November 17, 2011
முதிர் கன்னி
கேள்விப்பட்ட நொடியில் அதிர்வு
வாயே திறக்கவில்லை...!
இயல்பாய் இருப்பதுபோல் நடித்து
ஒப்புக்குப் பேசி எங்கோ வெறித்து...
பஸ் நெரிசலில்
வியர்வையுடன்
இமையோரக் கண்ணீரத் துடைத்தேன் ...!
அதட்டலுக்கு அடங்காத
செல்லப்பிள்ளை போலக் கண்ணீர்...!
உதடு இறுக்கியும்
தலை குனிந்தும் விடுவதாயில்லை...!
அறையில் புத்தகங்களிலும் அமிழ்வதாயில்லை ...
தேவையில்லாமல்
இரண்டு அறை வாங்கினான் தம்பி...!
வெட்கமாயிறுக்கிறது
தாள்களைக் கிழத்தெறிந்தேன்...!
தூக்கமே வராதோ
நினைத்துக் கொண்டிருக்கும்போதே
கண் சொருகியது ...!
விழித்துப்
பல் தேய்க்கும் போது
பேசாமல் ஒதுங்கிப்போனான்
தம்பி...!
எனக்கு இல்லாமல் போய்விட்டது என்பதையா...?
இன்னொருவருக்கு கிடைத்துவிட்டது என்பதையா...?
எதையும் ஏற்றுக்கொள்ள
மறுக்கிறது இந்த கண்ணீர்...!
நண்பர்களே முதிர்கன்னியின் கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்..
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)








20 Responses to “முதிர் கன்னி”
Nov 17, 2011, 11:33:00 AM
முதிர்கன்னிகளின் நிலையை யதார்த்தமாக சொல்லி இருக்கீங்க.
Nov 17, 2011, 11:35:00 AM
சிறப்பான கவிவரிகள்
Nov 17, 2011, 1:15:00 PM
நிதர்சனமான விஷயம்!
Nov 17, 2011, 1:32:00 PM
அருமையான சொல்லாடல்
Nov 17, 2011, 2:20:00 PM
வணக்கம் சம்பத்!
அருமையான கவிதை!!
வாழ்த்துக்கள்..
Nov 17, 2011, 5:35:00 PM
arumai... ennudaiya muthikanniyai vida maarupattathu...www.rishvan.com....
Nov 17, 2011, 5:38:00 PM
கவிதை மிக அருமை...
வாழ்த்துகள்... நண்பரே...
Nov 17, 2011, 8:09:00 PM
எனக்கு இல்லாமல் போய்விட்டது என்பதையா...?
இன்னொருவருக்கு கிடைத்துவிட்டது என்பதையா...?
எதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது இந்த கண்ணீர்...!//
மனதை நெகிழச் செய்த வரிகள்..
Nov 17, 2011, 9:48:00 PM
@ Lakshmi said... 1
//முதிர்கன்னிகளின் நிலையை யதார்த்தமாக சொல்லி இருக்கீங்க.//
முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் நன்றி அம்மா அவர்களே
Nov 17, 2011, 10:28:00 PM
@ K.s.s.Rajh said... 2
//சிறப்பான கவிவரிகள்//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே
Nov 18, 2011, 12:56:00 PM
Supper
Nov 18, 2011, 1:34:00 PM
உங்கள் வார்த்தைகள் விளையாடல்
சிறப்பாக இருக்கிறது..
உங்கள் கவி நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...
முதிர்கன்னியின் அவலங்களை அவளின் மனதை
அப்படியே படம்போட்டு காண்பித்துவிட்டீர்கள்.
அருமை அருமை..
Nov 18, 2011, 9:30:00 PM
@ விக்கியுலகம் said... 3
//நிதர்சனமான விஷயம்!//
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி மாம்ஸ்
Nov 18, 2011, 9:36:00 PM
@ suryajeeva said... 4
//அருமையான சொல்லாடல்//
மிக்க நன்றி நண்பரே
Nov 18, 2011, 9:38:00 PM
@ காட்டான் said... 5
//வணக்கம் சம்பத்!
அருமையான கவிதை!!
வாழ்த்துக்கள்..//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே
Nov 18, 2011, 9:42:00 PM
@ rishvan said... 6
//arumai... ennudaiya muthikanniyai vida maarupattathu...www.rishvan.com....//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..தங்கள் கவிவரிகளையும் வாசித்து வந்தேன் ஆழமான வரிகள்..
Nov 19, 2011, 8:10:00 AM
@ ராஜா MVS said... 7
//கவிதை மிக அருமை...
வாழ்த்துகள்... நண்பரே...//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே
Nov 19, 2011, 8:11:00 AM
@ !* வேடந்தாங்கல் - கருன் *! said... 8
/////எனக்கு இல்லாமல் போய்விட்டது என்பதையா...?
இன்னொருவருக்கு கிடைத்துவிட்டது என்பதையா...?
எதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது இந்த கண்ணீர்...!//
மனதை நெகிழச் செய்த வரிகள்../////
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே
Nov 19, 2011, 8:13:00 AM
@ மகேந்திரன் said... 11
//உங்கள் வார்த்தைகள் விளையாடல்
சிறப்பாக இருக்கிறது..
உங்கள் கவி நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...
முதிர்கன்னியின் அவலங்களை அவளின் மனதை
அப்படியே படம்போட்டு காண்பித்துவிட்டீர்கள்.//
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
அருமை அருமை..
Nov 20, 2011, 1:26:00 AM
@ கவி அழகன் said... 11
//Supper//
Thank u very much my dear friend
Post a Comment