December 17, 2011
என்ன பதில் சொல்ல...?
போதையில் தள்ளாடிய அவன் தோற்றம்
என் நெஞ்சில் பதிந்துவிட்ட சித்திரம்...!
வர்ணம் மங்கிய சுவர்
அதன் அருகில் அவன் உறக்கம்...!
என் இளம்பருவத்து தோழனவன்
எப்படி இதன் அடிமையானான்...!
அவன் கண்களில் குழம்பிய சிவப்பு
தன் பாசத்துக்குரியவர்களை காண ஏங்காதா..?
அமுதம் போல பருகி அவன் மனம்
அடையும் பரவசம் அன்பால் அது நிறையாதா..?
ஏன் இப்படி என்கிறேன்
தயவுசெய்து விட்டுவிடு என்கிறேன்...!
மனைவியும் மூன்று பிள்ளைகளும்
மனம் கசிந்து நெருப்பில் வெந்த பிறகுமா
இப்படி என்கிறேன்...!
அவசரமாய்த் தலையாட்டி மறுக்கிறான் அவன்...!
அது அப்படி இல்லை என்கிறான்..
எதுவுமே உனக்கு புரியாது என்கிறான்..
கூடவே கேட்கிறான் ஓர் கேள்வி...!
மதுவின் ரசத்தை உறிஞ்சுவது
எதையும் மறந்து தொலைப்பதற்கோ
போதைக்கோ இல்லை என் தோழா....!
இப்படியும் ஓர் வாழ்க்கை உண்டு என்பதை
உலகம் ஏற்க மறுப்பது ஏனடா என் தோழா..?
என்ன பதில் சொல்ல….?
நண்பர்களே பதிவினைப் பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் விட்டுச் செல்லுங்கள்
CUTE PARENTS -ல் இன்றைய பதிவினையும் வாசிக்கலாமல்லவா....
BACK TO SCHOOL CHECK LIST FOR YOUR CHILDREN
நன்றி..!
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)








7 Responses to “என்ன பதில் சொல்ல...?”
Dec 17, 2011, 5:41:00 AM
ஏன் இப்படி தன்னைத்தானே அழிச்சுக்கறாங்க?
Dec 17, 2011, 8:11:00 AM
நீ..வாழ்வது வாழ்க்கையல்ல...நரகம்..
உனக்கல்ல..உன் குடும்பத்திற்கு.இது சரியா இருக்குமா?
Dec 17, 2011, 1:21:00 PM
பிரச்சனைகளிற்குத் தீர்வு அதை எதோஒரு வழியில் மறப்பதல்ல
Dec 17, 2011, 4:25:00 PM
இன்றைய இளைஞர்கள் தெரிந்தே மாட்டிக்கொள்ளும் ஒரு மாய வலை...
பொழுதுபோக்கில் ஆரம்பித்து வாழ்க்கையையே குடிக்கிறது இந்த மது பழக்கம்...
Dec 17, 2011, 4:29:00 PM
உண்மையில் எதையும் மறக்க நினைத்து மது அருந்துபவர்களை விட மறக்க கூடாது என்று மது அருந்தி அதிலேயே சிக்கி கொண்டர்வர்கள்தான் அதிகம் பேர், வீடு அவர்கள் சொன்ன கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு
Dec 17, 2011, 5:01:00 PM
பிரச்சனையிலிருந்து மனம் மட்டும் சிறிதுநேரம் வெளிநடப்பு செய்யும், ஒருவகையில் இதுதான் அவர்கள் தொடர்ந்து மது அருந்த தூண்டுகோளாகவும் அமைந்து விடுகிறது...
Dec 17, 2011, 9:25:00 PM
இந்தப் புதை குழியில் மாட்டிக் கொண்டால், அவன் விட நினைத்தாலும் 'அது' விடாது. இது ஒரு மன நோய் தான். தானே தான் திருந்த வேண்டும்!
பகிர்விற்கு நன்றி சார்!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."
Post a Comment