October 3, 2011

வளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர


வணக்கம் நண்பர்களே ! மீண்டும் ஓர் குழந்தைகளுக்கான பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.நேற்று பதிவிட்ட வெளுக்கும் பூக்கள் பதிவிற்க்கு வரவேற்பளித்த ஒவ்வொரு நல் இதயத்திற்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.இன்றைய பதிவில் வளரும் குழந்தகளின் தன்னம்பிக்கை வளர ஒவ்வொரு பெற்றோர்களும் அவர்களின் இல்லங்களில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி அலசுவோம்.ஒரு குழந்தை, தன்னம்பிக்கை மற்றும் சுய உரிமை உடைய மனிதனாக வளர வேண்டுமெனில், அதற்கேற்ற தைரியமான  வகையில் வளர்க்கப்பட வேண்டும். குழந்தை தைரியமற்ற முறையில் வளர்க்கப்பட்டால், கூச்ச சுபாவம், தன் கருத்துக்களை தெளிவாக கூற இயலாத தன்மை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் இடைஞ்சல்களை எதிர்கொள்வதற்கான தைரியமின்மை போன்ற குணாதிசயங்களை எதிர்காலத்தில் பெற்று தன்னம்பிக்கை அற்றவர்களாகிவிடுவர்.

இருபத்தோராம் நூற்றாண்டுப் பெற்றோர்கள்,  அவர்களது குழந்தைகளின் மனதில் என்னால் முடியும்” என்ற ண்ணத்தை விதைக்க விரும்புகின்றனர். அதைபோன்று வளர்க்கப்படும் குழந்தைகள், எதிர்காலத்தின் சவால் மிகுந்த வாழ்விற்கு தயாராகிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் தனக்கென தனி வேறுபாடுகளை கொண்டிருந்தாலும், தன்னம்பிக்கை தொடர்பான சில பொதுவான வழிகாட்டுதல்களை அனைத்து குழந்தைகளிடமும் பின்பற்றலாம்.பெற்றோர்கள் தொடர்ந்து வார்த்தைகளால் உற்சாகப்படுத்துவதாலேயே மட்டும் ஒரு குழந்தையின் தன்னம்பிக்கை வளர்ந்து விடுவதில்லை, மாறாக, அந்த குழந்தை ஏதேனும் ஒரு செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கும்போதுதான் தன்னம்பிக்கை, உண்மையிலேயே அதிகரிக்கிறது

அதேசமயம், உற்சாக வார்த்தைகள் என்பது எப்போதுமே நல்லதுதான். அந்த வார்த்தைகள், குழந்தை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்திருக்கும்போது பயன்படுத்தப்பட்டால் பயன்விளைவுகள் அதிகமாக இருக்கும்.ஒரு செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கும்போதுதான், தங்களால் எது முடியும் , முடியாது என்பதை குழந்தைகள் உணர்கிறார்கள். ஒரு குழந்தை மிக சிறிதாக இருக்கும்போதே,உதாரணமாக, நடை பழகும்போதோ அல்லது ஒரு புத்தகத்தின் பக்கங்களை பிரிக்க ஆரம்பிக்கும்பொழுதோ அவர்களுக்கு உற்சாக வார்த்தைகள்  வழங்கப்பட வேண்டும்.

மேலும் குழந்தைகள் தங்களின் திறனை வளர்ப்பதற்கான போதுமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதிகமான வாய்ப்புகள், நல்ல ஆலோசனைகள், நிறைய பொறுமை போன்றவை பெற்றோர்களிடமிருந்து கிடைத்தால்,  குழந்தை தனது அடிப்படை திறமையை நன்றாக வளர்த்துக் கொள்ளும். இதனால், எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை அவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்வார்கள். எனவே, எப்போதும் குழந்தைகளின் பின்னால் நின்று, உங்களின் அசாத்திய பொறுமையின் மூலம் அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.குழந்தைகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு, அதில் தவறுகள் ஏற்பட்டால், அதிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்

ஒரு பள்ளிச்சீறுடையில் அறுந்த பட்டனை தைக்கும் வாய்ப்பை அவர்களுக்கு அளித்தால், அதை முழுமையாக அனுமதிக்க வேண்டும். நடுவிலேயே தலையிட்டுவிட்டால், அந்த செயலை செய்துமுடிக்க தனக்கு தகுதி இல்லையோ என்ற எண்ணம் குழந்தைக்கு ஏற்பட்டுவிடும்.குழந்தை  ஒரு செயலில் வெற்றியடைந்தால், உங்களின் பாராட்டானது, முடிவை மட்டுமே குறிப்பிடுவதாக இருக்கக்கூடாது. அந்த செயலுக்கான மனோதிடத்தையும் பாராட்ட வேண்டும். மேற்சொன்னதைப் போல, சீறுடைக்கு பட்டனை வெற்றிகரமாக தைத்தால், அதற்கடுத்து மீண்டும் ஒரு புதிய பொறுப்பை கொடுக்கலாம். அந்த புதிய பொறுப்பு பெரிதாக இல்லாமல் தோன்றினாலும், உங்கள் குழந்தை சரியான திசையில் அடியெடுத்து வைக்கும்.

சிறுவயதாக இருக்கும்போதே, தங்களின் குழந்தைகள், தங்களை தாங்களே கவனித்துக் கொள்ளும் திறனை பெறுமளவிற்கு, அவர்களை தயார்படுத்த வேண்டும். குழந்தைகளுடனான பெற்றோர்களின் உறவானது,குழந்தைகளின் வயது ஏற ஏற, அதிக முதிர்ச்சியும், அறிவும் தேவைப்படுவதாக மாறும்.எனவே, பெற்றோர்கள் காலத்திற்கேற்ப தாங்களும் மாறிக்கொள்ள வேண்டும். நம் பிள்ளைகளின் தன்னம்பிக்கையையும் சூழ்நிலைக்கேற்றபடி வளர்க்க வேண்டும்.

நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் தங்கள் எண்ணங்களை கருத்துக்களாய் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்காலத்திற்க்கு உதவட்டுமே..


20 Responses to “வளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர”

இராஜராஜேஸ்வரி said...
Oct 3, 2011, 7:53:00 AM

பெற்றோர்கள் காலத்திற்கேற்ப தாங்களும் மாறிக்கொள்ள வேண்டும். நம் பிள்ளைகளின் தன்னம்பிக்கையையும் சூழ்நிலைக்கேற்றபடி வளர்க்க வேண்டும்./

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.


M.R said...
Oct 3, 2011, 9:34:00 AM

அழகான கருத்துகள் நிறைந்த பதிவு நண்பரே
கடைப்பிடிக்க வேண்டிய எண்ணம்

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே


suryajeeva said...
Oct 3, 2011, 9:39:00 AM

கடவுளை நம்ப வேண்டும் என்ற கருத்தை விட்டு ஒழித்தாலே தன்னம்பிக்கை தானாய் வளரும்... இதை சொன்னால் பைத்தியக் காரன் என்று சொல்வார்கள்


Lakshmi said...
Oct 3, 2011, 10:21:00 AM

இப்பல்லாம் வளரும் குழந்தைகள் ரொம்பவே ஸ்மார்ட்
பெத்தவங்கதான் யோசிக்கனும். நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்.


Rathnavel said...
Oct 3, 2011, 2:44:00 PM

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.


வைரை சதிஷ் said...
Oct 3, 2011, 6:37:00 PM

நல்ல கருத்துகள் பதிவு முழுவதும் காணப்படுகிறது நண்பா வாழ்த்துகள்


சம்பத்குமார் said...
Oct 3, 2011, 7:08:00 PM

@ இராஜராஜேஸ்வரி

//அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களே

நன்றியுடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Oct 3, 2011, 7:10:00 PM

@ M.R

//அழகான கருத்துகள் நிறைந்த பதிவு நண்பரே
கடைப்பிடிக்க வேண்டிய எண்ணம் //


வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே


சம்பத்குமார் said...
Oct 3, 2011, 7:12:00 PM

@ suryajeeva

//கடவுளை நம்ப வேண்டும் என்ற கருத்தை விட்டு ஒழித்தாலே தன்னம்பிக்கை தானாய் வளரும்... இதை சொன்னால் பைத்தியக் காரன் என்று சொல்வார்கள்//

ஆழமான கருத்திற்க்கு மிக்க நன்றி நண்பரே..


சம்பத்குமார் said...
Oct 3, 2011, 7:17:00 PM

@ Lakshmi

//இப்பல்லாம் வளரும் குழந்தைகள் ரொம்பவே ஸ்மார்ட் பெத்தவங்கதான் யோசிக்கனும். நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்.//

உண்மைதான் அம்மா அவர்களே..பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கேற்ப ஸ்மார்ட் ஆகவேண்டும்

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி


சம்பத்குமார் said...
Oct 3, 2011, 7:18:00 PM

@ Rathnavel

//நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.//

ஐயாவின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

நன்றியுடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Oct 3, 2011, 7:19:00 PM

@ வைரை சதிஷ்

//நல்ல கருத்துகள் பதிவு முழுவதும் காணப்படுகிறது நண்பா வாழ்த்துகள்//

மிக்க நன்றி திரு.சதீஷ் அவர்களே..

நட்புடன்
சம்பத்குமார்


கோகுல் said...
Oct 3, 2011, 8:10:00 PM

நன்றி நண்பரே!
குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கை வேரூன்ற வைக்க பதிவிட்டமைக்கு!


சம்பத்குமார் said...
Oct 3, 2011, 8:23:00 PM

@ கோகுல்

//குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கை வேரூன்ற வைக்க பதிவிட்டமைக்கு!//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்


சென்னை பித்தன் said...
Oct 3, 2011, 8:27:00 PM

பெற்றோர்களுக்குத் தேவையான,கருத்தாழம் மிக்க பதிவு!


சம்பத்குமார் said...
Oct 3, 2011, 9:24:00 PM

@ சென்னை பித்தன்

//பெற்றோர்களுக்குத் தேவையான,கருத்தாழம் மிக்க பதிவு!//

தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

நட்புடன்
சம்பத்குமார்


ronald said...
Oct 3, 2011, 9:54:00 PM

அருமையான பகிர்வு


சம்பத்குமார் said...
Oct 3, 2011, 11:03:00 PM

@ ronald

//அருமையான பகிர்வு//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்


JOTHIG ஜோதிஜி said...
Oct 5, 2011, 11:56:00 AM

இரவு வானம் சுரேஷ் உங்கள் தளத்தை அறிமுகம் செய்து வைத்தார். மிக நல்ல பங்களிப்பு. நல் வாழ்த்துகள். 4 தமிழ் மீடியா தளத்தில் அறிமுகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் பணி இது போல தொடர்ந்து நடைபெறட்டும்.

ஜோதிஜி


சம்பத்குமார் said...
Oct 6, 2011, 12:39:00 PM

JOTHIG ஜோதிஜி

தங்களின் பேராதவிற்க்கு மிக்க நன்றி திரு ஜோதிஜி அவர்களே..

தங்களின் ஆதரவோடு பயணம் தொடரும்

நட்புடன்
சம்பத்குமார்


;