October 14, 2011

மறதியை மறக்கடிக்கும் வழிகள்


வணக்கம் நண்பர்களே ! நேற்றைய கவிதை மாநகரப் பேருந்து என்ற பதிவிற்க்கு ஆதரவளித்து வரவேற்பு கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்.மீண்டுமொரு குழந்தைகளின் மறதியை போக்கும் வழிகள் பற்றிய பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவு இதற்கு முன் ஞபகமறதியை பற்றிய பதின் தொடர்ச்சியே ! இதன் முதல் பாகத்தினை தவறவிட்டவர்கள் தவறாமல் இந்த லின்க்கில் சென்றுபடித்துவிட்டு இப்பதிவினை சுவாசிக்க தொடங்கவும்.நன்றி.குழந்தைகள் படிப்பது மனதில் பதியாததற்கு முக்கியமான காரணங்கள் :

·         ஆர்வமில்லாதது

·         கவனமில்லாத்து

·         ஒழுக்கமில்லாதது

·          பதட்டமடைவது

முதலில்   ஆர்வமில்லாதது :


நம் குழந்தைகள் கிரிக்கெட்டில், எந்த மேட்சில், எந்த வீரருடைய ஸ்கோர் கேட்டாலும் சொல்வார்கள். அல்லது சினிமா பற்றிய புள்ளி விபரங்களை துல்லியமாக தருவார்கள்.இன்னும் சிலர் ஒரு சில பாடத்தில் சட்டென்று பதில் தருவார்கள்.இதிலிந்து குழந்தைகளுக்கு அந்தப் பாடத்தில் அல்லது அந்த விளையாட்டில் மட்டுமே நினைவாற்றல் உண்டு என்றும், மற்றதில் நினைவாற்றல் இல்லை என்றும் அர்த்தமாகிவிடாது. இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்ககூடம்  பிரச்சனை நினைவாற்றலில் இல்லை. ஆர்வத்தில்தான் என்று.எதில் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமோ, அதில் கண்டிப்பாக ஆர்வம் இருக்க வேண்டும். நினைவாற்றலுக்கு ஆர்வமே அடிப்படை காரணமாகிறது.

கவனமில்லாதது :

இந்த காரணத்தை விளக்க ஓர் எளிய சோதனை. உங்கள் குழந்தையிடம் அவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள அட்டைப்படத்தை வரையச் சொல்லுங்கள். அல்லது அவர்கள் விரும்பி பார்க்கும் டிவி சேனலின் லோகோவையும் வரையச் சொல்லுங்கள்.அட்டையில் உள்ள படங்களுக்கு என்னென்ன வண்ணம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதையும் குறிக்கச் சொல்லுங்கள். பிறகு ஒப்பிட்டுப் பாருங்கள். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் பெரும்பாலான விஷயங்களை தவறாக குறித்திருப்பார்கள். அல்லது குறிக்காமல் விட்டிருப்பார்கள். தினமும் பார்க்கிற புத்தகம்தான் அல்லது தினமும் பார்க்கிற டிவி தான். இருந்தாலும் சரியாக எழுத முடியாததற்கு காரணம் நாம் பார்க்கிறோமே தவிர கவனிப்பதில்லை. நினைவாற்றலின் அடிப்படையே இந்த கவனிக்கும் திறன்தான்.

ஒழுக்கமில்லாதது

நம் குழந்தைகள் பல நேரங்களில் ‘கணக்குப் புத்தகம் எங்க கிடக்குன்னு தெரியலையேஎன்று நாள் முழுவதும் புலம்பிக் கொண்டும் தேடிக்கொண்டும் இருப்பார்கள். இருபது அல்லது முப்பது புத்தகங்கள் உள்ள ஒரு சின்ன அறையிலே நம்மால் நமக்கு தேவையான புத்தகத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லையே. லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ள நூலகத்திற்க்கு அழைத்துச் சென்று, அங்கே பணியாற்றுபவர்கள் மட்டும் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? என்பதை அவர்களை விட்டே கண்டறியச் சொல்லுங்கள். காரணத்தினை ஆராய்ந்தால், வீட்டில் புத்தகங்கள் கிடைக்காததற்கு காரணம் புத்தகங்கள் ”இரைந்து கிடப்பதே”. நூலகத்தில் கிடைப்பதற்கு காரணம் ”அடுக்கி இருப்பதே”. கிடப்பது என்றால் வைக்கும்போதே கவனமின்றி வைக்கப்படுவது அல்லது தூக்கி எறியப்படுவது. இருப்பது என்றால் சரியான முறையில் அடுக்கி வைப்பது.நம் குழந்தைகள்தான் என்றில்லை, நாமே கூட பல நேரங்களில் எங்க கிடக்குன்னு தெரியலையே என்று புலம்பிக் கொண்டே நமக்கு தேவையானவற்றை தேடி இருக்கிறோம். ஞாபகம் இருக்கிறதா? இப்பொழுது அதற்கான காரணம் உங்களுக்கே புரிய வந்திருக்கும்.

 பதட்டமடைவது :

இதற்கு கீழ்காணும் பதிவுகள் கண்டிப்பாய் உதவும் என்றே எண்ணுகின்றேன்.

நண்பர்களே தெரிந்த எண்ணங்களில் சில :

குழந்தைகளுடன் வெளியில் எங்காவது சென்று வந்த பின் அங்கே பார்த்தவற்றைப் பற்றி கேள்வி கேளுங்கள். உதாரணத்திற்கு நூலகத்தில் அவர்கள் பார்த்த புத்தக அலமாரியின் வரிசையை அல்லது தெருவில் உள்ள கடைகளின் வரிசையை எழுதச் சொல்லுங்கள். அல்லது இன்று வகுப்பில் ஆசிரியர் முதலில் சொன்ன வார்த்தை எது என்று கேளுங்கள். இதனால் அனைத்தையும் ஆர்வத்துடன் உன்னிப்பாக கவனிக்கத் தோன்றும்.

உங்கள் உள்ளே ஓர் ஒழுங்கு ஏற்பட வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யும் வெளிச் செயல்களிலும் ஓர் ஒழுங்கு நிச்சயம் வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் செய்யும் எல்லா செயல்களையும் ஒழுங்கோடு செய்யச் சொல்லுங்கள். 

பள்ளியிலிருந்து வந்ததும் ஷுவை நிதானமாக கழற்றி ஒழுங்காக அதற்குரிய ஸ்டாண்டில் வைக்க வேண்டும். சாக்ஸை கழற்றி துவைப்பதற்கென்று உள்ள பக்கெட்டில் போட வேண்டும். பெல்ட், டை ஆகியவற்றை அதற்கென்று உள்ள இடத்தில் மாட்டி வைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு செயலையும் ஓர் ஒழுங்கோடு செய்தால், உள்ளேயும் அதாவது மனதின் செயல்பாடுகளிலும் ஒழுங்கு ஏற்படத் துவங்கும்.

மேலே சொன்னவற்றை எல்லாம் தவறாமல் பின்பற்றினால் படிக்கும் ஒவ்வொருவரும் சொல்லலாம் மறதிர்கோர் குட்பை. உங்கள் குழந்தைகளின் மறதியையும் மறக்கடிக்கலாம்.


உறவுகளே ! பதிவு பிடித்திருந்தால் தங்களது எண்ணங்களை வாக்குகளாகவும்,கருத்துக்களாகவும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால சந்த்திகளுக்கான நம்பிக்கை விதைகளாய் தூவ...21 Responses to “மறதியை மறக்கடிக்கும் வழிகள்”

Mahan.Thamesh said...
Oct 14, 2011, 9:09:00 AM

நல்ல படைப்பு . நல்ல பல வழிகளை தந்துள்ளீர்கள்


மதுரன் said...
Oct 14, 2011, 9:13:00 AM

அசத்தலான தகவல் நண்பா
பகிர்வுக்கு நன்றி


suryajeeva said...
Oct 14, 2011, 9:42:00 AM

ஒழுங்கு ஏற்பட வேண்டும் என்றால் முதலில் பெற்றோர்களாகிய நாம் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும்... நம் வேலை அசதியால் பொருட்களை அதற்குரிய இடத்தில வைக்காமல் நாமே தேடுவது அவர்களை மறைமுகமாக கெடுப்பதே... மற்றபடி அருமையாக அலசி உள்ளீர்கள்...நீங்கள் சொல்வதை நிறைய பேர் கேட்காமல் இன்னும் வல்லாரை மாத்திரை பின் தான் ஓடுவார்கள்


Lakshmi said...
Oct 14, 2011, 9:58:00 AM

உங்கள் உள்ளே ஓர் ஒழுங்கு ஏற்பட வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யும் வெளிச் செயல்களிலும் ஓர் ஒழுங்கு நிச்சயம் வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் செய்யும் எல்லா செயல்களையும் ஒழுங்கோடு செய்யச் சொல்லுங்களஆமா மிகச்சரியா சொன்னீங்க.


விக்கியுலகம் said...
Oct 14, 2011, 11:03:00 AM

உண்மையில் பெரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..நன்றி!


ராஜா MVS said...
Oct 14, 2011, 1:07:00 PM

நல்ல படைப்பு....


M.R said...
Oct 14, 2011, 1:45:00 PM

அருமையான விளக்கங்களுடன் ,அவசியமான தகவல்கள் .தங்கள் கருத்து உண்மையே நண்பரே


கணேஷ் said...
Oct 14, 2011, 4:51:00 PM

நல்ல கருத்துக்கள்...! அனைவரும் அறிய வேண்டுபவை.


சம்பத்குமார் said...
Oct 14, 2011, 6:46:00 PM

@ Mahan.Thamesh said... 1

//நல்ல படைப்பு . நல்ல பல வழிகளை தந்துள்ளீர்கள்//

முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

நன்றியுடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Oct 14, 2011, 6:47:00 PM

@ மதுரன் said... 2

//அசத்தலான தகவல் நண்பா
பகிர்வுக்கு நன்றி//

மிக்க நன்றி நண்பரே


சம்பத்குமார் said...
Oct 14, 2011, 6:49:00 PM

@ suryajeeva said... 3

//ஒழுங்கு ஏற்பட வேண்டும் என்றால் முதலில் பெற்றோர்களாகிய நாம் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும்... நம் வேலை அசதியால் பொருட்களை அதற்குரிய இடத்தில வைக்காமல் நாமே தேடுவது அவர்களை மறைமுகமாக கெடுப்பதே... மற்றபடி அருமையாக அலசி உள்ளீர்கள்...நீங்கள் சொல்வதை நிறைய பேர் கேட்காமல் இன்னும் வல்லாரை மாத்திரை பின் தான் ஓடுவார்கள்//

ஆழமாய் சிந்தித்து அழகான கருத்திட்டதிற்க்கும் வருகைக்கும் மிக்க நன்றி திரு.சூர்யஜீவா அவர்களே


சம்பத்குமார் said...
Oct 14, 2011, 6:50:00 PM

@ Lakshmi said... 4

//ஆமா மிகச்சரியா சொன்னீங்க.//

மிக்க நன்றி லட்சுமி அம்மா அவர்களே


சம்பத்குமார் said...
Oct 14, 2011, 6:51:00 PM

@ விக்கியுலகம் said... 5

//உண்மையில் பெரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..நன்றி!//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திரு விக்கி வெங்கட் அவர்களே


சம்பத்குமார் said...
Oct 14, 2011, 6:52:00 PM

@ ராஜா MVS said... 6

//நல்ல படைப்பு....//

கருத்திற்க்கு மிக்க நன்றி நண்பரே


சம்பத்குமார் said...
Oct 14, 2011, 6:54:00 PM

@ M.R said... 7

//அருமையான விளக்கங்களுடன் ,அவசியமான தகவல்கள் .தங்கள் கருத்து உண்மையே நண்பரே//

மிக்க நன்றி திரு.M.R அவர்களே..


சம்பத்குமார் said...
Oct 14, 2011, 6:55:00 PM

@ கணேஷ் said... 8

//நல்ல கருத்துக்கள்...! அனைவரும் அறிய வேண்டுபவை.//

மிக்க நன்றி திரு.கணேஷ் அவர்களே


ரெவெரி said...
Oct 14, 2011, 10:39:00 PM

எல்லா வகையிலும் அழகான பதிவு...


சம்பத்குமார் said...
Oct 15, 2011, 2:51:00 AM

@ ரெவெரி said... 17

//எல்லா வகையிலும் அழகான பதிவு...//

மிக்க நன்றி நண்பரே


உங்களோடு... said...
Nov 20, 2011, 2:34:00 AM

ஒரு ஆசிரியையான எனக்கு குழந்தைகளை எப்படி வழி நடத்துவது என்ற கேள்விக்கு உங்கள் பதிவில் நல்ல பயனுள்ள பதில்களைத் தந்து உள்ளீர்கள்.தொடரட்டும் உங்கள் பணி!!!


சம்பத் குமார் said...
Nov 20, 2011, 10:05:00 AM

@ உங்களோடு... said... 19

//ஒரு ஆசிரியையான எனக்கு குழந்தைகளை எப்படி வழி நடத்துவது என்ற கேள்விக்கு உங்கள் பதிவில் நல்ல பயனுள்ள பதில்களைத் தந்து உள்ளீர்கள்.தொடரட்டும் உங்கள் பணி!!!//

வணக்கம் சகோதரம்..

தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி..

மீண்டும் வருக..


Ramkumar J said...
Feb 7, 2015, 2:33:00 PM

மெய் சிலிா்க்கிறது நண்பரே அருமை அருமை


;