November 15, 2011
தொலைக்காட்சி செய்திகள்
அந்தரத்தில் வெடித்துச் சிதறியது விமானம்..!
பாலம் பிளந்து
கரை புரண்டோடும் நீரில்
தலைகுப்புற விழுந்தது
பேருந்து...!
புயல் மழை வெள்ளத்தால்
மாண்டோர் எண்ணிக்கை
எழுநூறாக உயர்வு ...!
பூகம்பம்
விழுங்கியோர் கணக்கு
சரிவரத் தெரியவில்லை ...!
இரசாயனக் கழிவு
குழாய் நீரில் கலப்பு ...
பல்லாயிரம் மக்கள் வாழ்க்கை
விஷமாக்கப்பட்டது ...!
அரிவாள் வீச்சுகள் குண்டு வெடிப்புகள்
அமில மழைகள்...!
இன்னும் காணியெங்கும் கலவரங்கள் போர்கள்
புன்னகையுடன்
நளினமாகத் தலையசைத்து
வாசிக்கப்படும் தொலைக்காட்சிச் செய்திகள் ...!
அறிவிப்பாளர்களைக்
குறை சொல்லிப் பயனில்லை
நாசி புகுந்து வரும் காற்றாய்
சகஜமாகிவிட்டன இன்று
சகமனிதர்களின் மரணங்கள்.....!
படங்கள் நன்றி : கூகுள் தேடல்
நண்பர்களே கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்து விட்டு செல்லுங்கள்
Cute Parents ல்இன்றைய குழந்தைகளுக்கான பதிவையும் வாசிக்கலாமே...
Teach Child to Appreciate Nature
பாலம் பிளந்து
கரை புரண்டோடும் நீரில்
தலைகுப்புற விழுந்தது
பேருந்து...!
புயல் மழை வெள்ளத்தால்
மாண்டோர் எண்ணிக்கை
எழுநூறாக உயர்வு ...!
பூகம்பம்
விழுங்கியோர் கணக்கு
சரிவரத் தெரியவில்லை ...!
இரசாயனக் கழிவு
குழாய் நீரில் கலப்பு ...
பல்லாயிரம் மக்கள் வாழ்க்கை
விஷமாக்கப்பட்டது ...!
அரிவாள் வீச்சுகள் குண்டு வெடிப்புகள்
அமில மழைகள்...!
இன்னும் காணியெங்கும் கலவரங்கள் போர்கள்
புன்னகையுடன்
நளினமாகத் தலையசைத்து
வாசிக்கப்படும் தொலைக்காட்சிச் செய்திகள் ...!
அறிவிப்பாளர்களைக்
குறை சொல்லிப் பயனில்லை
நாசி புகுந்து வரும் காற்றாய்
சகஜமாகிவிட்டன இன்று
சகமனிதர்களின் மரணங்கள்.....!
படங்கள் நன்றி : கூகுள் தேடல்
நண்பர்களே கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்து விட்டு செல்லுங்கள்
Cute Parents ல்இன்றைய குழந்தைகளுக்கான பதிவையும் வாசிக்கலாமே...
Teach Child to Appreciate Nature
|
|
Tweet |
Related Posts: ,
,
Subscribe to:
Post Comments (Atom)








14 Responses to “தொலைக்காட்சி செய்திகள்”
Nov 16, 2011, 7:39:00 AM
////புன்னகையுடன்
நளினமாகத் தலையசைத்து
வாசிக்கப்படும் தொலைக்காட்சிச் செய்திகள் ...!////
பிரமாதமான கவிதைவரிகள்
Nov 16, 2011, 11:53:00 AM
ரொம்பவும் அழகான கவிதை.வாழ்த்துக்கள்.
Nov 16, 2011, 12:35:00 PM
நிதர்சனம் நச் மாப்ள!
Nov 16, 2011, 1:41:00 PM
அன்பு நண்பரே மழலை உலகம் தொடர்பான தங்கள் இடுகையை
எனது வலையில் அறிமுகம் செய்துள்ளேன்..
http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_3736.html
காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..
Nov 16, 2011, 2:41:00 PM
அருமை நண்பரே ...
//
நாசி புகுந்து வரும் காற்றாய்
சகஜமாகிவிட்டன இன்று
சகமனிதர்களின் மரணங்கள்.....!//
நச்
Nov 16, 2011, 3:12:00 PM
மிக ஆழமான கவனம்...
இறுதி 8வரிகள் அருமை... நண்பரே...
இதில் மக்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என் கருத்து...
அவர்களும் எந்த ஒரு சஞ்சலமும் இல்லாமல் கேட்டுவிட்டு அடுத்த நிகழ்ச்சியில் மூழ்கிறார்கள் எதுவும் நடக்காதது போல...
பகிர்வுக்கு நன்றி... நண்பரே...
Nov 16, 2011, 5:18:00 PM
செய்திகளே கவிதைகளாய் .. சூப்பர்..
Nov 17, 2011, 9:39:00 PM
@ K.s.s.Rajh said... 1
////புன்னகையுடன்
நளினமாகத் தலையசைத்து
வாசிக்கப்படும் தொலைக்காட்சிச் செய்திகள் ...!////
பிரமாதமான கவிதைவரிகள்///
முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Nov 17, 2011, 9:40:00 PM
@ Lakshmi said... 2
//ரொம்பவும் அழகான கவிதை.வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி அம்மா அவர்களே
Nov 17, 2011, 9:41:00 PM
@ விக்கியுலகம் said... 3
//நிதர்சனம் நச் மாப்ள!//
நன்றி மாம்ஸ்
Nov 17, 2011, 9:43:00 PM
@ முனைவர்.இரா.குணசீலன் said... 4
//அன்பு நண்பரே மழலை உலகம் தொடர்பான தங்கள் இடுகையை
எனது வலையில் அறிமுகம் செய்துள்ளேன்..
http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_3736.html
காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..//
தங்களின் அறிமுகத்திற்க்கு மிக்க நன்றி முனைவர் அவர்களே
Nov 17, 2011, 9:44:00 PM
@ jayaram thinagarapandian said... 5
///அருமை நண்பரே ...
//
நாசி புகுந்து வரும் காற்றாய்
சகஜமாகிவிட்டன இன்று
சகமனிதர்களின் மரணங்கள்.....!//
நச் ///
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே
Nov 17, 2011, 9:46:00 PM
@ ராஜா MVS said... 6
///மிக ஆழமான கவனம்...
இறுதி 8வரிகள் அருமை... நண்பரே...
இதில் மக்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என் கருத்து...
அவர்களும் எந்த ஒரு சஞ்சலமும் இல்லாமல் கேட்டுவிட்டு அடுத்த நிகழ்ச்சியில் மூழ்கிறார்கள் எதுவும் நடக்காதது போல...
பகிர்வுக்கு நன்றி... நண்பரே... ///
உண்மைதான் நண்பரே.மக்களும் தங்களுக்கு நேர்ந்தால் மட்டுமே உணர்கிறார்கள்
Nov 17, 2011, 9:47:00 PM
//!* வேடந்தாங்கல் - கருன் *! said... 7
செய்திகளே கவிதைகளாய் .. சூப்பர்..//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Post a Comment