November 14, 2011

வளரிளம் குழந்தைகளின் வழிகாட்டிவணக்கம் நண்பர்களே ! அனைவருக்கும் மனமார்ந்த குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.இன்றைய பதிவில் வளரிளம் குழந்தைகளின் வழிகாட்டியாவது பற்றி அலசுவோம்.ஐந்து வயதுமுதல் பதிமூன்று வயது வரை இருப்பவர்களை வளரிளம் குழந்தைகள் என்கிறோம் இந்த பருவத்திற்கு உட்பட்டவர்கள் குழந்தையாகவும் இல்லாமல் வயது வந்தவர்களாகவும் இல்லாத நிலை. அதனால் அவர்களுக்குள் தாங்கள் யார் என்று அடையாளம் காண்பதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நெருக்கடி அவர்களும் வளர் இளம் பருவத்தில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழும். மளமளவென்று உடலின் உயரம் கூடும். பேச்சிலும் செயலிலும் குழந்தைத்தனம் குறையும். இதுவரை குடும்பத்திற்குள்ளேயே வலம் வந்தவர்கள் இனி வீட்டையும் தாண்டி வெளி உலகத்திற்கு வரத்துடிப்பார்கள். 

தங்களுக்கென சொந்தமான ஒரு தன் உணர்வை தேடிக் கொண்டிருப்பார்கள். அக்கம் பக்கத்தில் உள்ள சம வயதினரோடு நட்புறவை வளர்க்க ஆசைப்படுவார்கள். புதிய நண்பர்களின் வரவு அவர்களுக்கு பேரானந்தத்தைக் கொடுக்கும். அவர்களது வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்கள் தெரிய வரும். தாங்கள் குளிப்பதிலிருந்து தலைமுடியை சீவுவது வரை பிறரின் உதவியின்றி தாங்களே செய்து கொள்வார்கள். பவுடரை முகத்தில் அப்பிக் கொள்வார்கள். தங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பிறரின் உதவிகளை நாடுவதை தவிர்ப்பார்கள். மொத்தத்தில் தங்களுக்கு தாங்களே ஒரு சுய காரியதரிசியாக இருக்க விரும்புவார்கள். இந்த வயதில்தான் இவர்கள் மிக கவனமாக கையாளப்பட வேண்டியவர்கள். 

இந்த பருவத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் ஆலோசனைகள் அதிகமாக தேவைப்படுவது பெற்றோர்களுக்குத்தான். இப்பருவத்தினருடன் பேசுவதை விட அதிகமாக அவர்களின் பேச்சை கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்களுக்கு மனித வாழ்க்கையில் சந்தோஷங்களையும் சோகங்களையும் சொல்லி கொடுக்க வேண்டும். அப்போது தான் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவம் அவர்களுக்கு ஏற்பட வழிவகுக்கும். இப்பருவத்தினரோடு பழகும் போது எதிர்மறைவான பேச்சையும், நடவடிக்கைகளையும் பெற்றோர்கள் கவனத்தோடு தவிர்த்து விட வேண்டும். அதுவே ஆரோக்கியமான மனநோக்கு இவ்வயதினருக்கு ஏற்பட துணையிருக்கும். இதுமட்டுமல்ல குடும்பத்தில் ஜனநாயக சூழ்நிலையை உருவாக்கி குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவெடுப்பதில் இவர்களும் பங்கு கொள்ளுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

இது அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க பயன்படும். அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க விடுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. வீட்டு விசேஷங்கள், சுற்றுவட்டார சமுதாய நிகழ்ச்சிகள் என்று வெளி உலக நிகழ்வுகளில் அவர்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பொறுப்புணர்ச்சி மேலோங்க இது உதவும். இந்த பருவத்தினர் வீட்டில் இருக்காமல் வெயிலிலேயே சுற்றித் திரிகிறார்கள் என்று புலம்புவதை விட்டு விட்டு அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் பெற்றோர்கள் அவர்களோடு தரமான முறையில் அதிக நேரத்தை முதலீடு செய்ய வேண்டும். 


குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் அவர்களோடு சேர்ந்து உற்சாகமாக உறவாடி ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும். நாமும் இந்த பருவத்தில் இப்படித்தான் இருந்தோம் என்று பெற்றோர்கள் உணர வேண்டும். இந்த வயதில் குழந்தைகள் பெற்றோர்களிடம் எதிர்பார்ப்பது இரண்டே இரண்டுதான். ஒன்று இதுவரை குழந்தையாக இருந்த போது கிடைத்து வந்த அன்பும், அரவணைப்பும், இரண்டாவது இதுவரை அவர்களுக்கு கிடைக்காத சுதந்திரமும், தன்னிச்சையாக செயல்படும் வாய்ப்பும் தான். அதை தயங்காமல் வழங்குவது தான் நாம் செய்ய வேண்டிய முதல் கடமை..


இன்றைய நன்னாளில் குழந்தைகளின் நல்ல வழிகாட்டியாவோம்.அவர்களை கொண்டாடுவோம்..

முக்கிய அறிவிப்பு :

நண்பர்களே ! பதிவுலகில் அடுத்த கட்ட முயற்சியாக நான் கற்றதையும், பெற்றதையும், ஆங்கிலத்திலும் பகிர்ந்து கொள்ள Cute Parents  என்ற ஆங்கில வலைத்தளம் உங்களின் ஆசியோடு துவங்கப்பட்டுள்ளது.விருப்பமுள்ள நண்பர்கள் அந்த தளத்திலும் இணைந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றேன்.தளத்திற்க்குச் செல்ல கீழுள்ள படத்தில் க்ளிக் செய்யுங்கள்.
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்


16 Responses to “வளரிளம் குழந்தைகளின் வழிகாட்டி”

விக்கியுலகம் said...
Nov 14, 2011, 7:42:00 AM

பகிர்வுக்கு நன்றிங்கோ!


!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Nov 14, 2011, 7:51:00 AM

வீட்டு விசேஷங்கள், சுற்றுவட்டார சமுதாய நிகழ்ச்சிகள் என்று வெளி உலக நிகழ்வுகளில் அவர்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பொறுப்புணர்ச்சி மேலோங்க இது உதவும்.// நல்ல ஆலோசனைகள்..

பகிர்வுக்கு நன்றி.


!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Nov 14, 2011, 7:52:00 AM

Cute Parents என்ற ஆங்கில வலைத்தளம் உங்களின் ஆசியோடு துவங்கப்பட்டுள்ளது.// வாழ்த்துக்கள்..


இராஜராஜேஸ்வரி said...
Nov 14, 2011, 8:21:00 AM

இன்றைய நன்னாளில் குழந்தைகளின் நல்ல வழிகாட்டியாவோம்.அவர்களை கொண்டாடுவோம்..

குழந்தைகள் தின வாழ்த்துகள்.


தங்கம்பழனி said...
Nov 14, 2011, 9:58:00 AM

புதிய ஆங்கிலதளம் தொடங்கியதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!!

குழந்தைகள் தின வாழ்த்துகள்..!!


தங்கம்பழனி said...
Nov 14, 2011, 10:01:00 AM

எனது வலையில் இன்று ஒரு சுய முன்னேற்றப் பதிவு:
காளான் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!


K.s.s.Rajh said...
Nov 14, 2011, 12:10:00 PM

குழந்தைகள் தினத்தில் சிறப்பான ஒரு பதிவு
உங்கள் ஆங்கில வலைத்தளம் புகழ் பெற வாழ்த்துக்கள் பாஸ்


ராஜா MVS said...
Nov 14, 2011, 3:00:00 PM

குழந்தைகள் தின வாழ்த்துகள்...


சம்பத் குமார் said...
Nov 14, 2011, 9:30:00 PM

@ விக்கியுலகம் said... 1

//பகிர்வுக்கு நன்றிங்கோ!//

முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி மாம்ஸ்


சம்பத் குமார் said...
Nov 14, 2011, 9:32:00 PM

@ !* வேடந்தாங்கல் - கருன் *! said... 2

//வீட்டு விசேஷங்கள், சுற்றுவட்டார சமுதாய நிகழ்ச்சிகள் என்று வெளி உலக நிகழ்வுகளில் அவர்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பொறுப்புணர்ச்சி மேலோங்க இது உதவும்.// நல்ல ஆலோசனைகள்..

பகிர்வுக்கு நன்றி.//

தங்கள் வருகைக்கும் தளத்தில் இணைந்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Nov 14, 2011, 9:33:00 PM

@ இராஜராஜேஸ்வரி said... 4

//இன்றைய நன்னாளில் குழந்தைகளின் நல்ல வழிகாட்டியாவோம்.அவர்களை கொண்டாடுவோம்..
குழந்தைகள் தின வாழ்த்துகள்.//

மிக்க நன்றி சகோ..வாழ்த்துக்கள் தங்களுக்கும்..


சம்பத் குமார் said...
Nov 14, 2011, 9:34:00 PM

@ தங்கம்பழனி said... 5

//புதிய ஆங்கிலதளம் தொடங்கியதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!!

குழந்தைகள் தின வாழ்த்துகள்..!!//

வருகைக்கும் தளத்தில் இணைந்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Nov 14, 2011, 9:35:00 PM

@ K.s.s.Rajh said... 7

//குழந்தைகள் தினத்தில் சிறப்பான ஒரு பதிவு
உங்கள் ஆங்கில வலைத்தளம் புகழ் பெற வாழ்த்துக்கள் பாஸ்//

மிக்க நன்றி சகோ..


சம்பத் குமார் said...
Nov 14, 2011, 9:36:00 PM

@ ராஜா MVS said... 8

//குழந்தைகள் தின வாழ்த்துகள்...//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே


M.R said...
Nov 15, 2011, 7:39:00 PM

நாமும் இந்த பருவத்தில் இப்படித்தான் இருந்தோம் என்று பெற்றோர்கள் உணர வேண்டும்//


அழகிய கருத்துள்ள பதிவு நண்பரே ,பகிர்வுக்கு நன்றி


சம்பத் குமார் said...
Nov 16, 2011, 9:31:00 PM

@ M.R said... 15

//நாமும் இந்த பருவத்தில் இப்படித்தான் இருந்தோம் என்று பெற்றோர்கள் உணர வேண்டும்//
அழகிய கருத்துள்ள பதிவு நண்பரே ,பகிர்வுக்கு நன்றி//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


;