November 2, 2011
குழந்தைகளுக்கு தரவேண்டிய மிகப்பெரிய சொத்து
பொதுவாகவே இன்றைய சூழலில் பணக்காரர்களுடைய குழந்தை, பணக்காரனாகவே வளர்கிறது. ஏழையுடைய குழந்தை பணக்காரராக ஆசைப்பட்டாலும் ஏழையாகவே வளர்கிறது. அதே போல உங்கள் குழந்தை, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படித்தான் வளர்கிறது. உங்களிடம் உள்ளதைத்தான் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க முடியும் என்றால் உங்களிடம் அதிகம் உள்ளது நம்பிக்கையா ? பயமா ? கவனித்துப் பாருங்கள் குழந்தைகள் முதலில் கேட்கும் பெரும்பாலான வார்த்தைகள் பெற்றோர்களின் பயத்திலிருந்து உதித்த வார்த்தைகள்தான். ‘ஓடாத பாப்பா, கீழே விழுந்துடுவ” “அதெல்லாம் எடுக்காத கீழபோட்டு உடைச்சிடுவ”
நாம் நம் குழந்தைகள் தரையில் நடப்பதையே பயத்தோடு பார்க்கிறோம். ஆனால் கழைக்கூத்தாடிகள் தங்கள் குழந்தைகளை கயிற்றில் நடக்கவே பழக்கப்படுத்தி விடுகிறார்கள். நம்பிக்கை இருப்பதால் அவர்கள் கயிற்றில் நடக்கவே உற்சாகப்படுத்துகிறார்கள். பயம் இருப்பதால் நாம் தரையில் நடப்பதற்கே தடை விதிக்கிறோம்.உங்களிடம் செல்லாத அல்லது கிழிந்த ஐந்நூறு ரூபாய் இருக்கிறது என்றால் உங்கள் குழந்தைகளுக்கு அதை அப்படியே கொடுப்பீர்களா? அல்லது அதை நல்ல நோட்டாக மாற்றிக் கொடுப்பீர்களா ? பணத்தை மாற்றிக் கொடுப்பது போல உங்கள் பயத்தை, தைரியமாக மாற்றிக் கொடுங்கள்.
பணம் , தோற்றம், நிறம், உடல்நலம் மட்டுமல்ல பழக்க வழக்கங்களும் பெற்றோர்கள் தரும் சொத்துக்கள்தான். பழக்கவழக்கங்கள் பெற்றோர்களைப் பார்த்து பார்த்து குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்திக்கொள்கின்றன.”அது சரி” என்ற வார்த்தை என் நண்பர் அடிக்கடி பேச்சில் பயன்படுத்துவார். அவர் பையனும் பிறகு அப்படியே பேசுவதை பார்த்திருக்கிறேன். ஒரு நண்பர் நிதானமாக எதையும் யோசித்து யோசித்துத்தான் பேசுவார். அவர் பையனும் அப்படியே.எனவே, உங்கள் பழக்கவழக்கங்கள் கூட உங்கள் சொத்துத்தான். நீங்கள் பிரித்துக் கொடுக்காமலேயே உங்கள் குழந்தைகளிடம் சேர்ந்து விடுகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அப்பாவுக்கு உள்ள நல்மதிப்பு அப்படியே குழந்தைகளுக்கும் மாறுவதை கண்கூடாகவே பார்க்கலாம்.
நாம் நம் குழந்தைகள் தரையில் நடப்பதையே பயத்தோடு பார்க்கிறோம். ஆனால் கழைக்கூத்தாடிகள் தங்கள் குழந்தைகளை கயிற்றில் நடக்கவே பழக்கப்படுத்தி விடுகிறார்கள். நம்பிக்கை இருப்பதால் அவர்கள் கயிற்றில் நடக்கவே உற்சாகப்படுத்துகிறார்கள். பயம் இருப்பதால் நாம் தரையில் நடப்பதற்கே தடை விதிக்கிறோம்.உங்களிடம் செல்லாத அல்லது கிழிந்த ஐந்நூறு ரூபாய் இருக்கிறது என்றால் உங்கள் குழந்தைகளுக்கு அதை அப்படியே கொடுப்பீர்களா? அல்லது அதை நல்ல நோட்டாக மாற்றிக் கொடுப்பீர்களா ? பணத்தை மாற்றிக் கொடுப்பது போல உங்கள் பயத்தை, தைரியமாக மாற்றிக் கொடுங்கள்.
பணம் , தோற்றம், நிறம், உடல்நலம் மட்டுமல்ல பழக்க வழக்கங்களும் பெற்றோர்கள் தரும் சொத்துக்கள்தான். பழக்கவழக்கங்கள் பெற்றோர்களைப் பார்த்து பார்த்து குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்திக்கொள்கின்றன.”அது சரி” என்ற வார்த்தை என் நண்பர் அடிக்கடி பேச்சில் பயன்படுத்துவார். அவர் பையனும் பிறகு அப்படியே பேசுவதை பார்த்திருக்கிறேன். ஒரு நண்பர் நிதானமாக எதையும் யோசித்து யோசித்துத்தான் பேசுவார். அவர் பையனும் அப்படியே.எனவே, உங்கள் பழக்கவழக்கங்கள் கூட உங்கள் சொத்துத்தான். நீங்கள் பிரித்துக் கொடுக்காமலேயே உங்கள் குழந்தைகளிடம் சேர்ந்து விடுகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அப்பாவுக்கு உள்ள நல்மதிப்பு அப்படியே குழந்தைகளுக்கும் மாறுவதை கண்கூடாகவே பார்க்கலாம்.
பணத்தை சேமித்து வைத்து செலவழிப்பது போல உங்கள் சொற்களும் சிந்தனைகளாக குழந்தைகளால் சேமிக்கப்பட்டு பிறகு செயல்களாக செலவழிக்கப்படுகிறது. தேர்வு நேரத்தில், ‘நீயெல்லாம் எங்க ?, பாஸ் ஆகிற மாதிரியே தெரியலையே’ என்றால் பதட்டத்தையும் பயத்தையும் உங்கள் சொத்தாக உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ வெற்றி பெற பிறந்திருக்கிறாய் என்ற நம்பிக்கை வார்த்தைகளை நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கொடுத்தால் அதை தன்னைப்பற்றிய உயர்வு அபிப்ராய சிந்தனைகளாக மாற்றி உங்கள் குழந்தைகள் சேமித்துக் கொள்ளும். பிறகு நம்பிக்கை யோடு செயலாற்றும். ஆக நீங்கள் தரும் பணம் மட்டு மல்ல, நீங்கள் சொல்லும் சொல்கூட சொத்துதான்.
நம் குழந்தைகள் வாழ்வில் முன்னேற நாம் அளிக்கும் லட்சங்கள் அல்ல,வழி காட்டும் உயர் லட்சியங்களே அவர்களுக்குத் தர வேண்டிய மிகப்பெரிய சொத்து.நம் அப்பா நமக்கு எவ்வளவு சொத்து தரப்போகிறார் என்று எந்த குழந்தையும் யோசிப்பதில்லை. ஆனால் நம்மோடு இன்று நேரம் செலவிடுவாரா? நம்மோடு மனம் விட்டு பேசுவாரா ? என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு பணம் சேர்க்கும் நேரத்தில் கொஞ்சத்தை அவர்கள் எதிர்பார்க்கும் நேரமாகவே கொடுங்கள்.இன்று இருபத்திநாலு மணி நேரம் என்பது உங்களிடம் இருக்கும் சொத்து. உண்மையைச் சொல்லுங்கள் உங்கள் சொத்து நீங்கள் பெற்ற மழலை செல்வங்களுக்குத்தானே நண்பர்களே !
உறவுகளே பதிவு பிடித்திருந்தால் தங்கள் எண்ண ஓட்டங்களை வாக்குகளாகவும் கருத்துக்களாகவும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.
|
|
Tweet |
Related Posts: ,
,
,
,
Subscribe to:
Post Comments (Atom)









26 Responses to “குழந்தைகளுக்கு தரவேண்டிய மிகப்பெரிய சொத்து”
Nov 2, 2011, 7:32:00 AM
//நாம் நம் குழந்தைகள் தரையில் நடப்பதையே பயத்தோடு பார்க்கிறோம். ஆனால் கழைக்கூத்தாடிகள் தங்கள் குழந்தைகளை கயிற்றில் நடக்கவே பழக்கப்படுத்தி விடுகிறார்கள். நம்பிக்கை இருப்பதால் அவர்கள் கயிற்றில் நடக்கவே உற்சாகப்படுத்துகிறார்கள். பயம் இருப்பதால் நாம் தரையில் நடப்பதற்கே தடை விதிக்கிறோம்.உங்களிடம் செல்லாத அல்லது கிழிந்த ஐந்நூறு ரூபாய் இருக்கிறது என்றால் உங்கள் குழந்தைகளுக்கு அதை அப்படியே கொடுப்பீர்களா? அல்லது அதை நல்ல நோட்டாக மாற்றிக் கொடுப்பீர்களா ? பணத்தை மாற்றிக் கொடுப்பது போல உங்கள் பயத்தை, தைரியமாக மாற்றிக் கொடுங்கள்.//
பெற்றோர்களுக்கு நல்ல நம்பிக்கையைக் கொடுக்கும் வார்த்தைகள்..!! நன்றி சம்பத்குமார் அவர்களே..!!
Nov 2, 2011, 7:42:00 AM
நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!! நன்றி அன்பானவரே.
எனது வலையில் இன்று:
மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்
தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
*****
Nov 2, 2011, 8:09:00 AM
பணத்தை மாற்றிக் கொடுப்பது போல உங்கள் பயத்தை, தைரியமாக மாற்றிக் கொடுங்கள்./
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>
Nov 2, 2011, 9:59:00 AM
//நம் குழந்தைகள் வாழ்வில் முன்னேற நாம் அளிக்கும் லட்சங்கள் அல்ல,வழி காட்டும் உயர் லட்சியங்களே அவர்களுக்குத் தர வேண்டிய மிகப்பெரிய சொத்து//
உண்மை,சம்பத்..
மிக அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
Nov 2, 2011, 12:16:00 PM
அருமையாக சொன்னீங்க பாஸ்
Nov 2, 2011, 12:17:00 PM
////நம் குழந்தைகள் வாழ்வில் முன்னேற நாம் அளிக்கும் லட்சங்கள் அல்ல,வழி காட்டும் உயர் லட்சியங்களே அவர்களுக்குத் தர வேண்டிய மிகப்பெரிய சொத்து.////
சிறப்பான கருத்து பாஸ்
Nov 2, 2011, 1:13:00 PM
நெத்தி அடி
Nov 2, 2011, 2:17:00 PM
நம்பிக்கை இருப்பதால் அவர்கள் கயிற்றில் நடக்கவே உற்சாகப்படுத்துகிறார்கள். பயம் இருப்பதால் நாம் தரையில் நடப்பதற்கே தடை விதிக்கிறோம்.
நல்ல பல கருத்துக்களை பகிர்ந்திருக்கிறீர்கள்!
Nov 2, 2011, 3:27:00 PM
இளைய சமுதாயம் கெட்டு விட்டது என்று பொய்யில் புலம்புவதை விட்டுவிட்டு அவர்களுக்கு நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை அருமையாக உணர்த்தியுள்ளீர்கள்.
Nov 2, 2011, 3:35:00 PM
தங்களின் பதிவு பல பெற்றோர்களை தெளிவுர செய்யும்...
மிக அருமை... நண்பரே...
வாழ்த்துகள்.......
Nov 2, 2011, 6:22:00 PM
மிக அருமையான பதிவு...வாழ்த்துக்கள்...
Nov 2, 2011, 7:22:00 PM
@ தங்கம்பழனி said... 1
//பெற்றோர்களுக்கு நல்ல நம்பிக்கையைக் கொடுக்கும் வார்த்தைகள்..!! நன்றி சம்பத்குமார் அவர்களே..!!//
முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
Nov 2, 2011, 7:23:00 PM
இராஜராஜேஸ்வரி said... 3
//அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி சகோ..
நட்புடன்
சம்பத்குமார்
Nov 2, 2011, 7:24:00 PM
@ RAMVI said... 4
//உண்மை,சம்பத்..
மிக அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.//
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி
Nov 2, 2011, 7:26:00 PM
@ K.s.s.Rajh said... 6
//அருமையாக சொன்னீங்க பாஸ்//
//சிறப்பான கருத்து பாஸ்//
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி திரு.K.s.s.Rajh அவர்களே
Nov 2, 2011, 7:27:00 PM
@ suryajeeva said... 7
//நெத்தி அடி//
மிக்க நன்றி திரு.சூர்யஜீவா அவர்களே
Nov 2, 2011, 7:29:00 PM
நம்பிக்கைபாண்டியன் said... 8
//நம்பிக்கை இருப்பதால் அவர்கள் கயிற்றில் நடக்கவே உற்சாகப்படுத்துகிறார்கள். பயம் இருப்பதால் நாம் தரையில் நடப்பதற்கே தடை விதிக்கிறோம்.
நல்ல பல கருத்துக்களை பகிர்ந்திருக்கிறீர்கள்!//
வாருங்கள் திரு.நம்பிக்கைபாண்டியன் அவர்களே..
வருகைக்கும் சிறப்பானதொரு கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Nov 2, 2011, 7:32:00 PM
@ வேங்கட ஸ்ரீனிவாசன் said... 9
//இளைய சமுதாயம் கெட்டு விட்டது என்று பொய்யில் புலம்புவதை விட்டுவிட்டு அவர்களுக்கு நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை அருமையாக உணர்த்தியுள்ளீர்கள்.//
மிக்க நன்றி திரு.வேங்கட ஸ்ரீனிவாசன் அவர்களே..
வருங்காலத்திற்காக நம்பிக்கைகளை விட்டுச் செல்வோம்
Nov 2, 2011, 8:07:00 PM
@ ராஜா MVS said... 10
//தங்களின் பதிவு பல பெற்றோர்களை தெளிவுர செய்யும்...
மிக அருமை... நண்பரே...
வாழ்த்துகள்.......//
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Nov 2, 2011, 8:08:00 PM
@ ரெவெரி said... 11
//மிக அருமையான பதிவு...வாழ்த்துக்கள்...//
மிக்க நன்றி நண்பரே
Nov 4, 2011, 12:10:00 AM
முதல்முறையா வந்திருக்கிறேன்..முழுதும் வாசித்துவிட்டு வரேன்.
Nov 4, 2011, 9:37:00 AM
@ ஷைலஜா said... 21
//முதல்முறையா வந்திருக்கிறேன்..முழுதும் வாசித்துவிட்டு வரேன்.//
தங்களின் வருகைக்கு நன்றி சகோ..
மீண்டும் வருக
Nov 4, 2011, 6:22:00 PM
குழந்தைகளோடு நாம் செலவிடும் நேரமே அவர்களுக்கு நாம்தரும் பெரும் சொத்து. நல்ல பதிவு ..இது ஒரு கவிதையை எனக்கு விதைத்துவிட்டது என் தளத்தில் கொண்டு பதிக்கிறேன் விரைவில் நன்றி
Nov 4, 2011, 9:07:00 PM
@ ஷைலஜா said... 23
//குழந்தைகளோடு நாம் செலவிடும் நேரமே அவர்களுக்கு நாம்தரும் பெரும் சொத்து. நல்ல பதிவு ..இது ஒரு கவிதையை எனக்கு விதைத்துவிட்டது என் தளத்தில் கொண்டு பதிக்கிறேன் விரைவில் நன்றி//
தங்களின் சிந்தனையை தூண்டியதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் சகோ..
நன்றிகளுடன்
சம்பத்குமார்
Nov 20, 2011, 8:58:00 AM
சம்பத்குமார்,தங்களின் பதிவைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன் நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.
Nov 20, 2011, 10:10:00 AM
@ RAMVI said... 25
//சம்பத்குமார்,தங்களின் பதிவைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன் நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.//
வணக்கம் சகோ.. எனது பதிவினையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..
Post a Comment