December 14, 2011
வேர்விட்ட மரம்
தொட்டியிலிருந்தாலும் தோப்பிலிருந்தாலும்
ஆசை தணியாது
நீளும் மண்புணர ஆணிவேர்...!
தன் சருகிலிருந்து சாறெடுத்து
மீண்டும்
சருகின் மூலத்தை இயற்றும்
களைப்பின்றி காம்புகளில்
இலையுதிர் காலப்பொழுதுகளில்...!
காற்றின் ஊடலால்
ஓயாமல் சப்தமிடும்
மழையோசையை நகலெடுத்து
முற்றிய இலை அதரங்கள்...!
மலரின் பரிணாமத்திற்க்காய்
விழிமூடி விழித்திருக்கும்
தியானத்தில் மொட்டு...!
எச்சமிட்ட பட்சியின் கூடுதாங்கி
மரங்கொத்தி செதுக்கிய
ரணம் ரசித்து
துழாவித் துழாவி
சுயம் தேடி
சலிக்காது கிளைவிடும்
புறச்சிராப்புடன் சல்லிவேர்கள்...!
மரணங்கண்டஞ்சாது
விதைக்குள் தனை சுருக்கி
வீழ்ந்து தேடித் தேடும்...!
கைகள் கிளையாக
உடல் தண்டாக
கால்கள் வேராக
ரோமங்கள் இலையாக
உச்சந்தலையில் சிறுபட்சி கூடுகட்ட
தலைமுடி விழுதாகி காற்றிலாட
வாயை பொந்தென நினைத்து...
உற்சாகமாய் ஓடிவந்த மரங்கொத்திப்பறவை
சேகரித்த வார்த்தை புழுக்களைக்
கொத்தித் தின்ன தின்ன மௌனியாகி
தேட வைத்தது எதுவெனத் தேடுகையில்
என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது
தலைகீழாய்
பழந்தின்னி வௌவாலொன்று..!
வணக்கம் நண்பர்களே வேர்விட்ட மரம் கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச்செல்லுங்கள்
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)








14 Responses to “வேர்விட்ட மரம்”
Dec 14, 2011, 8:44:00 AM
ஒரு கவிதையில் எத்தனை படிமங்கள். ரசித்து ரசித்து , மறுபடியும் மறுபடியும் வாசித்தேன் , தேன்.. தேன் ...தேன்...
Dec 14, 2011, 10:10:00 AM
உற்சாகமாய் ஓடிவந்த மரங்கொத்திப்பறவை
சேகரித்த வார்த்தை புழுக்களைக்
கொத்தித் தின்ன தின்ன மௌனியாகி
தேட வைத்தது எதுவெனத் தேடுகையில்
என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது
தலைகீழாய்
பழந்தின்னி வௌவாலொன்று..!// அருமையான சொல்லாடல்.. அசத்தல் கவிதை. பகிர்வுக்கு நன்றி மாப்ள..
Dec 14, 2011, 10:39:00 AM
''...மலரின் பரிணாமத்திற்க்காய்
விழிமூடி விழித்திருக்கும்
தியானத்தில் மொட்டு...!..''
மிக நல்ல கருத்துடை சொற்கட்டு....அருமை! வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
Dec 14, 2011, 10:52:00 AM
Superb Brother
Dec 14, 2011, 11:11:00 AM
மாப்ள கவித நல்லா இருக்குய்யா!
Dec 14, 2011, 12:58:00 PM
வார்த்தைகளால் வாழ்த்திவிட முடியாத அழகிய கவிதை...
Dec 14, 2011, 1:54:00 PM
கவிதை அருமை... நண்பரே...
Dec 14, 2011, 2:05:00 PM
அருமையான வரிகள் நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
Dec 14, 2011, 2:43:00 PM
அழகு கவிதை
Dec 14, 2011, 5:56:00 PM
மேற்கோளிட முடியவில்லை.. அனைத்து வரிகளும் அருமை..
Dec 14, 2011, 5:56:00 PM
எனக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது
அடுத்தடுத்த வரிகளுக்குச்செல்ல
வார்த்தைகளால் வசப்படுத்தி விட்டீர்கள்!
Dec 14, 2011, 6:30:00 PM
இது உங்கள் கவிதைகளிலேயே உயர் ரகம் போல் இருக்கிறது... அசை போட்டுக் கொண்டு இருக்கிறேன்
Dec 15, 2011, 11:46:00 AM
..//.மலரின் பரிணாமத்திற்க்காய்
விழிமூடி விழித்திருக்கும்
தியானத்தில் மொட்டு...!..''//
அருமை..
சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்,சம்பத்.
Dec 21, 2011, 3:21:00 PM
அழகு கவிதை.
படங்களும் அருமை.
வாழ்த்துகள்.
Post a Comment