15:00 PM
பிரயோஜன்ம் இல்லை அவர்கலா திருhந்தினால் ஒழிய வேர ஒன்னும் பண்ண முடியாது, இன்று இவர் நாளை இன்னும் பலர்................
Jan 2, 2012, 5:28:00 PM
வணக்கம் சம்பத்..!
சொந்தமாக யோசிக்க தெரியாதவங்க எல்லாம் ஏன் பதிவெழுத வாராங்க என்றே தெரியல..இதில வேற இவர் வாத்தியார் ம்.. பாவம் இவரிடம் படிக்கும் மாணவர்கள் பரீட்சையில் கொப்பி பேஸ் செய்ய சொல்லி கொடுப்பாரோ..??
புது வருட வாழ்த்துக்கள்..!!
Jan 2, 2012, 8:38:00 PM
இவரைப்போன்றவர்களுக்கு என்னுடைய கண்டனத்தையும் இங்கு பதிவு செய்கிறேன் நண்பரே! மற்ற திருட்டுக்கள் எல்லாம் யாருக்கும் தெரியாமல் நடக்கும். சில சமயம் வெளியே தெரிவதும் இல்லை. ஆனால் கற்பனை, சிந்தனை திருட்டு என்பது “நான் திருடன்” “நான் திருடன்” என்று தன்னைத்தானே வெளி உலகிற்கு காட்டிக்கொடுப்பது. இது கூட தெரியாத இவர்களை நினைத்தால், ஒரு பக்கம் பரிதாபமாக இருக்கிறது. இவரைப்போன்றவர்களுக்கு வலையுலகம் மொத்தமும் எதிராக நின்று குரல் கொடுக்க வேண்டும். திருடப்பட்ட பதிவுகளை உடனடியாக அடையாளம் கண்டு, அவற்றை உடனே நீக்குவதற்கு, கூகுள் நிறுவனத்திற்கும், திரட்டிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட வேண்டும். இதற்க்கு வலைபதிவு உலகம் மொத்தமாக முனைய வேண்டும். நன்றி!
Jan 2, 2012, 8:38:00 PM
Jan 2, 2012, 8:38:00 PM
Jan 2, 2012, 8:38:00 PM
Jan 2, 2012, 10:40:00 PM
எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன் ..
இப்படி பட்ட கீழ்த்தனமான பொழப்பு பன்றதுக்கு
____________
விடுங்க கெட்ட வார்த்தை வருது ..
ஒன்னு உண்மை சார்
அந்த ஆள் போட்டோ ல ஏ தெரியுது
திருட்டு முழி
Jan 3, 2012, 10:18:00 AM
பய புள்ள திருந்தும் நெனக்கிறீங்க மாப்ள...ஸ்ஸ் அபா அந்த ஸ்கூல் புள்ளங்க பாவம்யா!
Jan 3, 2012, 11:18:00 AM
இதற்கு அவர் சும்மாவே இருக்கலாம். அந்தப் பள்ளி மாணவர்களை நினைத்தால் தான் பயமாக உள்ளது.
Jan 7, 2012, 10:47:00 PM
தமிழ்மணம், யூடான்ஷ் தமிழ் 10காம் போன்ற திரட்டிகள் அவரைப் ப்போன்றவர்களை black listசெய்தால் என்ன?
உடனடி நடவடிக்கை தேவை
Feb 24, 2012, 7:02:00 PM
//4 மணிநேர பவர்கட்டில் இருந்து தப்பித்து,ஆபீஸ் வேலை நேரம் போக கிடைக்கின்ற நேரத்தினை பயன்படுத்தி பதிவெழுத ஆசைப்பட்டால்..., இது போன்ற பதிவுலக கருப்பு ஆடுகளை என்னதான் செய்வது..?//
நாம எழுதுற பதிவு பிடிச்சிருக்கு என்கிற காரணத்தினால் தான் அது திருடப்படுகிறது...
திருட்டு பதிவுகளை முடக்க கூகுள் வழி செய்துள்ளது அண்ணா... நாம் அங்கே ஒரு புகார் பதிவு செய்தால் போதும் திருடப்பட்ட பதிவு கூகுளால் நீக்கபடும்.(tynt.com website நம்ம பதிவு காப்பி செய்ய்ப்படுவதை கண்காணிக்கிறது)
Post a Comment