December 22, 2011

பூவுலகில் நாம்




இரட்டைத் தேகங்களின்
இன்பத்தேடலில்
இறுதிக்கட்டம்..!

ஒற்றை ஒற்றையாய்
ஒன்றிணைந்து உருவானோம்
இரட்டிபாகி இரட்டிப்பாகி
கோடி நூறு கோடிகளாய் கரங்களின்றி
ஒட்டிப் பிணைந்தோம்..!

அண்டவெளி விரிந்து கிடக்க
அன்னையின் அண்டச் சிறையில்
சின்ன உயிர்ப் பிண்டமானோம்...!

இதயத்துடிப்பும்
இமையற்ற
விழிகளும்
நாலிரண்டு
மில்லிமீட்டரில்
எத்தனித்தோம் வாழ...!



அடுத்த கட்டம்
மூன்று சென்டிமீட்டராய்
வளர்ந்தோம்
கைககால்
விரல்கள்
முளைத்தது...!

அரைக்கர்ப்பிணி
அடிவயிற்றில்
அசைந்தோம்...!

காற்றுப் பைக்குள்
சற்றே விரிய
சத்துக்கள் உறிஞ்சினோம்...!

வாய் வெளுத்து பய
நோய் கொண்டாளம்மா
நம்மை ஈன்றெடுக்க...!



இரண்டரை கிலோகிராம்
ஒன்றரை அடி
உயிர்ப்பூவானோம்...!

தாயின் உயிரைக் கிழித்து
தரையில் பிதுங்கினோம்
தொப்புள் கொடி துண்டித்து...!

அதன்பின் தான்
அவளை அழைத்தோமா
அம்மா என்று..?

அழைப்புக்குரல் கேட்டு
அவளின் உயிரும் பூக்கிறது
அகமகிழ்ந்து….!


நண்பர்களே கவிதையை பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்


17 Responses to “பூவுலகில் நாம்”

தமிழ்வாசி பிரகாஷ் said...
Dec 22, 2011, 8:07:00 PM

பிறப்பின் மகத்துவம் அறியச் செய்யும் கவிதை...


இராஜராஜேஸ்வரி said...
Dec 22, 2011, 8:12:00 PM

உயிர்ப்பூவாய் முகிழ்த்த அழகான கவிதைக்குப் பாராட்டுக்கள்..


தங்கம் பழனி said...
Dec 22, 2011, 8:14:00 PM

உயிர்ப்பூ மலரும் ரகசியத்தை சொல்லும் உன்னத வார்த்தைகள்..!!

அக மகிழ்கிறேன் .. !!

நன்றி சம்பத் அவர்களே..!!


தனிமரம் said...
Dec 22, 2011, 8:15:00 PM

ஜனனத்தின் வழிதனைப்பாடிச் செல்லும் கவிதை அழகு நண்பரே!


ராஜா MVS said...
Dec 22, 2011, 8:50:00 PM

அருமை... நண்பரே....

வாழ்த்துகள்......


விச்சு said...
Dec 22, 2011, 9:01:00 PM

அருமையாக உள்ளது நண்பரே...


veedu said...
Dec 22, 2011, 11:21:00 PM

கடவுளின் அதிசயம், பகுத்தறிவுக்கு எட்டாத....ஒன்று பிறப்பு,கவிதை அருமை


விக்கியுலகம் said...
Dec 23, 2011, 7:25:00 AM

அருமை


kovaikkavi said...
Dec 23, 2011, 11:14:00 AM

பிறப்பின் வகை கூறிய கவித்துவம் நன்று வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.


திண்டுக்கல் தனபாலன் said...
Dec 23, 2011, 2:34:00 PM

அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"


!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Dec 23, 2011, 3:36:00 PM

பிறப்பின் ரகசியல்கள் கவிதையாக..
அசத்தல்..


Rathnavel said...
Dec 23, 2011, 9:57:00 PM

அருமையான கவிதை.
வாழ்த்துகள்.


Mahan.Thamesh said...
Dec 24, 2011, 4:59:00 AM

அருமை வாழ்த்துக்கள்


Abdul Basith said...
May 5, 2012, 4:36:00 PM

இப்போது தான் இந்த கவிதையை படித்தேன். பிரமாதமாக உள்ளது நண்பரே!


Abdul Basith said...
May 8, 2012, 12:23:00 PM

தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் பரிந்துரை செய்துள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_08.html


Seeni said...
May 9, 2012, 3:28:00 AM

azhakiya kavithai!

vaazhthukkal!


ARUN PALANIAPPAN said...
May 13, 2012, 8:30:00 PM

நல்ல கவிதை...

ஒரு குழந்தை உருவாகி அம்மா என்று அழைப்பது வரை அருமை!

//தாயின் உயிரைக் கிழித்து
தரையில் பிதுங்கினோம்
தொப்புள் கொடி துண்டித்து...!

அதன்பின் தான்
அவளை அழைத்தோமா
அம்மா என்று..?//

உண்மை!


;