November 10, 2011

விருந்தோம்பல் வீடு
இன்னும் கொஞ்ச நேரத்தில் 
எல்லாம் நடக்கும்... 

இறுகிய முகங்கள் 
சாவி கொடுத்தாற்போல கலகலக்கும்....!

 இனிப்புப் காரமும்...
அறை முழுவதும் விரவிக் கிடக்கும் ....!

குரோட்டன் செடிகள் பற்றியும்
அழவைத்த அழுகாச்சி சீரியல்கள் பற்றியும்... மாலைநேரச் சினிமா பற்றியும்
புதியதாய் வாங்கிய சேலை பற்றியும்...

ஆர்வமாய்க் கருத்துப் பரிமாறல்கள் நிகழும் ....!

இடையிடையே...
அடங்காத பிள்ளையின் மீதும் 
சீற்றம் பாயும்...!

அத்தைகளுக்கு..
வாய்த்த கணவன்களின் போக்கும் 

நகைகள் முழுவதையும் 
உடலில் அடுக்கிக் கொள்ளும் 
ஒன்றுவிட்ட பெரியப்பா பெண்ணின் 
சகிக்கமுடியாத ரசனையும்
விமர்சிக்கப்படும்....!சென்ற வாரத்துப் 
புதுதின்பண்டத்தின் செய்முறையும் 
இடையில் புகுந்து விளையாடும் ....!

அனிச்ச மலர்களை 
முகம் திரியாமல் வழியனுப்பியவுடன் 
பொருத்திக் கொண்ட முகத்திரைகளைப் 

பத்திரமாய் வைத்துச் 
சுருண்டு கொள்ளும் வீடு....!
நண்பர்களே வீடு கவிதை படித்திருந்த்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்


30 Responses to “விருந்தோம்பல் வீடு”

K.s.s.Rajh said...
Nov 11, 2011, 6:41:00 AM

முதல் வரவு


K.s.s.Rajh said...
Nov 11, 2011, 6:42:00 AM

அருமையான கவிவரிகளை உள்ளடக்கிய விருந்தோம்பல் வீடு


jayaram thinagarapandian said...
Nov 11, 2011, 10:44:00 AM

கவிதை மிகவும் அருமை நண்பரே


suryajeeva said...
Nov 11, 2011, 11:50:00 AM

home
house

இரண்டுக்கும் வித்தியாசப் படுத்தும் ஆங்கிலம் போல், தமிழில் உண்டா.. நமது கலாச்சாரம் அதற்க்கு வழி கொடுக்கவில்லையோ என்ற எண்ணமும் வருகிறது


ராஜா MVS said...
Nov 11, 2011, 12:05:00 PM

கவிதை அருமை... நண்பரே


!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Nov 11, 2011, 12:22:00 PM

அனிச்ச மலர்களை
முகம் திரியாமல் வழியனுப்பியவுடன்
பொருத்திக் கொண்ட முகத்திரைகளைப் // நல்ல வார்த்தை பிரயோகம்..

அழகிய கவிதை..


Lakshmi said...
Nov 11, 2011, 12:53:00 PM

விருந்தோம்பல் வீட்டுக்குள் என்னல்லாம் அடங்கி இருக்கு. நல்ல கற்பனை. நல்லா இருக்கு.


கோகுல் said...
Nov 11, 2011, 1:21:00 PM

home
house

இரண்டுக்கும் வித்தியாசப் படுத்தும் ஆங்கிலம் போல், தமிழில் உண்டா.. நமது கலாச்சாரம் அதற்க்கு வழி கொடுக்கவில்லையோ என்ற எண்ணமும் வருகிறது

நண்பரே இல்லம்-வீடு என தமிழில் அந்த வகை என நினைக்கிறேன் சரியா?


கோகுல் said...
Nov 11, 2011, 1:24:00 PM

வணக்கம் நண்பரே!

விருந்தோம்பலை மறந்து
உறவுகளை சுமைகளாக பார்க்கும் சில
மனிதர்கள் வாழும் வீடுகள்
நினைவில் நிச்சயம் நிற்காது என நினைக்கிறேன்!


காட்டான் said...
Nov 11, 2011, 2:00:00 PM

வணக்கம் சம்பத்
விருந்தோம்பல் பற்றிய உங்கள் கவிதை அருமை இப்போது உறவுக்காரங்க ஏன் வருகிறார்கள்ன்னுதானே நினைக்கிறார்கள்.

உறவுக்காரர்கள் யார் யார் என்று தெரியாமல் வளர்ந்து வரும் சமூகத்தை கண் முன் பார்க்கிறேன்..!!


சேக்காளி said...
Nov 11, 2011, 3:39:00 PM

தெரிந்து கொள்ளவும், தெரியப் படுத்திக்கொள்ளவும் தான் விருந்தோம்பலோ?


ஆமினா said...
Nov 11, 2011, 4:28:00 PM

விருந்தாளிகள் வந்தால் மட்டுமே கலகலக்கும் முகங்களும் வீடுகளும்

அருமை சகோ

வாழ்த்துக்கள்


ரெவெரி said...
Nov 11, 2011, 7:34:00 PM

நல்லாயிருந்தது...ரசித்தேன்...


தமிழ்வாசி - Prakash said...
Nov 11, 2011, 9:09:00 PM

கவி வரிகள் நல்லா இருக்கு நண்பா...


நம்ம தளத்தில்:
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11


அம்பலத்தார் said...
Nov 12, 2011, 2:16:00 PM

நம்மவர் சுபாவத்தை அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.


அம்பலத்தார் said...
Nov 12, 2011, 2:20:00 PM

குழந்தைத்தொழிலாளர் பற்றிய விழிப்புணர்வையூட்டும் விதத்தில் அருமையான வரிகள்


சம்பத் குமார் said...
Nov 12, 2011, 11:47:00 PM

K.s.s.Rajh said... 1

//அருமையான கவிவரிகளை உள்ளடக்கிய விருந்தோம்பல் வீடு//

முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Nov 12, 2011, 11:48:00 PM

@ jayaram thinagarapandian said... 3

//கவிதை மிகவும் அருமை நண்பரே//

மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Nov 12, 2011, 11:54:00 PM

@ suryajeeva said... 4

//home
house

இரண்டுக்கும் வித்தியாசப் படுத்தும் ஆங்கிலம் போல், தமிழில் உண்டா.. நமது கலாச்சாரம் அதற்க்கு வழி கொடுக்கவில்லையோ என்ற எண்ணமும் வருகிறது//இன்றைய சூழலில் வளரிளம் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கலாச்சாரம் கற்றுக்கொடுக்காமலிருப்பது கூட ஓர் காரணமாயிருக்கலாம்


சம்பத் குமார் said...
Nov 12, 2011, 11:55:00 PM

@ ராஜா MVS said... 5

//கவிதை அருமை... நண்பரே//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Nov 12, 2011, 11:56:00 PM

@ !* வேடந்தாங்கல் - கருன் *! said... 6

//அனிச்ச மலர்களை
முகம் திரியாமல் வழியனுப்பியவுடன்
பொருத்திக் கொண்ட முகத்திரைகளைப் // நல்ல வார்த்தை பிரயோகம்..

அழகிய கவிதை.. //

மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Nov 12, 2011, 11:57:00 PM

@ Lakshmi said... 7

//விருந்தோம்பல் வீட்டுக்குள் என்னல்லாம் அடங்கி இருக்கு. நல்ல கற்பனை. நல்லா இருக்கு.//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி அம்மா


சம்பத் குமார் said...
Nov 12, 2011, 11:58:00 PM

கோகுல் said... 9

//வணக்கம் நண்பரே!

விருந்தோம்பலை மறந்து
உறவுகளை சுமைகளாக பார்க்கும் சில
மனிதர்கள் வாழும் வீடுகள்
நினைவில் நிச்சயம் நிற்காது என நினைக்கிறேன்!//

வாங்க கோகுல் உங்களின் கூற்று முற்றிலும் உண்மையே


சம்பத் குமார் said...
Nov 13, 2011, 12:01:00 AM

@ காட்டான் said... 10

//வணக்கம் சம்பத்
விருந்தோம்பல் பற்றிய உங்கள் கவிதை அருமை இப்போது உறவுக்காரங்க ஏன் வருகிறார்கள்ன்னுதானே நினைக்கிறார்கள்.

உறவுக்காரர்கள் யார் யார் என்று தெரியாமல் வளர்ந்து வரும் சமூகத்தை கண் முன் பார்க்கிறேன்..!!//

மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் இந்த விருந்தோம்பல்கள் சிறுக சிறுக மறைந்து கொண்டிருப்பது கவலையளிக்கும் விஷயம் தான்


சம்பத் குமார் said...
Nov 13, 2011, 12:02:00 AM

@ சேக்காளி said... 11

//தெரிந்து கொள்ளவும், தெரியப் படுத்திக்கொள்ளவும் தான் விருந்தோம்பலோ?//

உண்மைதான் நண்பரே..நம்மில் பலருக்கு வரன் அமைவது கூட இவ்வழியில் தானே..


சம்பத் குமார் said...
Nov 13, 2011, 12:03:00 AM

@ ஆமினா said... 12

//விருந்தாளிகள் வந்தால் மட்டுமே கலகலக்கும் முகங்களும் வீடுகளும்

அருமை சகோ

வாழ்த்துக்கள்//

வாங்க சகோ வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி


சம்பத் குமார் said...
Nov 13, 2011, 12:05:00 AM

@ ரெவெரி said... 13

//நல்லாயிருந்தது...ரசித்தேன்...//

மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Nov 13, 2011, 12:06:00 AM

@ தமிழ்வாசி - Prakash said... 14

//கவி வரிகள் நல்லா இருக்கு நண்பா...//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Nov 13, 2011, 12:08:00 AM

@ அம்பலத்தார் said... 15

//நம்மவர் சுபாவத்தை அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


நம்பிக்கைபாண்டியன் said...
Nov 15, 2011, 2:33:00 AM

இறுகிய முகங்கள்
சாவி கொடுத்தாற்போல கலகலக்கும்....!

இதற்காகவாவது நடக்கவேண்டும் விருந்துகள்!

நல்ல கவிதை!


;