October 7, 2011
நீர்த்துளியின் கண்ணீர்
சூரியக் கதிரின்
சூடுபட்டு
மரணமானது
எனது ஜனனம் !
என்னோடு
துளிர்த்தவர்கள்
நதியாய்
அருவியாய்
கடலாய்….!
எனக்கும்
தாய்
மேகம்தானே !
நானோ
தரை வருமுன்
தடுக்கப்பட்ட
வெப்ப அடிமை !
தாகம் தீர்க்கப்
பயணப்பட்ட
எனது வாழ்வு
வழியிலேயே
சுவாசம் இழந்தது.
மேகத்தாயிடம்
கண்ணீர் வடித்தேன்
இன்னொரு வாழ்க்கை
வேண்டும் என்று !
மனிதன்
குடிக்கும்
மருந்தாகும் வரை
எனக்கும் ஏது
இன்னொரு சொர்க்கம்?
விக்கல் தீர்க்க
வந்த என்னை-
விற்றுப் பிழைத்தல்
வேதனை அன்றோ...?.
என்ன செய்வது ?
கண்ணீர்விடவும்
இங்கு
தண்ணீர்தான் தேவை !
கவனமாயிருங்கள்...
போகிற போக்கில்
”ஈரம்”
இதயங்களில் கூட
வற்றிப்போகலாம் !
இதயங்களில் கூட
வற்றிப்போகலாம் !
நண்பர்களே மேலே வரைந்த “நீர்த்துளியின் கண்ணீர் கவிதை” தங்களுக்கு பிடித்திருந்தால் தயங்காமல் தங்கள் எண்ணங்களை கருத்துக்களாய் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)








19 Responses to “நீர்த்துளியின் கண்ணீர்”
Oct 7, 2011, 11:19:00 PM
தண்ணீரை என்றைக்கு பாட்டிலிலும்,பாக்கட்டுகளிலும்
அடைபட்டதோ அன்றைக்கே
இதயங்களில் ஈரம வற்றி விட்டது!
Oct 8, 2011, 8:10:00 AM
சூப்பர் கவிதை
Oct 8, 2011, 8:14:00 AM
நண்பரே உங்களுக்கும் தமிழ்மனம் வேலை செய்யவில்லையா
Oct 8, 2011, 8:21:00 AM
@ கோகுல்
//தண்ணீரை என்றைக்கு பாட்டிலிலும்,பாக்கட்டுகளிலும்
அடைபட்டதோ அன்றைக்கே
இதயங்களில் ஈரம வற்றி விட்டது!//
முதல் வருகைக்கும் முத்தான கருத்திர்த்திற்க்கும் மிக்க் அநன்றி திரு.கோகுல் அவர்களே..
நட்புடன்
சம்பத்குமார்
Oct 8, 2011, 8:24:00 AM
@ வைரை சதிஷ்
//சூப்பர் கவிதை//
மிக்க நன்றி நண்பரே..
\\நண்பரே உங்களுக்கும் தமிழ்மனம் வேலை செய்யவில்லையா\\
ஆம் நண்பரே..தமிழ்மனத்தின் admin க்கு மெயில் அனுப்பியுள்ளேன்.பொறுத்திருந்து பார்ப்போம்
Oct 8, 2011, 11:51:00 AM
இனிமேல் தண்ணீர்பாட்டிலைப்பார்க்கும் போதெல்லாம் இந்தக்கவிதை தான் நினைவில் வரும்.
Oct 8, 2011, 11:52:00 AM
உண்மை தான்
Oct 8, 2011, 12:23:00 PM
@ Lakshmi
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி
பாசத்துடன்
சம்பத்குமார்
Oct 8, 2011, 12:24:00 PM
@ திகழ்
//உண்மை தான்//
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி
நன்றியுடன்
சம்பத்குமார்
Oct 8, 2011, 1:11:00 PM
அந்த நீர்த்துளியின் கண்ணீரின் ஈரம்
படிக்கையிலே தெரிகிறது..
Oct 8, 2011, 1:18:00 PM
அருமைக் கவிதை அளித்தீரே-இங்கே
அன்பரே படித்து களித்தேனே
ஆதவன் வரவால் நீர்த்துளியே-ஆவி
ஆவதை கவிதையில் வார்த்தீரே
நன்று கவிதை நவின்ற விதம்-நீர்
நாளும் தருவீர் ஒன்றுவிதம்
இன்றே கண்டேன் சம்பத்தே-நம்
இனிய தமிழுக்கு நல்சொத்தே
புலவர் சா இராமாநுசம்
Oct 8, 2011, 5:53:00 PM
நல்ல கருவை கொண்ட நிதர்சன கவிதை,ஆக்கத்துக்கு நன்றி.
Oct 8, 2011, 8:17:00 PM
@ jayaram thinagarapandian
//அந்த நீர்த்துளியின் கண்ணீரின் ஈரம்
படிக்கையிலே தெரிகிறது..//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
Oct 8, 2011, 8:20:00 PM
@ புலவர் சா இராமாநுசம்
//அருமைக் கவிதை அளித்தீரே-இங்கே
அன்பரே படித்து களித்தேனே
ஆதவன் வரவால் நீர்த்துளியே-ஆவி
ஆவதை கவிதையில் வார்த்தீரே
நன்று கவிதை நவின்ற விதம்-நீர்
நாளும் தருவீர் ஒன்றுவிதம்
இன்றே கண்டேன் சம்பத்தே-நம்
இனிய தமிழுக்கு நல்சொத்தே//
தங்களிடமிருந்து கவிதைவிருது பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன் புலவர் ஐயா அவர்களே
Oct 8, 2011, 8:22:00 PM
@ ரா.செழியன்.
//நல்ல கருவை கொண்ட நிதர்சன கவிதை,ஆக்கத்துக்கு நன்றி.//
மிக்க நன்றி திரு.செழியன் அவர்களே..
Oct 9, 2011, 7:05:00 AM
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/
Oct 9, 2011, 8:37:00 AM
@ Rathnavel
//அருமையான கவிதை.
வாழ்த்துக்கள். //
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி ஐயா
நன்றியுடன்
சம்பத்குமார்
Oct 9, 2011, 9:25:00 PM
நல்ல கவிதை
Oct 10, 2011, 9:22:00 AM
@ உங்கள் நண்பன்
//நல்ல கவிதை//
மிக்க நன்றி நண்பரே..
நன்றியுடன்
சம்பத்குமார்
Post a Comment