August 31, 2011
பணத்தின் மதிப்பை பயிற்றுவிக்கும் வழிகள்
பணம் என்பது அப்பாவுக்கு மாதா மாதம் கிடைக்கிறது என்பது தெரிகிறதே, தவிர அதற்கு எப்படி எல்லாம் உழைக்க வேண்டியிருக்கும் என்பது குழந்தைகளுக்கு தெரியவில்லை.உங்கள் குழந்தைகள் ஏதாவது ஒரு பொருளை வாங்கித்தரச் சொல்லிக் கேட்டால் அல்லது உங்களுக்கு ஒன்றை வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தால் அது உங்கள் எத்தனை மணி நேர உழைப்பு என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்.
ஒரு செல்போன் வாங்க விரும்புகிறீர்கள். விலை பத்தாயிரம் ரூபாய். உங்கள் மாத சம்பளமோ இருபதாயிரம்தான் என்றால் செல்போனின் மதிப்பு உங்கள் 15 நாள் உழைப்பு. இப்படி கணக்கு போட்டுப் பார்த்தால் அதை அவசியம் வாங்கித்தான் ஆக வேண்டுமா என்ற எண்ணம் வரும். இதை குழந்தைகளிடம் சொன்னால், வாங்கிக் கொடுத்த பொருளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும்.
மேலும் வளரும் விரைவில்..
நண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்.
மேலும் வாசிக்க
8/31/2011 by சம்பத்குமார் · 4
August 29, 2011
தாய்மை..
மேலும் வாசிக்க
8/29/2011 by சம்பத்குமார் · 4
August 28, 2011
ஆங்கிலப் பள்ளி..
நண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளியுங்கள்.
மேலும் வாசிக்க
8/28/2011 by சம்பத்குமார் · 8
நாளை நம் குழந்தைகளும் சாதிக்க...
ஒரு குழந்தைக்கு, தன்னைப் பற்றிய அபிப்ராயமும், தன் தகுதிகள் குறித்த அறிமுகமும் பெற்றோர்களின் பாராட்டிலிருந்தோ கண்டிப்பில் இருந்தோ பிறக்கிறது. சின்னத்தவறொன்றுக்கு “அதை செய்வியா? இதை செய்வியா?” என்று தலையில் குட்டு வாங்கும்போது குட்டு, தலையில் பதிகிறது. ஆனால் தான் எதற்கும் லாயக்கில்லை என்கிற எண்ணம் மூளையில் பதிகிறது. அக்கறையாலும் அன்பாலும், குழந்தை திருந்த வேண்டும் என்ற தவிப்பிலும்தான் எல்லாப் பெற்றோரும் கண்டிக்கிறோம். ஆனால் குழந்தைகள் மனதில் என்ன பதிவை விடுகிறோம் என்பதுதான் முக்கியம்
மேலும் வாசிக்க
8/28/2011 by சம்பத்குமார் · 2
August 26, 2011
குழந்தையின் எதிர்கால பாதுகாப்பிற்காக நாம் தரவேண்டிய பரிசு.
இது இன்சூரன்ஸ் பாலிஸி எடுப்பது அல்ல நண்பர்களே ! குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்காக நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய தகுதிகள் என்ன எப்படி அதனை கற்றுத்தருவது. ஓர் பார்வை.
அன்பு பெற்றோர்களே, இன்றைய சூழ்நிலையில்வருமானத்திற்கேற்ப செலவு செய்த காலம் போய் இந்த மாதம் என்ன செலவு என்று முடிவு செய்துவிட்டு அதற்கான வருமானம் தேடி ஓடுகிற கால கட்டாயத்திற்கு வந்துவிட்டோம்.அடிப்படை தேவைகள் வீடு, உடை, உணவு என்றிருந்த நிலை மாறி கார், கிரெடிட் கார்டு, மாடர்ன் செல்போன், கேபிள் டிவி என மாறி வருகிற உலகத்தில் பொருளில்லார்க்கு வாழ்க்கை இல்லை என்றே ஆகிவிட்டது. இதையெல்லாம் புரிந்து கொண்டு சில புதிய தகுதிகளை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்தாவிட்டால் நாம் நம் குழந்தைகளுக்கு தவறு இழைத்தவர்களாகிவிடுவோம்.
மேலும் வாசிக்க
8/26/2011 by சம்பத்குமார் · 7
August 24, 2011
தேவைதானா இந்த லோக்பால் சட்டம் ?
மேலும் வாசிக்க
8/24/2011 by சம்பத்குமார் · 0
August 23, 2011
அடம் பிடிக்கும் குழந்தையை அரவணைக்க...
1.நியாயமான தேவைக்காக..(பசியின் போது பாலுக்காக).
2.தன் விருப்பத்திற்காக (விளையாட்டு பொம்மை மற்றும் பிறவற்றைப் பார்த்து அழுதல்).
3.அநியாயத்திற்கு அடம்பிடித்தல் (காய்ச்சலில் சிகிச்சை பெறும்போது
ஐஸ்கிரீமுக்காக அழுதல், கண்ணில் பட்ட விளம்பரத்தைப் பார்த்ததும் அது கெட்டதாகவே இருந்தாலும் அதைப் பெறுவதற்கு அழுதல்).
இப்படி குழந்தைகள் எதற்கென்றே தெரியாமல் எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் பிரச்சினைக்கு சில தீர்வுகள்..
மேலும் வாசிக்க
8/23/2011 by சம்பத்குமார் · 6
August 22, 2011
குழந்தைகளின் நல்ல நண்பன் யார் ?
புத்தகம் என்றாலே இந்த காலத்துக் குழந்தைகள் அலறியடித்துக் கொண்டு ஓடுகிறார்களே, அவர்களிடம் பாடப் புத்தகத்தை படிக்கச் சொல்வதே கஷ்டமாக இருக்கிறது. இதில் மற்ற புத்தகத்தை வேறா? என்று கேட்கிறீர்களா? பாடப்புத்தகம் தேர்வு சம்பந்தப் பட்டது. மனப்பாடம் செய்தே ஆக வேண்டிய கட்டாயம். ஆனால் மற்ற புத்தகங்கள் அப்படி இல்லையே. நல்ல பழக்கத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்ற நம்பிக்கையோடும் கொஞ்சம் உற்சாகத்தோடும் முயற்சியை துவங்குங்கள்.
மேலும் வாசிக்க
8/22/2011 by சம்பத்குமார் · 4
August 21, 2011
August 20, 2011
வாருங்கள் நண்பர்களே ! அடுத்த காந்தி அழைக்கிறார்...
பெருமைப்படுத்தியது. கிசன் பாபுராய் ஹசாரே என்பது இவரின் முழுப்பெயர். 1937, ஜூன் 15ல் மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தின் ரிலேகான் சித்தி என்ற கிராமத்தில் பிறந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு "பூ' விற்கும் வேலைக்கு சென்றார். அவசர காலத்தின் போது அதிகளவில் ராணுவத்துக்கு இளைஞர்களை இந்தியா தேர்வு செய்தது. 1962ல் 25 வயதில் இந்திய ராணுவத்தில் ஹசாரே சேர்ந்தார். அங்கு டிரைவராக பணியை துவக்கினார்.
மேலும் வாசிக்க
8/20/2011 by சம்பத்குமார் · 0
August 18, 2011
கிப்ட் வாங்கித் தரும் பெற்றோர்களே கவனிக்கவும் !
குழந்தைகள் தங்களுடைய வேலை செய்வதற்கு ஏதாவது தர வேண்டும் என சொல்லும் பழக்கம் பெற்றோரிடம் இருந்துதான் வருகிறது.அவர்கள்தான் ஆரம்பத்தில் குழந்தை எதையாவது செய்ய மறுத்தால் உடனே குழந்தைக்கு பிடித்த பொருளை கொடுத்து அந்த காரியத்தை செய்யுமாறு சொல்கிறார்கள். ’நீ பல் தேய்ச்சினா நான் உனக்கு சாக்லேட் தருவேன் என ஆரம்பத்தில் பெற்றோர்கள்தான் குழந்தைகளிடம் கூறுகிறார்கள். குழந்தைகள் அதையே பழக்கமாக வைத்துக் கொள்கிறார்கள். இப்படி அவர்கள் அன்றாடம் செய்ய வேண்டிய வேலைக்கு பெற்றோர்கள் ஏதாவது கிப்டாக தருவது மிக மேசமான பழக்கம். இது நீண்ட கால தீர்வும் கிடையாது. இதன் விளைவாக குழந்தையும் எப்போதும் உங்களிடமிருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும். அதோடு உங்களையும் கிப்ட் வாங்கி தரும் ஒரு மெஷினாகதான் பார்க்கும். அவர்கள் அன்றாட வேலைகளை ஏன் செய்ய வேண்டும். அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை குழந்தைக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் கடினமாகதான் இருக்கும். குழந்தைக்கு புரியும் வரை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
மேலும் வாசிக்க
8/18/2011 by சம்பத்குமார் · 2
August 17, 2011
காலை நேர டென்ஷனை களைவது எப்படி ?
மேலும் வாசிக்க
8/17/2011 by சம்பத்குமார் · 0
August 16, 2011
குழந்தை வளர்ப்பு : கேள்வி கேட்கும் குழந்தைகள்
மேலும் வாசிக்க
8/16/2011 by சம்பத்குமார் · 0
August 12, 2011
குழந்தைகள் படிப்பதற்காக பெற்றோர்கள் செய்ய வேண்டியவை…
தங்களின் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் பலரும் அதன்பொருட்டு தங்களின் குழைந்தைகளுக்கு உதவி செய்வதில்லை. சிலர் செய்ய நினைத்தாலும் வழிமுறை தெரிவதில்லை. அவர்களுக்காக இதோ சில யோசனைகள்...
- வீட்டில் டி.வி. பயன்பாடு என்பது முக்கியமானதுதான். அதேநேரத்தில், படிக்கும் நேரம் என்று வந்துவிட்ட பிறகு அதை அணைத்துவிட வேண்டும். என்னதான் பிடித்த நிகழ்ச்சி என்றாலும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. குழந்தைகளின் எதிர்காலம்தான் முக்கியம்.
மேலும் வாசிக்க
8/12/2011 by சம்பத்குமார் · 1
August 10, 2011
பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெற...
பெற்றோர்களின் வாழ்வில் பிரச்சினை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால் பிரச்சினை இல்லாத மனிதனே இல்லை. மனைவி அல்லது குழந்தையோடு பிரச்சினை, கல்வியறிவில்லை, உடல்நலம் இல்லை, குண்டாக இருக்கிறேன், கல்யாணம் ஆகவில்லை, சொந்த வீடு இல்லை, பணமில்லை, கார் இல்லை, அலுவலக பிரச்சினை என பிரச்சனைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்த மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற சில யோசனைகள்.
- ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு முடிவு உண்டு. பிரச்சினைகள் எப்போதும் நிரந்தரமாக இருக்கப் போவது இல்லை என்பதை நீங்கள் முதலில் உணர வேண்டும்.
- உலகத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கிறது. நான் மட்டும் தான் எல்லாவித பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறேன் என்று எண்ணாதீர்கள். பில்கேட்ஸ் முதல் பிச்சைக்காரர்கள் வரைக்கும் பிரச்சினை என்பது எல்லோரிடமும் தான் இருக்கிறது.
மேலும் வாசிக்க
8/10/2011 by சம்பத்குமார் · 0
August 8, 2011
அதிர்ச்சி தகவல் : குழந்தை டிவி பார்த்துகொண்டே உள்ளதா ?
நாடு முழுவதும் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் மூலம் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.
300 குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 20 சதவீதம் பேர் தற்போது தொப்பையுடன் உள்ளனர்.
இதுதவிர 10 சதவீத குழந்தைகளுக்கு தலைவலியும், 2 சதவீத குழந்தைகளுக்கு வலிப்பும் உள்ளது.
6 சதவீத குழந்தைகளுக்கு உடல் பலவீன நோய்களும் பாதித்திருப்பது தெரியவந்தது.
அதிக அளவில் டி.வி.பார்ப்பதால் 53 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மிகவும் தாமதமாகவே தூங்கச் செல்கின்றனர்.
இதனால் அவர்கள் போதுமான ஓய்வு எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
டி.வி.பார்ப்பதால் குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுவதாகவும், அவர்கள் அதிக அளவில் கோபம், எரிச்சல், அடைவதாகவும், 32 சதவீத குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
டி.வி.பார்க்கும் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதில்லை. இதனால் உடல் மற்றும் மன நலத்திற்கு தேவையான அத்தியாவசிய பயிற்சிகள் அவர்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது.
அதிக அளவில் டி.வி.பார்க்கும் குழந்தைகளில் 70 சதவீதம் பேருக்கு பேசும் மொழிகளில் தெளிவு இல்லாத நிலை உள்ளது. தாங்கள் சொல்ல நினைப்பதை தெளிவாகச் சொல்ல முடியாமல் திணறுகின்றனர்.
ஆகவே , பெற்றோர்களே, இந்த ஆய்வு முடிவை பார்த்தாவது நீங்கள் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துங்கள்.அவர்களின் டிவி பார்க்கும் நேரத்தை கண்காணியுங்கள்.
டிவியே பார்க்க வேண்டாம் என்று சொல்லவரவில்லை. அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும், மன நலத்திற்கும் நன்மைகளை அள்ளித் தருகிற புத்தகங்களை படிக்க பழக்குங்கள். தினமும் செய்தித்தாள்களை வாங்கி படிக்கச் செய்யுங்கள்! இதன் மூலம் அவர்களது பொது அறிவு வளர்வதுடன் நல்ல சிந்தனையாளர்களாவும், பேச்சாளர்களாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் மேதைகளாவது உங்கள் கைகளில்தான் உள்ளது.
மேலும் வாசிக்க
8/08/2011 by சம்பத்குமார் · 1
பொய் கூறும் குழந்தையை என்ன செய்வது..
மேலும் வாசிக்க
8/08/2011 by சம்பத்குமார் · 0

























