October 15, 2011

பெற்றோர்கள் சொல்வதை கேட்க மறுக்கும் டீன் - குழந்தைகள்


இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் தன்மகள் தங்கள் கட்டுப்பாட்டு எல்லையை மீற சம்மதிப்பதில்லை.அவ்வாறு மீறினால் கடுமையாக நடந்து கொள்ள முற்படுவார்கள்.ஆனால் வளரிளம் பருவப் பெண்கள் தங்களுடைய படிப்பு,உடை நண்பர்கள்.வெளியில்  சென்று வருவது வீட்டு வேலைகளை செய்ய மறுப்பது தொடர்ப்பாய் பெற்றோர்களுடன் அடிக்கடி சண்டை பிடிக்கிறார்கள்.அவர்களுடைய உடம்பும் மனதும் துரிதமாய் பல மாற்றங்களுக்குள்ளாகின்ற காலகட்டம் இது.இந்தப் பருவத்தில் தங்களுடைய கருத்துக்கள்,எதிர்பார்ப்புகள்,தங்களுடைய செயல்களைத் தாங்களே முடிவு செய்யும் விருப்பம் இவற்றுக்காக குரல் கொடுக்கத் தொடங்கி விடுவார்கள்.இந்த முரண்பாடுகளும்,பெற்றோருக்கான தீர்வுகள் பற்றியுமான இன்றைய அலசல் இதோ...டீன் ஏஜ் பெண் குழந்தைகளின் எதிர்பார்ப்புகள்
 • தங்களுக்கு தேவையானவைகளைத் தாங்களே தெரிவு செய்யும் உரிமை.
 • தங்களுடைய தனித்தன்மையை வெளிப்படுத்த வாய்ப்புகள்.
 • தாங்கள் முதிர்ச்சியற்றவர்கள் என எண்ணி நடத்தப்படல் கூடாது.
 • பெற்றோர்களின் விருப்பங்களும் கனவுகளும் தங்கள் மீது திணிக்கப்படல் கூடாது
 • தங்களையும்,தங்கள் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திக் கொள்ள போதிய வாய்ப்பு

உறவுகளே.. கிடைத்த வாய்ப்பை சரியாய் வெளிக்காட்டிய ஓர் டீன் - குழந்தையின் மகிழ்ச்சியை வீடியோவாய்ப் பாருங்கள்.


videoஒவ்வொரு பெற்றோர்களும் செய்ய வேண்டியவை : • தங்களின் வளைந்து கொடுக்காத கண்டிப்பான போக்கை கைவிடல் நன்று.
 • வளரிளம் பெண்ணிடம் சுயசிந்தனையும்,சுயமாய் செயல்படும் திறமையும் இருக்கிறது என்பதை உணர்தல்
 • வீட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது பெண்குழந்தையின் கருத்தினையும் கேட்டுப்பெறுதல்
 • தெரிவு செய்யும் உரிமயை அளித்தல் (படிப்பு,வேலை,நண்பர்கள்)
 • தன்னுடைய உரிமையை கேட்டுப்பெற்றாலும் தனக்குள்ள பொறுப்புகளை அவள் மறப்பதில்லை என்று உணர்தல்
 • பெண்குழந்தைகளிடம் பாலியல் விழிப்புணர்வை ஊட்டும் கடமை ஒவ்வோர் தாய்க்கும் உள்ளது
 • பெற்றவர்கள் விருப்பு,வெறுப்பு,கருத்துக்கள்,மற்றும் எதிர்பார்ப்புகளைப் பெற்ற பெண்ணிடம் பகிர்ந்து கொள்ளுதல்
 • அவர்களை சந்தேகப்பட்டு ஆராய்வதோ,விசாரணை செய்வதோ வேண்டாம்
 • தன் மகள் ஒருபோதும் தவறு செய்யமாட்டாள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருத்தல்
 • தங்கள் ஆதரவு எப்போது அவர்களுக்கு உண்டு என்பதை புரிய வைத்தல்
 • மொத்தத்தில் வளரிளம் பருவம் என்பது ஓர் சோதனை காலகட்டம்.அந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் டீனேஜ் குழந்தைகளிடம் அன்பும்,பரிவும் காட்டிடல் வேண்டும்.நிலையான தகவல் தொடர்பும் புரிதலும் மிக அவசியம்.


நன்றி விடியோ உதவி : இணையம்


நண்பர்களே பதிவினைப்பற்றிய தங்கள் எண்ணங்களை கருத்துக்களாக,வாக்குகளாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


14 Responses to “பெற்றோர்கள் சொல்வதை கேட்க மறுக்கும் டீன் - குழந்தைகள்”

கோகுல் said...
Oct 15, 2011, 9:49:00 AM

டீனேஜ் பெண்களின் எதிர்பார்ப்புகளையும்,
பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டியவற்றையும்
அழகாக பதிவேற்றியுள்ளிர்கள்!


suryajeeva said...
Oct 15, 2011, 2:21:00 PM

முதலில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்தால் போதும்..


அம்பலத்தார் said...
Oct 15, 2011, 2:36:00 PM

ஆண்டான் அடிமை முறையாக இல்லாமல் பெற்றோர் குழந்தைகள் உறவு பரஸ்பரம் புரிந்துணர்வுள்ளதாக அமையவேண்டும்.


Abdul Basith said...
Oct 15, 2011, 4:11:00 PM

அனைத்து பெற்றோர்களும் கடைப்பிடிக்க வேண்டியவைகள். பகிர்வுக்கு நன்றி நண்பரே!


Rathnavel said...
Oct 15, 2011, 4:54:00 PM

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்


Lakshmi said...
Oct 15, 2011, 6:40:00 PM

பெற்றொர்களும் குழந்தைகளும் நல்ல புரிந்து கொள்ளலுடன் பழகினால் நல்லது.


சம்பத்குமார் said...
Oct 15, 2011, 7:37:00 PM

@ கோகுல் said... 1

//டீனேஜ் பெண்களின் எதிர்பார்ப்புகளையும்,
பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டியவற்றையும்
அழகாக பதிவேற்றியுள்ளிர்கள்!//

முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி கோகுல் அவர்களே


சம்பத்குமார் said...
Oct 15, 2011, 7:38:00 PM

@ suryajeeva said... 2

//முதலில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்தால் போதும்..//

உண்மைதான் நண்பரே..


சென்னை பித்தன் said...
Oct 17, 2011, 4:28:00 PM

மிக நன்று.


சம்பத்குமார் said...
Oct 17, 2011, 6:53:00 PM

@அம்பலத்தார் said...

//ஆண்டான் அடிமை முறையாக இல்லாமல் பெற்றோர் குழந்தைகள் உறவு பரஸ்பரம் புரிந்துணர்வுள்ளதாக அமையவேண்டும்.//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத்குமார் said...
Oct 17, 2011, 6:54:00 PM

@ Abdul Basith said...

//அனைத்து பெற்றோர்களும் கடைப்பிடிக்க வேண்டியவைகள். பகிர்வுக்கு நன்றி நண்பரே!//

மிக்க நன்றி நண்பரே..


சம்பத்குமார் said...
Oct 17, 2011, 6:55:00 PM

@ Rathnavel said...

//நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்//

தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி ஐயா


சம்பத்குமார் said...
Oct 17, 2011, 6:57:00 PM

@ Lakshmi said...

//பெற்றொர்களும் குழந்தைகளும் நல்ல புரிந்து கொள்ளலுடன் பழகினால் நல்லது.//

மிக்க நன்றி திரு.லட்சுமி அம்மா அவர்களே


சம்பத்குமார் said...
Oct 17, 2011, 6:58:00 PM

@ சென்னை பித்தன் said...

//மிக நன்று.//

தங்களின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..


;