December 1, 2011
பாடை யாத்திரை
சிதறிய பட்டாசின்
காகித சதைகள் மீது
ஊர்வலக் கால்கள்.
மன விளிம்பில்
சப்பணமிட்டது சப்த சந்தோஷம்...!
தெருவின் தேய்மானங்களுக்கு
ஒத்தடம் கொடுத்தபடி
உதிரிப்பூக்கள்..!
அந்த நாள் போரை
அடையாளம் காட்டியது
அய்யனார் ஊதிய சங்கு..!
இழுத்துக் கட்டிய கன்றின் தோளில்
ஒழுகின பறையின் ஓசையில்
பரபரத்த கால்களின்
டப்பாங்குத்து ஆட்டத்தில்
பிரசன்னமானது
பிரபுதேவா டான்ஸ்...!
"கோய்ந்தா.... கோய்ந்தா"
இங்காவது இருப்பாரா
இப்படியும் ஓர் இறை தேடல்...
காணாமல் போன பிள்ளையை தேடும்
தாயாராய்...!
மரணத்தை சுமந்து செல்லும்
பிணத்தின் உதட்டிலும்
ஈக்களின் முத்தம்..!
எதைப் பற்றியும்
கவலையில்லை – கால்களின்
கட்டவிழ்ந்தால் போதும்...
பாடையில் தலைகீழாய் தொங்கியபடி
வரும் கோழியின் கதறல்...!
கதறல் இங்கே யாருக்கு கேட்கும்...?
படங்கள் ; கூகுள் தேடல்..
உறவுகளே எழுதிய கவிதை பிடித்திருந்தால் தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)








25 Responses to “பாடை யாத்திரை”
Dec 1, 2011, 9:39:00 AM
எதைப் பற்றியும்
கவலையில்லை – கால்களின்
கட்டவிழ்ந்தால் போதும்...
பாடையில் தலைகீழாய் தொங்கியபடி
வரும் கோழியின் கதறல்...!
மனது வலிக்கும் வரிகள் கோழியின் கதறல்...யாருக்கு கேட்க்கும் வெட்டியானுக்கு அன்றைக்கு கறிச்சோறு...
Dec 1, 2011, 9:52:00 AM
இன்றைய பிணத்தை நாளைய பிணங்கள் சுமந்து செல்கின்றன இதான் வாழ்வின் யதார்த்தம் உங்கள் கவிதை அருமை
Dec 1, 2011, 10:14:00 AM
கதறல் இங்கே யாருக்கு கேட்கும்...?
Dec 1, 2011, 10:46:00 AM
நிதர்சனம்...கவிதை ஜூப்பருங்க!
Dec 1, 2011, 11:42:00 AM
வரிகள் நல்லா இருக்கு.....
Dec 1, 2011, 12:17:00 PM
அருமையான வரிகள் நண்பரே!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
Dec 1, 2011, 1:37:00 PM
மரணத்தின் வலியில், மரண பயத்தில் பயணிக்கும் ஒரு உயிரை பற்றி இது வரை யாரும் கூறியதாக நினைவில்லை... கவிதை என்றும் போல் அருமை..
Dec 1, 2011, 2:41:00 PM
இறந்த உடலோடு இறக்கபோகும் உயிரின் பயணம்...
கவிதை அருமை... நண்பரே...
Dec 1, 2011, 2:47:00 PM
இறந்தவர்களின் யாத்திரை கவிதை வரிகளில் அருமையான முயற்சி.
Dec 1, 2011, 3:32:00 PM
ஓ!இந்த மாதிரி வழக்கமெல்லாம் உண்டா?
நான்பார்த்ததில்லை நண்பரே!
ஆனால்.இது போல நீங்கள் கூறியவாறு யாருக்கு கேட்க்கப்போகிறது அந்த கதறல்?
Dec 1, 2011, 6:36:00 PM
அருமை
Dec 1, 2011, 7:26:00 PM
இறந்த உடலோடு இறக்கபோகும் உயிரின் பயணம்...
கவிதை அருமை...
Dec 1, 2011, 11:07:00 PM
@ veedu said...
//எதைப் பற்றியும்
கவலையில்லை – கால்களின்
கட்டவிழ்ந்தால் போதும்...
பாடையில் தலைகீழாய் தொங்கியபடி
வரும் கோழியின் கதறல்...!
மனது வலிக்கும் வரிகள் கோழியின் கதறல்...யாருக்கு கேட்க்கும் வெட்டியானுக்கு அன்றைக்கு கறிச்சோறு...//
உண்மைதான் நண்பரே..முதல் வருகைக்கும் முத்தான் கருத்திற்க்கும் மிக்க நன்றி
Dec 1, 2011, 11:08:00 PM
@ K.s.s.Rajh said...
//இன்றைய பிணத்தை நாளைய பிணங்கள் சுமந்து செல்கின்றன இதான் வாழ்வின் யதார்த்தம் உங்கள் கவிதை அருமை//
மிகச்சரியான வார்ததைகள்
Dec 1, 2011 9:52:00 AM
Dec 1, 2011, 11:09:00 PM
இராஜராஜேஸ்வரி said...
//கதறல் இங்கே யாருக்கு கேட்கும்...?//
உண்மையிலேயே நம்மில் யாரும் அதை கவனிப்பதே இல்லை
Dec 1, 2011, 11:10:00 PM
@ விக்கியுலகம் said...
//நிதர்சனம்...கவிதை ஜூப்பருங்க!//
மிக்க நன்றி மாம்ஸ்
Dec 1, 2011, 11:10:00 PM
தமிழ்வாசி பிரகாஷ் said...
//வரிகள் நல்லா இருக்கு.....//
மிக்க நன்றி நண்பரே
Dec 1, 2011, 11:11:00 PM
@ திண்டுக்கல் தனபாலன் said...
//அருமையான வரிகள் நண்பரே!
நம்ம தளத்தில்://
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே
Dec 1, 2011, 11:12:00 PM
@ suryajeeva said...
//மரணத்தின் வலியில், மரண பயத்தில் பயணிக்கும் ஒரு உயிரை பற்றி இது வரை யாரும் கூறியதாக நினைவில்லை... கவிதை என்றும் போல் அருமை..//
தங்களின் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே
Dec 1, 2011, 11:13:00 PM
@ ராஜா MVS said...
//இறந்த உடலோடு இறக்கபோகும் உயிரின் பயணம்...
கவிதை அருமை... நண்பரே...//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Dec 1, 2011, 11:13:00 PM
@ வேடந்தாங்கல் - கருன் *! said...
//இறந்தவர்களின் யாத்திரை கவிதை வரிகளில் அருமையான முயற்சி.//
மிக்க நன்றி நண்பரே
Dec 1, 2011, 11:17:00 PM
@ கோகுல் said...
//ஓ!இந்த மாதிரி வழக்கமெல்லாம் உண்டா?
நான்பார்த்ததில்லை நண்பரே!
ஆனால்.இது போல நீங்கள் கூறியவாறு யாருக்கு கேட்க்கப்போகிறது அந்த கதறல்?//
இது தற்போதும் வழக்கத்தில் இருக்கும் நிஜம் நண்பரே..
அதிலும் சனிக்கிழமையன்று இறந்துபோனால் கண்டிப்பாய் கோழிக்குஞ்சும் இறந்தவருடன் இறக்கும்..
சனி பொணம் தனியாக போகாது என்றொரு சொலவடையும் உண்டு
Dec 1, 2011, 11:19:00 PM
@ Rathnavel said...
//அருமை//
நன்றி ஐயா
Dec 1, 2011, 11:20:00 PM
@ Lakshmi said...
//இறந்த உடலோடு இறக்கபோகும் உயிரின் பயணம்...
கவிதை அருமை...//
மிக்க நன்றி அம்மா அவர்களே
Dec 3, 2011, 7:21:00 PM
hii.. Nice Post
For latest stills videos visit ..
www.chicha.in
www.chicha.in
Post a Comment