September 15, 2011
மரணம் கவிதை
இயற்கையின்
தயக்கமற்ற
சுயாதீன
நியாயத் தீர்ப்பு
!
நெடிய உயிர்துடிப்பின்
கொடிய முடிவின்
மறுக்கமுடியாத
இறுதி அறிவிப்பு
!
உடலுக்குள் ஊடுருவ
அடம்பிடித்து
ஆர்ப்பரிக்கும்
உயிர்மையின்
தார்ப்பரியம்
!
தாலாட்டி வளர்க்கப்பட்டு
உலா வந்த தூலத்தை,
அதன்
மூலத்தின் முன்நிறுத்தும்
காலத்தின் ஞானம்
!
ஆட்டமிட்ட வாழ்க்கைப்
பயணத்தின்
இறுதித் திருப்பமாய்
குறுக்கிடும்
கருநிழல் படர்ந்த
ஒருவழிப் பாதை
!
அவதூறாக
தவறான அர்த்தம்
கூறப்பட்டு
கற்பனைவாதிகளால்
அற்பமாக்கப்படும்
இயற்கையின்
வியத்தகு நியதி
!
நிரந்தரமாக உயிருடன்
துணை சேர்ந்து
வாழ்ந்து,
இணையற்ற உயிரியல்
யுகம் காக்கும்
தகவமைப்பு நிகழ்வு
!
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)








6 Responses to “மரணம் கவிதை”
Sep 15, 2011, 8:09:00 PM
அவதூறாக
தவறான அர்த்தம் கூறப்பட்டு
கற்பனைவாதிகளால்
அற்பமாக்கப்படும்
இயற்கையின்
வியத்தகு நியதி !/////
அருமை! நல்லதொரு கருத்து!!
Sep 15, 2011, 9:06:00 PM
@ ஐடியா மணி
வாருங்கள் நண்பரே.. வருகைக்கும் நல்லதொரு கருத்திற்க்கும் மிக்க நன்றி..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 16, 2011, 12:00:00 PM
வாழ்வதற்காக சாகும் நீ
செத்த பிறகும் வாழ பார்..
Sep 16, 2011, 12:58:00 PM
@suryajeeva
தொடர் வருகைக்கும் ஆழமான கருத்திற்க்கும் மிக்க நன்றிகள் நண்பரே
நட்புடன்
சம்பத்குமார்
Sep 16, 2011, 1:53:00 PM
''...இயற்கையின்
தயக்கமற்ற
சுயாதீன
நியாயத் தீர்ப்பு !...''
மிக சிறப்பா வரையப் பட்டுள்ளது. இதை யாரால் தான் தடுக்க முடியும்...வாழ்த்துகள் சகோதரா!
வேதா. இலங்காதிலகம்.
Sep 16, 2011, 2:09:00 PM
@ kovaikkavi
அன்பான வருகைக்கும் ஆத்மார்த்தமான கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ..
நட்புடன்
சம்பத்குமார்
Post a Comment