September 25, 2011
வேண்டாமிந்த வெளிச்சங்கள்
கண்கள் இருப்போர்
என்னைக்
காணமுடியாது..!
இருண்டு
இருக்கிறது
நான்
வாழும் உலகம்..!
தீபங்கள்,மெழுகுவர்த்திகள்
எதைக்
கொண்டும்
நீக்கமுடியாத
காரிருள்
படர்ந்த
கானகத்தில்
காட்டுத்
தீயாய் வேர்களைப்
பொசுக்கும்
ஒளியின் கால்கள்..!
வேண்டாம் அந்த வெளிச்சம்..!
சிதை நெருப்பின்
ஆழத்தை விட
கர்பத்தின்
இருள்
மேன்மையானது..!
பால் நிலவின்
வெண்மையை விட
வெண்மையை விட
நீள் இரவின்
கருமை அடர்த்தியானது...!
கருமை அடர்த்தியானது...!
பரபரக்கும் பகலைவிட
இனிமையான இரவு
இனிமையான இரவு
அமைதியானது..!
என்னுள்ளே
இருக்கும்
இருட்டைக் காண..,
இருட்டைக் காண..,
கண்களை
மூடினால்
உள்ளிருந்து
கறுப்பாகிக்
கசியும்
மகத்தான
இருளின்
ரகசியங்களில்
எனக்குத்
தெரிகிறது
எனக்கான
ஒளி..!
நண்பர்களே இந்த இருளின் கவிதை பிடித்திருந்தால் தங்களின் கருத்துத்துக்களையும்,வாக்குகளையும் பதிந்துவிட்டுச் செல்லுங்கள்
நண்பர்களே இந்த இருளின் கவிதை பிடித்திருந்தால் தங்களின் கருத்துத்துக்களையும்,வாக்குகளையும் பதிந்துவிட்டுச் செல்லுங்கள்
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)






17 Responses to “வேண்டாமிந்த வெளிச்சங்கள்”
Sep 25, 2011, 11:47:00 AM
Super kavithai . .
Sep 25, 2011, 12:00:00 PM
கவிதை அசத்தல் வாழ்த்துக்கள்
Sep 25, 2011, 12:57:00 PM
கருப்பாக இருக்கும் உள் இருட்டில் தன்னை தேட அனைவரும் பயப்படுவதால், இருந்தே இருக்கிறது உலகம்..
Sep 25, 2011, 1:30:00 PM
"என் ராஜபாட்டை"- ராஜா
முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி திரு ராஜா அவர்களே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 25, 2011, 1:31:00 PM
கவி அழகன்
வாருங்கள் நண்பரே..தங்கள் வரவு நல்வரவாகுக..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 25, 2011, 1:33:00 PM
@ suryajeeva
//கருப்பாக இருக்கும் உள் இருட்டில் தன்னை தேட அனைவரும் பயப்படுவதால், இருந்தே இருக்கிறது உலகம்..//
உண்மைதான் நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 25, 2011, 3:03:00 PM
சிதை நெருப்பின்
ஆழத்தை விட
கர்பத்தின் இருள்
மேன்மையானது..//
அந்த இருளிலேயே இருந்திருக்கலாமோ!
Sep 25, 2011, 7:44:00 PM
@ கோகுல்
//அந்த இருளிலேயே இருந்திருக்கலாமோ!//
எவ்வளவுதான் வளர்ந்தாலும் ஒவ்வொரு மனிதமனதின் ஏக்கம் இதுதான் நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 25, 2011, 10:10:00 PM
கவிதை நல்லா இருக்கு.
Sep 26, 2011, 8:01:00 AM
@ Lakshmi
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி
பாசத்துடன்
சம்பத்குமார்
Sep 26, 2011, 2:10:00 PM
அருமையான கவிதை
Sep 26, 2011, 8:56:00 PM
@ மதுரன்
//அருமையான கவிதை//
தங்கள் வருகைக்கும் தளத்தில் இணைந்ததிற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
முத்தான கருத்திற்க்கும் கூட..
நட்புடன்
சம்பத்குமார்
Oct 6, 2011, 6:29:00 PM
இருட்டினை உங்க்கள் கவிதை வெளிச்சத்த்ஹிற்கு கொண்டு வந்திருக்கிறது.... அருமையான கவிதை
Oct 6, 2011, 6:34:00 PM
Oct 6, 2011, 6:35:00 PM
இருட்டினை உங்கள் கவிதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.... அருமையான கவிதை
Oct 7, 2011, 11:07:00 PM
@ kavithaicorner
//இருட்டினை உங்கள் கவிதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.... அருமையான கவிதை//
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க் நன்றி நண்பரே
நட்புடன்
சம்பத்குமார்
May 4, 2012, 7:02:00 PM
நைஸ் போயம்
Post a Comment