December 24, 2011

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 3


வணக்கம் நண்பர்களே மீண்டுமொரு குழந்தைகளுக்க்கான் பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இந்த தொடரின் முதல் இரண்டு பாகங்களை வாசிக்க 1.குழந்தைவளர்ப்பில் கவனிக்க வேண்டியவை மற்றும் கவனிக்கவேண்டியவை பாகம் 2.பொதுவாக குழந்தைகளுக்கு ஆசிரியரை பிடிக்கவில்லையென்றால் கூட அவர்கள் நடத்தும் பாடங்கள் பிடிக்காது, படிக்கப் பிடிக்காது என்பதை ஆசிரியர்கள் உணர்வதில்லை. அதனால் மாணவர்களுக்குப் பிடித்தது போல நடந்து கொள்ள முயற்சிப்பதில்லை.ஆசிரியர் பாடம் நடத்தும்விதம் பிடிக்க வில்லையென்றாலோ அல்லது தன்னை நடத்தும் விதம் பிடிக்கவில்லை என்றாலோ கூட ஆசிரியரை பிடிக்காது. இதன் காரணம் ஆசிரியர் நமது பிள்ளைகளை அடிப்பதினால் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.இதில் யார் செய்தது சரி அல்லது தவறு என்று பார்ப்பதை விட ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்குமான உறவை மேம்படுத்துவது எப்படி என்றும் அதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் பார்ப்போம்.

ஒருவரை அடிப்பது என்பது யார் செய்தாலுமே தவறுதான். மிருகங்களுக்குத்தான் அடித்து பயிற்சி கொடுப்பார்கள். ஆனால் இன்று மிருகங்களை அடிப்பதையே யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படியிருந்தும் அடிக்கும் பழக்கம் மட்டும் இன்னும் முழுதாக நம்மிடமிருந்து நீங்கவில்லை. பெற்றோர் , ஆசிரியர் அல்லது சகமாணவன் என யாரோ ஒருவர் யாராவது ஒருவரை அடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் இன்னும். என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் நம் அடிமனதின் ஆழத்தில் இன்னும் கொஞ்சம் காட்டுமிராண்டித்தனம் நீங்காமல் இருக்கிறதோ ? என்று தோன்றுகிறது.

‘என் பிள்ளை மேல கையை வைச்சது யாரு ? இப்பவே அந்த டீச்சர் இங்க வரணும்’ என்று பள்ளி வாசலில் நின்று கத்துகிற பெற்றோர்கள் இருக்கிறார்கள். ‘எங்களாலதான அவன அடக்க முடியல . நீங்களாவது நாலு அடி வைச்சாவது அவன நல்லபடியா கொண்டு வந்தா சரிதான்’ என்று சொல்லும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.இதில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டியது, அடிப்பதால் யாரும் திருந்தியது கிடையாது. கத்துவதாலும் யாரும் திருந்துவது கிடையாது. இப்படி எல்லாம் செய்வதால் ஆசிரியர்கள் மேலுள்ள மரியாதை மேலும் குறைந்து குழந்தைகள் இன்னும் அலட்சியமாக மாற ஆரம்பிக்கிறார்கள்.எனவே, ஆசிரியர்கள் பற்றிய குழந்தைகளின் கருத்துகள் என்ன என்பதை அவ்வப்போது மனம் விட்டு பேசுங்கள். ஆசிரியர்களைப்பற்றி குறை சொன்னால் கண்டிக்காமல் அதை நேர்மறையாக புரிந்து கொள்ள உதவி செய்யுங்கள்.உதாரணத்திற்கு ஆசிரியர் என்னை பாரட்டவில்லை. எப்போதும் குறைதான் சொல்கிறார் என்றால், பாராட்டுகிறவர்கள் நம்மை அதே நிலையில் வைத்திருப்பவர்கள் விமர்சிப்பவர்களே நம்மை மேம்படுத்துபவர்கள் என்பதை விளக்கமாக சொல்லிக்கொடுங்கள்.‘நீ நல்லா படிக்கிறேன்னு சொன்னா, சரி நாம தான் நல்லா படிக்கிறோமேன்னு நீ அலட்சியமா இருந்துடக்கூடாதுன்னுதான் நீ இன்னும் படிக்கணும்னு உன்னோட வாத்தியார் சொல்றாங்க’ என்பதினை புரிய வையுங்கள்.

ஆசிரியர்களை மதிக்கும் பழக்கம், மாணவர் களிடம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்று பெரும்பாலான ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். இது உண்மையும் கூட.போதாக்குறைக்கு சினிமாவில் ஆசிரியரை நக்கல் அடிப்பது என்று ஸ்பெசல் கிளாஸ் வேறு நடத்துகிறார்கள்.இதனை தவிர்க்க உங்கள் குழந்தைகளிடம், ’இந்த உலகத்தில் வெற்றி பெற்ற யாவரும் ஓர் ஆசிரியரின் வழிகாட்டுதலால் வென்றவர்கள்தான்’ என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.ஆசிரியர் நமக்கே தெரியாமல் நம்மை மேம்படுத்துபவர் என்பதை எடுத்துச்சொல்லி வகுப்புக்கு வராத ஆசிரியராக இருந்தால்கூட அவர்களிடமும் மதிப்போடும் கண்ணியத்தோடும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்துங்கள்.

மேலும் குறைந்த மதிப்பெண் எடுக்கிற மாணவர்களை விட கற்றுக்கொள்ளும் ஆர்வமே இல்லாத மாணவனைத்தான் ஆசிரியர்களுக்கு பிடிப்ப தில்லை. எனவே உங்கள் குழந்தைகள் மதிப்பெண் குறைவாக எடுத்தால் ஆசிரியர்களை பயந்து விலகாமல் சந்தேகம் கேட்கவும் அதிக மதிப்பெண் பெற வழிகாட்டும்படியும் கேட்கச் சொல்லுங்கள்.எவ்வளவுதான் நன்றாக படிக்கிற பையனாக இருந்தாலும் வகுப்பில் அருகில் உள்ள மாணவனிடம் பேசிக்கொண்டிருப்பவர்களையும் ஆசிரியர்களுக்கு பிடிப்பதில்லை. உங்கள் குழந்தைக்கு அந்தப்பழக்கம் இருந்தால் உங்கள் குழந்தையை மட்டுமல்லாமல் அவர்களின் நண்பர்களையும் அழைத்து இப்பழக்கத்தை மாற்றிக்கொள்ள ஊக்குவியுங்கள்.வகுப்பறையில் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குமுறைகளை பெற்றோர்களே கற்றுக் கொடுத்துவிட்டால் இது போன்ற அசம்பாவித சம்பவங்களுக்கு வாய்ப்பேயில்லை.ஆசிரியரை நேசிக்க வைப்பது குழந்தைகளை மேதைகளாக்க விரும்பும் பெற்றோர்களாகிய உங்கள் கைகளில்தான் இருக்கிறது.ஏனெனில் ஆசிரியரை பிடித்தால்தான் குழந்தைகளுக்கு பாடங்கள் பிடிக்கும். படிக்கவும் பிடிக்கும்.

உறவுகளே ! தங்களுக்கு நேரமிருந்தால் CuteParents ல் இன்றைய பதிவினையும் வாசித்துச் செல்லலாமே



பதிவினை சுவாசித்துவிட்டு தங்களது எண்ணங்களை கருத்துக்களாகவும் வாக்குகளாகவும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


11 Responses to “குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 3”

Mahan.Thamesh said...
Dec 24, 2011, 8:18:00 AM

நல்ல பயனுள்ள பதிவு சகோ


தங்கம் பழனி said...
Dec 24, 2011, 8:44:00 AM

பயனுள்ள பதிவு


தங்கம் பழனி said...
Dec 24, 2011, 8:47:00 AM

மாணவர்கள்- பெற்றோர்கள் - ஆசிரியர்களுக்கிடையான உறவு முறைகளையும் அதில் ஏற்படும் பிரச்னைகளையும் அலசியிருப்பதோடு, அதற்கான தீர்வையும் தந்திருப்பது பாராட்டத்தக்கது.. பகிர்வுக்கு நன்றி சம்பத் அவர்களே..!!


திண்டுக்கல் தனபாலன் said...
Dec 24, 2011, 9:02:00 AM

அருமையான, கருத்துள்ள, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, அழகான பதிவு. நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"


தமிழ்வாசி பிரகாஷ் said...
Dec 24, 2011, 10:37:00 AM

அருமையான கருத்துக்கள் அடங்கிய பதிவு..... தொடருங்கள்....


நண்டு @நொரண்டு -ஈரோடு said...
Dec 24, 2011, 10:50:00 AM

அருமை.
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.


விக்கியுலகம் said...
Dec 24, 2011, 11:11:00 AM

அருமையான பதிவு மாப்ள...நாம என்னதான் முயற்சி பண்ணாலும் சில நேரங்களில் குழந்தைகளின் குறும்பு எல்லை மீறுகிறது...அந்நேரத்தில்..அடிப்பதற்க்கு பதில்...நான் உன்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லி இருந்திடுவேன்...உடனே என் பையன் என்ன தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்ருவான்...இப்போதைக்கு கேக்கறான் எதிர்காலத்தில் நான் கேட்க்க வருமோ டவுட்டு ஹிஹி!


!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Dec 24, 2011, 11:19:00 AM

குழந்தைகளை மேதைகளாக்க விரும்பும் பெற்றோர்களாகிய உங்கள் கைகளில்தான் இருக்கிறது.// உண்மைதான் மாப்ள, ஆனா சில சமையம் குழைந்தியோட சேட்டைகள் அதிகமாயிடுது, நானும் விக்கி சொன்ன முறைதான் பாலோ பண்றேன், பார்ப்போம்..


கவிதை வீதி... // சௌந்தர் // said...
Dec 24, 2011, 5:03:00 PM

அத்தனை பெற்றோர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அற்புத பதிவு....

வாழ்த்துக்கள்..


veedu said...
Dec 24, 2011, 5:14:00 PM

அடிப்பது தவறுதான் இப்பொழுது பெருப்பாலான பள்ளிகளில் அடிப்பது இல்லை,பெற்றோர்களும் அடிப்பது இல்லை....அதனாலதான் குறும்பும் அதிகமா இருக்கு....அறிவும் வளர்ந்திருக்கு நம்மை விட........!


அம்பலத்தார் said...
Dec 25, 2011, 4:58:00 PM

வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விடங்களைப் பதிவிடுவதற்கு நன்றி


;