October 29, 2011

வயதான மூதாட்டி..


ஓடித்திரிகையில்
பக்கத்துவீட்டு மாமா
கோவிலுக்குச் சைக்கிளில்
அழைத்துச் சென்றார்..
”எவ்வளவு பக்தி” என்று
மகிழ்ச்சியாய் அனுப்பி வைத்தார்கள்

அப்போது அப்பாவின் சின்னஞ்சிறு மகள். !

கல்லூரி ஆண் நண்பர்களுடன்
சினிமா பார்க்கச் சென்றபோது
ஆளுக்கொரு புறம் முகம் தூக்கி
வைத்துக் கொண்டனர்…

அப்போது அண்ணனின் தங்கை. !

சாலை மறியலால்
குடும்ப நண்பரின் மொபட்டில் வர
எல்லார் கண்ணும் ஈட்டியானது…

அப்போது ஒருவருக்கு மனைவி !

”நான் கூட ஒருகாலத்தில்
கார் ஓட்டியிருக்கிறேன்”
சொன்னவனை கேலியாய் பார்த்தனர்

அப்போது பிள்ளைகளின் தாய்..!

”உனக்கெல்லாம் வண்டி சவாரி
ஒத்து வராதென”
வீட்டிலேயே உட்கார்த்திவிட்டு
கையசைத்துச் செல்கின்றனர்…

இப்போது குழந்தைகளுக்குப் பாட்டி !

யாருக்கும் தெரியவில்லை இன்னும்
நானும் ஓர் மனுஷியென….நண்பர்களே ! தீபாவளி பயணத்தில் என்னுடன் கலந்துகொண்டு வாழ்த்திய ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..


உறவுகளே...கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்..
35 Responses to “வயதான மூதாட்டி..”

இராஜராஜேஸ்வரி said...
Oct 29, 2011, 3:34:00 PM

நிதர்சனக்கவிதை !


vazeerali said...
Oct 29, 2011, 3:48:00 PM

உண்மையான எண்ணத்தை காலத்தோடு சொல்லும் களம்,அருமை! பாரட்டுக்கள் உறவே.
vazeerali.blogspot.com/


sharma said...
Oct 29, 2011, 4:19:00 PM

ப்ராரப்த கர்மாவினால் மனிதனாக பிறக்கிறோம். வளர்கிறோம், படிக்கின்றோம், உணவுக்காக, வாழ்க்கைக்காக சம்பாதிக்கின்றோம், வாழ்க்கை தொடர கணவனாகவோ, மனைவியாகவோ பிணைகின்றோம், இயற்கையான உடல் தேடுதலால் அப்பா அம்மா ஆகின்றோம்.சுதந்திரமாக செயல்படுகின்றோம் பாசமூட்டி வளர்ந்த குழந்தைகள் வளர்கின்றன. பிணி,மூப்பு தாய் தந்தை க்கும் வளர்கின்றது.தனி மனித சுதந்திரம் இங்கேதான் பாதிக்கப்படுகிறது. தாய்தந்தை எப்படி இனிமேல் வாழவேண்டும் என்பதை பிள்ளைகள் நிச்சயிக்கிறார்கள், இப்படித்தான் வாழவேண்டும் என்று கற்பிக்கப்படுகிறது. மீறினால் நிந்திக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிலும் கொடுமை அபத்னி வாழ்க்கை{மனைவி இல்லாமல் வாழ்வது} நிறைய ஹோம்கள் தோன்றியதற்கு இதுவே சாட்சிகள். பைசா இல்லாத பெற்றொர்கள் வாழ்க்கை இன்னும் கடினம். பிள்ளைகள் வளர வளர தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. அதுவும் மூன்று நான்கு பிள்ளைகள் இருந்துவிட்டால் அதைவிடக்கொடுமை. அங்கே கொஞ்சம் நாள் இங்கே கொஞ்சம் நாள் உறவுகள் பந்தாடப்படுகிறது. ஆயிரம் வசதி இருந்தாலும் ஈமச்சடங்குக்கூட ஷேர் செய்யும் வரவுசிலவு கணக்குகள். அப்பப்பா போதுமட சாமி. மலடியே பத்தினித்தன்மை நிறுபிக்கப்பட்ட உத்தமமான வாழ்க்கை. ஆக ஜீவனுக்கு மனிதச்சட்டை வேண்டாம் எனத்தோன்றுகிறது.
அதற்காக பிரார்த்தனை செய்வோம்.
அன்புடன். மீ.ச.ச.சிதம்பரம்.


தங்கம்பழனி said...
Oct 29, 2011, 4:22:00 PM

வாழ்க்கையின் யதார்தத்தை தங்களின் கவிதையில் வடித்திருக்கிறீர்கள்..!! அருமையான வார்த்தைகள்..!! தெளிவான எண்ண பிரதிபலிப்பு..!!

நன்றி பாராட்டுதல்கள். வாழ்க வளமுடன்..!!


தங்கம்பழனி said...
Oct 29, 2011, 4:43:00 PM

நேரமிருக்கும்போது இங்கு வந்து போங்கள்..


தங்கம் பழனி


RAMVI said...
Oct 29, 2011, 5:13:00 PM

அருமையாக இருக்கு சம்பத்குமார்.


Lakshmi said...
Oct 29, 2011, 5:20:00 PM

ரொம்ப யதார்த்தமானகவிதை. வாழ்த்துக்கள்.


suryajeeva said...
Oct 29, 2011, 5:40:00 PM

மனுஷி என்றோ மனுஷன் என்றோ எவரும் நினைப்பதில்லை... காசு அடிக்கும் மஷினாக இருக்கும் வரை மனுஷன்... இல்லை என்றால்...


உங்கள் நண்பன் said...
Oct 29, 2011, 6:49:00 PM

உணர்வுகளை மதிக்கும் பண்பு வந்தால்தான் உறவுகள் இனிக்கும்


ரெவெரி said...
Oct 29, 2011, 8:14:00 PM

நிதர்சனக்கவிதை...வாழ்த்துக்கள்...


koodal bala said...
Oct 29, 2011, 8:57:00 PM

உலக இயல்பை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ....அருமை!


காட்டான் said...
Oct 30, 2011, 12:37:00 AM

வணக்கம் குமார் 

வாழ்வின் யதார்த்தத்தை சொல்லிச்செல்லும் கவிதையில் கடைசி வரிகள் நெஞ்சை பிழிகின்றது.. எல்லா இடமும் நான் சொல்வதுதான் ஏன் முதியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.? வருங்கால முதியவர்கள் நிகழ்கால முதியவர்களை புறக்கனிக்கிறோம்.. என்னும் உண்மை தெரிஞ்சா ஏது இந்த நிலை..!!?


Rathnavel said...
Oct 30, 2011, 7:11:00 AM

அருமை


வியபதி said...
Oct 30, 2011, 9:09:00 AM

"யாருக்கும் தெரியவில்லை இன்னும்
நானும் ஓர் மனுஷியென…."

இந்த உணர்வை மற்றவர்கள் புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!!


கோகுல் said...
Oct 30, 2011, 1:41:00 PM

மனதைதொடும் (சுடும்)வரிகள்!


jayaram thinagarapandian said...
Oct 30, 2011, 2:16:00 PM

பெண்களையும் மனிதர்களாய் பார்க்க வேண்டும் ...
உலகில் பெண்களை பற்றிய புரிதல் மாறவேண்டும்


வைரை சதிஷ் said...
Oct 30, 2011, 5:48:00 PM

super


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 12:27:00 PM

@ இராஜராஜேஸ்வரி said... 1

//நிதர்சனக்கவிதை !//

முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 12:28:00 PM

@ vazeerali said... 2

//உண்மையான எண்ணத்தை காலத்தோடு சொல்லும் களம்,அருமை! பாரட்டுக்கள் உறவே.
vazeerali.blogspot.com///

தங்களின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 12:33:00 PM

@ sharma said... 3

//ப்ராரப்த கர்மாவினால் மனிதனாக பிறக்கிறோம். வளர்கிறோம், படிக்கின்றோம், உணவுக்காக, வாழ்க்கைக்காக சம்பாதிக்கின்றோம், வாழ்க்கை தொடர கணவனாகவோ, மனைவியாகவோ பிணைகின்றோம், இயற்கையான உடல் தேடுதலால் அப்பா அம்மா ஆகின்றோம்.சுதந்திரமாக செயல்படுகின்றோம் பாசமூட்டி வளர்ந்த குழந்தைகள் வளர்கின்றன. பிணி,மூப்பு தாய் தந்தை க்கும் வளர்கின்றது.தனி மனித சுதந்திரம் இங்கேதான் பாதிக்கப்படுகிறது. தாய்தந்தை எப்படி இனிமேல் வாழவேண்டும் என்பதை பிள்ளைகள் நிச்சயிக்கிறார்கள், இப்படித்தான் வாழவேண்டும் என்று கற்பிக்கப்படுகிறது. மீறினால் நிந்திக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிலும் கொடுமை அபத்னி வாழ்க்கை{மனைவி இல்லாமல் வாழ்வது} நிறைய ஹோம்கள் தோன்றியதற்கு இதுவே சாட்சிகள். பைசா இல்லாத பெற்றொர்கள் வாழ்க்கை இன்னும் கடினம். பிள்ளைகள் வளர வளர தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. அதுவும் மூன்று நான்கு பிள்ளைகள் இருந்துவிட்டால் அதைவிடக்கொடுமை. அங்கே கொஞ்சம் நாள் இங்கே கொஞ்சம் நாள் உறவுகள் பந்தாடப்படுகிறது. ஆயிரம் வசதி இருந்தாலும் ஈமச்சடங்குக்கூட ஷேர் செய்யும் வரவுசிலவு கணக்குகள். அப்பப்பா போதுமட சாமி. மலடியே பத்தினித்தன்மை நிறுபிக்கப்பட்ட உத்தமமான வாழ்க்கை. ஆக ஜீவனுக்கு மனிதச்சட்டை வேண்டாம் எனத்தோன்றுகிறது.
அதற்காக பிரார்த்தனை செய்வோம். //

ஆழ சிந்தித்து அருமையான தகவல்கள் அளித்த தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..

நட்புடன்
சம்பத்குமார்


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 12:34:00 PM

@ தங்கம்பழனி said... 4

//வாழ்க்கையின் யதார்தத்தை தங்களின் கவிதையில் வடித்திருக்கிறீர்கள்..!! அருமையான வார்த்தைகள்..!! தெளிவான எண்ண பிரதிபலிப்பு..!!

நன்றி பாராட்டுதல்கள். வாழ்க வளமுடன்..!!//

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 12:34:00 PM

@ RAMVI said... 6

//அருமையாக இருக்கு சம்பத்குமார்.//

மிக்க நன்றி சகோ..


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 12:35:00 PM

@ Lakshmi said... 7

//ரொம்ப யதார்த்தமானகவிதை. வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி அம்மா அவர்களே..


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 12:37:00 PM

@ suryajeeva said... 8

//மனுஷி என்றோ மனுஷன் என்றோ எவரும் நினைப்பதில்லை... காசு அடிக்கும் மஷினாக இருக்கும் வரை மனுஷன்... இல்லை என்றால்...//

உண்மைதான் நண்பரே..கடைசிவரை காசு அச்சடிக்கும் மெஷினாகவே பார்க்கப்படுகிறார்கள்.ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் வருவதும் இதன் விளைவே..


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 12:38:00 PM

@ உங்கள் நண்பன் said... 9

//உணர்வுகளை மதிக்கும் பண்பு வந்தால்தான் உறவுகள் இனிக்கும்//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 12:39:00 PM

@ ரெவெரி said... 10

//நிதர்சனக்கவிதை...வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றி சகோ..


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 12:40:00 PM

@ koodal bala said... 11

//உலக இயல்பை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ....அருமை!//

தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திரு.கூடல் பாலா அவர்களே..


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 12:43:00 PM

@ காட்டான் said... 12

//வாழ்வின் யதார்த்தத்தை சொல்லிச்செல்லும் கவிதையில் கடைசி வரிகள் நெஞ்சை பிழிகின்றது.. எல்லா இடமும் நான் சொல்வதுதான் ஏன் முதியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.? வருங்கால முதியவர்கள் நிகழ்கால முதியவர்களை புறக்கனிக்கிறோம்.. என்னும் உண்மை தெரிஞ்சா ஏது இந்த நிலை..!!?//

தங்களின் கூற்று முற்றிலும் உண்மைதான் நண்பரே..


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 12:44:00 PM

@ Rathnavel said... 13

//அருமை//

தங்களின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி ஐயா


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 12:45:00 PM

@ கோகுல் said... 15

//மனதைதொடும் (சுடும்)வரிகள்!//

வாங்க கோகுல் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 12:46:00 PM

@ வியபதி said... 14

//"யாருக்கும் தெரியவில்லை இன்னும்
நானும் ஓர் மனுஷியென…."

இந்த உணர்வை மற்றவர்கள் புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!!//

மிக்க நன்றி சகோ..பதிவினை சுவாசிக்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்வர் என நம்புவோம்


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 12:48:00 PM

@ jayaram thinagarapandian said... 16

//பெண்களையும் மனிதர்களாய் பார்க்க வேண்டும் ...
உலகில் பெண்களை பற்றிய புரிதல் மாறவேண்டும்//

உண்மைதான் சகோ..வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 12:49:00 PM

@வைரை சதிஷ் said... 17

//super//

மிக்க நன்றி திரு.சதீஷ் அவர்களே


M.R said...
Oct 31, 2011, 4:21:00 PM

வெளித்தோற்றத்துக்கு பல பெயர்கள் குடுத்த நீங்கள் ஏன் என் அகத்தோற்றத்தை கவனிக்க வில்லை என்பதை உணர்த்தும் கவிதை அருமை நண்பரே


சம்பத் குமார் said...
Oct 31, 2011, 5:34:00 PM

@ M.R said... 34

//வெளித்தோற்றத்துக்கு பல பெயர்கள் குடுத்த நீங்கள் ஏன் என் அகத்தோற்றத்தை கவனிக்க வில்லை என்பதை உணர்த்தும் கவிதை அருமை நண்பரே//

தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


;