September 20, 2011
குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க..
குழந்தைகள், பெற்றோர்கள் செய்யும் பல செயல்களை தாங்களும் செய்கிறார்கள்.சிறு குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்கள் பேசியதைக் கேட்டுத்தான் பேசக் கற்றுக்கொள்கிறார்கள். இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது பேசும் வார்த்தைகளை மட்டுமல்ல.. பேசும்விதத்தையும் உங்களிடம் இருந்துதான் கற்கிறார்கள்.உங்கள் குழந்தைகள் மரியாதையாக பேச வேண்டும் என்றால் நீங்கள் அவர்களை மரியாதையாக நடத்துங்கள். மரியாதையாக பேசுங்கள்.என்ன குழந்தைகளைப் போய் மரியாதையாக பேசுவதா ? என்று நினைக்க வேண்டாம்.
நாம் கோபப்படுவதும், திட்டுவதும் நமக்கு தவறாகத் தெரிவதில்லை. ஆனால் நம்மைப்பார்த்து குழந்தைகள் அதுபோல நடந்து கொள்ளும்போது நமக்கு தவறாகத் தெரிகிறது. ‘முளச்சு மூணு இலை விடல, உனக்கு இவ்வளவு கோபம் வருதே’ என்று ஆரம்பித்து சொல்லக்கூடாத வார்த்தைகளை எல்லாம் சொல்லி நம் கோபத்தை கொட்டி தீர்த்து விடுகிறோம். வயதில் பெரியவர்கள் என்பது கோபப்படுவதற்கும் கடுமையான சொற்களை சொல்வதற்கும் ஒரு தகுதியல்ல…. வயதின் முதிர்ச்சியை நீங்கள் பக்குவமாக நடந்து கொண்டு காட்ட வேண்டுமே தவிர கோபப்பட்டு அல்ல.
அடிக்கடி கேட்கிற வார்த்தைகளைதான் குழந்தைகளும் பயன்படுத்த துவங்குகிறார்கள். ‘இப்பவே கண்ண கட்டுதே ! ” டயலாக் எல்லா வீடுகளிலும் ஒலிப்பதற்கு இதுதான் காரணம். நீங்கள் கிண்டலான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தினால் உங்கள் குழந்தைகளும் அதை பயன்படுத்துவார்கள். குழந்தைகளின் பேசும் விதத்தை மாற்ற வேண்டும் என்றால் குழந்தைகளிடம் நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்பதை கவனியுங்கள். குழந்தைகள் எப்படி இனிமையாக பேச வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது போல நீங்கள் இனிமையாக பேசுங்கள். நிச்சயம் குழந்தைகளும் பின்பற்றுவார்கள்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் குழந்தைகள் நன்றாகப் பேசுவதில்லை என்ற வருத்தம் ஓவ்வொருவரையும் ஆட்டிப்படைக்கிறது.எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை கூறுகிறேன்.பால்ய கால நண்பர் ஒருவரது வீட்டிற்க்கு செல்ல நேர்ந்த்து.நான் அங்கு செல்கையில் நண்பரும் அவரது மகனும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.என்னைக் கண்டதும் அவரது பையன் எதுவும் பேசாமல் டிவியை அணைத்துவிட்டு அவன் அறைக்குள் மறைந்தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த என் நண்பருக்கு மிகவும் தர்ம சங்கடமாகப் போய்விட்டது. இப்படியா விருந்தினரை அலட்சியம் செய்வது என்று வருத்தத்தோடு போய் மகனிடம் கோபமாக, ‘ஏன் வந்திருக்கிறவங்ககிட்ட இரண்டு வார்த்தை பேசினா குறைஞ்சா போயிடுவ. வந்து என்னன்னு கேட்டுட்டு போ’ என்று சொல்லியிருக்கிறார்.
அவரது பையனும் அதே கோபத்தோடே என்னிடம் வந்து ‘என்ன?’ என்றான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று பையன் வந்து கோபமாக ‘என்ன’ என்றால் எனக்கு என்ன புரியும் ?. இருந்தாலும் மரியாதை கருதி ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டேன்.. இதை ஏன் சொல்கிறேன் என்றால் குழந்தைகளிடம் மரியாதையாக பேசுவதை ஒரு சடங்காக்க நினைத்தால் இதுபோன்ற விபரீதங்கள் நிச்சயமாய் நிகழலாம். எனவே மரியாதையாக பேசுகிற பழக்கத்தை விட மற்றவர்களை மதிக்கின்ற உணர்வை வளர்த்தாலே போதும். பேச்சில் மரியாதை தானாக வெளிப்படும்.
ஒவ்வொருவரையும்
மதிக்க கற்றுக்கொடுப்போம்.நம் குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்குவோம்.
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் தங்கள் கருத்துக்களையும் வாக்குகளையும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்களேன்
|
|
Tweet |
Related Posts: ,
,
,
Subscribe to:
Post Comments (Atom)








10 Responses to “குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க..”
Sep 20, 2011, 9:40:00 PM
ஒவ்வொருவரையும் மதிக்க கற்றுக்கொடுப்போம்.நம் குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்குவோம்.
எஸ் ஆனா இப்பக்குழந்தைகள் வீட்டில் இருந்து தெரிந்து கொள்வதை விட வெளியே இருந்து நிறைய கற்றுக்கொள்கிரார்கள்.
Sep 21, 2011, 6:14:00 AM
அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
Sep 21, 2011, 6:28:00 AM
பெற்றோரே எல்லா குழந்தைகளுக்கும் முன்மாதிரி...மற்றுமொரு அருமையான பதிவு...
Sep 21, 2011, 7:16:00 AM
@ Lakshmi
முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி அம்மா அவர்களே..
பாசத்துடன்
சம்பத்குமார்
Sep 21, 2011, 7:18:00 AM
@ Rathnavel
//அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.//
தங்களின் பேராதவிற்க்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி ஐயா..
நன்றியுடன்
சம்பத்குமார்
Sep 21, 2011, 7:19:00 AM
@ ரெவெரி
மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 21, 2011, 1:17:00 PM
அருமை..
Sep 21, 2011, 2:22:00 PM
@ suryajeeva
//அருமை..//
நண்பரே..வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி..
கூடங்குளப் போராட்டம் தற்காலிக வெற்றி பெற்றுள்ளதற்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வழிநடத்திய நண்பர் பாலா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
நட்புடன்
சம்பத்குமார்
Sep 23, 2011, 5:04:00 PM
இப்பொழுதெல்லாம் தொலைகாட்சித்தொடர் நடந்து கொண்டிருக்கும் சமயம் (அது சரி, அது எப்பொழுது முடியும்) நாம் நண்பர்கள் இல்லம் சென்றால் பார்த்துவிட்டு (தொடரையா?) வர வேண்டியதுதான். பேச முடியாது. இதில் குழந்தைகளுக்கு எங்கிருந்து கற்றுக் கொடுப்பது?
Sep 23, 2011, 7:23:00 PM
வேங்கட ஸ்ரீனிவாசன்
//இப்பொழுதெல்லாம் தொலைகாட்சித்தொடர் நடந்து கொண்டிருக்கும் சமயம் (அது சரி, அது எப்பொழுது முடியும்) நாம் நண்பர்கள் இல்லம் சென்றால் பார்த்துவிட்டு (தொடரையா?) வர வேண்டியதுதான்//
உண்மைதான் நண்பரே.. இந்த நிலை தொடர்ந்தால் குழந்தைகளின் வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும் நண்பரே..
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி.மீண்டும் வருக..
நட்புடன்
சம்பத்குமார்
Post a Comment