October 11, 2011

குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள்


வணக்கம் நண்பர்களே ! நேற்றைய கவிதை வாழ்க்கை வாழ்வதற்கே என்ற பதிவிற்க்கு ஆதரவளித்து வரவேற்பு கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்.இன்று நம் குழந்தைகள் (ஏன் நாமும் கூட) ஒவ்வொருவரும் அனுதினமும் சந்த்தித்துக்கொண்டிருக்கும் ஞாபகமறதியைப் பற்றி விரிவாக அலசுவோம். ஞாபகமறதி எல்லோரையும் பாதிக்கும் ஒன்றுதான் என்றாலும் மாணவர்களை சற்று அதிகமாகவே பாதிக்கிறது. ஏனெனில் இக்காலத்தில் கற்கும் கல்வியே நினைவாற்றலால்தான் என்றாகிவிட்டது. நல்லாதான் படிச்சுட்டு போனேன். ஆனா பரீட்சை ஹால்ல எல்லாம் மறந்து போச்சு. என்ன படிச்சாலும் மனசில பதிய மாட்டேங்குதுப்பா எதுவுமே எனக்கு ஞாபகத்திலே இல்ல….’ என்று கண் கலங்கி குழந்தைகள் நம்மிடம் காரணங்களாய் கூறுகின்றன. 

பேனாவை எங்கே வைத்தோம்என்று பள்ளிக்கு கிளம்புகிற நேரத்தில் வீடு முழுக்க தேடித் திரியும் போதும், பள்ளிக்கு வந்து பையை திறந்ததும் அன்றைய வகுப்புக்கு தேவையான புத்தகங்களை கொண்டு வரவில்லை என்பது ஞாபகத்திற்கு வரும்போதும், செய்யவேண்டிய ஹோம் ஒர்க்கை மறந்துவிட்டு ஆசிரியரிடம் வாங்கிக்கட்டிக் கொள்ளும்போதும்எக்ஸாம் ஹாலில் நன்றாக படித்த பாடம் சட்டென்று நினைவிற்கு வராத போதும்என பல சந்தர்ப்பங்களில்இவ்வளவு மறதியாக இருக்கிறோமே என்று மாணவர்கள்தங்களைத் தாங்களே எரிச்சல் பட்டுக் கொள்வதுண்டு.

அப்படிப்பட்ட நேரங்களில் எரிச்சல்படுவதற்கு பதில், ஏன் மறக்கிறது? எப்படி நினைவாற்றலை வளர்த்துக்கொள்வது என்று பெற்றோர்களாகிய நீங்கள் அவர்களை யோசிக்க வையுங்கள்.சிலருக்கு மட்டும் ஞாபகசக்தி நன்றாக இருக்கிறதே? சிலருக்கு மறதி அதிகமாக இருக்கிறதே? ஏன் இந்த வித்தியாசம்? – பலருக்கும் இந்தக் கேள்வி உண்டு.இயற்கையில், நினைவாற்றல் திறன் அனைவருக்கும் சமமாகவே உள்ளது. ஆனால், அதை முறையாகப் பயன்படுத்தாததால்தான் இந்த வித்தியாசம்.

சில வியாதிகளினால் மறதி வருவதுண்டு என்றாலும் மறதி ஒரு வியாதியல்ல.மறதி என்பதே கிடையாது. ஏனெனில் நினைவில் பதிந்தவை எதுவும் அழியாது என்பார்கள்உங்கள் சட்டையில் ஐநூறு ரூபாய் பணத்துடன் கடைக்குச் செல்கிறீர்கள். கடைக்குச் சென்ற பிறகு சட்டையில் வைத்திருந்த பணம் காணாமல் போய்விடுமா என்ன? வைத்திருந்தால் கட்டாயம் இருக்கத்தானே செய்யும். சட்டைப்பையில் வைக்காமலோ அல்லது ஓட்டைப்பையில் வைத்துவிட்டோ காணவில்லை என்று தேடினால் எப்படி?


அது போல உங்கள் மூளையில் உள்ள நினைவகத்திலிருந்து ஏதாவது ஒரு தகவல் உங்களுக்குத் தேவையான நேரத்திற்கு நினைவிற்கு வர வேண்டுமென்றால், முதலில் அந்தத் தகவலை நீங்கள் சரியான முறையில் பதிவு செய்திருக்க வேண்டும்.மறதிக்கு முக்கிய காரணம் நினைவாற்றல் குறைவாக இருப்பது அல்ல. தகவல்களைப் பதிந்து வைக்கும் திறன் குறைவாக இருப்பதுதான்.இந்த இடத்தில் எல்லா பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டியது, உங்கள் குழந்தைகளின் மதிப்பெண் குறைவிற்கு நிச்சயம் நினைவாற்றல் குறைபாடு காரணம் கிடையாது.

உண்மையில் பெரும்பாலான குழந்தைகளுக்கு நினைவாற்றலில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இதனை நீங்களே உங்கள் குழந்தையிடம் சோதித்துப் பாருங்கள் உண்மை புரிய வரும்.கடந்த வருடம் அவர்கள் படித்த பள்ளிப் பாடங்களில் இருந்து ஏதாவது சில பகுதிகளை சொல்லச் சொல்லுங்கள் அல்லது திருக்குறளை சொல்லச் சொல்லுங்கள். பெரும்பாலும் பதில் தெரியாமல் விழிப்பார்கள். இப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில் உள்ள பாடல்களை சொல்லச் சொல்லுங்கள். அல்லது கடந்த இரண்டு வருடத்தில் வந்த ரஜினி படங்களை வரிசையாகச் சொல்லச் சொல்லுங்கள். விரைவாக பதில்கள் வரும்.திரைப்படம் மனதில் பதிகிற அளவிற்கு கற்கின்ற கல்வி மனதில் பதிவதில்லை.


மனதில் பதியாததற்கு முக்கியமான காரணங்கள் :
  •   ஆர்வமில்லாதது
  • கவனமில்லாத்து
  • ஒழுக்கமில்லாதது
  •  பதட்டமடைவதுஉறவுகளே ! உங்களின் நல்லாசியுடன் இவைகளைப் பற்றி அடுத்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.நம் குழந்தைகளையும் தைரியமாக மறதிக்கு குட்பை சொல்ல வைக்கலாம்.


நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் தங்களது வாக்குகளையும் கருத்துக்களையும் பகிர்ந்துவிட்டுச் செல்ல மறந்துவிடாதீர்கள்.


முக்கிய விஷயம் :


அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் நமக்காகவும்,நம் வருங்காலத்திற்காகவும் போராடும் நம்மவர்களுக்காக ஓங்கி குரல்கொடுப்போம்.


இன்குலாப் ஜிந்தாபாத்..


இன்குலாப் ஜிந்தாபாத்


இன்குலாப் ஜிந்தாபாத்


கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தின் உண்மை நிலவரம் 


24 Responses to “குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள்”

ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் said...
Oct 11, 2011, 9:56:00 PM

கண்டிப்பாக அனைத்து பெற்றோர்களும் பயன்பெறக்கூடிய செய்திகள் பல இவ்வலைப்பூவில் இருக்கிறது...விரைவில் நீங்கள் தேக்கு விற்க என் வாழ்த்துக்கள்


bandhu said...
Oct 11, 2011, 9:59:00 PM

good one. please continue


இராஜராஜேஸ்வரி said...
Oct 11, 2011, 10:25:00 PM

.திரைப்படம் மனதில் பதிகிற அளவிற்கு கற்கின்ற கல்வி மனதில் பதிவதில்லை./

உண்மைதான். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.


சம்பத்குமார் said...
Oct 11, 2011, 10:53:00 PM

@ ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார்

//கண்டிப்பாக அனைத்து பெற்றோர்களும் பயன்பெறக்கூடிய செய்திகள் பல இவ்வலைப்பூவில் இருக்கிறது...விரைவில் நீங்கள் தேக்கு விற்க என் வாழ்த்துக்கள்//

முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

தங்கள் வரவு நல்வரவாகுக..

நட்புடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Oct 11, 2011, 10:56:00 PM

@ bandhu

//good one. please continue//

Thank you very much sir..

Keep watching..

regards
sambathkumar


சம்பத்குமார் said...
Oct 11, 2011, 11:07:00 PM

@ இராஜராஜேஸ்வரி

//திரைப்படம் மனதில் பதிகிற அளவிற்கு கற்கின்ற கல்வி மனதில் பதிவதில்லை
உண்மைதான். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

மிக்க நன்றி திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களே..

நன்றியுடன்
சம்பத்குமார்


veedu said...
Oct 12, 2011, 9:05:00 AM

வரும் பதிவில் ஞாபகமறதியுள்ள குழந்தைகளுக்கு டிப்ஸ் ஏதாவது தாருங்கள் நிறைய குழந்தைகள் இவ்வாறுதான் உள்ளது


மதுரன் said...
Oct 12, 2011, 10:44:00 AM

அருமையான தகவல்கள்
பகிர்வுக்கு நன்றி


suryajeeva said...
Oct 12, 2011, 10:44:00 AM

when u learn u dont forget..
when u study u will forget...

எனக்கு பிடித்த வாசகம் இது


ராஜா MVS said...
Oct 12, 2011, 5:56:00 PM

நல்ல அருமையான, மிக தெளிவான விளக்கங்களுடன் கூடிய பகிர்வு...

மிக்க நன்றி... நண்பரே...


சம்பத்குமார் said...
Oct 12, 2011, 6:34:00 PM

@ veedu

//வரும் பதிவில் ஞாபகமறதியுள்ள குழந்தைகளுக்கு டிப்ஸ் ஏதாவது தாருங்கள் நிறைய குழந்தைகள் இவ்வாறுதான் உள்ளது//

முடிந்தவரை முயற்சிக்கின்றேன் நண்பரே..

நன்றியுடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Oct 12, 2011, 6:35:00 PM

@ மதுரன்

//அருமையான தகவல்கள்
பகிர்வுக்கு நன்றி//

மிக்க நன்றி நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Oct 12, 2011, 6:36:00 PM

@ suryajeeva

//when u learn u dont forget..
when u study u will forget...
எனக்கு பிடித்த வாசகம் இது//

மிக அருமையான வாசகம் நண்பரே..


சம்பத்குமார் said...
Oct 12, 2011, 6:38:00 PM

@ ராஜா MVS

//நல்ல அருமையான, மிக தெளிவான விளக்கங்களுடன் கூடிய பகிர்வு...
மிக்க நன்றி... நண்பரே...//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திரு ராஜா அவர்களே..


கவிதை வீதி... // சௌந்தர் // said...
Oct 12, 2011, 6:59:00 PM

சமூக அக்கறையுள்ள பதிவு...
வாழ்த்துக்கள் நண்பரே...


அம்பலத்தார் said...
Oct 12, 2011, 8:32:00 PM

தொடர்ந்து நல்ல உளவியல் விடயங்கள்சார்ந்த பதிவுகளாகவே தருவதற்கு நன்றி


சம்பத்குமார் said...
Oct 12, 2011, 9:59:00 PM

@ கவிதை வீதி...சௌந்தர்

//சமூக அக்கறையுள்ள பதிவு...
வாழ்த்துக்கள் நண்பரே...//

தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Oct 12, 2011, 10:10:00 PM

@ அம்பலத்தார்

//தொடர்ந்து நல்ல உளவியல் விடயங்கள்சார்ந்த பதிவுகளாகவே தருவதற்கு நன்றி //

மிக்க நன்றி நண்பரே..தங்களின் நல்லாசியோடு பயணம் தொடரும்

நட்புடன்
சம்பத்குமார்


Rathnavel said...
Oct 13, 2011, 1:23:00 PM

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html


naren said...
Oct 13, 2011, 7:55:00 PM

அருமையான பதிவு. மறதிக்கு காரணமான நான்கு காரணங்க பெரியவர்களுக்கும் பொருந்தும்.

பதிவிற்கு நன்றி


சம்பத்குமார் said...
Oct 13, 2011, 10:46:00 PM

@ Rathnavel said... 19

//நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி ஐயா


சம்பத்குமார் said...
Oct 13, 2011, 10:47:00 PM

naren said... 20

//அருமையான பதிவு. மறதிக்கு காரணமான நான்கு காரணங்க பெரியவர்களுக்கும் பொருந்தும்.//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திரு.நரேன் அவர்களே


வேங்கட ஸ்ரீனிவாசன் said...
Oct 18, 2011, 4:28:00 PM

நம்க்கே வைத்த பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரிவதில்லை (காரணம் அந்நேரம் அது நமக்கு அவ்வளவு தேவை இல்லை என்ற அலட்சிய மனப்பாங்கு). இதில் குழ்ந்தைகள் என்ன செய்யும். சரியான பயிற்சிகள், ஒழுக்கான தினசரி நடவடிக்கை ஆகியவற்றால் நிலைமையை சரி செய்ய முடியுமோ?


சம்பத்குமார் said...
Oct 18, 2011, 7:38:00 PM

@ வேங்கட ஸ்ரீனிவாசன் said... 23

//நம்க்கே வைத்த பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரிவதில்லை (காரணம் அந்நேரம் அது நமக்கு அவ்வளவு தேவை இல்லை என்ற அலட்சிய மனப்பாங்கு). இதில் குழ்ந்தைகள் என்ன செய்யும். சரியான பயிற்சிகள், ஒழுக்கான தினசரி நடவடிக்கை ஆகியவற்றால் நிலைமையை சரி செய்ய முடியுமோ? //

இந்த நிலைமையில் நாம் முதலில் திருந்தி நம் குழந்தைகளை திருத்தினால் அவர்களின் குழந்தைகளும் இந்த நல்ல பழக்கத்தினை தொடர வைக்கலாமே நண்பரே..

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

நட்புடன்
சம்பத்குமார்


;