September 21, 2011
முத்தத்தின் முகவரி
உதட்டைத் தொட்டு
முத்தம் யாசிக்கும்
குழந்தைகளைக் கண்டால்
கொள்ளைப் பிரியம்
எனக்கு…!
என் தாய் கொடுக்கத்
தவறிய முத்தங்களையும்…!
என் மனைவியிடம்
அரைமனதுடன் பெற்ற
அந்தரங்க முத்தங்களையும்…!
நண்பர்களுக்கு
தரமுடியாமல்
தள்ளி நிற்கிற
போலிபண்பினால்
சிதைந்த முத்தங்களையும்…!
தவறிப்போன முத்தங்களை
தருவதற்க்கும்
பெறுவதற்க்கும்
தடையற்றது குழந்தையின்
அன்பு முத்தம்...!
என் தோளில் ஒட்டி
டாட்டா காட்டும்
விரல் ஒவ்வொன்றிலும்
பிரியமாய் பதிந்து
வைப்பேன் அந்த
முத்தங்களை
பெரிதாகிப் பிரிந்தாலும்
மறக்காதிருக்க….
நண்பர்களே ! முத்தக் கவிதை பிடித்திருந்தால் தயங்காமல் தங்கள் வாக்குகளையும்,கருத்துக்களையும் பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)








21 Responses to “முத்தத்தின் முகவரி”
Sep 21, 2011, 8:51:00 PM
தவறிப்போன முத்தங்களை
தருவதற்க்கும்
பெறுவதற்க்கும்
தடையற்றது குழந்தையின்
அன்பு முத்தம்..//////
வாவ்!நிஜமான கருத்து! சூப்பர்!
Sep 21, 2011, 9:31:00 PM
நண்பர்களுக்கு
தரமுடியாமல்
தள்ளி நிற்கிற போலிபண்பினால்
சிதைந்த முததங்களையும்…!
--- அருமையான வரிகள்
Sep 21, 2011, 9:33:00 PM
@ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
தங்கள் நண்பர்ஸ் தளம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
நட்புடன்
சம்பத்குமார்
Sep 21, 2011, 9:33:00 PM
என் தோளில் ஒட்டி
டாட்டா காட்டும்
விரல் ஒவ்வொன்றிலும்
பிரியமாய் பதிந்து
வைப்பேன் அந்த முத்தங்களை
பெரிதாகிப் பிரிந்தாலும்
மறக்காதிருக்க….//
அருமையான யதார்த்த வரிகள்..
கலக்கல்
ஆங்கிலத்தை இப்படி கூட கத்துக்கலாமா ?
Sep 21, 2011, 10:32:00 PM
@ suresh subramanian
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 21, 2011, 10:34:00 PM
@ வேடந்தாங்கல் - கருன்
மிக்க நன்றி கரூன் அவர்களே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 21, 2011, 10:35:00 PM
முத்தக்கவிதை முத்தான கவிதையாக உள்ளது.பாராட்டுக்கள்.
Sep 21, 2011, 10:58:00 PM
@ R.Elan.
முத்தக்கவிதை முத்தான கவிதையாக உள்ளது.பாராட்டுக்கள்.
தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது நண்பரே..
மீண்டும் வருக..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 21, 2011, 11:11:00 PM
தவறிப்போன முத்தங்களை
தருவதற்க்கும்
பெறுவதற்க்கும்
தடையற்றது குழந்தையின்
அன்பு முத்தம்...!//
ஆம்!நண்பரே!
இந்த முதசுவைக்கு கிறங்காதோர் யாருமில்லை!
அருமை!பாராட்டுக்கள்!
Sep 21, 2011, 11:24:00 PM
@ கோகுல்
வாருங்கள் கோகுல் நண்பரே..
தங்கள் ”காந்தி பிறந்த மண்” அருமை.தற்போதுதான் வாசித்துவிட்டு வந்தேன்.
நட்புடன்
சம்பத்குமார்
Sep 22, 2011, 9:59:00 AM
கவிதை நல்லா இருக்கு. குழந்தைகள் என்றுமே அழகான கவிதைதான்.
Sep 22, 2011, 1:21:00 PM
அதென்ன அரை மனதுடன், மனைவிக்கு தெரியுமா?
Sep 22, 2011, 1:51:00 PM
ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன்...நண்பரே..
கவிதை குழந்தையை போல மிக அழகாக...
Sep 22, 2011, 3:02:00 PM
என் தாய் கொடுக்கத்
தவறிய முத்தங்களையும்…!
என் மனைவியிடம்
அரைமனதுடன் பெற்ற
அந்தரங்க முத்தங்களையும்…!//அருமையான யதார்த்த வரிகள்..
Sep 22, 2011, 7:43:00 PM
@ Lakshmi
அன்னையின் வருகைக்கும் அன்பான கருத்திற்க்கும் நன்றிகள் பல.
பாசத்துடன்
சம்பத்குமார்
Sep 22, 2011, 7:45:00 PM
@ suryajeeva
//அதென்ன அரை மனதுடன், மனைவிக்கு தெரியுமா?//
அன்பு மனைவியின் ஆதரவுடன் பிறந்த வரிகள்தான் இவை நண்பரே..
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி
நட்புடன்
சம்பத்குமார்
Sep 22, 2011, 7:46:00 PM
@ ராஜா MVS
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி திரு ராஜா அவர்களே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 22, 2011, 7:48:00 PM
@ மாலதி
தளத்திற்க்கு முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி தோழி மாலதி அவர்களே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 22, 2011, 8:12:00 PM
அருமை.
Sep 22, 2011, 9:37:00 PM
@ Rathnavel
தங்கள் வருகை மிக்க உவகையளிக்கிறது ஐயா
நன்றியுடன்
சம்பத்குமார்
Feb 21, 2012, 2:35:00 PM
அன்பின் சிவகுமார் - கவிதை நன்று - குழந்தைக்குக் கொடுக்கும் முத்தம் சிறப்பு - ஆமா - அதென்ன அந்தரங்க வேளையில் பெற்ற அரைகுறை முத்தங்கள் - ஏன்பா இப்படி - அந்தரங்கத்தில் முழு மனதுடன் முழுமையாக முத்தம் பெற்று மகிழ - கொடுத்து மகிழ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment