December 12, 2011

திருட்டுப் பூனை..
காவல் பலிக்கவில்லை
தினமும் பால்திருட்டு...!

எதேச்சையாய் பார்த்தது நின்று முறைக்கிறாய்
முன்வைக்கவோ
பின்வைக்கவோ
உன் தந்திரம் புரியவில்லை...!

துடிக்கும் மீசையில் கர்வம்...
கண்களில் கவியும் குரூரம்...
உடம்பில் புரளும் முறுக்கு..!

உன் கண்களுக்கு எதுவாய்த் தெரிகிறேன் நான்
எலியாகவா...?
எதிரியாகவா...?

சாத்திய ஜன்னல்கள் நடுவில்
கசியும் உன்குரல் இரக்கம் மிக்கது...!சோறு உனக்கு பிடிக்கவில்லை
கறி நான் சமைப்பதில்லை...!

குழந்தையிருக்கும் வீடு
பால் மிஞ்சினாலும் கொடுப்பதற்கில்லை..!

நேற்றுவரை உன் திருட்டின் ஆட்டத்தால்
எச்சரிக்கையானது வீடு..!

இதில் இன்னோர்
வீட்டிற்க்கு நீ சென்று கொண்டுவந்த..

எச்சில் மீன் தலையைத் துப்ப
என் வாசலா கிடைத்தது...?அதட்டலின் அர்த்தம் குழப்பிவிட்டது...!

உன் நகங்களின் ஆத்திரப்பதிவில்
பாதத்தில் கசியும் ரத்தக்கோடுகள்...!

என்ன புரிந்து எகிறினாய்..?
உன் மீன் எனக்கு இரையாகுமா
என் வாசல் தூய்மை தவறாகுமா…!


அன்பிற்கினிய நண்பர்களே தமிழக எல்லையிலிருந்து கேரளா எல்லைக்கு ஏலத்தோட்ட வேலைக்கு சென்ற நமது உடன்பிறவா சகோதரிகளை சீண்டிப்பார்த்த கேரளாவெறியர்களை தட்டிக்கேட்க,இப்பிரச்சினை நடந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் இன்னும் கண்டுகொள்ளாமல் தூங்கிக்கொண்டிருக்கும் நம் அரசியல் வாதிகளை தட்டி எழுப்ப இணையத்தில் ஒன்றினைந்து குரல் கொடுப்போம் வாருங்கள்


மேலுள்ள லின்கில் சென்று மறக்காமல் தங்களது ஆதரவினை தெரிவிக்க அன்புடன் அழைக்கின்றேன்.நம் மக்களை சீண்டிப்பார்த்த கேரளவெறியர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.முடிந்த வரை உங்கள் நட்புவட்டத்தில் இதனை கொண்டு செல்லுங்கள்.15 Responses to “திருட்டுப் பூனை..”

தங்கம் பழனி said...
Dec 13, 2011, 10:38:00 AM

திருட்டுப் பூனை..!!!


தங்கம் பழனி said...
Dec 13, 2011, 10:41:00 AM

பூனையின் அட்டகாசங்களை சொல்லியிருக்கிறீர்கள்..!!


suryajeeva said...
Dec 13, 2011, 11:14:00 AM

விக்கிற விலைவாசியில் பூனைக்கு பால் கொடுக்க யோசிக்கிறீங்க? பெரிய ஆளு சார் நீங்க...

கவிதை நிஜமாவே சூப்பர்

வேலை பளு அதிகம்... ஆதலால் இன்னும் இரு மாதங்களுக்கு சாட்டில் இருக்க மாட்டேன் தோழர்


K.s.s.Rajh said...
Dec 13, 2011, 12:05:00 PM

திருட்டுப்பூனை பற்றி அருமையாக சொல்லியிருகீங்க பூனைகளின் திருடும் சாமர்த்தியம் வியப்புக்குறியதுதான்


விக்கியுலகம் said...
Dec 13, 2011, 12:06:00 PM

பூனை எனக்கென்னவோ நிர்வாகம் நெனப்புக்கு வருதுய்யா மாப்ள!


திண்டுக்கல் தனபாலன் said...
Dec 13, 2011, 12:25:00 PM

அருமை! அமர்க்களம்! அட்டகாசம்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"


RAMVI said...
Dec 13, 2011, 3:53:00 PM

பூனை பற்றி கவிதை சிறப்பாக இருக்கு.


ராஜா MVS said...
Dec 13, 2011, 3:56:00 PM

எங்கள் வீட்டுக்கு ஒரு பூனை வளர்ந்தது. அது முற்றிலும் சைவம், பால்/தயிர் சாதம் மட்டும்தான் சாப்பிடும், சாப்பிடகூட அனுமதியை உறுதிசெய்து விட்டுதான் தன்சாப்பாட்டிலேயே வாய்வைக்கும், அதற்கென்று தனித்தட்டு வேறுதட்டில் வைத்தால் அதையும் சாப்பிடாது, ஏதேனும் அதட்டி(திட்டி)விட்டால் 2நாள் உண்ணாவிரதம் வேறு, பிறகு தடவிகொடுத்து சமாதானம் பேசவேண்டும்...
எங்கிருந்தோ திடிரென்று வந்தது, சில மாதங்கள் எங்களோடு இருந்தது, பிறகு சென்று விட்டது, பல நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை...

கவிதை அருமை... நண்பரே...


!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Dec 13, 2011, 4:01:00 PM

வித்தியாசமான சிந்தனை..
அசத்தல் கவிதை..


Lakshmi said...
Dec 13, 2011, 5:23:00 PM

பூனைக்கும் கவிதையா நல்லாதான் இருக்கு.


rufina rajkumar said...
Dec 13, 2011, 6:47:00 PM

பூனையின் கருவிழி சுருங்கி ஒரு கோடாய் இருக்கும் போது உக்கிரமாயும், கரு விழி விரிந்து இருக்கும் போது பாவமாயும் இருக்கும் கவனித்து பாருங்கள்


நண்டு @நொரண்டு -ஈரோடு said...
Dec 13, 2011, 9:36:00 PM

அருமை.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.


மகேந்திரன் said...
Dec 14, 2011, 1:26:00 AM

பூனைக்கோர் நற்கவிதை...


ஈழவயல் said...
Dec 14, 2011, 2:24:00 AM

-:) !


Rathnavel said...
Dec 14, 2011, 6:27:00 AM

அருமை.


;