November 20, 2011
வாடகை வீடு
விட்டுச் சென்றதும்
குடிவைத்துக் கொள்ள...
ஆள்கிடைத்த மகிழ்ச்சியில்
நாள் கடந்து போனதை
ஞாபகமூட்டுகிறார் உரிமையாளர்..!
அன்புக்குரிய உரிமையாளரே...
பெட்டிகள் படுக்கை மின்விசிறி
தொலைக்காட்சிமுதல் எரிவாயுஅடுப்பு வரை
மூட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம்...!
வாடகை வண்டி வந்ததும்
ஏற்றிக்கொண்டு கிளம்புகிறோம்...!
கொண்டு செல்ல முடியாத சொத்தாக
பின்புறத்தில் நிற்கிறது ஓர் மரம்...!
எங்களை நினைவூட்டினாலும்
எங்களைப் போல் இருக்காது அது...!
குழாயில் தண்ணீரை ஏன் நிறுத்தினீர்கள்
என்று ஒருபோதும் கேட்காது...
மின்சார நேரத்தைக் கூட்டச்சொல்லி
முற்றத்தை மறித்து குழையாது...
மழை புயல் கஷ்டங்களை முன்வைத்து
பழுது பார்க்கவும் வேண்டாது...
நேருக்கு நேர் பார்த்தாலும்
எவ்வித சங்கடமும் தராது
வருத்தமோ கசப்போ எங்களோடு போகட்டும்
நாங்கள் வளர்த்த மரத்துக்காவது
கருணை காட்டுங்கள்..
நண்பர்களே..! கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்..
|
|
Tweet |
Related Posts: ,
,
Subscribe to:
Post Comments (Atom)








13 Responses to “வாடகை வீடு”
Nov 20, 2011, 7:44:00 PM
கஷ்டம் தான், விட்டு வைத்திருப்பார்களா என்று எண்ணம் தான் ஓடுகிறது
Nov 20, 2011, 7:49:00 PM
வாடகை வீடு மாறுவோர் ஒவ்வொருவரின்
மனதிலும் இருக்கும் சில வலிகள் வரிகளாய்....
Nov 21, 2011, 11:47:00 AM
படங்களும் கவிதையும் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.
Nov 21, 2011, 3:13:00 PM
நேருக்கு நேர் பார்த்தாலும்
எவ்வித சங்கடமும் தராது
வருத்தமோ கசப்போ எங்களோடு போகட்டும்
நாங்கள் வளர்த்த மரத்துக்காவது
கருணை காட்டுங்கள்..// நல்ல நோக்கம்.
கவிதை அழகு..
Nov 21, 2011, 3:14:00 PM
குழாயில் தண்ணீரை ஏன் நிறுத்தினீர்கள்
என்று ஒருபோதும் கேட்காது...
மின்சார நேரத்தைக் கூட்டச்சொல்லி
முற்றத்தை மறித்து குழையாது... ///
ரொம்ப அனுபவமா சகோ..
Nov 22, 2011, 12:11:00 AM
@ suryajeeva said... 1
//கஷ்டம் தான், விட்டு வைத்திருப்பார்களா என்று எண்ணம் தான் ஓடுகிறது//
முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
இந்த காலத்தில் விட்டு வைத்திருப்பது கடினம்தான்
Nov 22, 2011, 12:13:00 AM
@ கோகுல் said... 2
//வாடகை வீடு மாறுவோர் ஒவ்வொருவரின்
மனதிலும் இருக்கும் சில வலிகள் வரிகளாய்....//
வணக்கம் நண்பரே..
இந்த வலி கொஞ்சம் அதிகம் தான்..
Nov 22, 2011, 12:15:00 AM
@ Lakshmi said... 3
//படங்களும் கவிதையும் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி அம்மா அவர்களே
Nov 22, 2011, 12:19:00 AM
@ !* வேடந்தாங்கல் - கருன் *! said... 4 & 5
//நேருக்கு நேர் பார்த்தாலும்
எவ்வித சங்கடமும் தராது
வருத்தமோ கசப்போ எங்களோடு போகட்டும்
நாங்கள் வளர்த்த மரத்துக்காவது
கருணை காட்டுங்கள்..// நல்ல நோக்கம்.
கவிதை அழகு.. //
வணக்கம் நண்பரே வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே
////குழாயில் தண்ணீரை ஏன் நிறுத்தினீர்கள்
என்று ஒருபோதும் கேட்காது...
மின்சார நேரத்தைக் கூட்டச்சொல்லி
முற்றத்தை மறித்து குழையாது... ///
ரொம்ப அனுபவமா சகோ..////
ஆமாம் நண்பரே.. சொந்த ஊரை விட்டு வெளியில் வந்து என் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் 100 ல் 80 பேருக்கு கண்டிப்பாக இருக்கும் என்பது என் எண்ணம் நண்பரே..
Nov 22, 2011, 12:54:00 PM
வாடகை வீட்டின் உணர்வுகள்ள் பற்றிஅழகான கவிதை
ஊரிலிருந்து உறவினர்கள் வந்தாலும்
உங்களைப்போல் வருத்தப்படாது..
நிறைய வீட்டில் நிஜம்!
Nov 23, 2011, 12:38:00 PM
அருமை.
Nov 23, 2011, 11:04:00 PM
@ நம்பிக்கைபாண்டியன் said... 10
///வாடகை வீட்டின் உணர்வுகள்ள் பற்றிஅழகான கவிதை
ஊரிலிருந்து உறவினர்கள் வந்தாலும்
உங்களைப்போல் வருத்தப்படாது..
நிறைய வீட்டில் நிஜம்!//
உண்மைதான் நண்பரே.
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி
Nov 23, 2011, 11:05:00 PM
@ Rathnavel said... 11
//அருமை.//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி ஐயா
Post a Comment