October 24, 2011

தீபாவளி பயணம்அடித்துப் பிடித்துக் கொண்டு
ஊருக்கு கிளம்பினேன்
முதன் முதலாய் தீபாவளிக்காக
பாட்டியின் வீட்டிற்க்கு...!

பர்ஸ் முதல் பற்பசைவரை
எல்லாவற்றையும்
தூக்கிக் கொண்டு..!

பேருந்து
விரைந்து கொண்டே இருந்த்து
இரவைக் கிழித்தபடி….!

தூக்கம் பிடிக்கவில்லை
சன்னலோரம்
கதை பேசியது காற்று...!

பௌர்ணமி நிலவு
நதியில் ஓடி மறைந்தது
கோவில் கோபுரம் தகதகத்தது…!


வாழைத் தோட்டங்கள் விழித்திருந்தன
புலர்ந்த போது
வெளிய நிலா
வயல் நீரில் தேய்ந்துபோனது..!

இன்னும் இன்னுமென்று
ஓடிக்கொண்டிருந்த பேருந்து
நின்றது...!

இரண்டு நாரைகள்
தூக்கம் கலைந்து பறந்து போயின...

செம்மணல் மேடுகள்
பளிச்செனப்
பார்வையில் இடறின...

தூரத்தில் கடலும் கைதட்டிகூப்பிட்டது
இறங்கிச்
சிலவீடுகளை கடந்துபோனபோது
வேலியில் ஆவலாய் முகங்கள்
“யார் இவன் ?”


வாஞ்சயுடன் பாட்டி கை இறுக்கி
ஏக்கத்துடன் கேட்டாள் “எல்லாரும் சுகமா ?”

பக்கத்திலேயே அமர்ந்து பரிமாறினாள்,
பார்த்தவர்கள் எல்லோரிடமும்
அறிமுகப் படுத்தினாள்...

”ஏன் இப்படி கூடு மாதிரி இருக்கிறாய் ?”
எனக்காக கவலைப்பட்டாள்..!

புத்தகங்களும் பத்திரிக்கைகளும்
கொஞ்சம் தள்ளி நின்றன..!

மீறிக் கையிலெடுத்தாலும்
எட்டி நின்று கவனிக்கும் குழந்தைகள்
மூட வைத்துவிடும்...!

எல்லாம் முடிந்து
ஊருக்கு கிளம்பியவுடன்
மீண்டும் தனியே பாட்டி...!
துணைக்கு...
ஒரு பசுமாடும்
இரண்டு பூனைக்குட்டிகளும்…!
உறவுகளே ! பல உண்மைகளை உணர்த்திய ”தீபாவளி பயணகவிதை” பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.
நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்பேரண்ட்ஸின் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்..


நட்புடன்
சம்பத்குமார்
தமிழ்பேரண்ட்ஸ்61 Responses to “தீபாவளி பயணம்”

தங்கம்பழனி said...
Oct 24, 2011, 8:29:00 AM

தீபாவளி வாழ்த்துப் படம் அருமை!


கவி அழகன் said...
Oct 24, 2011, 8:55:00 AM

கவிதை கலக்குது
தீபாவளி வாழ்துக்கள்


veedu said...
Oct 24, 2011, 9:27:00 AM

அருமை....அருமை....


விக்கியுலகம் said...
Oct 24, 2011, 10:10:00 AM

தீபாவளி வாழ்துக்கள்!


நிரூபன் said...
Oct 24, 2011, 10:12:00 AM

இனிய காலை வணக்கம் பாஸ்,

ஊர் நினைவுகளைச் சுமந்து, உறவினர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் தீபாவளியின் மகத்துவத்தைச் சொல்லி நிற்கிறது இக் கவிதை.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!


ஆமினா said...
Oct 24, 2011, 10:14:00 AM

பாட்டியின் நிலை கடைசியில் பரிதாபமாக இருந்தது

தீபாவளி வாழ்த்துக்கள் சகோ


ஜ.ரா.ரமேஷ் பாபு said...
Oct 24, 2011, 10:40:00 AM

அருமை சகோ தனிமையின் வலி அற்புதமாய் சொல்லி இருக்கிறீர்கள்


கோகுல் said...
Oct 24, 2011, 11:21:00 AM

பாட்டியின் உணர்வுகளைக்கூர வார்த்தைகள் இல்லை.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!


suryajeeva said...
Oct 24, 2011, 11:28:00 AM

ஒவ்வொரு பயணங்களும் இனிமையானது தான், இது புதுமையானது


M.R said...
Oct 24, 2011, 1:20:00 PM

தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே

கவிதை அருமை ,ஆனாலும் அது தரும் அர்த்தம் தனிமை ,உறவை பிரிந்த சோகம் .மனதை தொடுகிறது நண்பரே


ராஜா MVS said...
Oct 24, 2011, 2:04:00 PM

இன்றைய உறவுகளின் நிலை உணர்த்தும் அருமையான பயணம்...

என் இனிய தீபாவளி வாழ்த்துகள்... நண்பரே...


K.s.s.Rajh said...
Oct 24, 2011, 2:05:00 PM

தீபாவளிக்கவிதை அழகு...தீபாவளி வாழ்த்துக்கள்


தனிமரம் said...
Oct 24, 2011, 2:38:00 PM

பாட்டியின் ஊடே நல்ல
ஒரு கவிதையையும் நினைவுகளையும் மீட்டுப்பார்க்கும் இனிய கவிதை தீபாவளி வாழ்த்துக்கள் .


வேங்கட ஸ்ரீனிவாசன் said...
Oct 24, 2011, 2:50:00 PM

அருமையான கவிதை நண்பரே.


வேங்கட ஸ்ரீனிவாசன் said...
Oct 24, 2011, 3:06:00 PM

தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பா!


Rathnavel said...
Oct 24, 2011, 3:21:00 PM

அருமையான கவிதை.
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்


ஹைதர் அலி said...
Oct 24, 2011, 3:56:00 PM

நல்ல கவிதை
முதல் படம் மிக இயல்பாக இருக்கிறது


விச்சு said...
Oct 24, 2011, 4:23:00 PM

உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கவிதை.


RAMVI said...
Oct 24, 2011, 4:39:00 PM

அருமையான கவிதை.
கடைசியில் மீண்டும் பாட்டியை நீங்கள் தனியே விட்டு வந்தது மனதை கனக்க செய்துவிட்டது.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


ரெவெரி said...
Oct 24, 2011, 6:15:00 PM

அருமையான கவிதை...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 6:57:00 PM

@ தங்கம்பழனி said... 1

//தீபாவளி வாழ்த்துப் படம் அருமை!//

முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 6:58:00 PM

@ கவி அழகன் said... 2

//கவிதை கலக்குது
தீபாவளி வாழ்துக்கள்//

மிக்க நன்றி நண்பரே..

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 6:59:00 PM

@ veedu said... 3

//அருமை....அருமை....//

மிக்க நன்றி சகோ..


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 7:00:00 PM

@ விக்கியுலகம் said... 4

//தீபாவளி வாழ்துக்கள்!//

நன்றி மாம்ஸ்


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 7:01:00 PM

@ நிரூபன் said... 5

//ஊர் நினைவுகளைச் சுமந்து, உறவினர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் தீபாவளியின் மகத்துவத்தைச் சொல்லி நிற்கிறது இக் கவிதை.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!//

வருகைக்கும் ஆழமான கருத்திற்க்கும் மிக்க நன்றி திரு.நிரூபன் அவர்களே..


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 7:02:00 PM

@ ஆமினா said... 6

//பாட்டியின் நிலை கடைசியில் பரிதாபமாக இருந்தது

தீபாவளி வாழ்த்துக்கள் சகோ//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி சகோ


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 7:04:00 PM

@ ஜ.ரா.ரமேஷ் பாபு said... 7

//அருமை சகோ தனிமையின் வலி அற்புதமாய் சொல்லி இருக்கிறீர்கள்//

மிக்க நன்றி சகோ..

மனப்பூர்வ வாழ்த்துக்களுடன்
சம்ப்த்குமார்


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 7:05:00 PM

@ கோகுல் said... 8

//பாட்டியின் உணர்வுகளைக்கூர வார்த்தைகள் இல்லை.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!//

வாங்க திரு.கோகுல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 7:06:00 PM

@ suryajeeva said... 9

//ஒவ்வொரு பயணங்களும் இனிமையானது தான், இது புதுமையானது//

வாருங்கள் நண்பரே வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 7:08:00 PM

@ M.R said... 10

//கவிதை அருமை ,ஆனாலும் அது தரும் அர்த்தம் தனிமை ,உறவை பிரிந்த சோகம் .மனதை தொடுகிறது நண்பரே//

வருகை புரிந்த தங்களுக்கு என் மனப்பூர்வ நன்றி

நன்றிகளுடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 7:09:00 PM

@ ராஜா MVS said... 11

//இன்றைய உறவுகளின் நிலை உணர்த்தும் அருமையான பயணம்...//

எந்தன் பயணத்தில் இணைந்த தங்களுக்கு என் நன்றிகள்


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 7:12:00 PM

@ K.s.s.Rajh said... 12

//தீபாவளிக்கவிதை அழகு...தீபாவளி வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி திரு.ராஜா அவர்களே..

தங்களின் வெற்றிப்பயண்ம் தொடர என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 7:15:00 PM

@ தனிமரம் said... 13

//பாட்டியின் ஊடே நல்ல
ஒரு கவிதையையும் நினைவுகளையும் மீட்டுப்பார்க்கும் இனிய கவிதை தீபாவளி வாழ்த்துக்கள் .//

தங்கள் வருகைக்கும் வழங்கிய கருத்திற்க்கும் மிக்க நன்றி..

நண்பராய் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி

இன்று முதல் தொடரட்டும் நட்பின் பயணங்கள்..


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 7:16:00 PM

@ வேங்கட ஸ்ரீனிவாசன் said... 14

//அருமையான கவிதை நண்பரே.//

மிக்க நன்றி நண்பரே..

நல்வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 7:18:00 PM

@ ஹைதர் அலி said... 17

//நல்ல கவிதை
முதல் படம் மிக இயல்பாக இருக்கிறது//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 7:19:00 PM

@ Rathnavel said... 16

//அருமையான கவிதை.
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி ஐயா..


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 7:20:00 PM

@ விச்சு said... 18

//உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கவிதை.//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திரு.விச்சு அவர்களே


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 7:23:00 PM

@ RAMVI said... 19

//அருமையான கவிதை.
கடைசியில் மீண்டும் பாட்டியை நீங்கள் தனியே விட்டு வந்தது மனதை கனக்க செய்துவிட்டது.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

ஆழமாய் கருத்திட்ட தங்களுக்கு என் மனப்பூர்வ நன்றிகள் சகோ..


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 7:25:00 PM

@ ரெவெரி said... 20

//அருமையான கவிதை...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றி திரு.ரெவெரி அவர்களே..

வாழ்த்துக்கள் உங்களுக்கும்


ரசிகன் said...
Oct 24, 2011, 9:18:00 PM

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...


vetha.Elangathilakam. said...
Oct 24, 2011, 9:19:00 PM

''...மீண்டும் தனியே பாட்டி...!துணைக்கு...ஒரு பசுமாடும்இரண்டு பூனைக்குட்டிகளும்…!''
இது தான் உண்மையான யதார்த்தம் அல்லவா! இனிய தீபாவளி வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 9:47:00 PM

@ ரசிகன் said... 40

//ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...//

உண்மைதான் நண்பரே..

தங்களுக்கு என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்


சம்பத்குமார் said...
Oct 24, 2011, 9:49:00 PM

vetha.Elangathilakam. said... 41

//''...மீண்டும் தனியே பாட்டி...!துணைக்கு...ஒரு பசுமாடும்இரண்டு பூனைக்குட்டிகளும்…!''
இது தான் உண்மையான யதார்த்தம் அல்லவா! இனிய தீபாவளி வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.//

ஆம் சகோதரி.. ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கும் நிதர்சன நிகழ்வுகள் தான் இவை

தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்


எஸ் சக்திவேல் said...
Oct 25, 2011, 2:20:00 AM

பாட்டியின் நிலை மட்டுமல்ல, பாட்டியைத் தனியாக விடவேண்டி வந்த நாங்களும் பரிதாபம்தான்.


விச்சு said...
Oct 25, 2011, 6:36:00 AM

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா...


மாய உலகம் said...
Oct 25, 2011, 10:39:00 AM

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே!... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...


Jaleela Kamal said...
Oct 25, 2011, 12:44:00 PM

கவிதை அருமை இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


naren said...
Oct 25, 2011, 2:37:00 PM

கவிதை அருமை, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

//பௌர்ணமி நிலவு
நதியில் ஓடி மறைந்தது
கோவில் கோபுரம் தகதகத்தது…!//

தீபாவளி அன்று அமாவாசை, பெளர்ணமி நிலவு எங்கு வந்தது???

கவிதைக்கு நன்றி


சம்பத்குமார் said...
Oct 25, 2011, 3:21:00 PM

@ எஸ் சக்திவேல் said... 44

//பாட்டியின் நிலை மட்டுமல்ல, பாட்டியைத் தனியாக விடவேண்டி வந்த நாங்களும் பரிதாபம்தான்.//

உண்மைதான் நண்பரே..

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி


சம்பத்குமார் said...
Oct 25, 2011, 3:22:00 PM

@ விச்சு said... 45

//தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா...//

தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே


சம்பத்குமார் said...
Oct 25, 2011, 3:24:00 PM

@ மாய உலகம் said... 46

//தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே!... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...//

மனப்பூர்வ நன்றிகள் நண்பரே..

தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்


சம்பத்குமார் said...
Oct 25, 2011, 3:24:00 PM

@ Jaleela Kamal said... 47

//கவிதை அருமை இனிய தீபாவளி வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி சகோ..


சம்பத்குமார் said...
Oct 25, 2011, 3:27:00 PM

@ naren said... 48

//கவிதை அருமை, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

//பௌர்ணமி நிலவு
நதியில் ஓடி மறைந்தது
கோவில் கோபுரம் தகதகத்தது…!//

கவிதைக்கு நன்றி //

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

தங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் நண்பரே..


dr.tj vadivukkarasi said...
Oct 25, 2011, 11:03:00 PM

ஆஹா !


jayaram thinagarapandian said...
Oct 25, 2011, 11:27:00 PM

இந்த பயணங்கள் ,
வெறும் பயணங்கள் அல்ல ...
ஒவ்வொரு பண்டிகையின் போதும்
உறவுகளை காண செய்யப்படும் புனித யாத்திரை ...

கவிதை அருமை
தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்


வைரை சதிஷ் said...
Oct 26, 2011, 2:33:00 PM

அருமை

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்


வியபதி said...
Oct 27, 2011, 8:54:00 AM

"மீண்டும் தனியே பாட்டி...!துணைக்கு...ஒரு பசுமாடும் இரண்டு பூனைக் குட்டிகளும்"

பண்டிகை முடிந்து வந்தவர் திரும்பும் போது ஏற்படும் தனிமையை வெறுமையைப் படம் பிடித்துக் காட்டுகிறது இவ்வரிகள்.


சம்பத் குமார் said...
Oct 28, 2011, 6:56:00 PM

@ dr.tj vadivukkarasi said... 54

//ஆஹா !//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி டாக்டர்..


சம்பத் குமார் said...
Oct 28, 2011, 7:00:00 PM

@ jayaram thinagarapandian said... 55

//இந்த பயணங்கள் ,
வெறும் பயணங்கள் அல்ல ...
ஒவ்வொரு பண்டிகையின் போதும்
உறவுகளை காண செய்யப்படும் புனித யாத்திரை ...//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..


சம்பத் குமார் said...
Oct 28, 2011, 7:01:00 PM

@வைரை சதிஷ் said... 56

//அருமை

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்//

மிக்க நன்றி நண்பரே..


சம்பத் குமார் said...
Oct 28, 2011, 7:06:00 PM

@ வியபதி said... 57

//"மீண்டும் தனியே பாட்டி...!துணைக்கு...ஒரு பசுமாடும் இரண்டு பூனைக் குட்டிகளும்"

பண்டிகை முடிந்து வந்தவர் திரும்பும் போது ஏற்படும் தனிமையை வெறுமையைப் படம் பிடித்துக் காட்டுகிறது இவ்வரிகள்.//

மிக்க நன்றி நண்பரே..


;