December 7, 2011

அலுவலகப் பணி
வணக்கங்கள் கோரும்
அதிகாரியின் அறையில்
கால்கள் தயங்கி தயங்கி நுழைகின்றன...!

கண்டுகொள்ளப்படாததால் உடல்குறுகி
எகத்தாளக் குரலால் தடுமாறுகிறேன்
அவசரத்தில் குறிப்பெடுத்து
அதற்க்குப்பின் விரித்தெழுத
கணிப்பொறியில் கைகள் ஊர்கின்றன...!

என்
கண்ணாடிக் கதவுகளை ஊடுருவும்
உளவுக்கண்கள் ஊசியாய் தைக்கின்றன..!

உணவு நேரத்தில்
செய்தித்தாள் புரட்டவும் தயங்குகிறேன்...!என்னை அழைக்கும் தொலைபேசியில்
தயங்கி தயங்கி பேசுகிறேன்..!

தேடிவரும் நண்பரை
சிறுசிறு பதில்களோடு திருப்பி அனுப்புகிறேன்...!

சோர்வு சிதைந்தாலும்
கட்டளைக்குப் பணிகிறேன்...!

நாளை என்னும் வார்த்தையை
நாக்கு தயங்கும் சொல்ல...
எதேதோ வார்த்தைகளால்
தினந்தோறும் புண்படுகிறேன்...!

படியிறங்கி வெளியேறி வந்து
தரையில் நிற்கையில் பெரும் நிம்மதி
விடுதலை...!

கண்கூச ஊரும் வாகனங்களில்
கவனம் மாற்றிப் பதிக்கிறேன்...!

நாளை
மீண்டும் இங்கு திரும்ப…!


படங்கள் ; கூகுள் தேடல்

நண்பர்களே கவிதை பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.
24 Responses to “அலுவலகப் பணி”

சி.பிரேம் குமார் said...
Dec 7, 2011, 10:22:00 PM

//என்
கண்ணாடிக் கதவுகளை ஊடுருவும்
உளவுக்கண்கள் ஊசியாய் தைக்கின்றன..!

//இந்த வரிகள் பிடித்தது அன்பரே


கோகுல் said...
Dec 7, 2011, 11:03:00 PM

ஒரு கடைநிலை ஊழியனின் மனநிலையாக பார்ப்பதா?அல்ல
ஆளுமை என்ற பெயரில் நிகழும் அடக்குமுறை என பார்ப்பதா?
இரண்டுக்கும் பொருந்துகிறது.
நல்ல சிந்தனை நண்பரே


தமிழ்வாசி பிரகாஷ் said...
Dec 8, 2011, 12:13:00 AM

ஒவ்வொரு ஊழியனின் பார்வை கவிதை வடிவில்.....


மகேந்திரன் said...
Dec 8, 2011, 12:50:00 AM

அலுவலகத்தில் சாதாரணமாக ஏற்படும்
சூழல்களை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்...
தான் எனும் அகந்தையுடன்.. அனைத்து பணியாளர்களையும்
தனக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் மேலதிகாரியின் அகங்காரம்
இழையோடித் தெரிகிறது....
அதே சமயம் பணியாளரின் எண்ணங்கள் மனதில் சிக்கென்று
ஒட்டிக்கொண்டது....

அருமை.. அருமை...


விச்சு said...
Dec 8, 2011, 5:53:00 AM

மேலதிகாரிக்கு பயந்து செயல்படும் ஒரு உண்மை ஊழியனின் பரிதாப நிலைமை.


விக்கியுலகம் said...
Dec 8, 2011, 8:33:00 AM

பொழப்பாயிப்போச்சி என்னத்த பன்றதுங்கறீங்க!


veedu said...
Dec 8, 2011, 10:22:00 AM

அப்பா பத்துவருடம் இதே அனுபவத்தை அனுபவித்தேன் இப்ப நான் சொந்த தொழில் செய்வதால் மகிழ்ச்சியா இருக்கிறேன்


suryajeeva said...
Dec 8, 2011, 11:03:00 AM

கலக்கல்... ஊழியர்களிடையே ஒற்றுமை இல்லாமை, உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை ஆகியவை மேற்கொண்ட காரணங்களுக்கு அடிப்படை... நம்மை பொறுத்தவரை புது விஷயங்களை தெரிந்து கொள்ள தயக்கம் காட்டுவதும் ஒரு காரணம்... வலி அருமையாக பதிவு செய்யப் பட்டுள்ளது


ராஜா MVS said...
Dec 8, 2011, 12:50:00 PM

அருமையான சிந்தனை...

கவிதை சூப்பர்... நண்பா...


Rathnavel said...
Dec 8, 2011, 12:53:00 PM

அருமை.


!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Dec 8, 2011, 4:59:00 PM

எதேதோ வார்த்தைகளால்
தினந்தோறும் புண்படுகிறேன்...!

படியிறங்கி வெளியேறி வந்து
தரையில் நிற்கையில் பெரும் நிம்மதி
விடுதலை...!

கண்கூச ஊரும் வாகனங்களில்
கவனம் மாற்றிப் பதிக்கிறேன்...!

நாளை
மீண்டும் இங்கு திரும்ப…!// அருமையான வரிகள் நண்பா..


சம்பத் குமார் said...
Dec 8, 2011, 10:21:00 PM

@ சி.பிரேம் குமார் said...
/////என்
கண்ணாடிக் கதவுகளை ஊடுருவும்
உளவுக்கண்கள் ஊசியாய் தைக்கின்றன..!

//இந்த வரிகள் பிடித்தது அன்பரே////

முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Dec 8, 2011, 10:22:00 PM

@ கோகுல் said...
//ஒரு கடைநிலை ஊழியனின் மனநிலையாக பார்ப்பதா?அல்ல
ஆளுமை என்ற பெயரில் நிகழும் அடக்குமுறை என பார்ப்பதா?
இரண்டுக்கும் பொருந்துகிறது.
நல்ல சிந்தனை நண்பரே//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Dec 8, 2011, 10:22:00 PM

@ தமிழ்வாசி பிரகாஷ் said...

//ஒவ்வொரு ஊழியனின் பார்வை கவிதை வடிவில்.....//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Dec 8, 2011, 10:23:00 PM

@ மகேந்திரன் said...
//அலுவலகத்தில் சாதாரணமாக ஏற்படும்
சூழல்களை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்...
தான் எனும் அகந்தையுடன்.. அனைத்து பணியாளர்களையும்
தனக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் மேலதிகாரியின் அகங்காரம்
இழையோடித் தெரிகிறது....
அதே சமயம் பணியாளரின் எண்ணங்கள் மனதில் சிக்கென்று
ஒட்டிக்கொண்டது....

அருமை.. அருமை...//

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Dec 8, 2011, 10:24:00 PM

@ விச்சு said...
//மேலதிகாரிக்கு பயந்து செயல்படும் ஒரு உண்மை ஊழியனின் பரிதாப நிலைமை.//

உண்மைதான் நண்பரே.. ஒவ்வொரு அலுவலகத்திலும் இது போல் ஒருவர் உண்டு


சம்பத் குமார் said...
Dec 8, 2011, 10:26:00 PM

@ விக்கியுலகம் said...

//பொழப்பாயிப்போச்சி என்னத்த பன்றதுங்கறீங்க!//

ஆமாம் மாம்ஸ் அதனால தான் சகிச்சுக்குட்டு இருக்காங்க..

வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி மாம்ஸ்


சம்பத் குமார் said...
Dec 8, 2011, 10:27:00 PM

@ veedu said...

//அப்பா பத்துவருடம் இதே அனுபவத்தை அனுபவித்தேன் இப்ப நான் சொந்த தொழில் செய்வதால் மகிழ்ச்சியா இருக்கிறேன்//

உங்கள் தொழிலில் சிறந்து விளங்க மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே


சம்பத் குமார் said...
Dec 8, 2011, 10:28:00 PM

@ suryajeeva said...

//கலக்கல்... ஊழியர்களிடையே ஒற்றுமை இல்லாமை, உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை ஆகியவை மேற்கொண்ட காரணங்களுக்கு அடிப்படை... நம்மை பொறுத்தவரை புது விஷயங்களை தெரிந்து கொள்ள தயக்கம் காட்டுவதும் ஒரு காரணம்... வலி அருமையாக பதிவு செய்யப் பட்டுள்ளது //

வருகைக்கும் ஆழமான கருத்திற்க்கும் மிக்க நன்றி நன்பரே


சம்பத் குமார் said...
Dec 8, 2011, 10:29:00 PM

@ ராஜா MVS said...

//அருமையான சிந்தனை...

கவிதை சூப்பர்... நண்பா...//


மிக்க நன்றி நன்பரே


சம்பத் குமார் said...
Dec 8, 2011, 10:29:00 PM

@ Rathnavel said...

//அருமை.//

மிக்க நன்றி ஐயா..


சம்பத் குமார் said...
Dec 8, 2011, 10:30:00 PM

@ !* வேடந்தாங்கல் - கருன் *! said...


///கண்கூச ஊரும் வாகனங்களில்
கவனம் மாற்றிப் பதிக்கிறேன்...!

நாளை
மீண்டும் இங்கு திரும்ப…!// அருமையான வரிகள் நண்பா..///

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


Jaleela Kamal said...
Dec 11, 2011, 10:31:00 AM

ரொம்ப் அருமை


santhoshini said...
Jan 5, 2012, 6:19:00 PM

really fantastic


;