September 24, 2011
பெற்ற குழந்தைகளை அவமானப்படுத்தும் பெற்றோர்கள்
வணக்கம் நண்பர்களே ! மற்றுமொரு
பதிவின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவு அடுத்தவர்களிடம்
நம் குழந்தைகளை நாமே அவமானப்படுத்துவதை பற்றிய ஓர் விரிவான அலசல்.குழந்தைகள்
முன்னிலையில் பெற்றோர்கள்
அடுத்தவர்களிடம், அவர்களைப்
பற்றி சொல்லுகின்ற குறைகள் அந்த
குழந்தைகள் மனதில்
சொல்ல முடியாத சோகங்களை பதிவு செய்துவிடுகிறது.கண்ணில் படுகிறவர்களிடமெல்லாம் தன் குழந்தையைப் பற்றிய குறைகளை சொல்லி சொல்லி தன் மனதில் உள்ள பாரத்தை இறக்கிவிடுவார்கள்.மாறாக குழந்தைகள் மனதில் பாரத்தை
ஏற்றிவிடுவார்கள்.
அதிலும் குழந்தை யாரிடம் பிரியமாக இருக்கிறதோ
அவர்களிடம்தான் நடந்த
அனைத்தையும் சொல்வார்கள்.
குழந்தை மாமாவிடம் பிரியமாக இருக்கிறது என்றால், மாமா வீட்டிற்குள் நுழையும்போது உன் மருமகன்
இன்னிக்கு என்ன செய்தான் தெரியுமா? என்று
புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். மாமா ஏதாவது விட்டுக்கொடுக்காமல் பேசினாலும்
நீதான் உன் மருமகனை மெச்சிக்கனும் என்று ஆரம்பித்து அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி அவர்களையும் சீக்கிரமே
குழந்தையை வெறுக்க வைக்கும் எல்லா முயற்சிகளையும்
தொடங்கிவிடுவார்கள்.
உறவுக்காரர்களின் முன் இப்படி அவமானப்படும் குழந்தைகள் அவர்களிடம்
எப்படி பழகும்?
யாரோடும் சரியாக
பழகுவதில்லை என்று பிறகு குறையும் பட்டுக் கொள்வார்கள். மற்றவர்களிடம் சொல்வதுதான் என்றில்லை
உடன் பிறந்தவர்களிடம் சொல்வதும் அவர்களோடு ஒப்பிட்டு பேசுவதும் கூட அவமானப்படுத்துவதுதான்.சிறுவயதிலிருந்தே மாமாவுக்கு டான்ஸ் ஆடிக் காமி.. ரைம்ஸ் சொல்லிக்காமி..
என்று பல பெற்றோர்களுக்கு குழந்தைகள் பெருமையடைவதற்கான வழிமுறைகளாக மட்டுமே இருக்கிறார்கள்.வளர்ந்த
பிறகு குழந்தைகளை காட்டி பெருமைப்பட வேண்டும் என்று நினைக்கும் விஷயங்களில்
இல்லாமல் வேறு ஏதாவது விஷயங்களில் குழந்தைகள் ஈடுபாடு காட்டினால் அவர்களை துவம்சம் செய்து
விடுகிறார்கள்.
“குறைகளை எங்களிடம்
சொல்லுங்கள். நிறைகளை மற்றவர்களிடம் சொல்லுங்கள்” என்று ஹோட்டலுக்கு ஹோட்டல் எழுதிப் போட்டிருக்கிறார்கள்.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று, குழந்தைகளின்
குறைகளை உறவினர்களிடம் நண்பர்களிடம் சொல்வதால் ஒரு பிரயோஜனமும் இருக்கப்போவதுமில்லை.
இதனால் குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையும் மற்றவர்கள் மீது ஒரு
வெறுப்பும்தான் ஏற்படப்போகிறது.
இதனால் ஏற்பட்ட
இடைவெளியால் உங்களைப்பற்றிய குறையோடு வளர்வார்கள். பிற்காலத்தில் உங்கள் குறைகளை உங்களிடமே
சொல்லிக் கொண்டிருப்பார்கள். குறை சொல்வதை உங்களிடம் இருந்துதான்
கற்றுக்கொள்வர்கள்.நீங்கள் மற்றவர்களிடம் உங்கள் குழந்தைகளைப் பற்றி சொல்கிற
விஷயங்கள் எல்லாம் மனம் விட்டு பேசினால் நீங்களே சரி செய்து
விடுகிற விஷயங்கள்தான். பல நேரங்களில் குழந்தைகளுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று
பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்தாலும் அவர்கள் மனதில்
இருக்கும் காயங்கள் அவர்களை செய்ய விடுவதில்லை.
உண்மையிலேயே
உங்கள் குழந்தைகளின்மேல் அளவற்ற
பிரியமும்,அக்கறையும் இருந்தால்
தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் நன்மை
கருதி அவர்கள் முன்னிலையில் குறைகளை அடுத்தவர்களிடம் எக்காரணம் கொண்டும்
பகிர்ந்துவிடாதீர்கள்.
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் தயங்காமல் தங்கள் கருத்துக்களையும்,வாக்குகளையும் பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் தயங்காமல் தங்கள் கருத்துக்களையும்,வாக்குகளையும் பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்
|
|
Tweet |
Related Posts: ,
,
,
Subscribe to:
Post Comments (Atom)








23 Responses to “பெற்ற குழந்தைகளை அவமானப்படுத்தும் பெற்றோர்கள்”
Sep 24, 2011, 11:51:00 AM
good
Sep 24, 2011, 12:48:00 PM
super
Sep 24, 2011, 3:15:00 PM
உண்மையில் மதிக்கத்தக்க பதிவு...
கருத்துக்கும் பதிவுக்கும் வாழ்த்துக்கள்..
குழந்தைகள் மீது திணிப்பு இல்லையென்றால் அவர்கள் எல்லோரும் சாதனையாளர்கள்தான்...
Sep 24, 2011, 3:16:00 PM
தமிழ்மணம் என்னாச்சி
Sep 24, 2011, 4:07:00 PM
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
Sep 24, 2011, 6:56:00 PM
@ தங்கம்பழனி
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 24, 2011, 6:57:00 PM
@ suryajeeva
//super //
மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 24, 2011, 7:00:00 PM
@ # கவிதை வீதி # சௌந்தர்
//குழந்தைகள் மீது திணிப்பு இல்லையென்றால் அவர்கள் எல்லோரும் சாதனையாளர்கள்தான்...//
உண்மைதான் நண்பரே..
//தமிழ்மணம் என்னாச்சி//
தமிழ்மண ஓட்டுப்பட்டடை என் வலையில் வேலை செய்யவில்லை நண்பரே..அதனால் தான் லோகோ மட்டும் இணைத்துள்ளேன்.
யாரேனும் ஓட்டுப்பட்டை code இருந்தால் அனுப்புங்களேன்..
நன்றியுடன்
சம்பத்குமார்
Sep 24, 2011, 7:02:00 PM
@ Rathnavel
மிக்க நன்றி ஐயா
நட்புடன்
சம்பத்குமார்
Sep 24, 2011, 10:15:00 PM
இப்படியும் இருக்காங்க..?
Sep 24, 2011, 11:38:00 PM
@ தமிழ்வாசி
நம்மில் நூற்றுக்கு 80 பேர் இப்படித்தான் இருக்கிறோம் நண்பரே..
நமக்கு நாமே உடனடியாக திருத்தப்பட வேண்டிய பழக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 25, 2011, 5:50:00 AM
நூறு சதவீதம் கரெக்ட்...நண்பரே..
Sep 25, 2011, 8:01:00 AM
@ ரெவெரி
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 25, 2011, 9:20:00 AM
உங்கள் குறைகளை உங்களிடமே சொல்லிக் கொண்டிருப்பார்கள். குறை சொல்வதை உங்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்வர்கள்.//
முடிந்தவரையில் நல்லனவற்றை குழந்தைகளுக்கு சொல்லித்தர முயற்சிப்போம்.
நல்ல அலசல்.
Sep 25, 2011, 9:25:00 AM
@ கோகுல்
//முடிந்தவரையில் நல்லனவற்றை குழந்தைகளுக்கு சொல்லித்தர முயற்சிப்போம்.//
மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 25, 2011, 10:06:00 AM
நம்மில் பலர் இப்படித்தான் இருக்காங்க. நல்ல பதிவு.
Sep 25, 2011, 1:28:00 PM
@ Lakshmi
அன்னையின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி
பாசத்துடன்
சம்பத்குமார்
Sep 25, 2011, 5:06:00 PM
பெற்றோர் பிள்ளைகளிடம் எப்படி இருக்கவேண்டும், எப்படி இருக்க கூடாது என்பதை பகிரும் மிக அருமையான பகிர்வு சம்பத்....
உண்மையே...
நம்மை விட்டால் பிள்ளைகளுக்கு முதல் தோழமை யார் இருக்கமுடியும்? நம்மிடம் தான் ஆசையாக வரும் பிள்ளைகள் அம்மா அப்பாவென்று...
நாமே இப்படி குறை சொல்ல கிளம்பிவிட்டால்...குழந்தைகள் எங்கு போகும், மனம் தளர்ந்து போகுமே...
அருமையான பகிர்வு சம்பத். அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...
Sep 25, 2011, 7:48:00 PM
@ மஞ்சுபாஷிணி
அன்பான வருகைக்கும் ஆழமான கருத்திற்க்கும் மிக்க நன்றி தோழி அவர்களே..
மீண்டும் வருக...
நட்புடன்
சம்பத்குமார்
Sep 28, 2011, 1:27:00 PM
மேலும் மற்றவர் முன் நாம் குழந்தைகளின் குறைகளைப் பற்றிக் கூறினால், அவர்கள் நம் குழந்தைகளுக்கு அறிவுரைக் கூற ஆரம்பித்து விடுவார்கள். இது குழந்தைகள் மனதில் அவர்கள் மேல் வெறுப்பு வளர்வதில் தான் முடியும்.
Sep 28, 2011, 7:51:00 PM
@ வேங்கட ஸ்ரீனிவாசன்
//மேலும் மற்றவர் முன் நாம் குழந்தைகளின் குறைகளைப் பற்றிக் கூறினால், அவர்கள் நம் குழந்தைகளுக்கு அறிவுரைக் கூற ஆரம்பித்து விடுவார்கள். இது குழந்தைகள் மனதில் அவர்கள் மேல் வெறுப்பு வளர்வதில் தான் முடியும்.//
ஆழமான உண்மை நண்பரே..
நன்றி மீண்டும் வருக
நட்புடன்
சம்பத்குமார்
Nov 9, 2011, 2:16:00 PM
உங்கள் தொடர்ந்த குடும்பநல பதிவுகள் ஒருசில மனங்களிலாவது நிச்சயமாக மாற்றங்களை உண்டுபண்ணும்.
Feb 20, 2012, 5:19:00 PM
மிக அருமையான பதிவு
Post a Comment