October 31, 2011
வேலி தாண்டிய கணத்தில்..
வேலி கடந்த கணத்தில்
முகத்தில் உறைத்தது
சூழல்..!
நிறைய பார்த்தேன்...
பனியிலும் வெயிலிலும்
பாரம் இழுக்கும்
காளைகளை !
அநாதைகளாய் சாலைகளில்
மரிக்கும் கன்றுக்குட்டிகளை !
திருடப்பட்டு
இறைச்சிக் கடைகளில்
தொங்கும் அடிமாடுகளை !
ஈக்களும் கொசுக்களும்
மொய்க்க
சாலையோரம் துயிலும்
பசுக்களை !
நீயும்
இதுபோலாக வேண்டுமா ?
மிரட்டி மூக்கணாங்கயிறு
சொருகிக்
கட்டிப்போட்டார்கள்
நேரத்திற்க்குப்
புண்ணாக்கு
வைக்கோல் புல்கூட
உண்டு
வெதுவெதுப்பான
தொழுவம்...
மாலையில் வேலியிட்ட
தோட்டத்தில்
உலாவல்...!
நன்றாகவே இருக்கிறது..
கொஞ்சம் கண் மறைந்தாலும்
அழுதுவிடுகிறது
கன்று...
பால் குடிக்கும்
போது முட்டித் தீர்க்கிறது
கோபமாய் மாறிய
அழுகையை...!
எனினும்...
சிலநேரம் இழைந்து
வரும்
மூச்சுகாற்று சொல்கிறது
“தோட்டத்திற்க்கு
வெளியிலும் உலகமிருக்கிறது”.
நண்பர்களே ! தாய்பசு வேலி தாண்டிய க(வி)தை பிடித்திருந்தால் தங்களது எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து விட்டுச்செல்லுங்கள்
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)








34 Responses to “வேலி தாண்டிய கணத்தில்..”
Oct 31, 2011, 8:58:00 PM
அருமை.
Oct 31, 2011, 8:59:00 PM
சிலநேரம் இழைந்து வரும்
மூச்சுகாற்று சொல்கிறது
“தோட்டத்திற்க்கு வெளியிலும் உலகமிருக்கிறது”./
நிதர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
Oct 31, 2011, 9:04:00 PM
சுதந்திரம் விரும்பாதவர் யாருமில்லை, எவ்வளவு சொகுசாக இருந்தாலும்
Oct 31, 2011, 9:14:00 PM
கவிதை மிக அருமை... நண்பரே...
Oct 31, 2011, 9:33:00 PM
கொஞ்சம் கண் மறைந்தாலும்
அழுதுவிடுகிறது கன்று...
பால் குடிக்கும் போது முட்டித் தீர்க்கிறது
கோபமாய் மாறிய அழுகையை...!
//
அருமையான சொல்லோடல்!
நல்ல பகிர்வு நண்பரே!
Oct 31, 2011, 10:09:00 PM
தோட்டத்திற்க்கு வெளியிலும் உலகமிருக்கிறது...உண்மை தான்...
கவிதை மிக அருமை நண்பரே...
Oct 31, 2011, 11:10:00 PM
வட்டத்திற்கு அப்பாலும் உலகம் இருக்கிறது..... வாழ்த்துக்கள்
அருமை
Oct 31, 2011, 11:30:00 PM
@Rathnavel said... 1
//அருமை.//
முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி ஐயா..
Oct 31, 2011, 11:31:00 PM
@ இராஜராஜேஸ்வரி said... 2
//நிதர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//
மிக்க நன்றி திரு.இராஜராஜேஸ்வரி அவர்களே..
நன்றியுடன்
சம்பத்குமார்
Oct 31, 2011, 11:32:00 PM
@ suryajeeva said... 3
//சுதந்திரம் விரும்பாதவர் யாருமில்லை, எவ்வளவு சொகுசாக இருந்தாலும்//
நிதர்சனமான உண்மை நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Oct 31, 2011, 11:33:00 PM
@ ராஜா MVS said... 4
//கவிதை மிக அருமை... நண்பரே...//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
Oct 31, 2011, 11:35:00 PM
கோகுல் said... 5
//அருமையான சொல்லோடல்!
நல்ல பகிர்வு நண்பரே!//
மிக்க நன்றி திரு.கோகுல் அவர்களே..
Oct 31, 2011, 11:36:00 PM
@ ரெவெரி said... 6
//தோட்டத்திற்க்கு வெளியிலும் உலகமிருக்கிறது...உண்மை தான்...
கவிதை மிக அருமை நண்பரே...//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Oct 31, 2011, 11:37:00 PM
@ ஆமினா said... 7
//வட்டத்திற்கு அப்பாலும் உலகம் இருக்கிறது..... வாழ்த்துக்கள்
அருமை//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி சகோ..
நட்புடன்
சம்பத்குமார்
Nov 1, 2011, 1:14:00 AM
பகிர்வுக்கு நன்றி!
Nov 1, 2011, 7:38:00 AM
@தங்கம்பழனி said... 15
//பகிர்வுக்கு நன்றி!//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
Nov 1, 2011, 9:40:00 AM
யதார்த்தமான வரிகள்,அருமையான பகிர்வு பாஸ்
Nov 1, 2011, 9:43:00 AM
அடைத்துப் போட்ட இடத்தில் தேவைகள் அனைத்தும் கிடைத்தாலும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துடிக்கும் உணர்வு நன்கு சொல்லப் பட்டுள்ளது இப் பதிவினில். வாழ்த்துக்கள்.
Nov 1, 2011, 10:04:00 AM
இனிய காலை வணக்கம் பாஸ்,
நலமா?
தீபாவளிக் கொண்டாட்டங்கள் எப்படி?
வேலி தாண்டிய தாய்ப் பசுவைப் பற்றிய கவிதை எனக்கு இரு பொருளைத் தருகின்றது.
ஒன்று தங்களின் உயிரினங்கள் மேலான ஆவலைச் சொல்லி நிற்கும் பசுவைப் பற்றி பேசி நிற்கிறது.
இன்னோர் பொருள் மறை முகமாக வேலி தாண்டுவோரையும் ஒப்புவமையாக்கி சொல்லி நிற்கிறது இக் கவிதை.
Nov 1, 2011, 11:06:00 AM
பசுவின் பார்வையிலான கவிதை.
//“தோட்டத்திற்க்கு வெளியிலும் உலகமிருக்கிறது”.//
பிரமாதம்.
Nov 1, 2011, 12:00:00 PM
வணக்கம் சம்பத்
கவிதை அருமை சுதந்திரத்திற்கு வேண்டி நிற்கும் அதேவேளை இருக்கும் வசதிகளையும் விட இயலாத மனநிலையை சுட்டி நிற்கிறது உங்கள் கவிதை என்று பொருள் கொள்ளலாமா..!!?
வாழ்த்துக்கள்..
Nov 1, 2011, 1:18:00 PM
உண்மையில் அழகிய வடிவில் அற்புதமான கவிதை..
வாழ்த்துக்கள்..
Nov 1, 2011, 2:16:00 PM
நல்ல அருமையான கவிதை ............நன்றிகள் பல...............
Nov 1, 2011, 5:34:00 PM
@ K.s.s.Rajh said... 17
//யதார்த்தமான வரிகள்,அருமையான பகிர்வு பாஸ்//
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Nov 1, 2011, 5:35:00 PM
@ வியபதி said... 18
//அடைத்துப் போட்ட இடத்தில் தேவைகள் அனைத்தும் கிடைத்தாலும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துடிக்கும் உணர்வு நன்கு சொல்லப் பட்டுள்ளது இப் பதிவினில். வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி நண்பரே
Nov 1, 2011, 6:50:00 PM
@ நிரூபன் said... 19
//வேலி தாண்டிய தாய்ப் பசுவைப் பற்றிய கவிதை எனக்கு இரு பொருளைத் தருகின்றது.
ஒன்று தங்களின் உயிரினங்கள் மேலான ஆவலைச் சொல்லி நிற்கும் பசுவைப் பற்றி பேசி நிற்கிறது.
இன்னோர் பொருள் மறை முகமாக வேலி தாண்டுவோரையும் ஒப்புவமையாக்கி சொல்லி நிற்கிறது இக் கவிதை.//
வணக்கம் சகோ..தங்களது ஆழமான கருத்திற்க்கு மிக்க நன்றி நண்பரே..
தாங்கள் கூறியதும் முற்றிலும் உன்மையே..
Nov 1, 2011, 6:52:00 PM
@ RAMVI said... 20
//பசுவின் பார்வையிலான கவிதை.
பிரமாதம். //
வாருங்கள் திரு.RAMVI அவர்களே..தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ
Nov 1, 2011, 6:53:00 PM
@ காட்டான் said... 21
//வணக்கம் சம்பத்
கவிதை அருமை சுதந்திரத்திற்கு வேண்டி நிற்கும் அதேவேளை இருக்கும் வசதிகளையும் விட இயலாத மனநிலையை சுட்டி நிற்கிறது உங்கள் கவிதை என்று பொருள் கொள்ளலாமா..!!?//
இனிய மாலை வணக்கம் நண்பரே..தங்களின் கூற்று முற்றிலும் உண்மைதான்.
Nov 1, 2011, 6:55:00 PM
@ கவிதை வீதி... // சௌந்தர் // said... 22
//உண்மையில் அழகிய வடிவில் அற்புதமான கவிதை..
வாழ்த்துக்கள்..//
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
Nov 1, 2011, 6:58:00 PM
@ கண்ணன் said... 23
//நல்ல அருமையான கவிதை ............நன்றிகள் பல //
வாருங்கள் திரு.கண்ணன் அவர்களே..
தங்களின் முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
மீண்டும் வருக..
Nov 1, 2011, 8:09:00 PM
எனினும்...
சிலநேரம் இழைந்து வரும்
மூச்சுகாற்று சொல்கிறது
“தோட்டத்திற்க்கு வெளியிலும் உலகமிருக்கிறது”.
எஸ் அருமை.
Nov 1, 2011, 8:19:00 PM
மிக நன்று.
Nov 1, 2011, 10:06:00 PM
@ Lakshmi said... 31
//எஸ் அருமை.//
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி அம்மா...
Nov 1, 2011, 10:07:00 PM
@ சென்னை பித்தன் said... 32
//மிக நன்று.//
மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Post a Comment