October 19, 2011
கட்சிக் கொடிகள்
நான்...
கட்சிக் கொடிகளைத்
தைக்கின்ற ஓர் அப்பாவி…!
வண்ணங்களை
சேர்ப்பதோடு சரி.
எண்ணங்களை பற்றி
அறியாத பாவி !
தைக்கும் வரை
கொடிகளுக்கு
நான் எஜமானன்….
தைத்த பின்
கொடிகள்
எனக்கு எஜமானன்…
தைக்கும் போது
குனிந்த என்
தலையை அவை
தலையை அவை
பறக்கும் போதும்
குனிய வைக்கின்றன…
குனிவதற்க்கு
எனக்கொன்றும் வெட்கமில்லை...
தேசமே
உலகவங்கியிடம்
தலைகுனியும்போது…!
கொடிகள்
தோரணமாய்
தொங்குவதைக் கண்டால்
வருத்தமாயிருக்கும் எனக்கு…
என்ன பெரிதாய்
இழப்பு நேர்ந்தது
?
அவைகள் தூக்குபோட்டு
கொல்(ள்)வதற்க்கு…..?
கொடித்தலைவரிடம் ஓர்
நீண்ட நாள் சந்தேகம்…
கலர் கலராக
இத்தனை கொடிகள் எதற்கு..?
தலைவரின்
முழக்கம் :
“வறுமையை அறவே
ஒழிப்பதற்க்கு
!”
ஒரே கொடியாலே
தீர்க்க
இயலாதா ?
”அவன் வேறு
நான் வேறு
ஒன்றாக முடியாது
!”
கொடிகளை நம்பி
வாழ்க்கை நடத்துகிறோமே...
உங்கள் கட்சியா பெரிது ?
கொடிகளின்
கண்ணியம் தானே
பெரிது !
பதிலேதுமில்லை..
பதிலேதுமில்லை..
தீர்க்கமாய்த் தீர்மானித்தேன்…
வாழ்க்கையைத் தருகிற
கொடி ஒன்று வரும்வரை
கொடிகள் தைப்பதைத்
தள்ளி வைக்கலாமென்று….
நண்பர்களே கட்சிக்கொடிகள் கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்து விட்டுச்செல்லலாமே..
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)









35 Responses to “கட்சிக் கொடிகள்”
Oct 20, 2011, 12:28:00 AM
கவிதை நன்று. பகிர்வுக்கு நன்றி நண்பா!
Oct 20, 2011, 12:48:00 AM
@Abdul Basith said... 1
//கவிதை நன்று. பகிர்வுக்கு நன்றி நண்பா!//
முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Oct 20, 2011, 2:00:00 AM
வணக்கம் சகோதரம்,
நலமா?
நையாண்டியும் எள்ளலும் கலந்து உங்களின் இக் கவிதை கட்சி கொடிகளின் பின்னே உள்ள சேதிகளைப் பேசி நிற்கிறது..
ரசித்தேன்.
Oct 20, 2011, 2:16:00 AM
கொடிகள்
தோரணமாய்
தொங்குவதைக் கண்டால்
வருத்தமாயிருக்கும் எனக்கு…
என்ன பெரிதாய்
இழப்பு நேர்ந்தது ?
அவைகள் தூக்குபோட்டு
கொல்(ள்)வதற்க்கு…..?
நன்றாக இருக்கிறது!
Oct 20, 2011, 7:10:00 AM
////நான்...
கட்சிக் கொடிகளைத்
தைக்கின்ற ஓர் அப்பாவி…!
வண்ணங்களை
சேர்ப்பதோடு சரி.
எண்ணங்களை பற்றி
அறியாத பாவி !
தைக்கும் வரை
கொடிகளுக்கு
நான் எஜமானன்….
தைத்த பின்
கொடிகள்
எனக்கு எஜமானன்…/////
யதார்தமான வார்த்தைகள்
Oct 20, 2011, 7:44:00 AM
@ நிரூபன் said... 3
//வணக்கம் சகோதரம்,
நலமா?
நையாண்டியும் எள்ளலும் கலந்து உங்களின் இக் கவிதை கட்சி கொடிகளின் பின்னே உள்ள சேதிகளைப் பேசி நிற்கிறது..
ரசித்தேன்.//
வணக்கம் சகோ..மிக்க நலமே..
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி
நட்புடன்
சம்பத்குமார்
Oct 20, 2011, 7:45:00 AM
நம்பிக்கைபாண்டியன் said... 4
//நன்றாக இருக்கிறது!//
வருகைக்கும் தளத்தில் இணைந்ததிற்க்கும் மிக்க மகிழ்ச்சி நண்பரே..
மீண்டும் வருக..
Oct 20, 2011, 7:47:00 AM
@ K.s.s.Rajh said... 5
//யதார்தமான வார்த்தைகள்//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்பின் வழியில்
சம்பத்குமார்
Oct 20, 2011, 8:32:00 AM
மாப்ள நச் என்று இருக்கு...கவிதை அருமை!
Oct 20, 2011, 10:22:00 AM
வண்ண மயமான கட்சி கொடிகளால் வண்ணமில்லாமல் இருண்டு தான் கிடக்கிறது நமது வாழ்வு
Oct 20, 2011, 12:02:00 PM
உங்கள் வார்த்தைகள் கூர்மையாக இருக்கின்றன. அதே முனைப்போடு பயணம் தொடருங்கள். வாழ்த்துக்கள்.
Oct 20, 2011, 2:22:00 PM
கவிதை அருமை... நண்பரே...
Oct 20, 2011, 3:21:00 PM
அருமை அருமை நண்பரே
Oct 20, 2011, 4:40:00 PM
அருமை சகோ ..
வார்த்தைகள் விளையாடி இருக்கிறது
Oct 20, 2011, 7:14:00 PM
தைக்கும் போது
குனிந்த என்
தலையை அவை
பறக்கும் போதும்
குனிய வைக்கின்றன…
குனிவதற்க்கு
எனக்கொன்றும் வெட்கமில்லை...
தேசமே
உலகவங்கியிடம்
தலைகுனியும்போது…!
//
அருமை நண்பரே!
தலை நிமிர்வோமா?
Oct 20, 2011, 8:04:00 PM
@ விக்கியுலகம் said... 9
//மாப்ள நச் என்று இருக்கு...கவிதை அருமை!//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி மாம்ஸ்
Oct 20, 2011, 8:05:00 PM
@ suryajeeva said... 10
//வண்ண மயமான கட்சி கொடிகளால் வண்ணமில்லாமல் இருண்டு தான் கிடக்கிறது நமது வாழ்வு//
நிதர்சனமான உண்மை நண்பரே..
Oct 20, 2011, 8:07:00 PM
@ ரசிகன் said... 11
//உங்கள் வார்த்தைகள் கூர்மையாக இருக்கின்றன. அதே முனைப்போடு பயணம் தொடருங்கள். வாழ்த்துக்கள்.//
தங்களின் ஆதரவோடு பயணம் தொடரும் நண்பரே
Oct 20, 2011, 8:08:00 PM
@ ராஜா MVS said... 12
//கவிதை அருமை... நண்பரே...//
மிக்க நன்றி திரு.ராஜா அவர்களே
Oct 20, 2011, 8:09:00 PM
@ jayaram thinagarapandian said... 13
//அருமை அருமை நண்பரே//
மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Oct 20, 2011, 8:12:00 PM
@ ஜ.ரா.ரமேஷ் பாபு said... 14
//அருமை சகோ ..
வார்த்தைகள் விளையாடி இருக்கிறது//
தளம் வந்து கருத்துரை இட்டதிற்க்கும் நண்பராய் இணைந்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்பு பயணம் இனிதே தொடங்கட்டும்
Oct 20, 2011, 8:13:00 PM
@ கோகுல் said... 15
//தைக்கும் போது
குனிந்த என்
தலையை அவை
பறக்கும் போதும்
குனிய வைக்கின்றன…
குனிவதற்க்கு
எனக்கொன்றும் வெட்கமில்லை...
தேசமே
உலகவங்கியிடம்
தலைகுனியும்போது…!
//
அருமை நண்பரே!
தலை நிமிர்வோமா?//
நிச்சயமாய் நண்பரே..
Oct 20, 2011, 9:24:00 PM
கவிதை நன்று... பகிர்வுக்கு நன்றி நண்பா...
Oct 20, 2011, 10:06:00 PM
நன்றி சம்பத்குமார்,என் பதிவிற்கு வந்து கருத்துசொன்னதற்கு.
தங்களின் பதிவு மிக அருமையாக உள்ளது.பின் தொடருகிறேன்.நன்றி.
Oct 20, 2011, 10:07:00 PM
//தைக்கும் வரை
கொடிகளுக்கு
நான் எஜமானன்….
தைத்த பின்
கொடிகள்
எனக்கு எஜமானன்//
அருமையான வரிகள்.
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
Oct 20, 2011, 10:12:00 PM
நல்ல அருமையான கவிதை பாஸ்
Oct 21, 2011, 7:59:00 AM
@ ரெவெரி said... 23
//கவிதை நன்று... பகிர்வுக்கு நன்றி நண்பா...//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Oct 21, 2011, 8:01:00 AM
RAMVI said... 25
Oct 20, 2011 10:07:00 PM
//அருமையான வரிகள்.
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.//
வணக்கம் சகோ..தங்கள் கருத்துக்கும்,நண்பராய் இணைந்த்ததிற்க்கும் மிக்க நன்றி..
தொடரட்டும் நட்பின் பயணங்கள்
Oct 21, 2011, 8:07:00 AM
@வைரை சதிஷ் said... 26
/நல்ல அருமையான கவிதை பாஸ்//
மிக்க நன்றி திரு.சதீஷ் அவர்களே
Oct 21, 2011, 9:42:00 PM
அருமையான கவிதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_21.html
Oct 21, 2011, 9:53:00 PM
சரியான நேரத்தில் சரியான தலைப்பு..உங்களுக்கு........வண்ணமயமான வளர்ச்சி நிச்சயம்..
Oct 21, 2011, 9:57:00 PM
@ Rathnavel said... 30
//அருமையான கவிதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.//
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் முக நூல் பகிர்விற்க்கும் மிக்க நன்றி ஐயா
Oct 21, 2011, 10:02:00 PM
வெகு அருமையான கவிதை பாஸ்...!
Oct 21, 2011, 10:19:00 PM
@ Roaming Raman said... 31
//சரியான நேரத்தில் சரியான தலைப்பு..உங்களுக்கு........வண்ணமயமான வளர்ச்சி நிச்சயம்..//
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
மீண்டும் வருக..
Oct 21, 2011, 10:23:00 PM
@பன்னிக்குட்டி ராம்சாமி said... 33
//வெகு அருமையான கவிதை பாஸ்...!//
வாருங்கள் திரு.ராமசாமி அவர்களே..தாங்கள் தளம் வந்து கருத்திட்டதிற்க்கும் நண்பராய் இணைந்த்திற்க்கும் மிக்க நன்றி..
நட்பின் பயணம் தொடரட்டும்
நன்றியுடன்
சம்பத்குமார்
Post a Comment