November 18, 2011
கருச்சிதைவு
இந்நேரம்...
எதிர்வீட்டுக் குழந்தை போல்..
நர்சரிக்குச் செல்லும் பொம்மைகள்போல்..
சின்னத்தேர் போல்..
இருந்திருப்பாய்...!
அழகழகாய் மழலை பேசி...
பிஞ்சுக் கால்களில் கொலுசணிந்து...
முகத்தில் எட்டி உதைத்திருப்பாய்...!
சீருடையணிந்து...
தினமும் காலையில்...
ஒழுங்காய் பள்ளிக்குச் சென்றிருப்பாய்....!
தூக்கம் வராத இரவுகளில்..
முதுகின் மேல் ஏறி...
யானையேற்றம் பழகியிருப்பாய்...!
ஆனாலும்
நீ எதிர்கொள்ள வேண்டிய...
ஸ்டவ் வெடிப்புகளைவிட...
பெல்ட் உதைகளைவிட..
புகுந்த வீட்டாரின்
நெருப்பு வார்த்தைகளைவிட...
அதிகமில்லை இந்த வலி....!
ஒருவேளை
இன்று இருந்திருப்பாய்...
கருவிலேயே நீ சிதைந்திருக்காவிடில்.....!
இதனையும் வாசிக்கலாமே..
How to Create Library at Home
நண்பர்களே கருசிதைவு கவிதை பிடித்திருந்தால் தங்களது எண்ணங்களை கருத்துக்களாய் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)








26 Responses to “கருச்சிதைவு”
Nov 18, 2011, 7:18:00 PM
மனதை வருடும் கவிதை பாஸ்
Nov 18, 2011, 7:41:00 PM
வணக்கம் சம்பத்..!
ஆமா கருவிலேயே நீ சிதைக்கப்படாவிட்டால்..???? மனதை வருடும் வரிகள்...
Nov 18, 2011, 8:22:00 PM
கடைசி வரி டச்சிங்க்.
Nov 18, 2011, 8:42:00 PM
மனசை என்னவோ செய்யுது.....உங்க கவிதை
Nov 18, 2011, 9:06:00 PM
நேற்று எங்கள் உறவுகார பெண் ஒருவருக்கு நிகழ்ந்துவிட்டதாக செய்தி இன்று காலைதான் என் அம்மா சொன்னார்... அதே கரு கவிதையாக இங்கு...
மனம் கனத்துவிட்டது... நண்பரே...
Nov 18, 2011, 9:34:00 PM
எங்கள் மனதையும் சிதைத்துவிட்டீர்கள்.. இந்த கவிதையின் மூலம்..!!!
கவிதையும், கவிதைக்கிடையில் தொடர்புள்ள படங்களையும் இட்டு அழகுற வடிவமைத்திருக்கிறீர்கள். நன்றி சம்பத் அவர்களே..!!
எனது வலையில் இன்று
மாவட்டங்களின் கதைகள் - நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu)
மேலும் பல பயனுள்ள தகவல்கள்.. !!!
நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
Nov 18, 2011, 11:36:00 PM
கனமான கவிதை!
Nov 19, 2011, 12:49:00 AM
முடிக்கும் வார்த்தையில் முத்தாய்ப்பாய் மனசைக் குடைய விட்டீர்கள் சம்பத் கருச்சிதைவின் வலியைத் தாங்கி வந்த கவிதை அழகு!
Nov 19, 2011, 2:34:00 AM
Manaus valikkuthu
Nov 19, 2011, 8:40:00 AM
மாப்ள இந்த வலியை நானும் அன்பவிச்சிருக்கேன்!
Nov 19, 2011, 10:12:00 AM
ஒருவேளை
இன்று இருந்திருப்பாய்...
கருவிலேயே நீ சிதைந்திருக்காவிடில்.....!//
மனதை நெகிழச் செய்த வரிகள்..
Nov 19, 2011, 9:49:00 PM
கருவிலே தன் குழந்தையை
பறிகுடுத்த தாயின் கண்ணீரின் எழுத்துக்கள்
கவிதை அருமை
Nov 20, 2011, 12:20:00 AM
நல்ல கவிதை!
ஸ்டவ் வெடிப்புகளைவிட...
பெல்ட் உதைகளைவிட..
இன்றைய நிலமையில் 0.000001% வேண்டுமானால் எங்காவது நடக்கலாம்,
Nov 20, 2011, 1:14:00 AM
@ K.s.s.Rajh said... 1
//மனதை வருடும் கவிதை பாஸ்//
முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Nov 20, 2011, 1:15:00 AM
@ காட்டான் said... 2
//வணக்கம் சம்பத்..!
ஆமா கருவிலேயே நீ சிதைக்கப்படாவிட்டால்..???? மனதை வருடும் வரிகள்...//
வணக்கம் நண்பரே..
மனமார்ந்த நன்றிகள் தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும்..
Nov 20, 2011, 1:16:00 AM
@ Lakshmi said... 3
//கடைசி வரி டச்சிங்க்.//
மிக்க நன்றி லட்சுமி அம்மா அவர்களே
Nov 20, 2011, 1:18:00 AM
@ veedu said... 4
//மனசை என்னவோ செய்யுது.....உங்க கவிதை//
ஆம் சகோ.. வலிகள் தாங்கி நிற்பதாய் உணர்கிறேன்
Nov 20, 2011, 1:20:00 AM
@ ராஜா MVS said... 5
//நேற்று எங்கள் உறவுகார பெண் ஒருவருக்கு நிகழ்ந்துவிட்டதாக செய்தி இன்று காலைதான் என் அம்மா சொன்னார்... அதே கரு கவிதையாக இங்கு...
மனம் கனத்துவிட்டது... நண்பரே...//
ஒரு நாளைக்கு நமக்கு தெரிந்த ஓர் நபரேனும் இந்த வலியை உணர்கிறார்கள் நண்பரே..
Nov 20, 2011, 1:22:00 AM
@ தங்கம்பழனி said... 6
//எங்கள் மனதையும் சிதைத்துவிட்டீர்கள்.. இந்த கவிதையின் மூலம்..!!!
கவிதையும், கவிதைக்கிடையில் தொடர்புள்ள படங்களையும் இட்டு அழகுற வடிவமைத்திருக்கிறீர்கள். நன்றி சம்பத் அவர்களே..!!//
வாருங்கள் நண்பரே தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி
Nov 20, 2011, 1:23:00 AM
@ இராஜராஜேஸ்வரி said... 7
//கனமான கவிதை!//
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி சகோதரம்
Nov 20, 2011, 1:24:00 AM
@ தனிமரம் said... 8
//முடிக்கும் வார்த்தையில் முத்தாய்ப்பாய் மனசைக் குடைய விட்டீர்கள் சம்பத் கருச்சிதைவின் வலியைத் தாங்கி வந்த கவிதை அழகு!//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Nov 20, 2011, 1:25:00 AM
@ கவி அழகன் said... 9
//Manaus valikkuthu//
உண்மைதான் சகோ..தினமும் அனுபவிக்கிறார்களே
Nov 20, 2011, 1:27:00 AM
@ விக்கியுலகம் said... 10
//மாப்ள இந்த வலியை நானும் அன்பவிச்சிருக்கேன்!//
மாம்ஸ் உங்களை போல் நானும் அனுபவித்த வலிதான் இது.
Nov 20, 2011, 1:29:00 AM
@ !* வேடந்தாங்கல் - கருன் *! said... 11
////ஒருவேளை
இன்று இருந்திருப்பாய்...
கருவிலேயே நீ சிதைந்திருக்காவிடில்.....!//
மனதை நெகிழச் செய்த வரிகள்.. ////
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Nov 20, 2011, 1:29:00 AM
@ jayaram thinagarapandian said... 12
//கருவிலே தன் குழந்தையை
பறிகுடுத்த தாயின் கண்ணீரின் எழுத்துக்கள்
கவிதை அருமை//
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே
Nov 20, 2011, 1:34:00 AM
@ நம்பிக்கைபாண்டியன் said... 13
///நல்ல கவிதை!
ஸ்டவ் வெடிப்புகளைவிட...
பெல்ட் உதைகளைவிட..
இன்றைய நிலமையில் 0.000001% வேண்டுமானால் எங்காவது நடக்கலாம்,///
வணக்கம் நண்பரே.. தாங்கள் கூறியதுபோல் விகிதாச்சாரம் இன்னும் குறைந்தால் மிக்க மகிழ்ச்சிதான்.
எனினும் பெல்ட் உதைகள் எல்லா இடத்திலும் நடக்கிறது.. மறைமுகமாக..
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே..
Post a Comment