December 2, 2011

தேர்வெழுதும் குழந்தைகளுக்குத் தேவையான டிப்ஸ்


வணக்கம் அன்பிற்கினிய உறவுகளே நேற்றைய பதிவிற்க்கு ஆதரவளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி.இன்றைய பதிவில் ஆண்டுதோறும் குழந்தைகள் சந்திக்கும் தேர்வுகளை வெற்றிகரமாக சந்திக்கவும், அதில் வெற்றிபெற தேவையான டிப்ஸ்கள் பற்றிய ஓர் அலசல்.பொதுவாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடங்களுக்கான நேர அட்டவணைஇருப்பதுபோல வீட்டிலும் படிக்கும் பாடங்களுக்கான அட்டவணைஇருப்பது முக்கியம்.ஏனெனில் பள்ளியில் பாடங்களை கூர்ந்து கவனிப்பது எந்தளவிற்குஅவசியமோ, அதேஅளவு அந்தப் பாடங்களை வீட்டில் வந்து படித்து,நம் நினைவில் வைப்பதும் நிச்சயம் தேவையான ஒன்று. பள்ளியிலும், வீட்டிலும் சூழல் நிறையமாறுபடுகிறது. பள்ளியில் சக மாணவர்களோடும், ஆசிரியர்களோடும் இருந்துவிட்டு, வீட்டிற்குள் வந்தவுடன் அமைதியும், தனிமை உணர்வும் ஏற்படுகிறது.அந்த சூழலில்தான் நமது படிப்பிற்கான திட்டமிடுதலை தொடங்க வேண்டியுள்ளது.மேலும் பொதுதேர்வு நடக்கும் நேரத்தில் அதிகமாக விடுமுறைகள் இருக்கும். படிப்பதற்கென்றே விடப்படும் அந்தவிடுமுறை நாட்களை படிப்பில் சரியான முறையில் செலவழிப்பதற்கு நாம் முறையான திட்டமிடுதல்களைசெய்ய வேண்டும்.

பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் அதிக நேரம் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அவ்வாறு படித்தால்தான் சிறப்பாக படிக்க முடியும் என்றும் நம்புகின்றனர். தங்களின் பிள்ளைகள் அதிக நேரம் தொடர்ந்து படிப்பதை பெருமையாகவும் கருதுகின்றனர். ஆனால் இது மிகவும் தவறான ஒரு நம்பிக்கை. இதனால் மாணவர்கள் சோர்ந்துபோய் விடுவார்கள். ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை நாம் பத்து நிமிடங்கள் இடைவெளி எடுத்தாலும்கூட, தொடர்ச்சியாக நான்கு மணிநேரங்களுக்கும் மேலாக ஒருவர் படிப்பது நல்லதல்ல. இதனால் மூளையின் ரசாயன செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, நாம் படிப்பது நினைவில் நிற்காமல் போகலாம்.

ஒவ்வொரு பணியுமே முறையான இடைவெளியை கொண்டதாக இருக்க வேண்டும். நீண்டநேரம்தொடர்ந்து படிப்பதன்மூலம் மாணவர்களின் மூளை ஏற்புத்திறன் குறைந்து, படிப்பதை உள்வாங்கும் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. எனவே ஒரு செயல்பாடானது சரிசமமான இடைவெளியைக் கொண்டதாகஇருக்க வேண்டும். அப்போதுதான் மூளை நன்கு செயல்படும்.படிப்பின்போதான சிறிதுநேர ஓய்விற்குப் பிறகு மீண்டும் உடனேயே படிப்பை தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு பதிலாக படிப்போடு சம்பந்தப்பட்ட வேறு சில நடவடிக்கைகளை செய்யலாம். அந்த நடவடிக்கைகளை படிப்பிற்கு திட்டமிடும்போதே முடிவுசெய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட பாடத்தை தொடர்ச்சியாக உள்வாங்கும் திறன் ஒரு மாணவரின் மூளைக்கு சுமார் நாற்பது முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை மட்டுமே இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் பள்ளிகளில் ஒவ்வொரு முக்கால் மணி நேரத்திற்கும் ஒரு ஆசிரியர் மாறி, பாடங்களும் மாறுகிறது. வீட்டில் அதிகபட்சம் ஒரு பாடத்தை ஒரே நேரத்தில் ஒருவர் ஒரு மணிநேரம் படிக்கலாம். பின்னர் சிறிது இடைவெளி நிச்சயம் தேவை. அந்த நேரத்தில் தண்ணீரோ, தேநீர் அல்லது காபியோ அருந்தலாம்.ஆனால் அந்த இடைவெளியானது விளையாடுவதற்கோ, டி.வி. பார்ப்பதற்கோ செலவிடப்படக்கூடாது.ஏனெனில் அதன்பிறகு மீண்டும் படிப்பிற்கு திரும்புவது சிரமமாகிவிடும். அதேசமயம் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தனியாக நேரம் ஒதுக்கப்பட வேண்டும். படிப்பின்போது இடைவெளி விடுவதற்கானமுக்கிய நோக்கமே கண்களுக்கும், திசுக்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒரேமுறையில் உட்கார்ந்து படிப்பதால் ஒரு மாணவர் விரைவில் சோர்வடைந்து, அதன்மூலம் மன அழுத்தமும்அதிகமாகிறது.

ஒரு நாள் முழுவதும் படிக்கையில், பாடத்தை மாற்றி மாற்றி படித்தால் சோர்வை தவிர்க்கலாம். உதாரணமாக நீங்கள் வரலாற்றுப் பாடத்தை படித்துவிட்டு, பின்னர் இயற்பியலைப் படிக்கலாம். இதைத்தவிர வேறுசில வழிமுறைகளும் உள்ளன. நீங்கள் பாட சம்பந்தமாக எழுதும் வேலையை செய்துகொண்டிருந்தால், அதைமுடித்துவிட்டு படிக்கும் வேலையை தொடங்கலாம். மேலும் அறிவியல் பாடங்களில் உள்ள படங்களையும் வரைந்து பார்க்கலாம். இதன்மூலம் உங்களின் மூளை விரைவில் சோர்வடையாமல் தவிர்த்து, பாடத்தை நன்றாக நினைவில் பதிய வைக்கலாம்.

படிப்பதில், மேலே சொன்னதைப் போன்ற மாற்று நடவடிக்கைகள் சிறந்த பலனளிப்பதாக இருந்தாலும், இந்த செயல்முறை அனைவருக்கும் ஒரேமாதிரியாக ஒத்துவரும் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரும் தங்களின் மனோநிலை மற்றும் விருப்பத்திற்கேற்ப திட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். படிக்கும் செயல்முறையில் நாம் வகுக்கும் திட்டமானது, முறையாக பின்பற்றக்கூடியதாகவும், நமக்கு ஒத்துவரக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம்தான் நாம் அதிகமான பலன்களைப் பெறமுடியும்.

உயர்கல்விக்கு மாணவர்களை தயார்படுத்த, அடித்தளமாக அமைவது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு. தேர்வு பற்றிய பயம் மாணவர்களுக்கு மட்டுமல்லாது பெற்றோர்களுக்கும் இந்த சமயத்தில் இருக்கும். இந்த சமயத்தில் பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு அன்பும் ஆதரவுமாக இருந்து குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற உதவியாய் இருக்க வேண்டும்.மாணவர்கள் தேர்வுக்கு நன்கு தயாராக, பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய தெரிந்த சில டிப்ஸ்கள் இங்கே..


  • வீட்டின் சூழ்நிலையை மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ப அமைதியாக வைத்துக்கொள்வது பெற்றோர்களின் முதல் கடமை.
  • மாணவர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பெற்றோர்கள் தடுக்க கூடாது. ஆனால் அதில் நேரத்தை வீணாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • மாணவர்களை படி, படி என்று வற்புறுத்தக்கூடாது. அதற்கு பதிலாக அன்பாக அவர்களை படிக்க கேட்டுக் கொள்ள வேண்டும்.
  • சில எளிய உடற்பயிற்சிகளை கற்றுத்தந்து, அதை அவர்கள் தினமும் முறையாக மேற்கொள்ளும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் இரவில் நன்கு தூங்குகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.
  • மாணவர்களுக்கு தகுந்த ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கி, எல்லா விதத்திலும் பெற்றோர்கள் ஆதரவாக இருக்க வேண்டும்.
  • மாணவர்களின் திறனையும், விருப்பத்தையும் தெரிந்து கொள்ளாமல், பெற்றோர்கள் தங்களது எதிர்பார்ப்பை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது.
  • மாணவர்கள் தனித்திறனை பெற்றோர்கள் ஊக்குவித்த வண்ணம் இருக்க வேண்டும். இதனால் அவர்கள் திறன் மேம்படும்.
  • மாணவர்களிடம் நம்பிக்கையூட்டும் விதமாக பேசி, இதற்கு முன் தடைகள், தோல்விகள் ஏற்பட்டிருந்தால் அதை மறக்கச் செய்ய வேண்டும்.
  • ஒருபோதும் தங்கள் குழந்தைகளை அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்.
  • தேர்வு சமயத்தில் தேர்வு முடிவைப் பற்றி நினைக்காமல், முடிந்த அளவு நல்ல முயற்சி எடுக்க மாணவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.
உறவுகளே பதிவு பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் மறக்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால தலைமுறைக்காக..


38 Responses to “தேர்வெழுதும் குழந்தைகளுக்குத் தேவையான டிப்ஸ்”

தமிழ்வாசி பிரகாஷ் said...
Dec 2, 2011, 7:40:00 PM

படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள பகிர்வு.
பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்களுக்கும் பங்கு உள்ளது என்பதையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள். நன்று....

வாசிக்க:
லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு


தமிழ்வாசி பிரகாஷ் said...
Dec 2, 2011, 7:41:00 PM

ஓ... நான்தான் பர்ஸ்ட் மாணவனா?


கோகுல் said...
Dec 2, 2011, 8:44:00 PM

குழந்தைகள் மட்டுமல்ல பெற்றோர்களும் தேர்வுக்கு தயாராக வேண்டுமென்று சொல்கிறீர்கள்.சரிதான்.


suryajeeva said...
Dec 2, 2011, 8:54:00 PM

படிப்பது குறித்தே அனைவரும் கவலைப் படாமல் கற்பது குறித்து கவலைப் பட்டால் இதில் எதுவுமே தேவை இல்லை.. எட்டு மணி நேரம் பள்ளிகளில் செலவிடும் குழந்தைகள் பாடங்களை கற்க வேண்டும்... பள்ளிகளில் படிக்க வைக்க பாடுபடுவதை விட கற்றுக் கொடுத்தால் பெற்றோர்களுக்கு எந்த கவலையும் இருக்க போவதில்லை... உதாரணமாக உயிரியல் வகுப்புகளில் பாலின வகுப்பு எடுக்கப் படாமலே செல்லப் படுவதால்... இன்று பாலியல் கல்வி அவசியம் என்ற நிலைக்கு வந்துள்ளோம்...


ராஜா MVS said...
Dec 2, 2011, 8:54:00 PM

குழந்தைகள் தேர்வில் வெற்றிபெற பெற்றோர்களின் பங்கும் உள்ளது என்பதை அருமையான முறையில் தொகுத்தளித்துள்ளீர்கள்...


Abdul Basith said...
Dec 2, 2011, 9:27:00 PM

மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்கள். பெற்றோர்களும் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியவைகள். பகிர்வுக்கு நன்றி நண்பரே!


veedu said...
Dec 2, 2011, 9:36:00 PM

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு (ஒரு பள்ளிக்கு உங்கள்வலை தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளேன் மெயில் ஜடியும் கொடுத்துள்ளேன் நன்றி தெரிவிப்பார்கள் என்று நினைக்கின்றேன்)


இராஜராஜேஸ்வரி said...
Dec 3, 2011, 12:10:00 AM

அன்பும் ஆதரவுமாக இருந்து குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற உதவியாய் இருக்க வேண்டும்.மாணவர்கள் தேர்வுக்கு நன்கு தயாராக, பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய தெரிந்த சில டிப்ஸ்கள் பயனுள்ளவை.. பாராட்டுக்கள்..


ஹைதர் அலி said...
Dec 3, 2011, 1:37:00 AM

பகிர்வுக்கு நன்றி
என்ன நண்பரே இந்த துறையில் உங்களுடைய ஆய்வுகள் பிரமிக்க வைக்கிறது இது சம்பந்தமான முனைவர் பட்டத்திற்கு படித்துக் கொண்டிருக்கிறீர்களா?


தங்கம்பழனி said...
Dec 3, 2011, 3:04:00 AM

பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்ககும் தேர்வு நேரத்தில் தேவையான பயனுள்ள குறிப்புகளை வழங்கியமைக்கு நன்றி!!

தேர்வு காலத்தில் பெற்றோர்களின் பங்கு என்ன, பிள்ளைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் தெளிவாக கூறியுள்ளது சிறப்பம்சம். பாராட்டுகளும், வாழ்த்துகளும்.!!


K.s.s.Rajh said...
Dec 3, 2011, 7:19:00 AM

மாணவர்களுக்கு பயனுள்ள குறிப்பு பாஸ்


சம்பத் குமார் said...
Dec 3, 2011, 9:19:00 AM

@ தமிழ்வாசி பிரகாஷ் said...
//படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள பகிர்வு.
பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்களுக்கும் பங்கு உள்ளது என்பதையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள். நன்று....//

முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Dec 3, 2011, 9:21:00 AM

@ கோகுல் said...

//குழந்தைகள் மட்டுமல்ல பெற்றோர்களும் தேர்வுக்கு தயாராக வேண்டுமென்று சொல்கிறீர்கள்.சரிதான்.//

உண்மைதான் நண்பரே..குழந்தைகள் தேர்வுக்கு தயாராகும் போது நாமும் தான் தயாராக வேண்டும்

வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Dec 3, 2011, 9:23:00 AM

@ suryajeeva said...

//படிப்பது குறித்தே அனைவரும் கவலைப் படாமல் கற்பது குறித்து கவலைப் பட்டால் இதில் எதுவுமே தேவை இல்லை.. எட்டு மணி நேரம் பள்ளிகளில் செலவிடும் குழந்தைகள் பாடங்களை கற்க வேண்டும்... பள்ளிகளில் படிக்க வைக்க பாடுபடுவதை விட கற்றுக் கொடுத்தால் பெற்றோர்களுக்கு எந்த கவலையும் இருக்க போவதில்லை... உதாரணமாக உயிரியல் வகுப்புகளில் பாலின வகுப்பு எடுக்கப் படாமலே செல்லப் படுவதால்... இன்று பாலியல் கல்வி அவசியம் என்ற நிலைக்கு வந்துள்ளோம்...//

உண்மைதான் நண்பரே..பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு தற்போது துளிர்விடுவது வரவேற்கதக்கதாய் உள்ளது

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி


சம்பத் குமார் said...
Dec 3, 2011, 9:24:00 AM

@ ராஜா MVS said...
//குழந்தைகள் தேர்வில் வெற்றிபெற பெற்றோர்களின் பங்கும் உள்ளது என்பதை அருமையான முறையில் தொகுத்தளித்துள்ளீர்கள்...//

மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Dec 3, 2011, 9:24:00 AM

@ Abdul Basith said...

//மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்கள். பெற்றோர்களும் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியவைகள். பகிர்வுக்கு நன்றி நண்பரே!//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Dec 3, 2011, 9:25:00 AM

@ veedu said...

//தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு (ஒரு பள்ளிக்கு உங்கள்வலை தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளேன் மெயில் ஜடியும் கொடுத்துள்ளேன் நன்றி தெரிவிப்பார்கள் என்று நினைக்கின்றேன்)//

தங்களின் தொடர் ஆதரவிற்க்கு மிக்க நன்றி நண்பரே..

Dec 2, 2011 9:36:00 PM


சம்பத் குமார் said...
Dec 3, 2011, 9:26:00 AM

@ இராஜராஜேஸ்வரி said...

//அன்பும் ஆதரவுமாக இருந்து குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற உதவியாய் இருக்க வேண்டும்.மாணவர்கள் தேர்வுக்கு நன்கு தயாராக, பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய தெரிந்த சில டிப்ஸ்கள் பயனுள்ளவை.. பாராட்டுக்கள்..//

மிக்க நன்றி சகோ


சம்பத் குமார் said...
Dec 3, 2011, 9:50:00 AM

@ ஹைதர் அலி said...

//பகிர்வுக்கு நன்றி
என்ன நண்பரே இந்த துறையில் உங்களுடைய ஆய்வுகள் பிரமிக்க வைக்கிறது இது சம்பந்தமான முனைவர் பட்டத்திற்கு படித்துக் கொண்டிருக்கிறீர்களா?//

வணக்கம் நண்பரே..

உண்மையாய் சொல்ல வேண்டுமென்றால் திருமணமாகி 4 வருடக்களுக்கு பிறகு முதல் குழந்தை பிறந்தது.இடைப்பட்ட காலத்தில் ஊராரின் ஏச்சுக்க்ளுக்கும் பேச்சுகளுக்கும் வருத்தப்பட்டு அது சம்பந்தமான புத்தகங்கள்,செமினார்கள்,கூட்டங்கள்,குழந்தை வளர்ப்பு பற்றிய மருத்துவர்களின் அறிவுரைகள் இது போன்று நான் கற்றதும் பெற்றதையும் எனது உரைநடையில் பதிவிட்டு வருகிறேன்.

இதில் எனக்கு பேருதவியாய் இருக்கும் மருத்துவ நண்பர் திரு.ஸ்டீபன் அவர்களுக்கு மிக்க நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்

தங்களின் மேலான ஆதரவிற்க்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Dec 3, 2011, 9:51:00 AM

@ தங்கம்பழனி said...

//பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்ககும் தேர்வு நேரத்தில் தேவையான பயனுள்ள குறிப்புகளை வழங்கியமைக்கு நன்றி!!

தேர்வு காலத்தில் பெற்றோர்களின் பங்கு என்ன, பிள்ளைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் தெளிவாக கூறியுள்ளது சிறப்பம்சம். பாராட்டுகளும், வாழ்த்துகளும்.!!//

மிக்க நன்றி நண்பரே..


சம்பத் குமார் said...
Dec 3, 2011, 9:52:00 AM

@ K.s.s.Rajh said...

//மாணவர்களுக்கு பயனுள்ள குறிப்பு பாஸ்//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


Lakshmi said...
Dec 3, 2011, 11:31:00 AM

மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்கள். பெற்றோர்களும் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியவைகள். பகிர்வுக்கு நன்றி .


விக்கியுலகம் said...
Dec 3, 2011, 11:37:00 AM

படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள விஷயங்களை அள்ளி சொல்லி இருக்கீங்க!


திண்டுக்கல் தனபாலன் said...
Dec 3, 2011, 12:49:00 PM

அருமையான தகவல் படிக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமல்ல.... பெற்றோருக்கும்....பகிர்விற்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"


!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Dec 3, 2011, 1:16:00 PM

அருமையான யோசனைகளை மாப்ள.
கண்டிப்பா நீங்க சொன்னபடி படிச்சா மார்க் நிறைய வாங்கலாம்.

பகிர்வுக்கு நன்றி..


கவிதை வீதி... // சௌந்தர் // said...
Dec 3, 2011, 1:33:00 PM

அற்புதமான பதிவு...


பள்ளியில் தினமும் இதைத்தான் ஒப்புவித்துக் கொண்டிருக்கிறேனம்.. ஆனால் மாணவர்கள் தான் காதில் போட்டுக்கொள்வதில்லை...

இன்னும் மாணவர்களுக்கு சொல்லக்கூடிய கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவில்லை..
அந்த பக்குவம் வரும போது மாணர்கள் நிலை பாவமாக இருக்கிறது..

இதுபோன்ற பதிவுகள் பெற்றோர் படிக்கும் பேர்து மாணவர்ளை வழிநடத்த வசதியாக இருக்கும்..


வாழ்த்துக்க்ள..


சம்பத் குமார் said...
Dec 3, 2011, 2:30:00 PM

@ Lakshmi said...

//மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்கள். பெற்றோர்களும் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியவைகள். பகிர்வுக்கு நன்றி //

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி அம்மா


சம்பத் குமார் said...
Dec 3, 2011, 2:31:00 PM

@ விக்கியுலகம் said...

//படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள விஷயங்களை அள்ளி சொல்லி இருக்கீங்க!//

மிக்க நன்றி மாம்ஸ்


சம்பத் குமார் said...
Dec 3, 2011, 2:32:00 PM

@ திண்டுக்கல் தனபாலன் said...

//அருமையான தகவல் படிக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமல்ல.... பெற்றோருக்கும்....பகிர்விற்கு நன்றி நண்பரே! //

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Dec 3, 2011, 2:33:00 PM

@ !* வேடந்தாங்கல் - கருன் *! said...

//அருமையான யோசனைகளை மாப்ள.
கண்டிப்பா நீங்க சொன்னபடி படிச்சா மார்க் நிறைய வாங்கலாம்.

பகிர்வுக்கு நன்றி..//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி மாம்ஸ்


சம்பத் குமார் said...
Dec 3, 2011, 2:39:00 PM

@ கவிதை வீதி... // சௌந்தர் // said...


///அற்புதமான பதிவு...


பள்ளியில் தினமும் இதைத்தான் ஒப்புவித்துக் கொண்டிருக்கிறேனம்.. ஆனால் மாணவர்கள் தான் காதில் போட்டுக்கொள்வதில்லை...

இன்னும் மாணவர்களுக்கு சொல்லக்கூடிய கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவில்லை..
அந்த பக்குவம் வரும போது மாணர்கள் நிலை பாவமாக இருக்கிறது..

இதுபோன்ற பதிவுகள் பெற்றோர் படிக்கும் பேர்து மாணவர்ளை வழிநடத்த வசதியாக இருக்கும்..


வாழ்த்துக்க்ள..///

தங்களைப் போன்ற ஆசிரியர்களிடம் இருந்து வாழ்த்து பெறுவது மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது நண்பரே..

வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்


www.ChiCha.in said...
Dec 3, 2011, 7:10:00 PM

hii.. Nice Post

For latest stills videos visit ..

www.chicha.in

www.chicha.in


MANO நாஞ்சில் மனோ said...
Dec 3, 2011, 9:57:00 PM

குழந்தைகளுக்கு சூப்பர் அறிவுரைகள் மிக்க நன்றி...!!!


Mahan.Thamesh said...
Dec 5, 2011, 12:44:00 AM

நல்ல பயனுள்ள தகவல் . பகிர்வுக்கு நன்றி


M.R said...
Dec 6, 2011, 8:54:00 PM

நல்ல தகவல் நண்பரே, பிள்ளைகளோடு பெற்றோர்களுக்கும் நல்ல கருத்து
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி


சம்பத் குமார் said...
Dec 8, 2011, 10:33:00 PM

@ MANO நாஞ்சில் மனோ said...

//குழந்தைகளுக்கு சூப்பர் அறிவுரைகள் மிக்க நன்றி...!!!//

வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Dec 8, 2011, 10:34:00 PM

@ Mahan.Thamesh said...

//நல்ல பயனுள்ள தகவல் . பகிர்வுக்கு நன்றி//

மிக்க நன்றி நன்பரே


சம்பத் குமார் said...
Dec 8, 2011, 10:34:00 PM

@ M.R said...

//நல்ல தகவல் நண்பரே, பிள்ளைகளோடு பெற்றோர்களுக்கும் நல்ல கருத்து
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


;