November 23, 2011
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி
வணக்கம் நண்பர்களே ! நேற்றைய பதிவினை சுவாசித்து வாழ்த்திய அனைத்து நல் இதயங்களுக்கு மிக்க நன்றி.இன்றைய பதிவில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் காட்டும் ஆசிரியர் பணி பற்றிய ஓர் விரிவான அலசல். பொதுவாகவே எதையும் கற்றுத்தருவதை விட கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதுதான் பெற்றோர்களின் கடமை. ஆனால் பல பெற்றோர்கள் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை சிதைத்து எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்.கற்றுக்கொள்வது என்பது இயற்கையிலேயே குழந்தைகளுக்கு உள்ள இயல்பு. அதனால்தான் குழந்தைகள் கண்ணில்படும் எல்லாவற்றையும் எடுக்க முயற்சிக்கிறது. நாற்காலியைப்பார்த்தால் இழுக்க முயற்சிக்கிறது. செல்போனைப் பார்த்தால் பேச முயற்சிக் கிறது. புத்தகதை கையில் எடுத்தால் கிழிக்க் முயர்ச்சிக்கிறது ஆனால் இதெல்லாம் நடக்கும்போது நாம் சொல்லும் ஒரே வார்த்தை செய்யாதே. ஆக கற்கும் ஆர்வத்தை நாம்தான் எடுக்காதே, இழுக்காதே, தொடாதே என சொல்லி சொல்லி குறைத்து விடுகிறோம்.
குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. அவர்களுக்கு நாம்தான் எல்லாவற்றையும் கற்றுத் தரவேண்டும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஓரிரு நாள் அமைதியாக குழந்தைகளை வேடிக்கை பாருங்கள். அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள் இருக்கிறது என்பதை நிச்சயமாய் உணர்வீர்கள்.வீட்டில் குழந்தையை கவனித்துப் பார்த்தால், எதன் மீதாவது ஏறி இடறி விழுந்து அடிபட்டிருந்தாலும் மறுபடியும் அதன்மீது ஏறுவார்கள். சேரை இழுத்துப்போட்டு எதையோ எடுக்க ஏறுகிறார்கள். இடறி விழுந்து கையில் கட்டுப்போடும்படி ஆகிவிட்டது என்றாலும் கட்டுப்போட்ட நிலையிலேயே ஏறுவார்கள். ‘நம்மால் ஏறமுடியாது. ஏறினால் விழுந்து விடுவோம்’ என்று அவர்கள் நினைப்பதில்லை. அந்த வயதில் ‘முடியும்’ என்பதை மட்டும்தான் நினைக்கிறார்கள்.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது இந்த உலகத்திற்கு வரும் போது ஒவ்வொரு குழந்தையும் ‘முடியும்’ என்ற வெற்றிச் சிந்தனையுடன்தான் வருகிறது.ஆனால் வளர்ந்த பிறகு ஒன்றிரண்டு தேர்வுகளில் பெயிலாகி விடுகிறது. ‘எனக்கு படிப்பு வராது. என்னால் படிக்க முடியாது’ என்கிறது. இன்னும் கொஞ்சம் வளர்ந்து விடுகிறது. இப்போது பிஸினஸ் செய்கிறது . பிஸினஸில் தோல்வி வருகிறது. ‘எனக்கு பிஸினஸ் லாயக்கில்லை. என்னால் பிஸினஸ் செய்ய முடியாது’ என்கிறது.முடியும் என்ற ஒரே சிந்தனை மட்டுமே கொண்டிருந்த அவர்கள், வளர்ந்த பிறகு ‘முடியாது’ என்று மாறியது எப்படி ? இதற்கு காரணம் நாம் செய்கிற ஆசிரியர் வேலைதானே. அதிலும் முடியும் என்பதை விட முடியாது என்பதைத்தான் அதிகம் குழந்தை களுக்கு சொல்லிக்கொடுக்கிறோம்.
எப்போது பார்த்தாலும் எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். ‘அங்க போகாதே. அப்படி ஆயிடும். இதைச் செய்யாதே இப்படி ஆயிடும்.மேலும் படித்தால்தான் எதிர்காலம் என்ற பாடத்தை நாம் நம் குழந்தைகளுக்கு கதறக்கதற தினமும் கற்றுத் தருகிறோம். அதற்கு பதில் பல்வேறு வேலைக்கு செல்கிறவர்களை சந்திக்கச் செய்யுங்கள். அவர்கள் செய்யும் வேலை, அவர்களின் வாழ்க்கை தரம் ஆகியவற்றை காண்பித்து இதிலிருந்து என்ன புரிகிறது என்று கேளுங்கள்.என்ன படித்திருக்கிறார்களோ, அதற்கேற்ற வேலை. அதற்கேற்ற சம்பளம் அதற்கேற்ற வாழ்க்கை முறைதான் அமைகிறது . எனவே நாமும் நன்றாக படித்து அறிவில் சிறந்து வாழ்வில் உயர வேண்டும் என்று அவர்களாக பாடம் கற்பார்கள். எப்போது பார்த்தாலும் எதையாவது கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்காதீர்கள். குழந்தைகளுக்கு ஒவ்வொன்றையும் கற்றுத் தரும்போதும் அதை அவர்களாக கற்பதிலிருந்து நாம் தடை செய்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். பல பெற்றோர்கள் வீட்டில் அப்பா அம்மாவாக இருப்பதில்லை. டீச்சராக மாறி எப்போதும் எதைப்பற்றியாவது பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு குட்டிக்கதை
பள்ளி முடிந்து வந்த தன் குழந்தையை உட்கார வைத்து வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார் அம்மா. ஒவ்வொன்றையுமே ஒரு முறைக்கு இரு முறை சொல்ல வேண்டி இருந்தது. இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால் அம்மா சீக்கிரம் சலிப்படைந்து கத்த ஆரம்பித்தார். “ஒவ்வொன்னையும் எத்தனை தடவ சொல்லித் தர்றது. ஒரு தடவ சொன்னா புரிஞ்சுக்கிறதுல்ல.. உன் வயசுல உள்ள குழந்தைங்க எல்லாம் தானா உட்கார்ந்து ஹோம் ஒர்க் செய்யுதுங்க..” என்று துவங்கிய அர்ச்சனை இரவு உணவு வரை நீண்டது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. புதிதாக வாங்கியிருந்த இரண்டு சக்கர வாகனத்தை எப்படி ஓட்ட வேண்டும் என்று குழந்தையின் அம்மாவுக்கு அவனது அப்பா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். வண்டியை ஸ்டார்ட் செய்து காண்பித்து, ‘இப்போது நீ செய்’ என்று அம்மா கைக்கு வண்டி வரும். ஏறி உட்கார்ந்து பட்டனை அழுத்த, வண்டி ஸ்டார்ட் ஆவதற்கான சத்தம் எல்லாம் செய்து கடைசியில் போக்கு காட்டி அணைந்து விடும். அப்பா சலித்து விட்டார். கத்த ஆரம்பித்தார்.. “ஒவ்வொன்னையும் எத்தனை தடவ சொல்லித்தர்றது. ஒரு தடவ சொன்னா புரிஞ்சுக்கிறதுல்ல..”
இதை பார்த்துக் கொண்டிருந்த குழந்தை குறுக்கிட்டு, “திட்டாம சொல்லிக் கொடுங்கப்பா.. திட்டிக்கிட்டே சொல்லிக்கொடுத்தா பதட்டத்திலேயே தப்புத்தப்பாதான் வரும். பாவம்பா அம்மா. ப்ளீஸ் திட்டாம சொல்லிக் கொடுங்ப்பா.” என்று கூறியது.குழந்தை இப்படிச்சொன்னதும் வண்டியிலிருந்து தாவிக்குதித்த அம்மா குழந்தையை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சொன்னார், “இனிமேல் நான் உனக்கு கற்றுக் கொடுக்கும் டீச்சர் இல்லை என்று.
நீங்களும், உங்கள் குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ளத்தயாராக இருந்தால் உங்கள் குழந்தைகளும் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும். நீங்கள் ஆசிரியராக வேண்டிய அவசியமே இருக்காது.
நன்றி அறிவிப்பு :
உறவுகளே பதிவு எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை,வருங்காலத்திற்காக சேகரித்த முத்துக்களின் எண்ணிக்கை நூறாக உயர்ந்துள்ளது.இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழ்பேரண்ட்ஸ் வலைத்தளத்தினையும் அங்கீகரத்து ஆதரவளித்த,ஆதரவளித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!
உங்களது ஆதரவோடு எனது பயணம் தொடரும் நண்பர்களே…மறக்காமல் பதிவினைப் பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்
|
|
Tweet |
Related Posts: ,
,
,
,
Subscribe to:
Post Comments (Atom)









35 Responses to “வேண்டாம் இந்த ஆசிரியர் பணி”
Nov 23, 2011, 8:11:00 PM
கற்கும் ஆர்வத்தை நாம்தான் எடுக்காதே, இழுக்காதே, தொடாதே என சொல்லி சொல்லி குறைத்து விடுகிறோம்.
குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. அவர்களுக்கு நாம்தான் எல்லாவற்றையும் கற்றுத் தரவேண்டும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஓரிரு நாள் அமைதியாக குழந்தைகளை வேடிக்கை பாருங்கள். அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள் இருக்கிறது என்பதை நிச்சயமாய் உணர்வீர்கள்./
அருமையான பயனுள்ள பகிர்வு.. பாராட்டுக்கள்..
Nov 23, 2011, 8:12:00 PM
முத்துக்களின் எண்ணிக்கை நூறாக உயர்ந்துள்ளது./
முத்தான் நூறுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.. வாழ்க வளமுடன்..
Nov 23, 2011, 8:20:00 PM
இந்தகாலக்குழந்தைகள் ரொம்பவே ஸ்மார்ட்தான் உங்க இடுகை ரொம்ப அருமை வாழ்த்துகள் சதம் கண்டதற்கு!
Nov 23, 2011, 8:26:00 PM
நல்ல தகவல்களும், மிக அருமையான குட்டி கதையும்...
பலருடைய தவறை திருத்தும் பதிவு...
நூறுக்கு வாழ்த்துகள்... நண்பரே...
Nov 23, 2011, 9:18:00 PM
உண்மை... நான் என் குழந்தைகளிடம் பல கேள்விகள் கேட்பேன்.. சிந்திக்க வைப்பேன். பிறகு மெதுவாக அவர்களுக்கு புரிய வைப்பேன்..
சிந்திக்க வைத்த பிறகு அவர்களிடம் அசாதரணமான பதில்கள் வருவதுண்டு..
மலை மீது என் மேகம் சூழ்ந்து இருக்கிறது?
இதற்க்கு என் பெண் சொன்ன பதில்..
அதுக்கு கால் வலிச்சிருக்கும்... அதான் ரெஸ்ட் எடுக்குது...
Nov 23, 2011, 9:29:00 PM
குட்டிக் கதையுடன், குழைந்தைகளை பற்றிய பகிர்வுடன் வலம் வரும் இந்த நூறாவது பதிவு போல இன்னும் இன்னும் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்......
Nov 23, 2011, 9:37:00 PM
வாழ்த்துக்கள் நண்பரே....
நீங்க எங்க குடும்பத்துல ஒருத்தராகிட்டிங்க...புரியலையா?
எங்க குடும்பமே படிக்கும் பதிவு உங்களுடையது..
குழந்தைகள் இருக்கும் நண்பர்களை சந்திக்கும் போது
உங்க பதிவு முகவரியைத்தான் கொடுக்கின்றேன்
Nov 23, 2011, 10:11:00 PM
எப்போது பார்த்தாலும் எதையாவது கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்காதீர்கள். குழந்தைகளுக்கு ஒவ்வொன்றையும் கற்றுத் தரும்போதும் அதை அவர்களாக கற்பதிலிருந்து நாம் தடை செய்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். பல பெற்றோர்கள் வீட்டில் அப்பா அம்மாவாக இருப்பதில்லை. டீச்சராக மாறி எப்போதும் எதைப்பற்றியாவது பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்./////
பெற்றோர்கள் ஆசிரியர்களாக இல்லாமல் பிள்ளைகளிடம் கற்றுகொள்ளலாம் என்கிறீர்கள்..
ஆம். ஒரு சில விஷயங்களை அவர்களிடமும் கற்றுக்கொள்ளலாம்..
**********
////நீங்களும், உங்கள் குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ளத்தயாராக இருந்தால் உங்கள் குழந்தைகளும் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும். நீங்கள் ஆசிரியராக வேண்டிய அவசியமே இருக்காது.////
நிச்சயமாய் நண்பரே...!!
*********
100-வது பதிவுக்கு வாழ்த்துகள்..!! மேலும் பல நூறு பதிவுகள் காண அன்புடன் வாழ்த்தும் உங்கள் தங்கம்பழனி. பகிர்வுக்கு நன்றி நண்பரே..!!
Nov 23, 2011, 10:52:00 PM
பொதுவாக குழந்தைகளிடம் நல்ல நண்பன் போல் பழகிய அனுபவத்தில் சொல்கிறேன். ஆசீரியாரக இல்லாமல் நண்பனாக பழகி பாருங்கள் பல ஆரோக்கியமான விஷயங்களை அவர்களிடமிருந்து கண்டிப்பாக நாம் கற்றுக் கொள்ள முடியும்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே
Nov 23, 2011, 11:19:00 PM
நூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே..
சரியாகச் சொன்னீர்கள்..
குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்ள தயாராக இருந்தால் அவர்களும் நம்மிடம் இருந்து கற்றுக்கொள்வார்கள்...
Nov 23, 2011, 11:27:00 PM
குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கிறது.
தூக்கிப்போட்டாலும் சிரிக்கும்.நாம் பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையில்,காரணம் இல்லாமல் அழாது ஆனால் காரணமே இல்லாவிடிலும் சிரிக்கும்.
இது போல பல விஷயங்கள் உள்ளன.
திணிப்பதை விட அவர்களாக அனுபவத்தில் கற்பது அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை அளிக்கும்.வழிகாட்டுவது நமது கடமையாக இருக்கட்டும்.பகிர்வுக்கு நன்றி நண்பரே!
Nov 23, 2011, 11:28:00 PM
இன்னும் பல நூறு முத்துக்கள் காண ஆவலுடலன்.....
Nov 24, 2011, 7:12:00 AM
நூறுக்கு வாழ்த்துகள் மாப்ள!
Nov 24, 2011, 7:49:00 AM
சிறப்பான ஒரு பதிவு அதுவும் நூறாவது பதிவு வாழ்த்துக்கள் பாஸ் தொடர்ந்து அசத்துங்க
Nov 24, 2011, 8:45:00 AM
அருமையான கருத்து சம்பத்குமார்.
வாழ்த்துக்கள் 100 பதிவுகளுக்கு.அருமையான பணியினை தொடருங்கள்.
Nov 24, 2011, 10:09:00 AM
உண்மை தான் நண்பரே! குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது...
Nov 24, 2011, 11:50:00 AM
நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
அருமையான பதிவு.
Nov 24, 2011, 10:30:00 PM
@ இராஜராஜேஸ்வரி said... 2
//முத்துக்களின் எண்ணிக்கை நூறாக உயர்ந்துள்ளது./
முத்தான் நூறுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.. வாழ்க வளமுடன்..//
முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களே
Nov 24, 2011, 10:31:00 PM
@ ஷைலஜா said... 3
//இந்தகாலக்குழந்தைகள் ரொம்பவே ஸ்மார்ட்தான் உங்க இடுகை ரொம்ப அருமை வாழ்த்துகள் சதம் கண்டதற்கு!//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி சகோ..
Nov 24, 2011, 10:32:00 PM
@ ராஜா MVS said... 4
//நல்ல தகவல்களும், மிக அருமையான குட்டி கதையும்...
பலருடைய தவறை திருத்தும் பதிவு...
நூறுக்கு வாழ்த்துகள்... நண்பரே...//
மிக்க நன்றி நண்பரே..
Nov 24, 2011, 10:34:00 PM
@ suryajeeva said... 5
//உண்மை... நான் என் குழந்தைகளிடம் பல கேள்விகள் கேட்பேன்.. சிந்திக்க வைப்பேன். பிறகு மெதுவாக அவர்களுக்கு புரிய வைப்பேன்..
சிந்திக்க வைத்த பிறகு அவர்களிடம் அசாதரணமான பதில்கள் வருவதுண்டு..
மலை மீது என் மேகம் சூழ்ந்து இருக்கிறது?
இதற்க்கு என் பெண் சொன்ன பதில்..
அதுக்கு கால் வலிச்சிருக்கும்... அதான் ரெஸ்ட் எடுக்குது...//
உண்மைதான் நண்பரே..அவர்களின் பதில்கள் ஒவ்வொன்றும் ஆச்சிரியப்படவே வைக்கும்
Nov 24, 2011, 10:35:00 PM
@ தமிழ்வாசி பிரகாஷ் said... 6
//குட்டிக் கதையுடன், குழைந்தைகளை பற்றிய பகிர்வுடன் வலம் வரும் இந்த நூறாவது பதிவு போல இன்னும் இன்னும் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்......//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Nov 24, 2011, 10:38:00 PM
@ veedu said... 7
//வாழ்த்துக்கள் நண்பரே....
நீங்க எங்க குடும்பத்துல ஒருத்தராகிட்டிங்க...புரியலையா?
எங்க குடும்பமே படிக்கும் பதிவு உங்களுடையது..
குழந்தைகள் இருக்கும் நண்பர்களை சந்திக்கும் போது
உங்க பதிவு முகவரியைத்தான் கொடுக்கின்றேன்//
தங்களின் ஆதரவிற்க்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே
Nov 24, 2011, 10:47:00 PM
தங்கம்பழனி said... 8
//100-வது பதிவுக்கு வாழ்த்துகள்..!! மேலும் பல நூறு பதிவுகள் காண அன்புடன் வாழ்த்தும் உங்கள் தங்கம்பழனி. பகிர்வுக்கு நன்றி நண்பரே..!!//
வாருங்கள் நண்பரே.வருகைக்கும் ஆழ்ந்த கருத்திற்க்கும் மிக்க நன்றி
Nov 24, 2011, 10:50:00 PM
ஹைதர் அலி said... 9
Nov 23, 2011 10:52:00 PM
பொதுவாக குழந்தைகளிடம் நல்ல நண்பன் போல் பழகிய அனுபவத்தில் சொல்கிறேன். ஆசீரியாரக இல்லாமல் நண்பனாக பழகி பாருங்கள் பல ஆரோக்கியமான விஷயங்களை அவர்களிடமிருந்து கண்டிப்பாக நாம் கற்றுக் கொள்ள முடியும்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே//
நிதர்சனமான உண்மைதான் நண்பரே..வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி
Nov 24, 2011, 10:54:00 PM
@ மகேந்திரன் said... 10
//நூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே..
சரியாகச் சொன்னீர்கள்..
குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்ள தயாராக இருந்தால் அவர்களும் நம்மிடம் இருந்து கற்றுக்கொள்வார்கள்...//
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
Nov 24, 2011, 10:58:00 PM
@ கோகுல் said... 11
//குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கிறது.
தூக்கிப்போட்டாலும் சிரிக்கும்.நாம் பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையில்,காரணம் இல்லாமல் அழாது ஆனால் காரணமே இல்லாவிடிலும் சிரிக்கும்.
இது போல பல விஷயங்கள் உள்ளன.
திணிப்பதை விட அவர்களாக அனுபவத்தில் கற்பது அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை அளிக்கும்.வழிகாட்டுவது நமது கடமையாக இருக்கட்டும்.பகிர்வுக்கு நன்றி நண்பரே!
வாங்க நண்பர் கோகுல் அவர்களே..
உண்மைதான் நண்பரே.ஆசிரியர் பணிவிடுத்து வழிகாட்டியாவோம்.வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Nov 24, 2011, 10:59:00 PM
@ விக்கியுலகம் said... 13
//நூறுக்கு வாழ்த்துகள் மாப்ள!//
என் மனமார்ந்த நன்றி மாம்ஸ்
Nov 24, 2011, 11:01:00 PM
@ K.s.s.Rajh said... 14
//சிறப்பான ஒரு பதிவு அதுவும் நூறாவது பதிவு வாழ்த்துக்கள் பாஸ் தொடர்ந்து அசத்துங்க//
மிக்க நன்றி நண்பரே உங்கள்து ஆதரவோடு எனது பயணங்கள் தொடரும்
Nov 24, 2011, 11:02:00 PM
@ RAMVI said... 15
//அருமையான கருத்து சம்பத்குமார்.
வாழ்த்துக்கள் 100 பதிவுகளுக்கு.அருமையான பணியினை தொடருங்கள்.//
மிக்க நன்றி சகோ..
Nov 24, 2011, 11:03:00 PM
@ மாய உலகம் said... 16
//உண்மை தான் நண்பரே! குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Nov 24, 2011, 11:05:00 PM
@ Rathnavel said... 17
//நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
அருமையான பதிவு.//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி ஐயா
Dec 3, 2011, 10:24:00 AM
தலைப்பில் அதிர்ச்சியாகி தான் பதிவை வாசிக்க துவங்கினேன். தரமான பதிவு. தலை வணங்குகிறேன் தோழரே.
Dec 3, 2011, 10:25:00 AM
எனக்கு Account இருக்கும் எல்லாவற்றிலும் ஒட்டு போட்டு விட்டேன்.
Dec 3, 2011, 2:47:00 PM
@ ரசிகன் said...
//தலைப்பில் அதிர்ச்சியாகி தான் பதிவை வாசிக்க துவங்கினேன். தரமான பதிவு. தலை வணங்குகிறேன் தோழரே.//
தங்களின் தொடர் ஆதரவிற்க்கு என்றும் நன்றியுள்ளவனாய் இருப்பேன் நண்பரே..
உங்களைப்போன்ற நல்லுள்ளங்களின் ஆதரவோடு எனது பயணங்கள் தொடரும்..
Post a Comment