December 27, 2011
விருந்தினர் வருகை
தனியாக வந்த காக்கை ஒன்று
கரைந்து கொண்டிருந்தது
வெகுநேரமாய்..!
நேரம் காலை
சுமார் ஒன்பது மணி..!
இடுப்பில் நிற்காத
கால்சட்டையை,மற்றொரு கையால்
தூக்கிப்பிடித்தபடி
ஸ்கூலுக்குக் கிளம்பிக்
கொண்டிருந்தான் மணிப்பயல்...!
மூன்றாவது முறையாக
திண்டிலிருந்து விழுந்து
ஒரு கணம் மூச்சு நின்றுவிட
கைக்குழந்தை ஐசுவுக்கு
வாயில் ஊதிக் கொண்டிருந்தாள் அம்மா...!
வெகு அவசரமாக
வேறிடம் நோக்கி
இரைகளை நகர்த்திக் கொண்டிருந்தன
பிள்ளையார் எறும்புகள்...!
கொஞ்ச நேரம் வெளியில்
சென்று வந்து பார்க்கையில்
பக்கத்து வீட்டுக் கூரை நெருப்பு
பரவியிருந்தது எங்கள் கூரைக்கும்...!
அப்புறம்
நாலைந்து பேர் வந்தார்கள்
லாரி லாரியாய்
தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள்...!
வழக்கம் போல
மின்சாரக் கசிவென
பதிவுசெய்து கொண்டார்
தொப்பை போலீஸ்காரர்...!
மதியம் வாக்கில்
மந்திரி வந்தார்
அவரது உம் என்ற முகத்தில்
ஆறுதல் அப்பிக்கிடந்தது..!
நிறைய பேர் வந்து
குசலம் விசாரித்தனர்
இன்றைய பொழுதில் ,
நாளைக்கும் விருந்தினரை
அழைக்க காக்கைக்கு இல்லை கூரை...!
நண்பர்களே..! விருந்தினர்கள் வரத்தயங்கும் குடிசைவாசியின் பார்வையில் எழுந்த கவிதை பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.
Cute Parents ல் இன்றைய பதிவினை வாசிக்க அன்புடன் அழைக்கின்றேன்
Common Signs Of Child's Hearing Problem
Common Signs Of Child's Hearing Problem
|
|
Tweet |
Related Posts: ,
,
,
Subscribe to:
Post Comments (Atom)








10 Responses to “விருந்தினர் வருகை”
Dec 27, 2011, 9:52:00 AM
காக்கை கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்று ஒரு நம்பிக்கை இருக்கு. கூரையே இல்லையென்றால் காக்கைகள் எப்படி கரையும்? அப்படி காக்கை கரையவில்லையென்றாலும் வரும் விருந்தினர் வந்துகொண்டுதான் இருப்பார்கள்.
Dec 27, 2011, 10:17:00 AM
விருந்தினர் வருகை அந்த மக்களுக்கு இப்படித்தான் போலும்.... தங்கள் வரிகள் விளக்குகின்றன....
Dec 27, 2011, 10:44:00 AM
வலி நிறைந்த வரிகள்..
கவிதை நல்லா இருக்கு சகோ
Dec 27, 2011, 10:57:00 AM
Dec 27, 2011, 10:58:00 AM
வலியுடன் வாழ்க்கை போல!
Dec 27, 2011, 12:02:00 PM
மனதை நெகிழச் செய்த கவிதை சகோ..
பாராட்டுகள்..
Dec 27, 2011, 12:10:00 PM
மனதை நெகிழவைத்த கவிதை. ரொம்ப நல்லாருக்கு.
Dec 27, 2011, 12:55:00 PM
//நாளைக்கும் விருந்தினரை
அழைக்க காக்கைக்கு இல்லை கூரை...!// ஒரு ஏழை சமூகத்தை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். அருமை.
Dec 27, 2011, 7:25:00 PM
எல்லாத்தையும் நுணுக்கமா பாப்பீங்க போல.
Dec 28, 2011, 10:53:00 PM
அருமை.
Post a Comment