November 25, 2011

என்னுள் நான் (தொடர் பதிவு)





வணக்கம் நண்பர்களே! நண்பர் கோகுல் அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க தொடர்பதிவு வரிசையில் என்னுடைய விருப்பு,வெறுப்புகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.நல்லதொரு ஆரம்பம் என நினைக்கிறேன்.நண்பரின் இந்த முயற்ச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களோடு பயங்கர டேட்டாவுக்கு செல்வோமா..?




நான் : சம்பத்குமார் ( தமிழ் பேரன்ட்ஸ் )
பிறந்த நாள் : பூவுலகில் 03.06.....?(ஹி ஹி),வலையுலகில் 15.07.2011
பிறந்தது : தென்மேற்கு பருவக்காற்று வீசும் தேனிப்பக்கம்
இருப்பது : கொங்குத்தமிழ் பேசும் கோவையில்
படித்தது : டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஞ்சினியரிங்
வேலைபார்பது : தனியார் ஆட்டோமொபைல் டீலர்சிப்பில்..
தற்போதைய பணி : பார்ட்ஸ் மேனேஜர்
புதிய பணி : பிளாக்கர் (பெருமையாய் சொல்லுகிறேன்)




காதல் : இரண்டாவது வேண்டாமே (பர்ஸ்டே சக்சஸ்)
எல்லாமுமாய்... : என் அன்னையும் பிதாவும்
என்னுடன்... ; அன்பு மனைவியும், அழகு குழந்தைகளும்
பழைய நட்புகள் : பள்ளி,கல்லூரி,சொந்த ஊர் நண்பர்கள்
புதிய நட்புகள் : வலைப்பூ நண்பர்கள்
சந்தோஷம் : ஆங்கிலத்தளமும் ரெடி (இணைஞ்சுக்கங்க)
பாதித்தது : கோவை பள்ளிகுழந்தைகளின் அகாலமரணம்



பலம் ; ஏதோ கொஞ்சம் இருக்குனு நினைக்கிறேன்
பலவீனம் : அதுக்குதானே கீழே கமெண்ட் பாக்ஸ்
லேட்டஸ்ட் நியூஸ் : பதிவு எண்ணிக்கையில செஞ்சுரி அடிச்சது
பிடிச்ச வரிகள் ; ”யாதும் ஊரே யாவரும் கேளீர்
பொழுதுபோக்கு ; வலைப்பக்கம் உலாவுதல்,படித்தல்
நிறைவேறாதஆசை : எஞ்சினியரிங் படிக்க முடியாமல் போனது
ஒரே சாதனை : நல்ல மகனாகவும்,தந்தையாகவுமிருப்பது
சமீபத்திய ஓட்டு : MLA – ல 49 ஒவுக்கு, உள்ளாட்சில நண்பருக்கு



சமீபத்திய எரிச்சல் : பஸ் டிக்கட்டும்,பால் பாக்கெட்டும் விலை உயர்வு
நீண்ட கால எரிச்சல்:பெட்ரோல் விலை தாங்க முடியல
மாத பட்ஜெட்டில் : முதியோர் இல்லத்திற்க்கு 2 %
நீண்ட நாள் கனவு :நான்கு குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பது
விட்டுச் செல்ல விரும்புவது : வருங்காலத்திற்க்கு வசந்தத்தை 
கோபம் : வருது..குழந்தைகளை பாலியல் கொடுமை பண்ணுறவங்கள
பார்த்தா... கொன்னுடலாம்னு கூட தோணுது
தொடர்புகொள்ள : sampathkkp@gmail.com


உறவுகளே..! பய(ங்கர)டேட்டாவில் தொடர்பதிவு எழுத அடுத்து நான் அழைக்கப்போவது உங்களுக்கு நன்கு அறிமுகமான பதிவுக பிரபலங்கள்....



நம்ம வியட்நாம் விக்கி மாம்ஸ்


நம்ம இன்ஞ்சினியர் தமிழ்வாசி அண்ணன்


நம்ம வாத்தியார் வேடந்தாங்கல் கரூண் சார்



நண்பர்களே..! மாறாத பாசத்துடன் தொடர்பதிவு எழுத அன்புடன் அழைக்கின்றேன்.


டிஸ்கி : போலி முகங்களை வைத்து பதிவுலகில் வலம் வர நாம் ஒன்றும் பெயரிலிகள் அல்லவே..அந்த குறைகளை களைவதற்கே இந்த சிறிய முயற்சி.கைகொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்...


அன்புடன் உங்களில் ஒருவனாக..

சம்பத்குமார்


பதிவினை வாசிக்கும் நண்பர்களே..மறக்காமல் உங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்



58 Responses to “என்னுள் நான் (தொடர் பதிவு)”

suryajeeva said...
Nov 25, 2011, 8:55:00 PM

கலக்கல் பதிவு...


தமிழ்வாசி பிரகாஷ் said...
Nov 25, 2011, 8:55:00 PM

ஆகா அண்ணன் புலம்பி தள்ளிட்டாரே.... என்னையும் பொலம்ப சொல்லிட்டாரே....


தமிழ்வாசி பிரகாஷ் said...
Nov 25, 2011, 8:57:00 PM

இந்த முயற்ச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களோடு பயங்கர டேட்டாவுக்கு செல்வோமா..?///

பயங்கரமா இல்லை... பசுமையான நினைவுகளா இருக்கு....


தமிழ்வாசி பிரகாஷ் said...
Nov 25, 2011, 9:02:00 PM

படித்தது : டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஞ்சினியரிங்///

நானும் இதே தான் படிச்சிருக்கேன்... இத நானும் போட்டா காப்பி பேஸ்ட்ன்னு சொல்வாங்களா? டவுட்...


சம்பத் குமார் said...
Nov 25, 2011, 9:04:00 PM

@ suryajeeva said...

//கலக்கல் பதிவு...//

முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே


தமிழ்வாசி பிரகாஷ் said...
Nov 25, 2011, 9:05:00 PM

தற்போதைய பணி : பார்ட்ஸ் மேனேஜர்//

எந்த பார்ட்ஸ்க்கு மேனேஜர்? அதை சொல்லலியே....


சம்பத் குமார் said...
Nov 25, 2011, 9:06:00 PM

@ தமிழ்வாசி பிரகாஷ் said...
//படித்தது : டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஞ்சினியரிங்///

நானும் இதே தான் படிச்சிருக்கேன்... இத நானும் போட்டா காப்பி பேஸ்ட்ன்னு சொல்வாங்களா? டவுட்...//

தாராளமா போடுங்க நாம பணம் கட்டி படிச்சதா யாரு வந்து காப்பி பேஸ்ட்னு சொல்லப்போராங்க..


சம்பத் குமார் said...
Nov 25, 2011, 9:06:00 PM

@ தமிழ்வாசி பிரகாஷ் said...
//தற்போதைய பணி : பார்ட்ஸ் மேனேஜர்//

எந்த பார்ட்ஸ்க்கு மேனேஜர்? அதை சொல்லலியே....//

ஸ்பேர்பாட்ஸ்க்கு..


jaisankar jaganathan said...
Nov 25, 2011, 9:07:00 PM

உங்க பயோடேட்டா சூப்பர்


தமிழ்வாசி பிரகாஷ் said...
Nov 25, 2011, 9:08:00 PM

லேட்டஸ்ட் நியூஸ் : பதிவு எண்ணிக்கையில செஞ்சுரி அடிச்சது///

இன்னும் சச்சின் சத்தத்தில் சதம் அடிக்காம இருக்காரே.....


சம்பத் குமார் said...
Nov 25, 2011, 9:10:00 PM

@ jaisankar jaganathan said... 9

//உங்க பயோடேட்டா சூப்பர்//

வாங்க நண்பரே வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி


சம்பத் குமார் said...
Nov 25, 2011, 9:11:00 PM

@ தமிழ்வாசி பிரகாஷ் said...
//லேட்டஸ்ட் நியூஸ் : பதிவு எண்ணிக்கையில செஞ்சுரி அடிச்சது///

இன்னும் சச்சின் சத்தத்தில் சதம் அடிக்காம இருக்காரே.....//

ஒருவேளை வெளி நாட்டு சதியா இருக்குமோ..?


தங்கம்பழனி said...
Nov 25, 2011, 9:32:00 PM

பயோடேட்டாவில் உங்களைப்பற்றிய தகவல்கள அருமை.


சம்பத் குமார் said...
Nov 25, 2011, 9:59:00 PM

@ தங்கம்பழனி said... 13

//பயோடேட்டாவில் உங்களைப்பற்றிய தகவல்கள அருமை.//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே


கோகுல் said...
Nov 26, 2011, 12:24:00 AM

அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு முதலில் நன்றி!


சம்பத் குமார் said...
Nov 26, 2011, 12:26:00 AM

@கோகுல் said...

//அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு முதலில் நன்றி!//

வாங்க நண்பரே..


கோகுல் said...
Nov 26, 2011, 12:35:00 AM

எல்லாமே அருமை நண்பரே!

தொடங்கி வைச்சாச்சு.
இனி நண்பர்களின் விளையாட்டை ரசிப்போம்!


இராஜராஜேஸ்வரி said...
Nov 26, 2011, 12:42:00 AM

பயோடேட்டாவுக்கு பாராட்டுக்கள்..


naren said...
Nov 26, 2011, 3:12:00 AM

நல்ல தொடக்கம். பயோடேட்டா நல்லது. கோவையா....நெருங்கிட்டீங்க...


விக்கியுலகம் said...
Nov 26, 2011, 4:52:00 AM

இம்புட்டு விஷயம் சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்...மாப்ள திங்கள் எழுதறேன் ஹிஹி...


அம்பலத்தார் said...
Nov 26, 2011, 5:47:00 AM

//மாத பட்ஜெட்டில் : முதியோர் இல்லத்திற்க்கு 2 %
நீண்ட நாள் கனவு :நான்கு குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பது
விட்டுச் செல்ல விரும்புவது : வருங்காலத்திற்க்கு வசந்தத்தை
கோபம் : வருது..குழந்தைகளை பாலியல் கொடுமை பண்ணுறவங்கள
பார்த்தா... கொன்னுடலாம்னு கூட தோணுது//
இந்த உங்க நல்ல மனதுக்கு நீங்க இன்னும் பல ஆண்டுகள் நோய் நொடியில்லாமல் வாழணும்.
இந்த உங்க நல்ல மனதுக்காகவே நான் உங்க பதிவு ஒவ்வொன்றுக்கும் ஓடிவந்து பின்னூட்டம் போடுவன்.


Rathnavel said...
Nov 26, 2011, 6:01:00 AM

அருமை.
வாழ்த்துகள்.


veedu said...
Nov 26, 2011, 7:40:00 AM

பய(ங்கர)டேட்டாவா..?பயந்துட்டே வந்தேன் விக்கி பதிவு எப்ப வருது நான்
உங்க மெயிலுக்கு (விக்கி)போட்டோ அனுப்புகின்றேன் எத்தனை நாளைக்குத்தான் சுபாஸ்சந்திரபோஸ்
போட்டாவ வைச்சுட்டு ஏமாத்துவார்...
மாமா மாட்டிவிட்டுட்டமல்ல....


K.s.s.Rajh said...
Nov 26, 2011, 9:10:00 AM

இது பசுமையான டேட்டாதான்...உங்களை பற்றி அறிய முடிந்தது நன்றி பாஸ்


வியபதி said...
Nov 26, 2011, 10:35:00 AM

அருமையான பதிவு. ஒவ்வொரு பதிவரைப்பற்றியும் தெரிந்து கொள்ள இப்பகுதி மிகவும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.


சம்பத் குமார் said...
Nov 26, 2011, 11:08:00 AM

@ கோகுல் said...

//எல்லாமே அருமை நண்பரே!

தொடங்கி வைச்சாச்சு.
இனி நண்பர்களின் விளையாட்டை ரசிப்போம்!//

முக்கியமாய் பதிவர்களின் விருப்பு வெறுப்புகள் வெளிவரும் எனபது என் எண்ணம் நண்பரே


சம்பத் குமார் said...
Nov 26, 2011, 11:09:00 AM

@ இராஜராஜேஸ்வரி said...

//பயோடேட்டாவுக்கு பாராட்டுக்கள்..//

மிக்க நன்றி சகோ..


சம்பத் குமார் said...
Nov 26, 2011, 11:11:00 AM

@ naren said...

//நல்ல தொடக்கம். பயோடேட்டா நல்லது. கோவையா....நெருங்கிட்டீங்க...//

ஆமாம் நண்பரே கடந்த 15 வருடங்களாக கோவை வாசம்தான்


சம்பத் குமார் said...
Nov 26, 2011, 11:13:00 AM

@ விக்கியுலகம் said...
//இம்புட்டு விஷயம் சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்...மாப்ள திங்கள் எழுதறேன் ஹிஹி...//

வணக்கம் மாம்ஸ்..

பதிவினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்


சம்பத் குமார் said...
Nov 26, 2011, 11:14:00 AM

@அம்பலத்தார் said...
/////மாத பட்ஜெட்டில் : முதியோர் இல்லத்திற்க்கு 2 %
நீண்ட நாள் கனவு :நான்கு குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பது
விட்டுச் செல்ல விரும்புவது : வருங்காலத்திற்க்கு வசந்தத்தை
கோபம் : வருது..குழந்தைகளை பாலியல் கொடுமை பண்ணுறவங்கள
பார்த்தா... கொன்னுடலாம்னு கூட தோணுது//
இந்த உங்க நல்ல மனதுக்கு நீங்க இன்னும் பல ஆண்டுகள் நோய் நொடியில்லாமல் வாழணும்.
இந்த உங்க நல்ல மனதுக்காகவே நான் உங்க பதிவு ஒவ்வொன்றுக்கும் ஓடிவந்து பின்னூட்டம் போடுவன்./////

தங்கள் தொடர் ஆதரவிற்க்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Nov 26, 2011, 11:15:00 AM

@ Rathnavel said...
//அருமை.
வாழ்த்துகள்.//

மிக்க நன்றி ஐயா..


சம்பத் குமார் said...
Nov 26, 2011, 11:16:00 AM

@ veedu said...
//பய(ங்கர)டேட்டாவா..?பயந்துட்டே வந்தேன் விக்கி பதிவு எப்ப வருது நான்
உங்க மெயிலுக்கு (விக்கி)போட்டோ அனுப்புகின்றேன் எத்தனை நாளைக்குத்தான் சுபாஸ்சந்திரபோஸ்
போட்டாவ வைச்சுட்டு ஏமாத்துவார்...
மாமா மாட்டிவிட்டுட்டமல்ல....//

மாம்ஸ் அனுமதி கொடுக்கட்டும் நண்பரே..


சம்பத் குமார் said...
Nov 26, 2011, 11:18:00 AM

@ K.s.s.Rajh said...
//இது பசுமையான டேட்டாதான்...உங்களை பற்றி அறிய முடிந்தது நன்றி பாஸ்//

மிக்க நன்றி நண்பரே..


சம்பத் குமார் said...
Nov 26, 2011, 11:20:00 AM

@ வியபதி said...
//அருமையான பதிவு. ஒவ்வொரு பதிவரைப்பற்றியும் தெரிந்து கொள்ள இப்பகுதி மிகவும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.//

உண்மைதான் நண்பரே..பதிவர்களைப் பற்றி அறிய எடுத்துள்ள சிறு முயற்சி

தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி


கவிதை வீதி... // சௌந்தர் // said...
Nov 26, 2011, 11:24:00 AM

நெகிழ்ச்சியான விஷயங்கள் தங்களிடம் இருக்கிறது...

நான் எதையும் குறிப்பிட்ட சொல்ல விரும்பவில்லை...

நான் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்..


கவிதை வீதி... // சௌந்தர் // said...
Nov 26, 2011, 11:25:00 AM

நடுநிலையான மற்றும் தைரியத்துடன் நடைப்போடுவோம் யாரும் தடுத்துவிடமுடியாது நம்மை...

வெற்றி நமக்கே...


MANO நாஞ்சில் மனோ said...
Nov 26, 2011, 12:06:00 PM

பதிவுக்கு வாழ்த்துக்கள்...!!!


RAMVI said...
Nov 26, 2011, 12:11:00 PM

பதில்கள் அருமை.
உங்க நீண்ட கால கனவு நினைவாக வாழ்த்துக்கள்.


திண்டுக்கல் தனபாலன் said...
Nov 26, 2011, 12:36:00 PM

சந்தோசமான பதிவு! பயங்கர டேட்டா இல்லை. பாசமான டேட்டா. வாழ்த்துக்கள் நண்பரே!


ராஜா MVS said...
Nov 26, 2011, 1:10:00 PM

பதிவு அருமை...

வாசிக்கவும், யோசிக்கவும்...

தங்களின் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகள்... நண்பரே...


சம்பத் குமார் said...
Nov 26, 2011, 2:36:00 PM

@ கவிதை வீதி... // சௌந்தர் //

//நெகிழ்ச்சியான விஷயங்கள் தங்களிடம் இருக்கிறது...
நான் எதையும் குறிப்பிட்ட சொல்ல விரும்பவில்லை...
நான் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்..//

தங்களை நண்பராய் அடைந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே..

//நடுநிலையான மற்றும் தைரியத்துடன் நடைப்போடுவோம் யாரும் தடுத்துவிடமுடியாது நம்மை...

வெற்றி நமக்கே... //

உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

Nov 26, 2011 11:24:00 AM


சம்பத் குமார் said...
Nov 26, 2011, 2:37:00 PM

@MANO நாஞ்சில் மனோ said...

//பதிவுக்கு வாழ்த்துக்கள்...!!!//

தங்கள் வ்ருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி மனோ சார்


சம்பத் குமார் said...
Nov 26, 2011, 2:38:00 PM

@ RAMVI said...

//பதில்கள் அருமை.
உங்க நீண்ட கால கனவு நினைவாக வாழ்த்துக்கள்.//

வாழ்த்திற்க்கு மிக்க நன்றி சகோ..


சம்பத் குமார் said...
Nov 26, 2011, 2:39:00 PM

@ திண்டுக்கல் தனபாலன் said...

//சந்தோசமான பதிவு! பயங்கர டேட்டா இல்லை. பாசமான டேட்டா. வாழ்த்துக்கள் நண்பரே!//

தொடர் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Nov 26, 2011, 2:40:00 PM

@ ராஜா MVS said...

//பதிவு அருமை...

வாசிக்கவும், யோசிக்கவும்...

தங்களின் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகள்... நண்பரே...//

உங்களின் ஆதரவோடு என் பயணங்கள் தொடரும் நண்பரே


Lakshmi said...
Nov 26, 2011, 5:38:00 PM

நல்லா சொல்லி இருக்கீங்க பயோடேட்டா.


சம்பத் குமார் said...
Nov 26, 2011, 5:50:00 PM

@ Lakshmi said...

//நல்லா சொல்லி இருக்கீங்க பயோடேட்டா.//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி திரு.லட்சுமி அம்மா


!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Nov 28, 2011, 1:31:00 PM

வாழ்த்துக்கள்,
என்னை அழைத்ததற்கு நன்றி..


மாய உலகம் said...
Nov 28, 2011, 5:04:00 PM

அருமையா பயோ டேட்டாவ சொல்லிருக்கீங்க.. வாழ்த்துக்கள்...


மாய உலகம் said...
Nov 28, 2011, 5:07:00 PM

டிஸ்கி : போலி முகங்களை வைத்து பதிவுலகில் வலம் வர நாம் ஒன்றும் பெயரிலிகள் அல்லவே..அந்த குறைகளை களைவதற்கே இந்த சிறிய முயற்சி.கைகொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்...//

பெயர்களிலும், பயோடேட்டாக்களிலும் ஏன் போட்டாக்களில் கூட உண்மை தான் வரும் என்று எந்த நம்பிக்கையில் இந்தா டிஸ்கி நண்பரே!


தமிழ்கிழம் said...
Nov 28, 2011, 10:33:00 PM

// MLA – ல 49 ஒவுக்கு //

ஓ நம்மாள் தான் நீங்களும்....


சம்பத் குமார் said...
Nov 29, 2011, 11:04:00 AM

@ !* வேடந்தாங்கல் - கருன் *! said...

//வாழ்த்துக்கள்,
என்னை அழைத்ததற்கு நன்றி..//

வணக்கம் சார்

அழைப்பினை ஏற்றமைக்கு மிக்க நன்றி


சம்பத் குமார் said...
Nov 29, 2011, 11:07:00 AM

@ மாய உலகம் said...
//அருமையா பயோ டேட்டாவ சொல்லிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

பெயர்களிலும், பயோடேட்டாக்களிலும் ஏன் போட்டாக்களில் கூட உண்மை தான் வரும் என்று எந்த நம்பிக்கையில் இந்தா டிஸ்கி நண்பரே!//

வணக்கம் நண்பரே..இது முழுவதுமாக அவரவர் சொந்த விருப்பு வெறுப்புகளை ப்திவிடும் சிறு முயற்சிதான்.கணடிப்பாய் தவறேதும் நிகழாது என்று நம்புவோமாக..

நம்பிக்கையுடன்
சம்பத்குமார்


சம்பத் குமார் said...
Nov 29, 2011, 11:08:00 AM

@ தமிழ்கிழம் said...

//// MLA – ல 49 ஒவுக்கு //

ஓ நம்மாள் தான் நீங்களும்....////

வாங்க நண்பரே..

அப்ப ஒன்னு சேர்ந்துட்டோம்னு நினைக்கிறேன்..

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி


சசிகுமார் said...
Nov 30, 2011, 11:43:00 AM

தங்களை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டே.... மிக்க நன்றி அண்ணே...


சம்பத் குமார் said...
Nov 30, 2011, 2:44:00 PM

@சசிகுமார் said...

//தங்களை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டே.... மிக்க நன்றி அண்ணே...//

வாங்க சசி அண்ணா..

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி..

வரவேற்புடன்
சம்பத்குமார்


கலைநிலா said...
Dec 3, 2011, 12:05:00 AM

சாதனை : நல்ல மகனாகவும்,தந்தையாகவுமிருப்பது.

வித்தியாசமான அறிமுகம். அடுத்து
உங்கள வலைப்பக்கம் இளமையா இருக்கு
அடிக்கடி வருகிறேன்.
தொடர்ந்து எழுதி வாருங்கள்


சம்பத் குமார் said...
Dec 3, 2011, 2:44:00 PM

@ கலைநிலா said...

//சாதனை : நல்ல மகனாகவும்,தந்தையாகவுமிருப்பது.

வித்தியாசமான அறிமுகம். அடுத்து
உங்கள வலைப்பக்கம் இளமையா இருக்கு
அடிக்கடி வருகிறேன்.
தொடர்ந்து எழுதி வாருங்கள்//

வாங்க சகோ..

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி

மீண்டும் வருக..


;