October 8, 2011

காதலிக்கும் குழந்தைகளை கையாள்வது எப்படி ?


வணக்கம் நண்பர்களே ! மீண்டுமொரு குழந்தைகளுக்கான பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மிக்க மகிழ்ச்சி.ஒவ்வொரு நாளும் செய்தி ஊடகங்களைப் பார்ர்க்கிற பொழுது எங்கேனும் ஓர் மூலையில் பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கும் குழந்தைகள் காதல் வயப்பட்டு (?) காதலனுடன் ஓட்டம் என்பது போன்ற செய்திகள் அனுதினமும் வந்துகொண்டேதான் இருக்கின்றன.இதற்கான தீர்வுகளைப் பற்றி இன்றைய பதிவில் அலசப்போகின்றோம்.

பொதுவாகவே ஒரு ஆணுக்கு, பெண் மீது ஈர்ப்பு ஏற்படுவதும், பெண்ணுக்கு, ஆண் மீது ஈர்ப்பு ஏற்படுவதும் இயற்கைதான். என்றாலும், இது மீடியாக்களால் சீக்கிரமே வரவழைக்கப்படுவதும், கட்டாயம் காதலித்தே ஆகவேண்டும் என்று பலர் அலைவதும்தான் ஆபத்து.கல்லூரிக்கு சேர்ந்ததும் முதலில் கற்க வேண்டியது காதல்தான் என்றிருந்த சினிமா காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து, கல்லூரிக்குப் போவதே கூட காதலிக்கத்தான் என்ற மாயையை மாணவர்களிடம் உண்டாக்கிவிட்டது.காதலிப்பது ஹீரோக்கள் வேலை என்றாகிவிட்ட பிறகு, தன்னை ஹீரோவாக நினைக்கும் எல்லோரும் வலுக்கட்டாயமாகவாவது காதலை வரவழைத்துக் கொள்கிறார்கள்.

காதல் என்பது சக மனிதனை நேசித்தலின் விளைவு என்பது போய் உடல் கவர்ச்சி என்று சினிமாவால் கற்றுத்தரப்படுகிறது. அழகான ஒருத்தரை பார்த்தவுடன் ”காதலி” என்பதும் அவர் சம்மதம் பெற எந்த அளவுக்கும் போகலாம் என்பதும்தான் சினிமா கற்றுக்கொடுத்திருக்கிற காதல் பாடம்.நேசிப்பது என்ற அர்த்தத்தில், காதல் ஒன்றும் தப்பில்லைதான். ஆனால், படிக்கிற வயசில் அது எந்த அர்த்தமாக இருந்தாலும் தவறுதான்.காதலிக்க சரியான வயது இருபத்திநான்கு என்பது என் கருத்து. காரணம், மூளையில் முடிவெடுக்கும் திறன் தொடர்பான பகுதிகள் தன் முழு வளர்ச்சியை, இந்த வயதில்தான் எட்டுகிறது.காதல் என்பது புரிதலினால் வரவேண்டும். ஈர்ப்பினால் அல்ல. பசியோடு இருக்கும்பேது உணவென்று எதை பார்த்தாலும் சாப்பிடத் தோன்றும். இது ஈர்ப்பு. மாணவ பருவத்தில் வரும் காதல் பெரும்பாலும் இந்த ஈர்ப்பு தான்.

இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் மூல காரணம் நாம் நம் குழந்தைகளுக்கு அன்பை கற்றுத்தரவுமில்லை. அன்பை அவர்களிடம் காட்டுவதுமில்லை. வீட்டுக்கு வரும் குழந்தைகளின் நண்பர்களிடம் காட்டும் அன்பில் பாதியைகூட தங்கள் குழந்தைகளிடம் காட்டுவதில்லை. இது நம் பெற்றோர்களுக்கும் நம்மை பிடிக்கவில்லை என்ற எண்ணத்தை அவர்களுக்குள் ஏற்படுத்திவிடுகிறது.பெற்றோர்களால் அன்பு காட்டப்படாத குழந்தைகள்தான் சீக்கிரமே காதலிக்க துவங்குகிறார்கள். டீன் ஏஜ்ஜில் ஏற்படும் இனக்கவர்ச்சிக்கு காதல் என்று அவர்களாகவே பெயரும் சூட்டிக்கொள்கிறார்கள். இந்த வயதில் அவர்களுக்கு காதலிக்க தேவையானவை ஒரு பேனா, கொஞ்சம் பேப்பர், பொறுப்பில்லாத பெற்றோர்கள் மட்டுமே.

உங்கள் குழந்தைகள் அன்பின் அர்த்தத்தை வீட்டில் உணர்ந்துவிட்டால் வெளியிலும் அதே அர்த்தத்தோடுதான் நடந்து கொள்வார்கள்.வீட்டில் அன்பு கிடைக்காமல் ஆதரவாக பேச ஆள் இல்லாமல் வளரும்போதுதான் வெளியில் பரிவோடு யாராவது பேசும்போது அது பெரிய விஷயமாக தோன்ற ஆரம்பிக்கிறது.எனவே, அன்பென்றால் என்னவென்று நீங்கள் காட்டுங்கள். பெற்றோர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டுவதை பார்த்துத்தான் குழந்தைகள் முதலில் அன்பை கற்க வேண்டும்.உங்கள் குழந்தைகள் தவறுகள் செய்யும்போது சுட்டிக்காட்டுங்கள். சுட்டிக்காட்டிய பின்பும் வெறுப்போடே இருக்காதீர்கள். ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு குழந்தைகளிடம் நடந்து கொண்டாலும் இன்னொருவர், “உன்னிடம் கோபப்பட்டது சரியில்லை. ஆனால் உனக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கம்தானே தவிர உன் மேல் வெறுப்பு இல்லைஎன்று எடுத்துச் சொல்லி ஆதரவு காட்டுங்கள். குழந்தைகளுக்கு அன்பைப் பற்றி கற்றுக்கொடுங்கள். மதித்தல், விட்டுக்கொடுத்தல், எதிர்பார்ப்பின்றி நேசித்தல் என அதை விரிவாக அர்த்தப்படுத்திக் கொடுங்கள்.

தன் குழந்தை காதலிப்பது தெரிந்தவுடன் பெரும்பாலான பெற்றோர்கள் அவமானமாக உணர்கிறார்கள். தன் குழந்தையை சரியாக வளர்க்காததாக உணர்கிறார்கள்.தந்தையாக இருப்பவர் குழந்தையின் தாயிடம்  எப்படி குழந்தையை வளர்த்திருக்க ?” என்று ஆத்திரப்படுகிறார். பிறகு இருவருமாக சேர்ந்து குழந்தையை ஒரு வழி செய்துவிடுகிறார்கள். திட்டுகிறார்கள். மிரட்டுகிறார்கள், கெஞ்சவும் செய்கிறார்கள். மேலும் சில பெற்றோர்கள் அக்கம் பக்கம் நடக்கிற காதல் கதைகளை பார்த்துவிட்டு முன்னெச்சரிக்கையாகவோ அல்லது சந்தேகத்தாலோ தன் குழந்தையை யாரோடும் பேசாமல் பழகாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் கூண்டுக் கிளிபோல பாதுகாக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.ஆனால் காதல் பறவைகளை எந்த வேலியும் கட்டுப்படுத்த முடியாது என்றும்,மறுக்கப்படும் எதுவும் மனித மனதிற்கு கவர்ச்சியாகிறது என்பதையும், மற்றும் காதலை கண்டிக்க கண்டிக்க அதன் மீதான ஈர்ப்புதான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதையும் பிறகு தான் உணர்கிறார்கள்.

உங்கள் குழந்தை யாரை காதலிக்கிறார் எனத் தெரிந்து அவர்களை அழைத்து பேசுங்கள். மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்பதைப்போல அவர்கள் சும்மா இருந்தாலும் மீடியாக்களும் நண்பர்களும் முக்கியமாக அவர்கள் வயதும் அவர்களை விடுவதில்லை. எனவே காதல் என்றாலே பதறாதீர்கள். காதல் என்பது நேசித்தல்தானே. அன்பு செலுத்துதல்தானே. இதற்கு பதற்றமடைய வேண்டியதில்லை.பதின் பருவத்தில் இது இயல்பான ஒன்றுதான் என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இதற்கு அன்பு என்று பெயர் கொடுக்கச் சொல்லுங்கள். இதற்கு காதல் என்று பெயரிடுவதால்தான் அத்தனை குழப்பங்களும் என்பதை உணர்த்துங்கள்.இந்த காதல் நெருப்பில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டிருக்கும் நண்பர்களை அழைத்துப் பேசுங்கள். நண்பர்களால்தான் வளர்கிறது. எனவே, காதல் பற்றிய தெளிவை உங்கள் குழந்தைக்கு மட்டுமல்ல, அவர்களது நண்பர்களுக்கும் ஏற்படுத்துங்கள். மாதம் ஒரு நாள் உங்கள் குழந்தைகளின் நண்பர்களோடு ஓர் சந்திப்பை அமைத்து அவர்களிடம் இந்த விஷயங்களைப் பற்றி நாசூக்காக எடுத்துச் சொல்லுங்கள்

பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு காதலிக்ககச் சொல்லிக்கொடுங்கள். ஒரு ஆணையோ பெண்ணையோ அல்ல. ஒட்டு மொத்த உயிர்களையுமே..

நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் தங்களது எண்ண அலைகளை மறக்காமல் கருத்துக்களாக பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள். 

32 Responses to “காதலிக்கும் குழந்தைகளை கையாள்வது எப்படி ?”

தமிழ்வாசி - Prakash said...
Oct 8, 2011, 7:49:00 PM

சிறந்த பதிவு நண்பரே....


suryajeeva said...
Oct 8, 2011, 7:57:00 PM

right
correct
perfect
fantastic


வைரை சதிஷ் said...
Oct 8, 2011, 8:04:00 PM

சூப்பர் பதிவு நண்பரே


சென்னை பித்தன் said...
Oct 8, 2011, 8:58:00 PM

நல்ல பகிர்வு


கோகுல் said...
Oct 8, 2011, 9:00:00 PM

சிந்தை சிதறும் பருவம் டீன் ஏஜ்.குழந்தைகள் இந்த பருவத்தை கடக்கும் வரை பெற்றோர்களின் கவனிப்பு மிக அவசியம்.அதற்காக கண்டிப்புடன் இருக்க வேண்டுமில்லை ,நட்புடன் சமுதாய நிலைப்பாடுகளை எடுத்துச்சொல்லி புரிய வைத்தாலே தெரிந்து கொள்வர்.குழந்தைகளிடம் இந்த சமயங்களில் நிறைய பேசினாலே அவர்களின் போக்கில் ஏதாவது மாற்றம் தெரிந்தால் அறிந்து கொள்ளலாம்.


கோகுல் said...
Oct 8, 2011, 9:03:00 PM

நீங்க சொன்னது போல இளம் பருவத்தினரிடையே காதலைப்பற்றி மோகத்தை வளர்ப்பதில் மீடியாக்களுக்கும் முக்கிய பங்கு இருக்கின்றன.
அவை காட்டுவது எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதை நடைமுறை சம்பவங்களுடன் அவ்வப்போது குழந்தைகளுக்கு எடுத்து சொல்லலாம்.இவைகளும் சில ஊடகங்களில் வெளியாகின்றனவெ!


கோகுல் said...
Oct 8, 2011, 9:05:00 PM

பதிவைப்பற்றி எனது கறுத்து நண்பர் சூர்யாஜீவா சொன்னது தான்!

suryajeeva said... 2


right
correct
perfect
fantastic


தங்கம்பழனி said...
Oct 8, 2011, 9:07:00 PM

//காதல் பறவைகளை எந்த வேலியும் கட்டுப்படுத்த முடியாது என்றும்,மறுக்கப்படும் எதுவும் மனித மனதிற்கு கவர்ச்சியாகிறது என்பதையும், மற்றும் காதலை கண்டிக்க கண்டிக்க அதன் மீதான ஈர்ப்புதான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதையும் பிறகு தான் உணர்கிறார்கள்.// நிதர்சன வார்த்தைகள் ..!! பதிவு நிச்சயம் பலருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.. வாழ்த்துக்கள் நண்பரே..!! நேரமிருக்கும்போது எனது வலைப்பூவுக்கும் ஒரு உலா வந்து போங்களேன்...! நட்புடன், தங்கம்பழனி


தங்கம்பழனி said...
Oct 8, 2011, 9:08:00 PM

நீங்கள் இனி தேக்கு விற்கலாம்..!!


இராஜராஜேஸ்வரி said...
Oct 8, 2011, 10:38:00 PM

பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.


சம்பத்குமார் said...
Oct 8, 2011, 10:57:00 PM

@ தமிழ்வாசி

//சிறந்த பதிவு நண்பரே....//

முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..


சம்பத்குமார் said...
Oct 8, 2011, 10:59:00 PM

@ suryajeeva


//right
correct
perfect
fantastic //

மிக்க நன்றி திரு.சூர்யஜீவா அவர்களே


சம்பத்குமார் said...
Oct 8, 2011, 11:05:00 PM

@வைரை சதிஷ
//சூப்பர் பதிவு நண்பரே//

மிக்க நன்றி திரு சதீஷ் அவர்களே..

நட்புடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Oct 8, 2011, 11:07:00 PM

சென்னை பித்தன்
//நல்ல பகிர்வு//

மிக்க நன்றி நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Oct 8, 2011, 11:08:00 PM

@ கோகுல்

//சிந்தை சிதறும் பருவம் டீன் ஏஜ்.குழந்தைகள் இந்த பருவத்தை கடக்கும் வரை பெற்றோர்களின் கவனிப்பு மிக அவசியம்.அதற்காக கண்டிப்புடன் இருக்க வேண்டுமில்லை ,நட்புடன் சமுதாய நிலைப்பாடுகளை எடுத்துச்சொல்லி புரிய வைத்தாலே தெரிந்து கொள்வர்.குழந்தைகளிடம் இந்த சமயங்களில் நிறைய பேசினாலே அவர்களின் போக்கில் ஏதாவது மாற்றம் தெரிந்தால் அறிந்து கொள்ளலாம்.//

ஆழ சிந்தித்து கருத்துரை வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றிகள்


சம்பத்குமார் said...
Oct 8, 2011, 11:10:00 PM

@ தங்கம்பழனி
//நீங்கள் இனி தேக்கு விற்கலாம்..!!//

தங்களின் பேராதவிற்க்கு மிக்க நன்றி நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Oct 8, 2011, 11:13:00 PM

@ இராஜராஜேஸ்வரி

//பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.//

தங்களின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களே..

நன்றியுடன்
சம்பத்குமார்


அம்பலத்தார் said...
Oct 8, 2011, 11:47:00 PM

நல்ல விடயத்தை கையில் எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.


அம்பலத்தார் said...
Oct 8, 2011, 11:47:00 PM

இந்த விடயத்தை சமூக, உளவியல் பின்னணிகளில் அணுகியவிதம் பாராட்டுக்குரியது.


சம்பத்குமார் said...
Oct 9, 2011, 8:33:00 AM

@ அம்பலத்தார்

//நல்ல விடயத்தை கையில் எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.//

//இந்த விடயத்தை சமூக, உளவியல் பின்னணிகளில் அணுகியவிதம் பாராட்டுக்குரியது.//

மிக்க நன்றி திரு.அம்பலத்தார் அவர்களே


Jaleela Kamal said...
Oct 9, 2011, 10:43:00 AM

மிக அருமையான பதிவு.
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


சம்பத்குமார் said...
Oct 9, 2011, 11:12:00 AM

@ Jaleela Kamal

//மிக அருமையான பதிவு.
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.//

தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

நட்புடன்
சம்பத்குமார்


Lakshmi said...
Oct 9, 2011, 11:56:00 AM

பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.


Rathnavel said...
Oct 9, 2011, 3:21:00 PM

அருமையான பதிவு.
நன்றி.


M.R said...
Oct 9, 2011, 6:01:00 PM

தாங்கள் சொல்ல வந்த கருத்து அருமை நண்பரே


சம்பத்குமார் said...
Oct 9, 2011, 7:07:00 PM

@ Lakshmi

//பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.//

அன்னையின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

பாசத்துடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Oct 9, 2011, 7:08:00 PM

@ Rathnavel

//அருமையான பதிவு.//


மிக்க நன்றி ஐயா

நட்புடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Oct 9, 2011, 7:10:00 PM

@ M.R

//தாங்கள் சொல்ல வந்த கருத்து அருமை நண்பரே//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

நட்புடன்
சம்பத்குமார்


kavithai (kovaikkavi) said...
Oct 9, 2011, 7:50:00 PM

'''...காதலிக்ககச் சொல்லிக்கொடுங்கள். ஒரு ஆணையோ பெண்ணையோ அல்ல. ஒட்டு மொத்த உயிர்களையுமே..''
உண்மைதான் பிறகு எல்லாமே நிறைவாகும். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com


சம்பத்குமார் said...
Oct 10, 2011, 9:24:00 AM

@ kavithai (kovaikkavi)

//காதலிக்ககச் சொல்லிக்கொடுங்கள். ஒரு ஆணையோ பெண்ணையோ அல்ல. ஒட்டு மொத்த உயிர்களையுமே..''
உண்மைதான் பிறகு எல்லாமே நிறைவாகும். வாழ்த்துகள்.//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ..

நன்றியுடன்
சம்பத்குமார்


உங்களோடு... said...
Nov 22, 2011, 2:54:00 AM

நூற்றுக்கு நூறு நிஜம்!!


சம்பத் குமார் said...
Nov 22, 2011, 7:17:00 AM

@ உங்களோடு... said... 31

//நூற்றுக்கு நூறு நிஜம்!!//

வணக்கம் சகோதரம்.. தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி..

நன்றியுடன்
சம்பத்குமார்


;