October 23, 2011
ஆறாத புண்கள்
சாலையை அரைத்துக்
கொண்டே நகருகிறது
மண் லாரி...!
வேடிக்கை பார்க்க
ஒடி வருகின்றன்
சுட்டிக் குழந்தைகள் !
யானை மாதிரி
மண் மீது
உருள்கிறது ரோடுரோலர் !
மனை வாங்குகிறார்
காண்ட்ராக்டர்...!
காலாண்டு விடுமுறையில்
மீண்டும் அதே சாலையில்
உருள்கிறது ரோடு ரோலர்...
அடித்தளம் போட்டு
வீடு கட்டுகிறார்...!
அரையாண்டு விடுமுறை
விடுவதற்க்கு முன்
விடுவதற்க்கு முன்
மழை இழுத்துச்
செல்கிறது போட்ட சாலையை..
மனை புகுவிழா நடத்துகிறார்...!
உறவுகளும் நட்புகளும்
குண்டும் குழியுமான
சேறுதங்கிய சாலைகளில்...
தடுக்கித் தள்ளாடிக்
கொண்டே செல்கின்றனர்
கைகளில் பரிசுப்பொருள்களுடன் !
சாலையிருக்கிறது
தீர்க்கபடாத புண்களுடன்....!
நண்பர்களே ! சாலையின் தீர்க்கப்படாத புண்கள் கவிதை பிடித்திறுந்தால் தங்களது எண்ணங்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்
நண்பர்களே ! சாலையின் தீர்க்கப்படாத புண்கள் கவிதை பிடித்திறுந்தால் தங்களது எண்ணங்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)








36 Responses to “ஆறாத புண்கள்”
Oct 23, 2011, 2:02:00 PM
அருமை......
கவிதை நிதர்சனத்தை கூறுகிறது...
Oct 23, 2011, 2:30:00 PM
//யானை மாதிரி
மண் மீது
உருள்கிறது ரோடுரோலர் //சாலையிருக்கிறது
தீர்க்கபடாத புண்களுடன்....!//வரிகள் அருமை
Oct 23, 2011, 2:50:00 PM
அழகிய கவிதை வரிகள்
Oct 23, 2011, 3:12:00 PM
தங்களின் ஆதங்கம் நியாயமானவையே...
மக்களுக்கு சாலை, பாலம், மின்சாரம் போன்றவை கிடைக்கிறதோ இல்லையோ... காண்ட்ராக்டர்கள் இவைகளின் மூலமாக வீடு கட்டிவிடுவது என்னவோ உண்மை... நண்பரே...
Oct 23, 2011, 4:11:00 PM
அருமை சம்பத்குமார்.
அவர்களும் அந்த சாலையைதானே உபயோகப்படுத்த வேண்டும்?இதை ஏனோ மறந்துவிடுகின்றனர்.
Oct 23, 2011, 4:36:00 PM
சுருங்கச் சொல்லி விளங்க வைத்த
கவிதை
அருமை சகோ அருமை!
புலவர் சா இராமாநுசம்
Oct 23, 2011, 5:00:00 PM
செம்மண் சாலை மீது கருப்பு பெயிண்ட் அடித்து விடுவதாலேயே அதை தார் ரோடு என்று சொல்ல முடியாது என்பேன் நான்
Oct 23, 2011, 5:15:00 PM
உறவுகளும் நட்புகளும்
குண்டும் குழியுமான
சேறுதங்கிய சாலைகளில்...
தடுக்கித் தள்ளாடிக்
கொண்டே செல்கின்றனர்
கைகளில் பரிசுப்பொருள்களுடன் !
சாலையிருக்கிறது
தீர்க்கபடாத புண்களுடன்....!
ஆற்ரப்படாத புண்கள் தரும் மன வலியை
அழகிய கவிதை உருவில் வடித்த தங்களுக்கு
என் நன்றிகளும் பாராட்டுக்களும் .சாலையின்
குறைகள் எங்குமே அவசியம் தீர்க்கப்பட
வேண்டும் .வாழ்த்துக்கள்......
Oct 23, 2011, 7:29:00 PM
ரோடு போடுற காண்ட்ராக்டர் வீடு போடுறார் !
Oct 23, 2011, 7:46:00 PM
அருமையாய் சொல்லியிருக்கீங்க
அருமை
Oct 23, 2011, 8:17:00 PM
@ veedu said... 1
//அருமை......
கவிதை நிதர்சனத்தை கூறுகிறது...//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
Oct 23, 2011, 8:19:00 PM
சி.பிரேம் குமார் said... 2
////யானை மாதிரி
மண் மீது
உருள்கிறது ரோடுரோலர் //சாலையிருக்கிறது
தீர்க்கபடாத புண்களுடன்....!//வரிகள் அருமை//
மிக்க நன்றி சகோ..
Oct 23, 2011, 8:20:00 PM
@ கவி அழகன் said... 3
//அழகிய கவிதை வரிகள்//
மிக்க நன்றி திரு.கவி அழகன் அவர்களே
Oct 23, 2011, 8:22:00 PM
@ ராஜா MVS said... 4
//மக்களுக்கு சாலை, பாலம், மின்சாரம் போன்றவை கிடைக்கிறதோ இல்லையோ... காண்ட்ராக்டர்கள் இவைகளின் மூலமாக வீடு கட்டிவிடுவது என்னவோ உண்மை... நண்பரே...//
நிதர்சனமான உண்மை நண்பரே..
Oct 23, 2011, 8:23:00 PM
@RAMVI said... 5
//அவர்களும் அந்த சாலையைதானே உபயோகப்படுத்த வேண்டும்?இதை ஏனோ மறந்துவிடுகின்றனர்.//
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோதரம்..
Oct 23, 2011, 8:25:00 PM
@ புலவர் சா இராமாநுசம் said... 6
//சுருங்கச் சொல்லி விளங்க வைத்த
கவிதை
அருமை சகோ அருமை!//
வாருங்கள் புலவர் ஐயா அவர்களே..
தங்கள் வருகையால் பேருவகை கொள்கிறேன்
மிக்க நன்றி
Oct 23, 2011, 8:27:00 PM
@ suryajeeva said... 7
//செம்மண் சாலை மீது கருப்பு பெயிண்ட் அடித்து விடுவதாலேயே அதை தார் ரோடு என்று சொல்ல முடியாது என்பேன் நான்//
உண்மைதான் நண்பரே..தங்கள் கருத்தினை அப்படியே ஆமோதிக்கின்றேன்
Oct 23, 2011, 8:29:00 PM
@ அம்பாளடியாள் said... 8
//ஆற்ரப்படாத புண்கள் தரும் மன வலியை
அழகிய கவிதை உருவில் வடித்த தங்களுக்கு
என் நன்றிகளும் பாராட்டுக்களும் .சாலையின்
குறைகள் எங்குமே அவசியம் தீர்க்கப்பட
வேண்டும் .வாழ்த்துக்கள்....//
வாருங்கள் சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி..
Oct 23, 2011, 8:33:00 PM
@ koodal bala said... 9
//ரோடு போடுற காண்ட்ராக்டர் வீடு போடுறார் !//
வாருங்கள் நண்பர் திரு.பாலா அவர்களே.. தங்கள் உடல்நலம் தற்போது நலம்தானே... ?
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி
Oct 23, 2011, 8:42:00 PM
ஆமினா said... 10
//அருமையாய் சொல்லியிருக்கீங்க
அருமை//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோதரம்
Oct 23, 2011, 9:05:00 PM
கவிதை சாலைகளின் உண்மையை மட்டுமல்ல வாழ்க்கையின் உண்மையையும் சொல்கிறது,
Oct 23, 2011, 9:45:00 PM
கவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.
Oct 23, 2011, 10:36:00 PM
@ Riyas said... 21
//கவிதை சாலைகளின் உண்மையை மட்டுமல்ல வாழ்க்கையின் உண்மையையும் சொல்கிறது,//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ..
நட்புடன்
சம்பத்குமார்
Oct 23, 2011, 10:37:00 PM
@Lakshmi said... 22
//கவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி அம்மா
பாசத்துடன்
சம்பத்குமார்
Oct 23, 2011, 11:08:00 PM
நண்பரே கலக்கிட்டிங்க போங்க!
நம்ம ஊரில பரீட்சைக்கு பரீட்சை லீவு விடராங்களோ இல்லையோ
மழைக்கு மழை ரோடு காண்டிராக்ட் விடறாங்க!
அதுவும் கவுண்டமணி கரகாட்டக்காரன் படத்துல சொல்ற மாதிரி
அது என்னவோ போட்ட ரோட்டையே எத்தனை வாட்டி தான் போடுவாங்களோ
ரோடே இல்லாத இடமெல்லாம் அவங்க கண்ணுல தெரியவே தெரியாதா?
நாட்டுல இவங்களுக்கு மட்டும் தான் ரோடு போடணுமா?
Oct 24, 2011, 7:17:00 AM
நல்ல கவிதை..
Oct 24, 2011, 7:28:00 AM
@ கோகுல் said... 25
//நண்பரே கலக்கிட்டிங்க போங்க!
நம்ம ஊரில பரீட்சைக்கு பரீட்சை லீவு விடராங்களோ இல்லையோ
மழைக்கு மழை ரோடு காண்டிராக்ட் விடறாங்க!
அதுவும் கவுண்டமணி கரகாட்டக்காரன் படத்துல சொல்ற மாதிரி
அது என்னவோ போட்ட ரோட்டையே எத்தனை வாட்டி தான் போடுவாங்களோ
ரோடே இல்லாத இடமெல்லாம் அவங்க கண்ணுல தெரியவே தெரியாதா?//
உண்மைதான் நண்பரே..கடைசி வரைக்கும் அவர்கள் கண்ணிற்க்கு தெரியாது
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி கோகுல் அவர்களே..
Oct 24, 2011, 7:29:00 AM
@ K.s.s.Rajh said... 26
//நல்ல கவிதை..//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திரு.ராஜா அவர்களே
Oct 24, 2011, 10:10:00 AM
இனிய காலை வணக்கம் பாஸ்,
அவலங்களைச் சுமந்து செல்லும் சாலையின் நிலையினை அழகுறச் சொல்லி நிகிறது கவிதை,
சாலை திருத்துவதனை விடுத்து பணத்தைச் சுருட்டி தம் வாழ்சைச் சிறக்கச் செய்வோரையும் சாடி நிற்கிறது கவிதை
Oct 24, 2011, 7:31:00 PM
@ நிரூபன் said... 29
//அவலங்களைச் சுமந்து செல்லும் சாலையின் நிலையினை அழகுறச் சொல்லி நிகிறது கவிதை,
சாலை திருத்துவதனை விடுத்து பணத்தைச் சுருட்டி தம் வாழ்சைச் சிறக்கச் செய்வோரையும் சாடி நிற்கிறது கவிதை//
உண்மைதான் நண்பரே..சாலை போடும் காண்டிராக்டர்கள் உள்ளுணர்வோடு பணி செய்தாலே 90 % சாலைகளுக்கு நல்லதோர் விடிவு காலம் கிட்டும் என்பது என் கருத்து..
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நண்பரே
Oct 24, 2011, 7:59:00 PM
100% நிதர்சனம்.
மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
இன்றைய நிலவரப்படி கமிஷன்,அரசுத்துறை அதிகாரிகளுக்கு 20%
காண்ட்ராக்டர் 30%ம் செல்கிறது!
Oct 24, 2011, 8:15:00 PM
@ நம்பிக்கைபாண்டியன் said... 31
//100% நிதர்சனம்.
இன்றைய நிலவரப்படி கமிஷன்,அரசுத்துறை அதிகாரிகளுக்கு 20%
காண்ட்ராக்டர் 30%ம் செல்கிறது!//
உண்மைகளை உணர்த்தியத்தியதிற்க்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே..
Oct 24, 2011, 9:24:00 PM
காலம் மாறும். காயம் ஆறும்.
Oct 24, 2011, 9:41:00 PM
@ ரசிகன் said... 33
//காலம் மாறும். காயம் ஆறும்.//
காத்திருக்கிறேன் நண்பரே விடியலைத்தேடி..
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Oct 25, 2011, 11:21:00 PM
தங்கள் கவிதையில் இருப்பது
நிதர்சன உண்மை ..
கவிதை மிகவும் அருமை
Oct 28, 2011, 7:11:00 PM
@jayaram thinagarapandian said... 35
//தங்கள் கவிதையில் இருப்பது
நிதர்சன உண்மை ..
கவிதை மிகவும் அருமை//
வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Post a Comment