November 12, 2011

மழலை நாட்கள்

வயல்வெளியின் ஆட்டுக்குட்டிகள், 
பொதிக் கழுதைகளாய் செல்லுகின்றன 
முதுகுப்பையோடு......!

நான்கு சுவர்கள் 
ஒருகதவு ஒரு சன்னல் 
வரிசையாய் மரப்பெஞ்சுகள் ...!

கைதிபார்த்து மிரளும் 
துப்பாக்கி போல்..
கரும்பலகைக் கிறுக்கல்களைச் 
சுட்டிக்காட்ட எடுத்த ஸ்கேல்… 

சிறைச்சாலையின் மாதிரி வடிவம் 
வெளிச்சமும் காற்றும் தவிர்த்து...! 


பூதங்கள் குடுகுடுப்பைக்காரன் 
பூச்சாண்டி வரிசையில் 
பிரம்பு பிடித்த முகமும்....! 

அம்மாவின் அணைப்பிலிருந்து 
நீங்கிய நினைவில் அழுதும் 
வந்தவுடனே தூங்கியும் 
கனிவாய்க் குறுகுறுப்பாய் நோக்கியும் ...

சிரமப்பட்டு உட்கார்ந்திருக்கும் 
மலர்களைப் பார்க்கும் போது 
வலிக்கத் தொடங்கும் நெஞ்சு… 

பேர்சொல்லி அழைத்ததும் 
மருண்டு விழித்து உடல் நெளித்து 
இமையோரம் திரளும் ஈரம் ..


காதிதக் கப்பலைக்கூடத் 
தூக்க முடியாத கைகளில் 
புத்தக பாரங்கள்.. !

பிஞ்சு விரல்களில் எந்நேரமும் பென்சில் ...

ABCD,  அஆஇஈ,  123 என 
வதங்கி ஒலித்துத் தேயும் மெல்ல..


மழலை நாட்கள்…!
பதிவினை சுவாசித்துக் கொண்டிருக்கும் உறவுகள் அனைவருக்கும் அவர்தம் குழந்தைகளுக்கும் தமிழ் பேரண்ட்ஸ் தளத்தின் 2011 ம் வருடத்தின் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்....

வாழ்த்துக்களுடன்...

சம்பத்குமார்


நண்பர்களே கவிதை பிடித்திருந்தால் தங்களது எண்ணங்களை பகிர்ந்த்து விட்டுச் செல்லுங்கள்...

24 Responses to “மழலை நாட்கள்”

suryajeeva said...
Nov 13, 2011, 10:10:00 AM

எழுத்துக்களால் மழலை பூக்களை எரிக்கும் ஆட்களுக்கு, சுட்டெரிக்கும் வார்த்தைகள் அருமை


தங்கம்பழனி said...
Nov 13, 2011, 10:33:00 AM

மழைகளைப் பற்றிய கவிதை அருமை..!!

எனக்குப் பிடித்த வரிகள்
///
காதிதக் கப்பலைக்கூடத்
தூக்க முடியாத கைகளில்
புத்தக பாரங்கள்.. !///

வாழ்த்துக்கள் நண்பரே..!!


தங்கம்பழனி said...
Nov 13, 2011, 10:35:00 AM

எனது வலையில் இன்று ஒரு சுய முன்னேற்றப் பதிவு:
காளான் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!


ஹைதர் அலி said...
Nov 13, 2011, 10:37:00 AM

பகிர்வுக்கு நன்றி சகோதரரே

இங்கிலாந்து போன்ற குளிர் பிரதேச நாடுகளில் காலில் ஷு மாட்டிக்கொண்டு
குளிர்க் காற்று உள்ளே போகமால் இருக்க காலர் பட்டனை இறுக்கமாக பூட்டி அதற்குமேல் டை எனும் துணி கயிற்றால் இறுக்கமாக கட்டிக் கொள்வது அவர்களுடைய சூழல் சார்ந்த தேவை ஆனால் வெயில் பிரதேசங்களில் வாழும் நாம் கொளுத்தும் வெய்யிலில் கணத்த ஷு மாட்டி இறுக்கமாக டை கட்டி ஆஸ்ப்பாட்டஸ் ஷீட் மேயப்பட்ட ஸ்கூலில் நாம் பிள்ளைகளை உட்கர வைக்கிறோமே இது எந்த வகையான தேவை? இதுதான் நாகரீகமா?
இது காலனித்துவ அடிமைப் புத்தியை எங்கு சொல்வது வேதனை சகோ


Vetha.Elangathilakam said...
Nov 13, 2011, 11:28:00 AM

அருமையான கவிதை நற் கருத்துகளுடன். அதை விட படங்கள் அருமை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com


!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Nov 13, 2011, 12:35:00 PM

அருமையான கவிதை..


திரும்ப வருமோ மழலை நாட்கள்?


ராஜா MVS said...
Nov 13, 2011, 1:25:00 PM

இன்றைய மழலையின் நிலை எண்ணி சற்று சிந்திக்க வைக்கிறது...

கவிதை அருமை...
குழந்தைகள் தின வாழ்த்துகள்... நண்பரே...


K.s.s.Rajh said...
Nov 13, 2011, 1:50:00 PM

அருமையான கவிதை


koodal bala said...
Nov 13, 2011, 2:11:00 PM

குழந்தைகள் நிலைமை பாவமாகத்தான் உள்ளது ...கவிதை அருமை !


Lakshmi said...
Nov 13, 2011, 5:38:00 PM

நல்லகவிதை மழலைப்பருவம் திரும்ப வராதே?


jayaram thinagarapandian said...
Nov 13, 2011, 9:33:00 PM

//சிரமப்பட்டு உட்கார்ந்திருக்கும்
மலர்களைப் பார்க்கும் போது
வலிக்கத் தொடங்கும் நெஞ்சு…//
நிச்சயம் நண்பரே ..
அருமையான கவிதை
வாழ்த்துக்கள்


சம்பத் குமார் said...
Nov 13, 2011, 10:35:00 PM

@ suryajeeva said... 1

//எழுத்துக்களால் மழலை பூக்களை எரிக்கும் ஆட்களுக்கு, சுட்டெரிக்கும் வார்த்தைகள் அருமை //

முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Nov 13, 2011, 10:36:00 PM

தங்கம்பழனி said... 2


//// எனக்குப் பிடித்த வரிகள்
///
காதிதக் கப்பலைக்கூடத்
தூக்க முடியாத கைகளில்
புத்தக பாரங்கள்.. !///

வாழ்த்துக்கள் நண்பரே..!!////

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Nov 13, 2011, 10:39:00 PM

@ ஹைதர் அலி said... 4

//பகிர்வுக்கு நன்றி சகோதரரே

இங்கிலாந்து போன்ற குளிர் பிரதேச நாடுகளில் காலில் ஷு மாட்டிக்கொண்டு
குளிர்க் காற்று உள்ளே போகமால் இருக்க காலர் பட்டனை இறுக்கமாக பூட்டி அதற்குமேல் டை எனும் துணி கயிற்றால் இறுக்கமாக கட்டிக் கொள்வது அவர்களுடைய சூழல் சார்ந்த தேவை ஆனால் வெயில் பிரதேசங்களில் வாழும் நாம் கொளுத்தும் வெய்யிலில் கணத்த ஷு மாட்டி இறுக்கமாக டை கட்டி ஆஸ்ப்பாட்டஸ் ஷீட் மேயப்பட்ட ஸ்கூலில் நாம் பிள்ளைகளை உட்கர வைக்கிறோமே இது எந்த வகையான தேவை? இதுதான் நாகரீகமா?
இது காலனித்துவ அடிமைப் புத்தியை எங்கு சொல்வது வேதனை சகோ //

நிதர்சன உண்மை சகோ..அதிலும் அங்கு நடக்கும் கட்டண கொள்ளை படு பயங்கரமாக உள்ளது


சம்பத் குமார் said...
Nov 13, 2011, 10:40:00 PM

Vetha.Elangathilakam said... 5
Nov 13, 2011 11:28:00 AM
அருமையான கவிதை நற் கருத்துகளுடன். அதை விட படங்கள் அருமை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி சகோ..


சம்பத் குமார் said...
Nov 13, 2011, 10:43:00 PM

@ !* வேடந்தாங்கல் - கருன் *! said... 6

//அருமையான கவிதை..
திரும்ப வருமோ மழலை நாட்கள்?//

வாய்ப்பு இல்லைதான் நண்பரே..எனினும் அடுத்த தலைமுறை பார்த்து சந்தோஷப்பட வேண்டியததுதான்..


சம்பத் குமார் said...
Nov 13, 2011, 10:45:00 PM

@ ராஜா MVS said... 7

//இன்றைய மழலையின் நிலை எண்ணி சற்று சிந்திக்க வைக்கிறது...

கவிதை அருமை...
குழந்தைகள் தின வாழ்த்துகள்... நண்பரே...//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Nov 13, 2011, 10:46:00 PM

@ K.s.s.Rajh said... 8

//அருமையான கவிதை//

மிக்க நன்றி சகோ..


சம்பத் குமார் said...
Nov 13, 2011, 10:48:00 PM

@ koodal bala said... 9

//குழந்தைகள் நிலைமை பாவமாகத்தான் உள்ளது ...கவிதை அருமை !//

வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Nov 13, 2011, 10:50:00 PM

@ Lakshmi said... 10

//நல்லகவிதை மழலைப்பருவம் திரும்ப வராதே?//

மிக்க நன்றி லட்சுமி அம்மா அவர்களே


சம்பத் குமார் said...
Nov 13, 2011, 10:52:00 PM

@ jayaram thinagarapandian said... 11

//////சிரமப்பட்டு உட்கார்ந்திருக்கும்
மலர்களைப் பார்க்கும் போது
வலிக்கத் தொடங்கும் நெஞ்சு…//
நிச்சயம் நண்பரே ..
அருமையான கவிதை
வாழ்த்துக்கள்/////

வாருங்கள் நண்பரே..வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி


விச்சு said...
Nov 14, 2011, 6:36:00 AM

இன்றைய பள்ளிகள் இப்படித்தான்.நன்றாக சுட்டிக்காட்டியுள்ளிகள்.
காதிதக் கப்பலைக்கூடத்
தூக்க முடியாத கைகளில்
புத்தக பாரங்கள்.. ! - சாட்டையடி வார்த்தை.


மகேந்திரன் said...
Nov 16, 2011, 5:11:00 PM

முனைவர்.இரா.குணசீலன் அவர்களால்
தங்களின் அறிமுகம் இன்று எனக்கு
வந்து படித்தேன் பேரின்பம் கொண்டேன்..

அழகிய குழந்தைகள் வலைத்தளம்...
இன்று முதல் தொடர்கிறேன் நண்பரே...

இன்றைய குழந்தைகளின்
பள்ளிச் சூழலை அப்படியே படம் பிடித்து
காண்பித்துவிட்டீர்கள் நண்பரே..
புத்தகப் பொதி சுமப்பதிலேயே பாதி
சோர்ந்து விடுகிறார்கள்...
அருமை அருமை..


சம்பத் குமார் said...
Nov 16, 2011, 9:08:00 PM

@ மகேந்திரன் said... 23

///முனைவர்.இரா.குணசீலன் அவர்களால்
தங்களின் அறிமுகம் இன்று எனக்கு
வந்து படித்தேன் பேரின்பம் கொண்டேன்..

அழகிய குழந்தைகள் வலைத்தளம்...
இன்று முதல் தொடர்கிறேன் நண்பரே...

இன்றைய குழந்தைகளின்
பள்ளிச் சூழலை அப்படியே படம் பிடித்து
காண்பித்துவிட்டீர்கள் நண்பரே..
புத்தகப் பொதி சுமப்பதிலேயே பாதி
சோர்ந்து விடுகிறார்கள்...
அருமை அருமை.. ///

வணக்கம் நண்பரே..தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்க்கும், தளத்தில் இணைந்தமைக்கும் மிக்க நன்றி..

இன்று முதல் தொடங்கட்டும் நட்பின் பயணங்கள் இனியதாய்...

நட்புடன்
சம்பத்குமார்


;