November 19, 2011

காப்பியடித்தலும் அதன் காரணங்களும்..


வணக்கம் நண்பர்களே ! மற்றுமொரு குழந்தைகளுக்கான பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் குழந்தைகள் தேர்வில் காப்பியடிப்பதற்கான காரணங்கள் பற்றி அலசப் போகிறோம்.பொதுவாக மனிதப்பிறவியில் திருமணத்திற்கு முன் சமைக்கத் தெரியுமா? சம்பாதிக்கத் தெரியுமா? என்று தகுதி பார்க்கிற மாதிரி ஒரு உயிரை வளர்த்தெடுக்கிற ஆற்றல் இருக்கிறதா? அதற்கான தகுதி இருக்கிறதா? என்றெல்லாம் குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு முன் பார்ப்பதில்லை.பொறுமை, நிதானம், இதெல்லாம் அருகிவரும் பழக்கமாகிவிட்டது. குழந்தைகள் தவறு செய்தால் திட்டுவதும் அடிப்பதும் மட்டுமே பெற்றோர்களுக்கு தெரிந்த தீர்வாக இருக்கிறது. 

உதாரணத்திற்க்கு உங்கள் செல்போன் பழுதடைந்து விட்டது என்று வைத்துக்கொள்வோம். உங்களால் சரி செய்ய முடியுமா? முடியாது. காரணம் பழுதுநீக்கும் முறைகள் தெரியாது.செல்போன் சரிசெய்ய முடியாததும் அல்ல. உங்களால் அதன் மெக்கானிசத்தை கற்றுக்கொள்ள முடியாது என்பதும் கிடையாது. ஆனால் கடையில் கொடுத்து சரி செய்து கொள்கிறீர்கள். காரணம் நேரம் இல்லை. செல்போன் விஷயத்தில் அப்படி இருக்கலாம். குழந்தைகள் விஷயத்தில் அப்படி இருக்கலாமா? உங்கள் குழந்தை தவறு செய்தால் ஒருநாளும் அவர்கள் திருந்தமாட்டார்கள் என்று அர்த்தம் கிடையாது. உங்களுக்கு திருத்தும் மெக்கானிசம் தெரியாது அவ்வளவுதான். தெரிந்துகொள்ள தேவையான முயற்சியும் எடுக்கவில்லை.சரிவர வேலை செய்யாத செல்போனை ரெண்டு தட்டுத்தட்டி சரி செய்யும் பழைய குருட்டு மெக்கானிசதத்தைதான் குழந்தைகள் விஷயத்திலும் பலரும் கடைபிடிக்கிறார்கள். 

உங்கள் குழந்தை காப்பியடிக்கிறது அல்லது பிராகரஸ் கார்டில் கையெழுத்துப் போடுகிறது என்றால் காரணம் யார் ? மாற்றமே இல்லாமல் நீங்கள்தான். முதலில், ஏன் காப்பியடிக்கிறார்கள்? என்று யோசித்துப் பாருங்கள்.பெற்றோர் மேல் உள்ள பயம்தான் காப்பியடிக்கவும், பொய் சொல்லவும், ஏன், பிராகரஸ் ரிப்போர்டில் கையெழுத்துப் போடவும் காரணமாகிறது.தன்னால் முடியாது என்று முடிவெடுக்கிறபோதுதான் எப்படியாவது மதிப்பெண் பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் காப்பியடிப்பது, புத்தகத்தை கிழித்து பிட் எடுத்துக்கொண்டு போவது போன்ற தேர்வறை குற்றங்களில் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். ஒன்றை அடைவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை எப்படி அடைகிறோம் என்பதும் என்று நம் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தராததன் விளைவுதான் இந்த தவறுகள்.மதிப்பெண் குறைவதால் ஏற்படும் அவமானத்தைவிட காப்பியடிப்பது ஒன்றும் பெரிய அவமானம் இல்லை என்று நினைப்பதால்தானே நம் குழந்தைகள் காப்பியடிக்கிறார்கள். 

மதிப்பெண் ரிப்போட்டில் உங்கள் கையெழுத்தை அவர்கள் போடுவது தவறுதான். ஆனால், ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள். உங்களிடம் காட்ட முடியாமல் இரண்டு நாளாக ஸ்கூல் பேக்கில் வைத்துக்கொண்டு அவர்கள் எப்படியெல்லாம் தவித்துப்போய் இருப்பார்கள். எந்த அளவிற்கு பயமும் குற்றவுணர்ச்சியும் அடைந்திருப்பார்கள். கையெழுத்துப் போடும்போது எந்த அளவிற்கு உள்ளூர நடுங்கியிருப்பார்கள். உங்கள் மேல் இத்தனை பயத்தை ஏற்படுத்தியது, உங்கள் தவறு என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? பெற்றோர் மேல் இருக்க வேண்டியது மரியாதைதானே தவிர பயம் அல்ல. உங்களைப் பார்த்து உங்கள் குழந்தைகள் பயப்படுகிறது, பொய்சொல்கிறது என்றால் ஒரு பெற்றோராக நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம். உண்மை சொல்கிற அளவிற்கு நீங்கள் நடந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். 

வகுப்பு ஆசிரியர் கூப்பிட்டு உங்களிடம் சொல்வது, அவமானம் அல்ல, குழந்தைகளை இந்த நிலையில் நாம் வைத்திருக்கிறோம் என்பதுதான் அவமானம். உங்கள் குழந்தைகள் தேர்வில் வெற்றியடைவதை விடவும் முக்கியம், நீங்கள் பெற்றோராய் தோற்றுப் போகாமலிருப்பது. கணவன் மனைவிக்குள் சிறு சச்சரவு வந்து ஒருவரை ஒருவர் கோபித்துக்கொண்டால் அன்றைய பணிகளை உற்சாகமாக செய்ய முடிகிறதா? இல்லையே. சோர்வு அதிகரித்து எந்த வேலையும் செய்யப் பிடிப்பதில்லை. நாம் திட்டினாலும் அடித்தாலும் நம் குழந்தைகளுக்கும் இதே நிலைதான். ஒவ்வொரு மாதமும் என்ன மார்க்? என்று கேட்டு திட்டுவதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் இன்று என்ன கற்றுக்கொண்டாய்? என்று கேட்டு விளக்கச் சொல்லியிருந்தால் மதிப்பெண்ணிற்காக மண்டை காயாமல் கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தியிருப்பார்கள். கற்றுக்கொள்வதை நீங்கள் அக்கறையோடு கேட்பதைப் பார்த்து உற்சாகம் அடைந்திருப்பார்கள். நிச்சயம் மதிப்பெண்ணிலும் மேம்பட்டிருப்பார்கள். 

ஒருவர் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் உற்சாகப்படுத்த வேண்டுமா? அல்லது திட்டவோ அடிக்கவோ வேண்டுமா? என்று யோசித்துப்பாருங்கள் பெற்றோர் என்ற வார்த்தைக்கு குழந்தையின் பெற்றோர் என்று மட்டும் அர்த்தம் அல்ல வளர்ப்போர் என்ற அர்த்தமும் கூடத்தானே...
உறவுகளே தங்களுக்கு நேரமிருந்தால் இதனையும் வாசிக்கலாமே...Is Your Child Ready For Kindergarten..?

நண்பர்களே பதிவு பித்திருந்தால் தங்களது கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே..33 Responses to “காப்பியடித்தலும் அதன் காரணங்களும்..”

Online Works For All said...
Nov 19, 2011, 9:42:00 PM

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html


Lakshmi said...
Nov 19, 2011, 9:45:00 PM

குழந்தைகளை அன்பாக சொல்லி திருத்துவதுதான் சரியா இருக்கும்.


முனைவர்.இரா.குணசீலன் said...
Nov 19, 2011, 9:52:00 PM

வாழ்க்கைக்குத் தேவையான பதிவு அன்பரே..

அருமை..


முனைவர்.இரா.குணசீலன் said...
Nov 19, 2011, 9:56:00 PM

ஒன்றை அடைவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை எப்படி அடைகிறோம் என்பதும் என்று நம் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தராததன் விளைவுதான் இந்த தவறுகள்.

அழகாகச் சொன்னீர்கள் அன்பரே...

ஒரு மாணவன் பார்த்து எழுத ஆரம்பித்துவிட்டாலேயே
அவனுக்கு தேர்ச்சியடையவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என்று பொருள்..

அதனால் அவனை நல்ல வழிக்கு மாற்றுவது மிகவும் எளிது..


கோகுல் said...
Nov 19, 2011, 10:14:00 PM

கற்கும் விசயத்திலும்,புரிந்து கொண்ட விதத்திலும்
இல்லாததை பெற்றோர்கள் மதிப்பெண்ணில் எதிர் பார்ப்பதால்
இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது!

நீங்கள் சொல்வது போல பிள்ளைகள் பெற்றோரை பார்த்து
பயந்தால் ஒரு பெற்றோராராக தோல்வி நிச்சயம்!


நம்பிக்கைபாண்டியன் said...
Nov 19, 2011, 11:40:00 PM

பெற்றீர்களுக்கான நல்ல ஆலோசனை பதிவு, அதிலும் குறிப்பாக செல்போன் மெக்கானிச விளக்கம், மிக பொருத்தமான உதாரணம்.


தமிழ்வாசி - Prakash said...
Nov 20, 2011, 12:13:00 AM

பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு... அருமையான பகிர்வு சம்பத் சார்.


நம்ம தளத்தில்:
நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?


அம்பலத்தார் said...
Nov 20, 2011, 1:10:00 AM

மீண்டும் நல்லதொரு அத்தியாவசியமான விடயத்தை அழகுற பதிவுசெதமைக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. பெற்றோர் பிள்ளைகளிற்கிடையே அடக்கியாளும் நிலைமை இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம். பரஸ்பரம் புரிதலும் நட்பும் அவசியம். குழந்தைகளிற்கு எந்த ஒரு இக்கட்டான நிலைமையிலும் அல்லது ஒரு தவறு செய்துவிட்டபோதும்கூட அதிலிருந்து மீள உதவக்கூடிய முதல் நண்பர் தமது பெற்றோர்தான் என்ற எண்ணம் ஏற்படுமாறு பெற்றோர்கள் நடந்துகொள்ளவேண்டும்.


கவி அழகன் said...
Nov 20, 2011, 6:35:00 AM

நல்ல மட்டர்


தங்கம்பழனி said...
Nov 20, 2011, 7:39:00 AM

/// உங்கள் குழந்தைகள் தேர்வில் வெற்றியடைவதை விடவும் முக்கியம், நீங்கள் பெற்றோராய் தோற்றுப் போகாமலிருப்பது.///

குழந்தைகளின் வெற்றிக்கும், தோல்விக்கும் பெற்றோர்களின் பங்கு என்ன என்பதை தெளிவாகவும், நயம்படவும் விளக்கியிருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்..!!


தங்கம்பழனி said...
Nov 20, 2011, 7:45:00 AM

எமது வலையில் சிறந்ததொரு பதிவு


http://www.thangampalani.com/2011/10/sub-conscious-mind.html

அனைவரையும் அழைக்கிறேன்..!!


விக்கியுலகம் said...
Nov 20, 2011, 8:31:00 AM

அருமை


இராஜராஜேஸ்வரி said...
Nov 20, 2011, 8:40:00 AM

உங்கள் குழந்தை தவறு செய்தால் ஒருநாளும் அவர்கள் திருந்தமாட்டார்கள் என்று அர்த்தம் கிடையாது. உங்களுக்கு திருத்தும் மெக்கானிசம் தெரியாது அவ்வளவுதான். தெரிந்துகொள்ள தேவையான முயற்சியும் எடுக்கவில்லை.சரிவர வேலை செய்யாத செல்போனை ரெண்டு தட்டுத்தட்டி சரி செய்யும் பழைய குருட்டு மெக்கானிசதத்தைதான் குழந்தைகள் விஷயத்திலும் பலரும் கடைபிடிக்கிறார்கள். /

nice and informative.


suryajeeva said...
Nov 20, 2011, 9:27:00 AM

ஒரு அருமையான ஜோக் நினைவுக்கு வந்தது..

அம்பி: ஏன்டா உங்கப்பா உன்னை இந்த அடி அடிக்கிறார்?
தம்பி: திருப்பி நான் அடிக்க மாட்டேன் இல்ல, அதனால் தான்...

குழந்தைகளை அடிக்கும் பெற்றோர்கள் இந்த ஜோக்கை படித்தார்கள் என்றால்... போதும்


திண்டுக்கல் தனபாலன் said...
Nov 20, 2011, 12:32:00 PM

அருமையான பதிவு. உங்கள் பதிவு வந்தவுடன் வீட்டில் அனைவரையும் படிக்க சொல்வேன். நன்றி.


veedu said...
Nov 20, 2011, 1:40:00 PM

என் மகன் காப்பி அடிக்கிறதில்லை பென்சில்தான் தினம் ஒன்று வேண்டும்
இப்படி தினம் எதையாவது தொலைச்சிட்டு வருவதே அவன் குனம்
கட்டுரை அருமை


ராஜா MVS said...
Nov 20, 2011, 2:29:00 PM

பல பெற்றோரின் தவறுகளையும், மனஇயல்களையும் மிக தெளிவாக புரியும்படி திருத்திக்கொள்ளும் வகையில் எடுத்துரைத்துள்ளீர்கள்... நண்பரே...

வாழ்த்துகள்...


சம்பத் குமார் said...
Nov 20, 2011, 4:35:00 PM

@ Lakshmi said... 2

//குழந்தைகளை அன்பாக சொல்லி திருத்துவதுதான் சரியா இருக்கும்.//

வணக்கம் லட்சுமி அம்மா அவர்களே..

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி அம்மா


சம்பத் குமார் said...
Nov 20, 2011, 4:39:00 PM

@ முனைவர்.இரா.குணசீலன் said...3 & 4

////ஒன்றை அடைவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை எப்படி அடைகிறோம் என்பதும் என்று நம் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தராததன் விளைவுதான் இந்த தவறுகள்.

அழகாகச் சொன்னீர்கள் அன்பரே...

ஒரு மாணவன் பார்த்து எழுத ஆரம்பித்துவிட்டாலேயே
அவனுக்கு தேர்ச்சியடையவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என்று பொருள்..

அதனால் அவனை நல்ல வழிக்கு மாற்றுவது மிகவும் எளிது.. ////

வணக்கம் திரு.முனைவர் அவர்களே..இந்த விஷயம் புரியாமல் தான் இன்றை பெற்றோர்கள் தவறிழைத்து விடுகிறார்கள்..

தங்களின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி


சம்பத் குமார் said...
Nov 20, 2011, 4:41:00 PM

@ கோகுல் said... 5

//கற்கும் விசயத்திலும்,புரிந்து கொண்ட விதத்திலும்
இல்லாததை பெற்றோர்கள் மதிப்பெண்ணில் எதிர் பார்ப்பதால்
இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது!

நீங்கள் சொல்வது போல பிள்ளைகள் பெற்றோரை பார்த்து
பயந்தால் ஒரு பெற்றோராராக தோல்வி நிச்சயம்! ///

வாங்க கோகுல் நண்பரே..

நீங்கள் சொன்ன வார்த்தைகள் தான் நிதர்சனமா உண்மை.


சம்பத் குமார் said...
Nov 20, 2011, 4:43:00 PM

@ நம்பிக்கைபாண்டியன் said... 6

//பெற்றீர்களுக்கான நல்ல ஆலோசனை பதிவு, அதிலும் குறிப்பாக செல்போன் மெக்கானிச விளக்கம், மிக பொருத்தமான உதாரணம்.//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..


சம்பத் குமார் said...
Nov 20, 2011, 4:44:00 PM

@ தமிழ்வாசி - Prakash said... 7

//பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு... அருமையான பகிர்வு சம்பத் சார்.//

மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும்..


சம்பத் குமார் said...
Nov 20, 2011, 4:46:00 PM

@ அம்பலத்தார் said... 8

//மீண்டும் நல்லதொரு அத்தியாவசியமான விடயத்தை அழகுற பதிவுசெதமைக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. பெற்றோர் பிள்ளைகளிற்கிடையே அடக்கியாளும் நிலைமை இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம். பரஸ்பரம் புரிதலும் நட்பும் அவசியம். குழந்தைகளிற்கு எந்த ஒரு இக்கட்டான நிலைமையிலும் அல்லது ஒரு தவறு செய்துவிட்டபோதும்கூட அதிலிருந்து மீள உதவக்கூடிய முதல் நண்பர் தமது பெற்றோர்தான் என்ற எண்ணம் ஏற்படுமாறு பெற்றோர்கள் நடந்துகொள்ளவேண்டும்.//

வணக்கம் திரு.அம்பலத்தார் நண்பரே..

தங்களின் ஆதரவோடு எனது பயணம் தொடரும்..


சம்பத் குமார் said...
Nov 20, 2011, 4:47:00 PM

@ கவி அழகன் said... 9

//நல்ல மட்டர்//

மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Nov 20, 2011, 4:52:00 PM

@ தங்கம்பழனி said... 10

////// உங்கள் குழந்தைகள் தேர்வில் வெற்றியடைவதை விடவும் முக்கியம், நீங்கள் பெற்றோராய் தோற்றுப் போகாமலிருப்பது.///

குழந்தைகளின் வெற்றிக்கும், தோல்விக்கும் பெற்றோர்களின் பங்கு என்ன என்பதை தெளிவாகவும், நயம்படவும் விளக்கியிருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்..!! //////

வாருங்கள் திரு.தங்கம் பழனி அவர்களே..

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி


சம்பத் குமார் said...
Nov 20, 2011, 4:54:00 PM

@ விக்கியுலகம் said... 12

//அருமை//

மிக்க நன்றி மாம்ஸ்


சம்பத் குமார் said...
Nov 20, 2011, 4:55:00 PM

@ இராஜராஜேஸ்வரி said... 13

///உங்கள் குழந்தை தவறு செய்தால் ஒருநாளும் அவர்கள் திருந்தமாட்டார்கள் என்று அர்த்தம் கிடையாது. உங்களுக்கு திருத்தும் மெக்கானிசம் தெரியாது அவ்வளவுதான். தெரிந்துகொள்ள தேவையான முயற்சியும் எடுக்கவில்லை.சரிவர வேலை செய்யாத செல்போனை ரெண்டு தட்டுத்தட்டி சரி செய்யும் பழைய குருட்டு மெக்கானிசதத்தைதான் குழந்தைகள் விஷயத்திலும் பலரும் கடைபிடிக்கிறார்கள். /

nice and informative. ///

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி சகோ..


சம்பத் குமார் said...
Nov 20, 2011, 4:58:00 PM

@ suryajeeva said... 14

//ஒரு அருமையான ஜோக் நினைவுக்கு வந்தது..

அம்பி: ஏன்டா உங்கப்பா உன்னை இந்த அடி அடிக்கிறார்?
தம்பி: திருப்பி நான் அடிக்க மாட்டேன் இல்ல, அதனால் தான்...

குழந்தைகளை அடிக்கும் பெற்றோர்கள் இந்த ஜோக்கை படித்தார்கள் என்றால்... போதும்//

ஜோக் ரசிக்க வைக்கிறது நண்பரே..என் பார்வையிலும் குழந்தைகளை அனபாலே திருத்த வேண்டுமென்பதுதான் சரியான வழியாய் தெரிகிறது


சம்பத் குமார் said...
Nov 20, 2011, 4:59:00 PM

@ திண்டுக்கல் தனபாலன் said... 15

//அருமையான பதிவு. உங்கள் பதிவு வந்தவுடன் வீட்டில் அனைவரையும் படிக்க சொல்வேன். நன்றி.//

வணக்கம் நண்பரே..

தாங்கள் கொடுத்து வரும் தொடராதரவிற்க்கு மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Nov 20, 2011, 5:03:00 PM

@ veedu said... 16

//என் மகன் காப்பி அடிக்கிறதில்லை பென்சில்தான் தினம் ஒன்று வேண்டும்
இப்படி தினம் எதையாவது தொலைச்சிட்டு வருவதே அவன் குனம்
கட்டுரை அருமை//

வணக்கம் நண்பரே..சிறு குழந்தைகள் தானே வளர்ந்தால் சரியாகிவிடும் என்பது என் எண்ணம்


சம்பத் குமார் said...
Nov 20, 2011, 5:04:00 PM

@ ராஜா MVS said... 17

//பல பெற்றோரின் தவறுகளையும், மனஇயல்களையும் மிக தெளிவாக புரியும்படி திருத்திக்கொள்ளும் வகையில் எடுத்துரைத்துள்ளீர்கள்... நண்பரே...

வாழ்த்துகள்...//

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


naren said...
Nov 21, 2011, 6:46:00 PM

அருமையான பதிவு, உளவியல் ரீதியாக அலசிய பதிவு. பக்குவமாக நடந்து கொள்ளவேண்டும் என்று சுட்டிக்காட்டிய பதிவு பதிவிற்கு நன்றி.


சம்பத் குமார் said...
Nov 22, 2011, 12:23:00 AM

@ naren said... 32

//அருமையான பதிவு, உளவியல் ரீதியாக அலசிய பதிவு. பக்குவமாக நடந்து கொள்ளவேண்டும் என்று சுட்டிக்காட்டிய பதிவு பதிவிற்கு நன்றி.//

வணக்கம் நண்பரே..

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


;