November 4, 2011
கைத்தடி மனிதர்கள்
சுவரின் மூலையில்
பூனையின் முனகல்...
சன்னலில் வீசும்
சாரல்..
முகக்குழிகளைத்
தழுவிச் செல்லும்
தென்றல்..
ஓயாத கடிகார நடுங்கல்..
தனிமை சூழ்ந்த
என் அறை...
இது..
காலையாக இருக்கலாம்
பகலாக இருக்கலாம்
அந்தியாக இருக்கலாம்
பிறர் சொல்வதுபோல்...
காற்றில் அலையும்
கரம்..
நிச்சயமற்ற தடுமாறும்
நடை..
சாலை நகர்வுகளில் எனக்கான ஒதுங்கல்கள்....
இரங்கல் வார்த்தைகள்...
கவனிக்காமல் மோதும்
மனிதர்கள்....
ஒலிகளும் ஸ்பரிசங்களுமே நிறைக்கின்றன
என் வாழ்வை...!
ஏனோ இரண்டை மட்டும்தான்
உணர முடிகிறது
என்னால்...
தடி நடுங்கும்
இடத்தில் நடை..!
மிதக்கும் இடத்தில்
வெளி…!
சொல்லுங்கள் நண்பர்களே..
சூரியனும் நிலவும்
எப்படி இருக்கும்…?
நண்பர்களே கவிதை பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்..
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)








28 Responses to “கைத்தடி மனிதர்கள்”
Nov 4, 2011, 9:24:00 AM
நல்ல கவிதை !
Nov 4, 2011, 10:49:00 AM
கவனிக்காமல் மோதும் மனிதர்கள்...
//
யார் கைத்தடி மனிதர்கள் என்ற கேள்வி எழுகிறது!
கடைசி படம் கச்சிதம்!
Nov 4, 2011, 11:28:00 AM
பார்வையற்றவர்கள் பற்றிய வரிகளில் இதுவரை எனது மனதில் நிறைந்தது ஒன்றே ஒன்றுதான்...அது ''எனது பகல் பொழுதுகள் உங்கள் இரவைவிட இருளானவை''... ஆனால் இப்பொழுது உங்களின் மனதைத்தொடும் வரிகளும் பார்வையற்றவர்கள் மீதான பார்வையாக எனது மனதில் அப்படியே பதிந்து போனது... நல்ல படைப்பு...
Nov 4, 2011, 1:37:00 PM
பார்வையற்றவரின் பார்வையில்.(இப்படி சொல்லலாமா?)
அருமை.
Nov 4, 2011, 1:43:00 PM
நிறங்களை எப்படி வர்ணிப்பது என்று தான் யோசித்திருக்கிறேன், ஆனால் சூரியன் நிலவு.. என்று எங்கோ சென்று விட்டீர்கள்
Nov 4, 2011, 2:17:00 PM
ஆம் நானும் முதலில் வயதானவர்களுக்குரிய கவைதையாகவே நினைத்தேன் ((முகக்குழிகளைத்
தழுவிச் செல்லும் தென்றல்..)))
பிறகுதான் புரிந்தது பார்வையற்றவர்களுக்கான கவிதை என்று, அழகிய வரிகளுடன் சிறப்பாக அமைந்திருக்கிறது கவிதை!
Nov 4, 2011, 2:19:00 PM
அருமை...
Nov 4, 2011, 2:21:00 PM
அருமை
Nov 4, 2011, 6:19:00 PM
கதிர் மதியம் போல் முகத்தான் என்கிறாள் ஆண்டாள் இறைவனை. பார்வை தெரியாதவர்கள் கடவுளுக்கு சமம்.சூட்சமம் அவர்களுக்கு அதிகம். அகப்பார்வை அதிகம் கொண்ட அவர்களுக்கு விழிகளே நிலவும் சூரியனும் என எண்ண வேண்டும்.சிந்திக்கவைக்கிற கவிதை இது சகோதரரே!
Nov 4, 2011, 6:52:00 PM
அருமை...அருமை...அருமை...
Nov 4, 2011, 8:48:00 PM
@ koodal bala said... 1
//நல்ல கவிதை !//
முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Nov 4, 2011, 8:51:00 PM
@ கோகுல் said... 2
////கவனிக்காமல் மோதும் மனிதர்கள்...
//
யார் கைத்தடி மனிதர்கள் என்ற கேள்வி எழுகிறது!
கடைசி படம் கச்சிதம்!////
மிக்க நன்றி கோகுல்..
Nov 4, 2011, 8:52:00 PM
@ சாய்ரோஸ் said... 3
//பார்வையற்றவர்கள் பற்றிய வரிகளில் இதுவரை எனது மனதில் நிறைந்தது ஒன்றே ஒன்றுதான்...அது ''எனது பகல் பொழுதுகள் உங்கள் இரவைவிட இருளானவை''... ஆனால் இப்பொழுது உங்களின் மனதைத்தொடும் வரிகளும் பார்வையற்றவர்கள் மீதான பார்வையாக எனது மனதில் அப்படியே பதிந்து போனது... நல்ல படைப்பு...//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி சகோதரம்..
Nov 4, 2011, 8:54:00 PM
@ RAMVI said... 4
//பார்வையற்றவரின் பார்வையில்.(இப்படி சொல்லலாமா?)
அருமை.//
வாங்க சகோ.. வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி
Nov 4, 2011, 8:56:00 PM
@ suryajeeva said... 5
//நிறங்களை எப்படி வர்ணிப்பது என்று தான் யோசித்திருக்கிறேன், ஆனால் சூரியன் நிலவு.. என்று எங்கோ சென்று விட்டீர்கள்//
வணக்கம் நண்பரே..மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும்
Nov 4, 2011, 8:57:00 PM
@ நம்பிக்கைபாண்டியன் said... 6
//ஆம் நானும் முதலில் வயதானவர்களுக்குரிய கவைதையாகவே நினைத்தேன் ((முகக்குழிகளைத்
தழுவிச் செல்லும் தென்றல்..)))
பிறகுதான் புரிந்தது பார்வையற்றவர்களுக்கான கவிதை என்று, அழகிய வரிகளுடன் சிறப்பாக அமைந்திருக்கிறது கவிதை!//
மிக்க நன்றி நண்பரே
Nov 4, 2011, 8:58:00 PM
@ ராஜா MVS said... 7
//அருமை...//
மிக்க நன்றி திரு.ராஜா அவர்களே
Nov 4, 2011, 8:59:00 PM
@ K.s.s.Rajh said... 8
//அருமை//
மிக்க நன்றி திரு.K.s.s.Rajh அவர்களே
Nov 4, 2011, 9:02:00 PM
@ ஷைலஜா said... 9
//கதிர் மதியம் போல் முகத்தான் என்கிறாள் ஆண்டாள் இறைவனை. பார்வை தெரியாதவர்கள் கடவுளுக்கு சமம்.சூட்சமம் அவர்களுக்கு அதிகம். அகப்பார்வை அதிகம் கொண்ட அவர்களுக்கு விழிகளே நிலவும் சூரியனும் என எண்ண வேண்டும்.சிந்திக்கவைக்கிற கவிதை இது சகோதரரே!//
என் தேடலுக்கான விடையளித்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ..
நன்றியுடன்
சம்பத்குமார்
Nov 4, 2011, 9:04:00 PM
@ ரெவெரி said... 10
//அருமை...அருமை...அருமை...//
மிக்க நன்றி நண்பர் திரு ரெவெரி அவர்களே
Nov 5, 2011, 12:14:00 AM
கவிதை மிகவும் அருமை ..
கைதடி மனிதர்களின் பார்வையில்
பார்த்து எழுதிய அருமையான கவிதை
Nov 5, 2011, 1:09:00 AM
படிக்கும் போது, நானும் கண்ணை கட்டிக்கொண்டு இருட்டில் நடப்பது போல் ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்...! மிகப்பெரிய ஊனம் கண்பார்ர்வையின்மைதான்.. அதை உங்கள் கவிதையின் மூலம் தெளிவாக சொல்லியுள்ளீர்கள்...! வாழ்த்துக்கள் நண்பரே...!!
Nov 5, 2011, 6:38:00 AM
கண்தானம் செய்யுங்கள்...பார்வை இழந்த ஒருவர் இந்தக்கவிதையை நிச்சயம் ஒருநாள் படிக்கக்கூடும்....
Nov 5, 2011, 8:22:00 AM
@ jayaram thinagarapandian said... 21
//கவிதை மிகவும் அருமை ..
கைதடி மனிதர்களின் பார்வையில்
பார்த்து எழுதிய அருமையான கவிதை//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ
Nov 5, 2011, 8:23:00 AM
@ *anishj* said... 22
//படிக்கும் போது, நானும் கண்ணை கட்டிக்கொண்டு இருட்டில் நடப்பது போல் ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்...! மிகப்பெரிய ஊனம் கண்பார்ர்வையின்மைதான்.. அதை உங்கள் கவிதையின் மூலம் தெளிவாக சொல்லியுள்ளீர்கள்...! வாழ்த்துக்கள் நண்பரே...!!//
முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Nov 5, 2011, 8:25:00 AM
@ செவிலியன் said... 23
//கண்தானம் செய்யுங்கள்...பார்வை இழந்த ஒருவர் இந்தக்கவிதையை நிச்சயம் ஒருநாள் படிக்கக்கூடும்....//
உண்மைதான் சகோ..உணர்தியதிற்க்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்
மீண்டும் வருக..
Nov 5, 2011, 2:48:00 PM
nice poem. i second sevilian s opinion. ultimately a poem leads us to action. thanks for initiating us.
Nov 5, 2011, 3:06:00 PM
@ dr.tj vadivukkarasi said... 27
//nice poem. i second sevilian s opinion. ultimately a poem leads us to action. thanks for initiating us.//
Thank You very Much Doctor..
regards
sambathkumar
Post a Comment