September 19, 2011

சிறைக்கைதி..



நான்கு சுவர்களுக்கு நடுவே
துன்பத்தோடு நான்…!
நித்தம் நித்தம் யுத்தம் நடத்தும்
மனம் நொந்த கைதியாகிறேன் !

சொந்த வீட்டிற்க்கு செல்ல விரும்பாமல் 
திமிறிய என்னை,வலுக்கட்டாயமாக
உள்ளே தள்ளி, கதவை
கள்ளமாய் மூடியது ஒரு ”பிறப்பு”ச் சுவர். !

சாப்பிட அமர்ந்தேன்…
என்னை திட்டிய தாய்”வீடு” என்ற
அடுத்த சுவரின் கதவு மூடி
நடுத்தெருவில் நிர்க்கதியாய் நிற்க வைத்தாள் !

கூலி வேலையாவது தேடினேன்.
”காலி இல்லை” என கூறி ”வாய்ப்பு”என்ற
மூன்றாவது கதவும்
புன்னகைத்து மூடிக்கொண்டது.!

இறுதி முயற்சியாக
உறுதியுடன் சாகச் சென்றேன்.
தடுத்த சட்டம் ”தண்டனை” என்ற
பெயரில் கண்டனத்தோடு
அடுத்த கதவையும் அடித்து மூடியது !

ஆக தாகத்தோடு
நான்கு சுவர்களுக்கு
நடுவே நான்...!
ஜாமீனெடுக்க வருவோரை
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்….
ஏமாளியாக !

நண்பர்களே கவிதை பிடித்திருந்தால் மற்க்காமல் தங்கள் வாக்குகளையும் கருத்துக்களையும் பதிவு செய்து விட்டுச்செல்லலாமே..

10 Responses to “சிறைக்கைதி..”

வைரை சதிஷ் said...
Sep 19, 2011, 9:31:00 PM

சூப்பர் நண்பா அருமையான கவிதைகள்


சம்பத்குமார் said...
Sep 19, 2011, 10:22:00 PM

வைரை சதிஷ்

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பா..

நட்புடன்
சம்பத்குமார்


கோகுல் said...
Sep 19, 2011, 10:26:00 PM

முதலிரண்டு பத்திகள் இன்னொரு விசயத்தை நினைவூட்டுகிறது!
ஜாமீன்எடுக்க விரைகிறோம்!

அழகிய கவிதை பாராட்டுக்கள்!


சம்பத்குமார் said...
Sep 19, 2011, 11:37:00 PM

@ கோகுல்

//முதலிரண்டு பத்திகள் இன்னொரு விசயத்தை நினைவூட்டுகிறது!
ஜாமீன்எடுக்க விரைகிறோம்!

அழகிய கவிதை பாராட்டுக்கள்!//


வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..


Lakshmi said...
Sep 20, 2011, 12:02:00 PM

அழகிய கவிதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.


suryajeeva said...
Sep 20, 2011, 12:51:00 PM

ஜாமீன் கிடைச்சாலும் இன்னொரு கேஸ் போட்டு உள்ள தள்ளும் முடிவில் இருக்கிறார்களாம் தமிழக காவலர்கள்


சம்பத்குமார் said...
Sep 20, 2011, 1:39:00 PM

@ Lakshmi

பதிவுலக அம்மாவின் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றிகள் பல.

பாசத்துடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Sep 20, 2011, 1:44:00 PM

suryajeeva

//ஜாமீன் கிடைச்சாலும் இன்னொரு கேஸ் போட்டு உள்ள தள்ளும் முடிவில் இருக்கிறார்களாம் தமிழக காவலர்கள்//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

”ஆனாலும் ஜாமீன் கிடைத்தும் மறுபடியும் இன்னொரு கேஸ் போட நான் ஒன்றும் முன்னாள் அமைச்சர் இல்லையே நண்பரே”

ஹி.ஹி..ஹி...

மிக்க நன்றி மீண்டும் வருக..


Rathnavel said...
Sep 20, 2011, 2:30:00 PM

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.


சம்பத்குமார் said...
Sep 20, 2011, 8:17:00 PM

@ Rathnavel

//நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.//

தங்களின் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி

நட்புடன்
சம்பத்குமார்


;