November 3, 2011

ஆட்டோகிராஃப் புத்தகம்
ஒருகணம் குழம்பிப் போனேன்
திடீரென்று நீட்டியபோது...

இப்போது எதற்காக இது....?

முகவரியை எழுதும்போது
மெல்லிய சோகம் தாக்க
தவறிழைத்தது போலொரு குற்ற உணர்வு..
இவ்வளவு உள்ளங்களை
எப்படி உணராமல் இருந்தேன்
இத்தனை நாட்களும்....?

எப்படி சிலரின் வட்டத்துக்குள்ளேயெ
சிக்கிக் கிடந்தேன்....?நீங்கள் விளையாட்டாய் காட்டிய கோபம்..
சில அர்த்தமற்ற பேச்சுக்கள்...
வேண்டுமென்றே கூறிய கிண்டல்கள்...
நான் புன்னகைத்தபோது பார்க்காமல் போனமை…


வருந்தியிருக்கிறேன் இவைகளை எண்ணி...


உங்கள் சிரிப்பொலிகளும் காலடியோசைகளும்
பொங்கி வழிந்த காரிடார்கள்..
கவனங்கள் ஒருமுகப்படுத்த்ப்பட்ட வகுப்பறைகள்..


இவைகளே நினைவுச் சின்னமாய்....
வரும் காலங்களில்...
கிரகித்துக் கொண்ட தூண்களிடமும்,
வகுப்பறைகளிடமும்தான்
போய் நிற்க வேண்டுமோ....?


உங்களின் சிரிப்பொலிகளை மீண்டும் கேட்க..?


அச்சமாயிருக்கிறது நண்பர்களே !
நானும் ஓருநாள் போயாக வேண்டும்
இந்த இனிமைகளை விட்டு
என்பதை நினைக்கையில்…!


வணக்கம் நண்பர்களே ! இரண்டாமாண்டு முடிக்கையில் இறுதியாண்டு மாணவர்களின் பிரிவினால் முளைத்த ஆட்டோகிராப் புத்தகம் பிடித்திருந்தால், தங்களது கல்லூரி கால நினைவுகளை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு கருத்துக்களையும் வாக்குகளையும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்..46 Responses to “ஆட்டோகிராஃப் புத்தகம்”

இராஜராஜேஸ்வரி said...
Nov 3, 2011, 8:14:00 AM

உங்களின் சிரிப்பொலிகளை மீண்டும் கேட்க..?


அச்சமாயிருக்கிறது நண்பர்களே !
நானும் ஓருநாள் போயாக வேண்டும்
இந்த இனிமைகளை விட்டு
என்பதை நினைக்கையில்…!/

nice..


veedu said...
Nov 3, 2011, 8:19:00 AM

பழைய ஆட்டோகிராப் பார்க்கும் போது நினைவுகள் பின்னோக்கி செல்கிறது இந்த கவிதை படிக்கும்போதும்.....


தங்கம்பழனி said...
Nov 3, 2011, 8:27:00 AM

கல்லூரிக் கால நினைவுகளை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது இந்த ஆட்டோகிராஃப் கவிதை!!

பகிர்ந்தமைக்கு நன்றி சம்பத்குமார்..!!


RAMVI said...
Nov 3, 2011, 8:36:00 AM

என்னுடைய கல்லூரி நினைவுகளை தூண்டி விட்டது,உங்க பதிவு.நன்றி பகிர்வுக்கு.


K.s.s.Rajh said...
Nov 3, 2011, 8:42:00 AM

எனது நினைவுகளை மீட்டிவிட்டீர்கள் நன்றி பாஸ்


கவி அழகன் said...
Nov 3, 2011, 8:46:00 AM

நண்பர்களே உங்கள் நம்பர்களை தாருங்கள் என்றும்
ஆடோகிராப் கொடுத்தும் நினைவை சுமந்த அந்த இனிய நாட்கள்
கவிதையாய்


Abdul Basith said...
Nov 3, 2011, 9:51:00 AM

கல்லூரி கால நினைவுகளை மீண்டும் அசைபோட வைத்தது தங்கள் கவிதை. பகிர்வுக்கு நன்றி நண்பரே!


suryajeeva said...
Nov 3, 2011, 11:11:00 AM

உண்மை, கனமான கணங்கள் தான் அவை..


Cpede News said...
Nov 3, 2011, 11:53:00 AM

நண்பர்களே உங்கள் பதிவுகளை மீண்டும் அனுப்புங்கள். முதலில் அனுப்பிய மின்னஞ்சல் முகவரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

//விவரங்கள் விரைவில்.. ///

இந்த தளம் புதிதாக ஆரம்பம் செய்ய உள்ளதால் சில முன்னோட்டங்களை நாங்கள் செய்து பார்க்க வேண்டியுள்ளது. எனவே தான் முழுமையான திட்ட விளக்கங்களை பிரசுரிக்கவில்லை. விரைவில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு.. ...


Cpede News said...
Nov 3, 2011, 11:56:00 AM

அருமையான வரிகள் .. தகவல் கொடுக்க வந்து தகவல் அறிந்தோம்.. மிக்க மகிழ்ச்சி..


காட்டான் said...
Nov 3, 2011, 12:22:00 PM

வணக்கம் சம்பத்..,
பள்ளிக்கால நினைவுகளை மீட்டிருக்கிறீர்கள் பிரிவுகள் எங்கும் துயரமே..


koodal bala said...
Nov 3, 2011, 12:23:00 PM

எனக்கு வாழ்க்கையிலே மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள் கல்லூரியில்தான் கிடைத்தது ...மீண்டும் நினைவுக்கு வந்தது ...


கவிதை வீதி... // சௌந்தர் // said...
Nov 3, 2011, 1:14:00 PM

உண்மையில் யாருக்கும் திரும்பாத நாட்கள் அவை...

பசுமையான நினைவுகளை பக்கங்களிலாவது பதித்து வைக்க வேண்டும்..


ஜ.ரா.ரமேஷ் பாபு said...
Nov 3, 2011, 1:26:00 PM

பழைய நினைவுகளை கிளறியது உங்கள் கவிதை வாழ்த்துக்கள்


ஆமினா said...
Nov 3, 2011, 4:11:00 PM

பள்ளிகால நினைவுகள் கண்களில் வரவைத்துவிட்டது


ரெவெரி said...
Nov 3, 2011, 5:38:00 PM

நம் உலகமே அழிந்து போகிறதோ என்று எண்ணிய அந்த காலங்களை நினைவு படுத்திவிட்டீர்கள்...
அருமை சம்பத்...


கூகிள்சிறி said...
Nov 3, 2011, 6:10:00 PM

எனது தளத்தில் நான் சோம்பலாக எழுதிய பதிவு இலங்கையில் GCE O-L, GCE A-L, University மாணவர்களுக்கு உதவ ஒரு தளம்-பரீட்சை வழிகாட்டி


ராஜா MVS said...
Nov 3, 2011, 6:48:00 PM

நண்பர்களை பிரியும் போது ஏற்ப்படும் வலி... கவிதையை படித்து முடிக்கையில் எங்கள் மனதிலும்....


M.R said...
Nov 3, 2011, 7:55:00 PM

ஆமாம் நண்பரே ,அது ஒரு வலி ,நானும் அனுபவித்தவன் தானே


Rathnavel said...
Nov 3, 2011, 9:00:00 PM

அருமை


சம்பத்குமார் said...
Nov 3, 2011, 10:04:00 PM

@ இராஜராஜேஸ்வரி said... 1


//உங்களின் சிரிப்பொலிகளை மீண்டும் கேட்க..?
nice..//

முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ..


சம்பத்குமார் said...
Nov 3, 2011, 10:07:00 PM

veedu said... 2

//பழைய ஆட்டோகிராப் பார்க்கும் போது நினைவுகள் பின்னோக்கி செல்கிறது இந்த கவிதை படிக்கும்போதும்.....//

நினைவுகளை திரும்பி பார்க்கும் ஆனந்தமே அலாதிதான் நண்பரே..

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..


சம்பத்குமார் said...
Nov 3, 2011, 10:08:00 PM

@ தங்கம்பழனி said... 3

//கல்லூரிக் கால நினைவுகளை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது இந்த ஆட்டோகிராஃப் கவிதை!!

பகிர்ந்தமைக்கு நன்றி சம்பத்குமார்..!!//

மிக்க நன்றி நண்பரே


சம்பத்குமார் said...
Nov 3, 2011, 10:11:00 PM

@ RAMVI said... 4

//என்னுடைய கல்லூரி நினைவுகளை தூண்டி விட்டது,உங்க பதிவு.நன்றி பகிர்வுக்கு.//

வாங்க சகோ..

ஆனந்தமான பருவங்கள் என்றுமே மனதை விட்டு அகழ்வதில்லை


சம்பத்குமார் said...
Nov 3, 2011, 10:18:00 PM

@ K.s.s.Rajh said... 5

//எனது நினைவுகளை மீட்டிவிட்டீர்கள் நன்றி பாஸ்//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ


சம்பத்குமார் said...
Nov 3, 2011, 10:19:00 PM

@ கவி அழகன் said... 6

//நண்பர்களே உங்கள் நம்பர்களை தாருங்கள் என்றும்
ஆடோகிராப் கொடுத்தும் நினைவை சுமந்த அந்த இனிய நாட்கள்
கவிதையாய்//

நன்றி சகோ


Cpede News said...
Nov 3, 2011, 10:45:00 PM

சகோ மெயில் முகவரியை திரும்ப சரிபாருங்கள்.

நீங்கள் சரியாக அனுப்பும்பட்சத்தில் அடுத்த நிமிடமே அது தன்னிச்சையாக பதிவேற்றம் பெற்றுவிடும் படியே தளம் அமைக்கப் பட்டுள்ளது. நண்பர்கள் சிலர் பதிவு செய்ய துவங்கி விட்டனர்.

சகோவின் பதிவை பெரிதும் எதிர்பார்க்கின்றோம்..... அசத்துங்கள்..


சம்பத்குமார் said...
Nov 3, 2011, 11:59:00 PM

@ Abdul Basith said... 7

//கல்லூரி கால நினைவுகளை மீண்டும் அசைபோட வைத்தது தங்கள் கவிதை. பகிர்வுக்கு நன்றி நண்பரே!//

மிக்க நன்றி நண்பா


சம்பத்குமார் said...
Nov 4, 2011, 12:00:00 AM

@ suryajeeva said... 8

//உண்மை, கனமான கணங்கள் தான் அவை..//

வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே


சம்பத்குமார் said...
Nov 4, 2011, 12:02:00 AM

@ Cpede News said... 10

//அருமையான வரிகள் .. தகவல் கொடுக்க வந்து தகவல் அறிந்தோம்.. மிக்க மகிழ்ச்சி..//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி சகோ


சம்பத்குமார் said...
Nov 4, 2011, 12:04:00 AM

@ காட்டான் said... 11

//வணக்கம் சம்பத்..,
பள்ளிக்கால நினைவுகளை மீட்டிருக்கிறீர்கள் பிரிவுகள் எங்கும் துயரமே..//

மிக்க நன்றி நண்பரே..

வணக்கத்துடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Nov 4, 2011, 12:05:00 AM

@ koodal bala said... 12

//எனக்கு வாழ்க்கையிலே மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள் கல்லூரியில்தான் கிடைத்தது ...மீண்டும் நினைவுக்கு வந்தது ...//

தங்கள் பசுமையான நினைவுகளை மீட்டுக்கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் நண்பரே


சம்பத்குமார் said...
Nov 4, 2011, 12:07:00 AM

@ கவிதை வீதி... // சௌந்தர் // said... 13

//உண்மையில் யாருக்கும் திரும்பாத நாட்கள் அவை...

பசுமையான நினைவுகளை பக்கங்களிலாவது பதித்து வைக்க வேண்டும்..//

உண்மைதான் நண்பரே..


சம்பத்குமார் said...
Nov 4, 2011, 12:08:00 AM

@ ஜ.ரா.ரமேஷ் பாபு said... 14

//பழைய நினைவுகளை கிளறியது உங்கள் கவிதை வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி சகோ


சம்பத்குமார் said...
Nov 4, 2011, 12:10:00 AM

@ ஆமினா said... 15

//பள்ளிகால நினைவுகள் கண்களில் வரவைத்துவிட்டது//

என்றும் மறக்க முடியா பசுமை நினைவுகள் சகோ..

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி


சம்பத்குமார் said...
Nov 4, 2011, 12:12:00 AM

@ ரெவெரி said... 16

//நம் உலகமே அழிந்து போகிறதோ என்று எண்ணிய அந்த காலங்களை நினைவு படுத்திவிட்டீர்கள்...
அருமை சம்பத்...//

உண்மைதான் நண்பரே..அந்த காலகட்டத்தில் இதற்காக நானும் கண்ணீர் விட்டு அழுததும் உண்டு


சம்பத்குமார் said...
Nov 4, 2011, 12:14:00 AM

ராஜா MVS said... 18

//நண்பர்களை பிரியும் போது ஏற்ப்படும் வலி... கவிதையை படித்து முடிக்கையில் எங்கள் மனதிலும்....//

சுகமான வலி என்றி இப்போது படுகிறது நண்பரே..

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி


சம்பத்குமார் said...
Nov 4, 2011, 12:15:00 AM

@ M.R said... 19

//ஆமாம் நண்பரே ,அது ஒரு வலி ,நானும் அனுபவித்தவன் தானே//

வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே


சம்பத்குமார் said...
Nov 4, 2011, 12:19:00 AM

@ Rathnavel said... 20

//அருமை//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி ஐயா..


jiff0777 said...
Nov 4, 2011, 3:08:00 AM

நல்ல கவி வரிகள்.. எனது சில வரிகளும் உங்களுக்காய்..

வாழ்க்கையின் தோல்விகளுக்குக் கிடைத்த ஆறுதல் பரிசுகளை அடுக்கி வைத்ததில் புன்னகை செய்யக்கூட இடமில்லாமல் போயிற்று..
கல்லூரிப் புத்தகங்களைத் தூசு தட்டித் தேடுகிறேன்...
எங்கே நான் சிரித்தபோது எடுத்த புகைப்படம்?


உலக சினிமா ரசிகன் said...
Nov 4, 2011, 6:52:00 AM

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


சம்பத்குமார் said...
Nov 4, 2011, 9:27:00 AM

@ jiff0777 said... 40

//நல்ல கவி வரிகள்.. எனது சில வரிகளும் உங்களுக்காய்..

வாழ்க்கையின் தோல்விகளுக்குக் கிடைத்த ஆறுதல் பரிசுகளை அடுக்கி வைத்ததில் புன்னகை செய்யக்கூட இடமில்லாமல் போயிற்று..
கல்லூரிப் புத்தகங்களைத் தூசு தட்டித் தேடுகிறேன்...
எங்கே நான் சிரித்தபோது எடுத்த புகைப்படம்?//

ஆழமான அழுத்தமான வரிகள் நண்பரே..

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி


jayaram thinagarapandian said...
Nov 5, 2011, 12:22:00 AM

ஒவ்வொருவர் வாழ்விலும்
ஒரு வசந்த காலம் கல்லூரி வாழ்கை ..
கவிதை மிகவும் அருமை


சம்பத் குமார் said...
Nov 5, 2011, 8:26:00 AM

@ jayaram thinagarapandian said... 43

//ஒவ்வொருவர் வாழ்விலும்
ஒரு வசந்த காலம் கல்லூரி வாழ்கை ..
கவிதை மிகவும் அருமை//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


ஷஹி said...
Nov 5, 2011, 10:16:00 AM

மூன்றாம் கோணம்
பெருமையுடம்

வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30

இடம்:

ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

போஸ்டல் நகர்,

க்ரோம்பேட்,

சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து

எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்


சம்பத் குமார் said...
Nov 5, 2011, 9:45:00 PM

@ ஷஹி said... 45

//மூன்றாம் கோணம்
பெருமையுடம்

வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30 //

தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..

நான் கோவையிலிருந்து வரமுடியாத சூழ்நிலைக்கு வருந்துகின்றேன்

எனினும் தங்கள் விழா இனிதே நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்


;