October 4, 2011
நேற்றைய மிச்சம்...
காலைப்பனித்துளி….!
பறவைகள் எழுப்பிய
பூபாளம்....!
தூரத்தில்
பசுமைக்காடு...!
காலைசூரியன்...!
பஸ் ஸ்டாண்டில்
சிரிக்கும் பள்ளிச்சிறுவர்கள்...!
எல்லாமே பார்த்தாயிற்று
எதிலும்
லயிக்கவில்லை மனசு...!
நேற்றைய இரவின்
அழையா விருந்தாளி
அழையா விருந்தாளி
”பவர்கட்”டினால்,
எரிந்த மெழுகுவர்த்தியில்
விழுந்து
துடிதுடித்து...
விருந்தாகிப்போன
விட்டில் பூச்சியைப்
பார்த்ததிலிருந்து…..!
நண்பர்களே ! கவிதை பிடித்திருந்தால் தங்களது எண்ணங்களை கருத்துக்களாய் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்
நண்பர்களே ! கவிதை பிடித்திருந்தால் தங்களது எண்ணங்களை கருத்துக்களாய் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)






19 Responses to “நேற்றைய மிச்சம்...”
Oct 4, 2011, 11:03:00 AM
Oct 4, 2011, 11:05:00 AM
நேற்றைய இரவின்
அழையா விருந்தாளி
”பவர்கட்”டினால்,
எரிந்த மெழுகுவர்த்தியில்
விழுந்து
துடிதுடித்து...
விருந்தாகிப்போன
விட்டில் பூச்சியைப்
பார்த்ததிலிருந்து…..!
ஆமா அழகா சொல்லி இருக்கீங்க.
Oct 4, 2011, 11:24:00 AM
மனிதநேயம் உள்ள மனது எப்பவுமே இப்படி தான்.... சந்தோஷத்தில் மனம் லயிக்காமல் ஒரு உயிரைப்பற்றிய சிந்தனையில் மூழ்க வைக்கும்...அழகிய கவிதை மனிதநேயம் சொல்லி செல்லும் வரிகள்....
அன்பு நன்றிகள் சம்பத் பகிர்வுக்கு...
Oct 4, 2011, 11:33:00 AM
கனமான கவிதை...
Oct 4, 2011, 1:32:00 PM
அஹா அழகு.... அழகு... கவிதை
Oct 4, 2011, 8:39:00 PM
கவிதை பிடித்திருந்தது...
Oct 4, 2011, 9:18:00 PM
அருமை அருமை நண்பரே ...!
Oct 4, 2011, 9:33:00 PM
பவர் கட் பாடாய் படுத்துது போல!
கலக்கல் கவிதை!
Oct 5, 2011, 12:08:00 PM
சின்ன விஷயமும் எந்த அளவுக்கு மனதைப் பாதிக்கும் என்பதை உனர்த்தி நிற்கிறது கவிதை.
Oct 6, 2011, 12:42:00 PM
@Lakshmi
முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி அம்மா
பாசத்துடன்
சம்பத்குமார்
Oct 6, 2011, 12:43:00 PM
@ மஞ்சுபாஷிணி
//மனிதநேயம் உள்ள மனது எப்பவுமே இப்படி தான்.... சந்தோஷத்தில் மனம் லயிக்காமல் ஒரு உயிரைப்பற்றிய சிந்தனையில் மூழ்க வைக்கும்...அழகிய கவிதை மனிதநேயம் சொல்லி செல்லும் வரிகள்....//
வருகைக்கும் கருத்திற்க்கும் அன்பு நன்றிகள்
Oct 6, 2011, 12:44:00 PM
@suryajeeva
//கனமான கவிதை...//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Oct 6, 2011, 3:52:00 PM
@ வைரை சதிஷ்
//அஹா அழகு.... அழகு... கவிதை//
மிக்க நன்றி நண்பரே..
Oct 6, 2011, 3:52:00 PM
@ ரெவெரி
//கவிதை பிடித்திருந்தது...//
மிக்க நன்றி நண்பரே..
Oct 6, 2011, 3:53:00 PM
@ jayaram thinagarapandian said... 7
//அருமை அருமை நண்பரே ...!//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
Oct 6, 2011, 3:55:00 PM
@ கோகுல்
//பவர் கட் பாடாய் படுத்துது போல!
கலக்கல் கவிதை!//
ஒட்டுமொத்த தமிழகத்திற்க்கும் பவர்கட் விடிவு என்றோ ? தெரியவில்லை நண்பரே..
Oct 6, 2011, 3:56:00 PM
@ சென்னை பித்தன்
//சின்ன விஷயமும் எந்த அளவுக்கு மனதைப் பாதிக்கும் என்பதை உனர்த்தி நிற்கிறது கவிதை.//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Oct 7, 2011, 10:21:00 PM
புல்லுக்கு வியர்த்த காலைப்பனித்துளி….! பறவைகள் எழுப்பிய பூபாளம்....! தூரத்தில் பசுமைக்காடு...! மனதை மயக்கும் காலைசூரியன்...!;/
அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>
Oct 7, 2011, 11:49:00 PM
@இராஜராஜேஸ்வரி
//அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்க்ளே..
நன்றியுடன்
சம்பத்குமார்
Post a Comment