September 22, 2011
பார்வைகள்
கண்ணில் பட்டாள்
இன்றெனக்கு…
ஆத்மாவை தரிசிக்கும்
தருணங்கள் பொன்னானவை....
அவளுக்கென..
உடுத்த ஒரு பாவாடை
தள்ளுபடியிலும்
வாங்க இயலவில்லை..!
கணவனின் பழைய கைலிக்கு
நாடா கட்டியதில்
அது
பாவாடையானது…!
இடுப்புச் சேலை
நெகிழ்ந்து போய்
அவள் இடையை மட்டுமல்ல
வறுமையையும் காட்டிக்
கொடுத்தது…!
ஓடும் பேருந்தில்
ஒருக்களித்து கைக்குழந்தையை
சுமந்து நின்றிருந்தாள்
அவள்…!
காலில் செருப்பு
இல்லை...
கைகளில் கழுத்தில் பொன்நகை இல்லை...
ஆனாலும் கைக்குழந்தைக்கு
புதுசாய் சொக்காயும்
பவுடரும்,கைகளில்
கவரிங் வளையலும்
கால்களில் வெள்ளிக் கொலுசுகளும்
கவரிங் வளையலும்
கால்களில் வெள்ளிக் கொலுசுகளும்
இருந்ததை பிரியத்துடன்
அடிக்கடி தொட்டுப்
பார்த்தாள் புன்னகையுடன்…!
உள்ளுக்குள் தான்
உடுத்தியதாய் எண்ணி...
நண்பர்களே என் பேருந்து பயணத்தின் பார்வைகளை படித்து பிடித்திருந்தால் மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்.
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)








20 Responses to “பார்வைகள்”
Sep 22, 2011, 10:04:00 PM
பெண்ணின் உடல் தாண்டி
ஆத்மாவை தரிசிக்கும்
தருணங்கள் பொன்னானவை//
நறுக்!
Sep 22, 2011, 10:08:00 PM
வருமையிலும் செம்மை என்பார்கள்!
இந்த கவிதையில் கான்கிறேன்!
Sep 22, 2011, 11:23:00 PM
கோகுல்
நண்பரே..முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 22, 2011, 11:32:00 PM
தன் குழந்தைக்கேனும் அவைகள் கிடைத்தே என்ற மகிழ்ச்சிதான்..!! கோகுல் சொன்ன அந்த வரிகளே இப்பதிவின் முத்தாய்ப்பு..! வாழ்த்துக்கள் சகோ..!
Sep 23, 2011, 3:26:00 AM
அடிக்கடி தொட்டுப்
பார்த்தாள் புன்னகையுடன்…!
உள்ளுக்குள் தான் உடுத்தியதாய் எண்ணி...////
அதைக் கூட பிடுங்கும் கயவர்கள் இருக்கிறார்களே...
Sep 23, 2011, 7:42:00 AM
@ தங்கம்பழனி
திரு.தங்கம் பழனி அவர்களே.. வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றிகள் பல
நட்புடன்
சம்பத்குமார்
Sep 23, 2011, 7:45:00 AM
@ தமிழ்வாசி
//அதைக் கூட பிடுங்கும் கயவர்கள் இருக்கிறார்களே...//
இவர்களிடமிருந்து களவாடும் கயவர்களை தெய்வம் கூட மன்னிக்காது நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 23, 2011, 8:03:00 AM
Nice...
Sep 23, 2011, 8:14:00 AM
@ suresh
தங்களின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 23, 2011, 9:51:00 AM
கைகூப்பி வணங்கத்தோன்றும்
மனுஷியாய் ஒருத்தி
கண்ணில் பட்டாள் இன்றெனக்கு…
அருமையான வரிகள்.
அருமையான கவிதை.
பேருந்து பயணங்களில், சாலைகளில் காணும் காட்சிகள் மனசை கனக்க வைக்கின்றன.
Sep 23, 2011, 1:55:00 PM
எங்கள் ஊரில் இருக்கும் பிச்சை எடுக்கும் அம்மாவின் பிள்ளைகள் படிப்பது ஊட்டி கான்வென்ட்டில்
Sep 23, 2011, 5:41:00 PM
கணவனின் பழைய கைலிக்கு
நாடா கட்டியதில் அது
பாவாடையானது…!
-ஏழ்மையின் இழி நிலை
Sep 23, 2011, 7:26:00 PM
@ Rathnavel
வாழ்க்கையின் எதார்த்தங்கள் சில சமயங்களில் வலிக்கத்தான் செய்கிறது ஐயா
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி
நட்புடன்
சம்பத்குமார்
Sep 23, 2011, 7:29:00 PM
@ suryajeeva
தான் பிச்சையெடுத்தாலும் தன் மகனை கான்வெண்டில் கல்வி கற்க வைக்கும் அந்த தாய்க்கு தலைவணங்குகின்றேன் நண்பரே..
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி
நட்புடன்
சம்பத்குமார்
Sep 23, 2011, 7:31:00 PM
@ வலிபோக்கன்
தமிழ்நாட்டில் பாதிக்குப் பாதி இருக்கிறார்கள் என்கிறது புதுகணக்கு நண்பரே..
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
மீண்டு வருக
வணக்கத்துடன்
சம்பத்குமார்
Sep 23, 2011, 8:08:00 PM
ஆனாலும் கைக்குழந்தைக்கு
புதுசாய் சொக்காயும்
பவுடரும்,கைகளில்
கவரிங் வளையலும்
கால்களில் வெள்ளிக் கொலுசுகளும்
இருந்ததை பிரியத்துடன்
அடிக்கடி தொட்டுப்
பார்த்தாள் புன்னகையுடன்…!
உள்ளுக்குள் தான் உடுத்தியதாய் எண்ணி...
அது தானே தாய் மனது.
Sep 23, 2011, 8:21:00 PM
@ Lakshmi அம்மா
//அது தானே தாய் மனது.//
கருத்துரையிட்ட பதிவுலக அம்மாவிற்க்கு நன்றிகள் கோடி..
பாசத்துடன்
சம்பத்குமார்
Sep 29, 2011, 11:05:00 AM
அருமை நண்பரே ,இது போன்ற காட்சி பார்க்கும்பொழுது மனம் தழுதழுக்கும் ,
ஏழ்மை என்று மாறுமோ?தெரியவில்லை
Sep 29, 2011, 9:23:00 PM
@ M.R
//அருமை நண்பரே ,இது போன்ற காட்சி பார்க்கும்பொழுது மனம் தழுதழுக்கும் ,
ஏழ்மை என்று மாறுமோ?தெரியவில்லை//
சீக்கிரம் மாற நாமும் வேண்டுவோம் நண்பரே.வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றிகள்
நட்புடன்
சம்பத்குமார்
Nov 23, 2011, 5:45:00 AM
அடிக்கடி தொட்டுப்
பார்த்தாள் புன்னகையுடன்…!
உள்ளுக்குள் தான் உடுத்தியதாய் எண்ணி...தாயின் மனதை அழகாய் வெளிபடுதியது இந்த வரிகள்,அருமை நண்பரே!
Post a Comment