December 26, 2011

துப்புரவுத் தொழிலாளிவீதி கூட்டியெடுத்து
விதியெழுதும் மனிதர்கள்
நாதியற்றுப் போகும் நான்கும்
இவர்கள் மறுதலித்தால்...!

குடல்கள் துப்பும்
குப்பை கூழங்களையும் 
அள்ளும் கும்பிடத்தக்க 
உயர் பிறவிகள்...!

சாக்கடை தீரத்தில்
முத்துக் குளித்து 
அடைப்பெடுக்கும்
சந்தனமன மனிதர்கள்...!

நீர்க்கோழி போல் நீ 
சாக்குளித்து வருகையிலெ
நான் உடல் உதறி 
நடுங்குகிறேன் நண்பனே...!

என் வியர்வைக் கழிவையே 
நான் முகர மறுக்கிறேன்
எம் சகலக் கழிவுகளையும் 
கையேந்தி களைகிறாயே...!ஒருமூன்று வயது வரை 
எனதன்னை செய்தாள் – கடமை
இதுவரை நீ செய்கிறாயே 
பெருமை – எனக்கோ சிறுமை...!

இயந்திரங்கள் எத்தனையோ 
வந்துவிட்ட போதும்
விலகாதா இனியும் கொடுமை...!

காசி கங்கையில் பாவம் 
தொலைக்கப்போகும் பாவிகளே
கால்வாயில் குப்பைக்கூளம் 
கொட்டி வைக்காதீர்...!

மனிதக் கழிவு அகழியில் 
மனிதனையே இறக்குவதை
மனிதநேயமிக்கோரே 
இனியும் அனுமதியாதீர்...!


Cute Parents ல் இன்றைய பதிவினை வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்.


நண்பர்களே துப்புரவுத் தொழிலாளி கவிதை பிடித்திருந்தால் தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்

27 Responses to “துப்புரவுத் தொழிலாளி”

விக்கியுலகம் said...
Dec 26, 2011, 8:08:00 AM

மாப்ள அருமையான கவிதை....நிர்வாகத்தினர் சிந்திக்க வேண்டியது மற்றும் மாற்ற வேண்டியது...!


பழமைபேசி said...
Dec 26, 2011, 8:42:00 AM

துப்புரவு


புலவர் சா இராமாநுசம் said...
Dec 26, 2011, 9:07:00 AM

மனதை நெகிழ வைத்த கவிதை
சம்பத்! அனைத்தும் அருமை!

புலவர் சா இராமாநுசம்


சம்பத் குமார் said...
Dec 26, 2011, 9:27:00 AM

@ பழமைபேசி said...

//துப்புரவு//

மிக்க நன்றி நண்பரே..

தவறை சுட்டிக்காட்டியதற்கு

வருகைக்கும் கூட..

மீண்டும் வருக


veedu said...
Dec 26, 2011, 10:35:00 AM

சிந்திக்கவேண்டிய கவிதை பல துப்புரவு தொழிளார்களின் மரணத்தின் பின்னும் அரசு அதற்க்கான தொழில்நுட்பத்தை விரிவு படுத்தவில்லை அது கண்டிக்க தக்கது...


கவிதை வீதி... // சௌந்தர் // said...
Dec 26, 2011, 11:04:00 AM

உண்மையில் போற்றப்பட வேண்டியவர்கள் இவர்களே...


!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Dec 26, 2011, 12:01:00 PM

இயந்திரங்கள் எத்தனையோ
வந்துவிட்ட போதும்
விலகாதா இனியும் கொடுமை...!// ஆமாம் மாப்ள இதுக்கு மட்டும் இன்னும் இயந்திரம் வராதது கஷ்டமா இருக்கு..
கவிதை வரிகள் நன்று..


நிரூபன் said...
Dec 26, 2011, 12:58:00 PM

வணக்கம் நண்பா, நலமா?

எமக்காக அழுக்கினுள் மூழ்கி எழும் தொழிலாளர்களின் பெருமையினை கவிதையில் நெஞ்சை நெருடும் வண்ணம் சொல்லியிருக்கிறீங்க.

அன்னையையும், தொழிலாளர்களையும் ஒப்பிட்டு ஒரு வரி எழுதி உச்சியில் அடித்திருக்கிறீங்க பாஸ்..

//
ஒருமூன்று வயது வரை
எனதன்னை செய்தாள் – கடமை
இதுவரை நீ செய்கிறாயே
பெருமை – எனக்கோ சிறுமை...!//

நச்.


அம்பலத்தார் said...
Dec 26, 2011, 2:26:00 PM

//மனிதக் கழிவு அகழியில்
மனிதனையே இறக்குவதை
மனிதநேயமிக்கோரே
இனியும் அனுமதியாதீர்...!//
நிச்சயமாக மனிதநேயம்மிக்க அனவரும் இணைந்து குரல் கொடுக்கவேண்டிய விடயம்.


ஹைதர் அலி said...
Dec 26, 2011, 7:04:00 PM

நல்ல கவிதை சகோதரரே

//குடல்கள் துப்பும்
குப்பை கூழங்களையும்
அள்ளும்//

வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்ற நவீன வசதிகளை இத்துறையில் பயன்படுத்த அரசு முன் வர வேண்டும்


அம்பாளடியாள் said...
Dec 26, 2011, 7:08:00 PM

அருமையான பகிர்வு!..பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ ..


திண்டுக்கல் தனபாலன் said...
Dec 26, 2011, 7:38:00 PM

படத்தைப் பார்த்தவுடன் மனசு வலிக்கிறது. நிறைய பேர் இதனால் இறக்கிறார்கள். கொடுமைங்க..


கோகுல் said...
Dec 26, 2011, 8:05:00 PM

இயந்திரங்கள் எத்தனையோ
வந்துவிட்ட போதும்
விலகாதா இனியும் கொடுமை...!

இதுக்கெல்லாம் சிந்திக்க நேரமில்லை .
ஆள்வோருக்கு.


தங்கம் பழனி said...
Dec 26, 2011, 8:17:00 PM

துப்புரவு தொழிலாளியின் நிலையை விளக்கும் நேர்த்தியான கவிதை..!! பகிர்வுக்கு நன்றி..! நண்பரே.!!!


guna thamizh said...
Dec 26, 2011, 10:24:00 PM

சாக்கடை தீரத்தில்
முத்துக் குளித்து
அடைப்பெடுக்கும்
சந்தனமன மனிதர்கள்...!


அழகாகச் சொன்னீங்க நண்பா..


துரைடேனியல் said...
Dec 26, 2011, 10:37:00 PM

Arumai Sago. Intha Ili Nilai enru maarumo theriya villai?


சம்பத் குமார் said...
Dec 26, 2011, 10:42:00 PM

@ விக்கியுலகம் said...
மாப்ள அருமையான கவிதை....நிர்வாகத்தினர் சிந்திக்க வேண்டியது மற்றும் மாற்ற வேண்டியது...!

மாம்ஸ் முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் நன்றி


சம்பத் குமார் said...
Dec 26, 2011, 10:42:00 PM

@ புலவர் சா இராமாநுசம் said...

//மனதை நெகிழ வைத்த கவிதை
சம்பத்! அனைத்தும் அருமை!

புலவர் சா இராமாநுசம்//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி ஐயா


சம்பத் குமார் said...
Dec 26, 2011, 10:43:00 PM

@ veedu said...
//சிந்திக்கவேண்டிய கவிதை பல துப்புரவு தொழிளார்களின் மரணத்தின் பின்னும் அரசு அதற்க்கான தொழில்நுட்பத்தை விரிவு படுத்தவில்லை அது கண்டிக்க தக்கது...//

உண்மைதான் நண்பரே


சம்பத் குமார் said...
Dec 26, 2011, 10:44:00 PM

@ கவிதை வீதி... // சௌந்தர் // said...

//உண்மையில் போற்றப்பட வேண்டியவர்கள் இவர்களே...//

ஆம் நண்பரே..வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி


சம்பத் குமார் said...
Dec 26, 2011, 10:44:00 PM

@ !* வேடந்தாங்கல் - கருன் *! said...

//இயந்திரங்கள் எத்தனையோ
வந்துவிட்ட போதும்
விலகாதா இனியும் கொடுமை...!// ஆமாம் மாப்ள இதுக்கு மட்டும் இன்னும் இயந்திரம் வராதது கஷ்டமா இருக்கு..
கவிதை வரிகள் நன்று..//

மிக்க நன்றி நண்பா

Dec 26, 2011 12:01:00 PM


சம்பத் குமார் said...
Dec 26, 2011, 10:46:00 PM

@ நிரூபன் said...

//வணக்கம் நண்பா, நலமா?

எமக்காக அழுக்கினுள் மூழ்கி எழும் தொழிலாளர்களின் பெருமையினை கவிதையில் நெஞ்சை நெருடும் வண்ணம் சொல்லியிருக்கிறீங்க.

அன்னையையும், தொழிலாளர்களையும் ஒப்பிட்டு ஒரு வரி எழுதி உச்சியில் அடித்திருக்கிறீங்க பாஸ்..

//
ஒருமூன்று வயது வரை
எனதன்னை செய்தாள் – கடமை
இதுவரை நீ செய்கிறாயே
பெருமை – எனக்கோ சிறுமை...!//

நச். //

வணக்கம் நண்பரே நான் நலம்

வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி


வேதகண்ணன் said...
Dec 26, 2011, 10:50:00 PM

//காசி கங்கையில் பாவம்
தொலைக்கப்போகும் பாவிகளே
கால்வாயில் குப்பைக்கூளம்
கொட்டி வைக்காதீர்...!// - அருமையான வரிகள் நண்பரே..!
http://vethakannan.blogspot.com/2011/12/4.html


Mahan.Thamesh said...
Dec 27, 2011, 2:37:00 AM

அத்தனை வரிகளும் அழகான வரிகள் . நன்றாக உள்ளது


Rathnavel said...
Dec 27, 2011, 4:33:00 PM

அருமை.


Seeni said...
May 12, 2012, 4:55:00 AM

sudum unmai!


ARUN PALANIAPPAN said...
May 12, 2012, 9:21:00 PM

அருமையான கவிதை...

//குடல்கள் துப்பும்
குப்பை கூழங்களையும்
அள்ளும் கும்பிடத்தக்க
உயர் பிறவிகள்...!//

உண்மை தான்...
பிறர் வீசும் குப்பைகளையும் களையும் அவர்கள் தான் உயர் பிறவிகள்!


;