October 2, 2011
வெளுக்கும் பூக்கள்
ஊராரின் அழுக்குகளை
வெளுக்கும் கறுப்பு
மலர்களே !
நீங்கள் இன்னும்
இறந்தவர்களுக்கு
வரவேற்ப்புப் பாதைகளையே
போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்
ஆனால்
உங்களுக்குத்தான்
யாரும் வரவேற்பு
வாசிப்பதில்லை…
உங்களின் வியர்வைகள்
அவசரச் சடங்குகளில்
அர்ச்சிக்கப்படுவது
போல்
அனுஷ்டித்து
அவமானப்படுத்தப்படுகின்றன…
எல்லா சடலங்களும்
உங்களால் மதிக்கப்படும்
போது
நீங்கள்தான்
அவர்களால்….
மிதிக்கப்படுகிறீர்கள்
!
இவர்கள்
காதலியின் கண்ணீருக்குக்
கல்லணை கட்டுவார்களே
ஒழிய
கருகும் வயல்களுக்கு
யோசனைகூடச்
சொல்லமாட்டார்கள்.
இவர்களின்
புற அழுக்குகளைப்
போக்குகிற
புண்ணிய நதிகளே
அக அழுக்கினை
அகற்றவும்
நீங்கள்தான் தயாராக
வேண்டும் !
ஏரிக்கரை கற்களாய்
அவர்களின் மனங்கள்
இருகிக் கிடக்கின்றன…
நீங்கள் மாலையில்
சேகரிக்கும்
மீதமான உணவுகள்
உங்களுக்கான நன்கொடையல்ல…
உங்கள் வியர்வையின்
உழைப்பை ஏமாற்ற
போடுகின்ற சில்லறைக்காசுகள்
!
நீங்கள்தான் இன்னமும்
அவர்களுக்கு
வரவேற்பு பாதைகளையே
போட்டுக் கொண்டிருக்காதீர்கள்..
நீங்களும் வரவேற்புரையாகுங்கள் !
நம் தேசப்பிதா
அண்ணல் காந்தியின்
ஆசையும் அதுவே..
நண்பர்களே பதிவு படித்திருந்தால் மற்க்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)








20 Responses to “வெளுக்கும் பூக்கள்”
Oct 2, 2011, 12:55:00 PM
அருமையான கவிதை.
வேதனையாக இருக்கிறது.
நன்றி.
Oct 2, 2011, 12:57:00 PM
வரவேற்பு பாதைகளையே
போட்டுக் கொண்டிருக்காதீர்கள்..
நீங்களும் வரவேற்புரையாகுங்கள்
ஆழ்ந்த அற்புதமான கருத்துக்கள்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்!
Oct 2, 2011, 2:14:00 PM
அருமையான கவிதை
ஆனால் வேதனையை தருகிறது
கருத்துகளை சுருக்க விரிக்க
http://vairaisathish.blogspot.com/2011/10/blog-post.html
Oct 2, 2011, 2:21:00 PM
ஒரு சமூகத்தின் ஊக்குவிப்பு...
விடியட்டும் அவர்களுக்கு....
Oct 2, 2011, 5:30:00 PM
கணம் நிறைந்த கவிதை... பாரமாகியது நெஞ்சம்...
Oct 2, 2011, 6:18:00 PM
இறந்தவர்களுக்கு வரவேற்ப்பு பாதை
போடுபவர்கள் இருப்பவர்களை வரேவேற்ப்பதில்லை
சுடும் வரிகள்
Oct 2, 2011, 6:32:00 PM
உண்மை.....
Oct 2, 2011, 7:43:00 PM
எல்லா சடலங்களும்
உங்களால் மதிக்கப்படும் போது
நீங்கள்தான்
அவர்களால்….
மிதிக்கப்படுகிறீர்கள் !
நல்ல கவிதை
Oct 2, 2011, 8:28:00 PM
@ Rathnavel
//அருமையான கவிதை.//
முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
நன்றியுடன்
சம்பத்குமார்
Oct 2, 2011, 8:30:00 PM
@ இராஜராஜேஸ்வரி
//ஆழ்ந்த அற்புதமான கருத்துக்கள்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்!//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே..
Oct 2, 2011, 8:31:00 PM
@ வைரை சதிஷ்
// அருமையான கவிதை //
மிக்க நன்றி திரு.சதிஷ் அவர்களே..
நட்புடன்
சம்பத்குமார்
Oct 2, 2011, 8:32:00 PM
கவிதை வீதி... // சௌந்தர்
//ஒரு சமூகத்தின் ஊக்குவிப்பு...
விடியட்டும் அவர்களுக்கு....//
மிக்க நன்றி நண்பரே
நட்புடன்
சம்பத்குமார்
Oct 2, 2011, 8:33:00 PM
@ suryajeeva
//கணம் நிறைந்த கவிதை... பாரமாகியது நெஞ்சம்...//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திரு.சூர்யஜீவா அவர்களே
Oct 2, 2011, 8:35:00 PM
கோகுல் said... 6
//இறந்தவர்களுக்கு வரவேற்ப்பு பாதை
போடுபவர்கள் இருப்பவர்களை வரேவேற்ப்பதில்லை
சுடும் வரிகள்//
ஆழமான கருத்திற்க்கு மிக்க நன்றி திரு கோகுல் அவர்களே
Oct 2, 2011, 8:36:00 PM
@ veedu
//உண்மை.....//
மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Oct 2, 2011, 8:38:00 PM
@ Lakshmi
அம்மாவின் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றிகள்
பாசத்துடன்
சம்பத்குமார்
Oct 3, 2011, 4:31:00 AM
சிந்திக்க வைக்கும் கவிதை நண்பா ...வேதனையை தருகிறது
Oct 3, 2011, 7:39:00 AM
@ ரெவெரி
//சிந்திக்க வைக்கும் கவிதை நண்பா //
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Oct 4, 2011, 9:35:00 PM
உங்கள் வியர்வையின்
உழைப்பை ஏமாற்ற
போடுகின்ற சில்லறைக்காசுகள்...
அருமை
Oct 6, 2011, 4:31:00 PM
@ jayaram thinagarapandian
//உங்கள் வியர்வையின்
உழைப்பை ஏமாற்ற
போடுகின்ற சில்லறைக்காசுகள்...
அருமை //
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே
நட்புடன்
சம்பத்குமார்
Post a Comment