September 30, 2011
சுமைதாங்கிகள்
தொட்டில் முதல்
இடுகாடு வரை
எத்தனை சுமைகள்...!
சுமந்து சுமந்து
சாய்ந்த உடல்
நான்கு பேரின்
தோள்களுக்கு சுமையாகிறது !
பொதி சுமப்பது
கழுதைகள் மட்டுமா?
உள்ளம் உணர்வுகளால்
நிரம்புமிடமெல்லாம்…
சுமைகள் தான்...
சுமப்பது கூட சுகானுபவமே..!
சுமைத்தாங்கியைப்
பார்த்து
சுமைகள் உபதேசமும்
செய்வதுண்டு..!
சுமைகளை இறக்கிவிடவே
எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்
சிலர் மட்டுமே
பிறருக்காக
சுமை சுமக்கச் சம்மதிக்கிறார்கள்
அவர்கள் தான்
இந்த பூமியையே
சுமந்து கொண்டிருக்கிறார்கள்….
தங்கள் தோள்களில்
நமக்காக தேசத்தை
நேசத்துடன் சுமக்கும்
ஒவ்வொரு
ராணுவ வீரனுக்கும்
எந்தன் வீர வணக்கங்கள்..!
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.
தங்கள் தோள்களில்
நமக்காக தேசத்தை
நேசத்துடன் சுமக்கும்
ஒவ்வொரு
ராணுவ வீரனுக்கும்
எந்தன் வீர வணக்கங்கள்..!
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)





14 Responses to “சுமைதாங்கிகள்”
Sep 30, 2011, 6:47:00 PM
~*~சுமந்து சுமந்து
சாய்ந்த உடல்
நான்கு பேரின்
தோள்களுக்கு சுமையாகிறது!~*~
அற்புதமான வரிகள் நண்பரே...
கவிதை சூப்பர்... வாழ்த்துகள்...
Sep 30, 2011, 7:40:00 PM
சுமைகளை இறக்கிவிடவே
எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்
சிலர் மட்டுமே
பிறருக்காக
சுமை சுமக்கச் சம்மதிக்கிறார்கள்
அவர்கள் தான்
இந்த பூமியையே
சுமந்து கொண்டிருக்கிறார்கள்….
தங்கள் தோள்களில்
நமக்காக தேசத்தை
நேசத்துடன் சுமக்கும்
ஒவ்வொரு
ராணுவ வீரனுக்கும்
எந்தன் வீர வணக்கங்கள்..!
எங்களின் வீர வணக்கங்களும்
Sep 30, 2011, 7:58:00 PM
எந்த ராணுவ வீரனும் தேச பக்தியுடன் காவல் காப்பதாய் எனக்கு படவில்லை... அமைதிப்படை என்ற போர்வையில் செல்லும் ராணுவ வீரர்கள் நடந்து கொள்ளும் விதம் உலகம் அறிந்தது.. இருந்தாலும் கவிதை அருமையான சொல்லாடல்
Sep 30, 2011, 8:30:00 PM
கவிதை அருமை...A big Royal Salute from me too...
Sep 30, 2011, 10:19:00 PM
ராஜா MVS
//அற்புதமான வரிகள் நண்பரே...
கவிதை சூப்பர்... வாழ்த்துகள்...//
முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 30, 2011, 10:20:00 PM
@ Lakshmi
//எங்களின் வீர வணக்கங்களும்//
அம்மாவின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றிகள்
பாசத்துடன்
சம்பத்குமார்
Sep 30, 2011, 10:25:00 PM
@ suryajeeva
//எந்த ராணுவ வீரனும் தேச பக்தியுடன் காவல் காப்பதாய் எனக்கு படவில்லை... அமைதிப்படை என்ற போர்வையில் செல்லும் ராணுவ வீரர்கள் நடந்து கொள்ளும் விதம் உலகம் அறிந்தது.. இருந்தாலும் கவிதை அருமையான சொல்லாடல்//
உண்மையை உணர்த்தியதிற்க்கு மிக்க நன்றி நண்பரே
நன்றியுடன்
சம்பத்குமார்
Sep 30, 2011, 10:26:00 PM
@ ரெவெரி
//கவிதை அருமை//
மிக்க நன்றி நண்பரே..
Sep 30, 2011, 11:24:00 PM
தங்கள் தோள்களில்
நமக்காக தேசத்தை
நேசத்துடன் சுமக்கும்
ஒவ்வொரு
ராணுவ வீரனுக்கும்
எந்தன் வீர வணக்கங்கள்..!///
இப்படிப்பட்ட சிந்தனை கொண்ட வீரர்களுக்கு(மட்டும்)வீர வணக்கங்கள்!
ஆனால் சமீபத்தில் வாதாம் கொட்டை பொறுக்கச்சென்ற தில்ஷன் என்ற சிறு பிஞ்சை சுட்டுப்பொசுக்கிய அந்த விஷமியையும்,அதை மறைக்க நாடகங்கள் பல நிகழ்த்திய பசுந்தோல் போர்த்திய புலிகளையும் என்ன செய்வது.?
நண்பர் சூர்யாஜீவா குறிப்பிட்டது போல் அமைதிப்படை என்ற போர்வையில் சென்ற புல்லுருவிகளும் சற்று யோசிக்க வைக்கின்றனர்!
Oct 1, 2011, 8:18:00 AM
@ கோகுல்
//ஆனால் சமீபத்தில் வாதாம் கொட்டை பொறுக்கச்சென்ற தில்ஷன் என்ற சிறு பிஞ்சை சுட்டுப்பொசுக்கிய அந்த விஷமியையும்,அதை மறைக்க நாடகங்கள் பல நிகழ்த்திய பசுந்தோல் போர்த்திய புலிகளையும் என்ன செய்வது.?
நண்பர் சூர்யாஜீவா குறிப்பிட்டது போல் அமைதிப்படை என்ற போர்வையில் சென்ற புல்லுருவிகளும் சற்று யோசிக்க வைக்கின்றனர்!//
அந்த விஷமிக்கு கடுமையான தண்டணை கொடுக்கப்பட வேண்டும் நண்பரே..
நன்றி நண்பரே வருகைக்கும் கருத்திற்க்கும்
நட்புடன்
சம்பத்குமார்
Oct 1, 2011, 12:32:00 PM
நேர்மையான ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கங்கள் தரும் வகையில் அமைந்த மிக அருமையான வரிகள் சம்பத்....
எங்குமே அரிசியில் கல் கலந்து இருப்பதை போல நல்லவற்றில் கெட்டதும் இருக்கிறது தான்...
ஆனால் நாம் நல்லதை எடுத்துப்போம்.. மும்பையில் தீவிரவாதிகளால் உயிரிழந்த கமெண்டோக்களை நினைவு கொள்ளும் வகையில் அமைந்த இந்த கவிதை வரிகள் அவர்களுக்கு கம்பீரத்தையும் சல்யூட்டையும் தருகிறதுப்பா....
அன்பு நன்றிகள் சம்பத் பகிர்வுக்கு.
Oct 1, 2011, 7:17:00 PM
அற்புதமான வரிகள் நண்பரே...
Oct 2, 2011, 9:57:00 AM
@ மஞ்சுபாஷிணி
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ
நட்புடன்
சம்பத்குமார்
Oct 2, 2011, 9:58:00 AM
@ வைரை சதிஷ்
மிக்க நன்றி திரு.சதீஷ் அவர்களே..
நட்புடன்
சம்பத்குமார்
Post a Comment